Editorial

சம்மர் ஸ்பெஷல்

ரு நாளுக்கு சிறுநீரின் அளவு 400 மிலிக்கு கீழாக குறைதல், குமட்டல், வாந்தி, மயக்கம், தலைவலி, இடுப்புவலி போன்றவை சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்.

உயர் இரத்த அழுத்தம், புகைப்பழக்கம், அதிக புரத உணவு மற்றும் கொழுப்பு உணவுகளை உண்ணுதல், நீடித்த சர்க்கரை நோய், கொழுப்பு நோய், சிறுநீரக நோய் உள்ளோர், இளம் வயதில் சர்க்கரை நோய் – போன்றவை சிறுநீரக பாதிப்பை அதிகரிக்கும்.

நீண்ட காலமாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வருடம் ஒருமுறையாவது சிறப்பு சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறப்பு சிறுநீர் பரிசோதனை என்பது சிறுநீரில் மைக்ரோ அல்பியூமினூரியா எனப்படும் சோதனை.

Read More »

பெண்மை

 பெண்மைக்கு தனித்தன்மையான உறுப்புகள் கருப்பை, சினைப்பை, கருக்குழாய், வெளி உறுப்பு, மார்பகங்கள் போன்றவை.

 மார்பகங்களைப் போல சினைப்பைகளும் இரண்டு எண்ணிக்கை இதில் சுரக்கின்ற ஈஸ்ட்ரஜன் மற்றும் புரெஜெஸ்டிரான் போன்ற ஹார்மோன்கள் தான் பெண் உறுப்புகளின் வளர்ச்சிக்கும் கர்ப்பத்திற்கும் காரணம்.

 சினைப்பையில் நீர்க்கட்டி உண்டாவது இயற்கை. அதில்தான் கருமுட்டை இருக்கும். பெரும்பாலுமே இத்தகைய கட்டிகள் தொல்லை தருவதில்லை.

Read More »

சரியான உடல் எடை

ஒருவரைப் பார்த்தவுடன் உடல் பருத்தவர் (அளவிற்கதிகமான எடை) என்று சொல்ல முடியுமா?

பொதுவாக, மார்பின் சுற்றளவையும் வயிற்றின் சுற்றளவையும் அளந்தோமானால் மார்பின் அளவு வயிற்றைவிட 6 செ.மீ.க்கு மேல் அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் மார்பின் அளவை விட வயிற்றின் சுற்றளவு அதிகமாக இருக்குமானால் அவர் நிச்சயமாக உடல் பருத்தவர் எனலாம்.

சிலருக்கு உடல் எடை சராசரி அளவிற்கு இருந்தாலும் வயிறு தொந்தியாக இருந்தால் (வயிற்றின் சுற்றளவு மார்பை விட அதிகமாகக் காணப்பட்டால்) அவரும் பருமனானவர் என்று கருதப்படுவார்.

Read More »

மனச்சுமைகளை வெல்வது எப்படி?

*  பிரச்சினை என்னவென்று தெளிவாக தெரிந்தால் அதை நீக்கும் வழியை எளிதில் அறியலாம்.

*  நம்பிக்கைக்கு பாத்திரமான நல்லவர்களிடம் மனம்விட்டு பேசுதல்.

*  அடுத்தவர் இதே மனச்சுமையுடன் நம்மிடம் வந்தால் என்ன ஆறுதல் சொல்வோமோ அதையே நமக்கு சொல்க் கொள்ளுதல்.

*  தாங்கமுடியாத சூழ்நிலை என்றால் அவ்விடத்தை விட்டு அகன்று விடுதல்.

*  அமைதியான தூக்கத்திற்குப் பிறகு பிரச்சினைகளை ஆராய்ந்தால் தெளிவு கிடைக்கும்.

*  நம்முன் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் வரிசைபடுத்தி எழுதிவிட்டு, அதில் முக்கிய மான ஒன்றுக்கு மட்டும் தீர்வுகாணுதல், பிரித்து கையாளுதல் பிரச்சனைகளை எளிதில் தீர்க்கும்.

*  இவ்வுலகத்தில் நாம் மட்டும் இப்படி அவதிப் படவில்லை. பலரும் இப்படி இருக்கிறார்கள்.

Read More »

சாதனைகளின் அடிப்படை

இந்த உலகத்தில் கடினமான விஷயங்கள் எளிதான வற்றிலிருந்து தொடங்குகின்றன. இந்த உலகத்தில் பெரிய விஷயங்கள் சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன. ஒன்பது மாடி கோபுரம் சிறுமண் குவியருந்து எழும்புகிறது. ஆயிரம் மைல் பயணம் முதல் அடியிருந்து தொடங்குகிறது. அதனால் தான் சிறிய விஷயங்களிருந்து பெரிய விஷயங்களைச் சாதிக்க முடிகிறது என சீன ஞானி சொன்னது போல சிறியதிருந்து தொடங்குகின்ற செயல்கள் சாதனைகளாகின்றன.

உங்கள் குழந்தைகளைத் தயவு செய்து படித்த ஆசிரியர்களிடம் ஒப்படைப்பதை விட படிக்கின்ற ஆசிரியர்களிடம் ஒப்படையுங்கள் என்றார் அறிஞர்.

Read More »

ஆரோக்கியம்

நாமனைவரும் இவ்வுலகில் பிறந்ததிருந்தே நம்முடைய நினைவு டனோ, நினைவில் லாமலோ தொடர்ந்து சுவாசித்துக் கொண்டி ருக்கிறோம். நாம் நிமிடத்துக்கு 14 முதல் 24 முறை மூச்சு எடுத்து விடுகிறோம். ஆகவே ஒரு நாளைக்கு சுமார் 25,000 முறை சுவாசிக்கிறோம். நாம் விழித்திருக் கிறோமோ, உறங்குகிறோமோ, வேலை செய்து கொண்டிருக்கிறோமோ, எவ்வேலையாக இருந்தாலும் தானாக தொடர்ந்து சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

Read More »

அதிர்ஷ்டம் என்பது என்ன?

அதிர்ஷ்டம் என்பது இரண்டும் இரண்டும் நான்கு என்கிற கணக்கு போல. அதாவது தயார்நிலை ‘ வாய்ப்பு ‘ அதிர்ஷ்டம்.

Read More »

சமுக நாணம் தேவையா

உறக்கம், உற்சாகம், நிறைவான உணவு இம்மூன்றும் நலமான மனத்திற்கு அடிப்படை. நாகரீக காலத்தின் வேகத்தில் பலருடைய உறக்கமும் அழிந்து போய் விட்டது. அதனால்தான் இன்று அதிக அளவு தூக்க மாத்திரைகளும் மது மற்றும் போதைப் பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது.

Read More »

உணவு நோய் அறிவு

வாளைவிட சமையலறையே மிகுதியான மக்களைக் கொன்று வருகிறது – ஜெர்மன் பழமொழி.நவீன வாழ்க்கையில் மனிதனைப் பாதிக்கின்ற முக்கிய காரணங்கள் – உணவும் ஊடகங்களினால் பாதிக்கின்ற தவறான சிந்தனைகள்.செயற்கை உணவுகளானது, உணவுப் பாதை யையும், இரத்தத்தில் கலந்த பின்னர் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கின்றன. ஊடகங்களின் மூலம் உண்டாகின்ற தீய சிந்தனைகள் மூளையை மட்டு மல்லாமல் மனதையும் அதைத் தொடர்ந்து உடலையும் பாதிக்கின்றன.
உணவு தூய்மையால் அறிவுத் தூய்மை, அறிவுத் தூய்மையால் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். அதன்மூலம் மனிதன் மகிழ்வாக வாழ முடியும்.
ஒரு வேளை உண்பவன் யோகி
இரு வேளை உண்பவன் போகி
மூன்று வேளை உண்பவன் ரோகி
நான்கு வேளை உண்பவன் துரோகி
மனிதனை வாழவைக்க கனிகளைப் படைத்தது இயற்கை. அவனைச் சாகடிக்க சமையல் அறையைப் படைத்தான் சைத்தான் – பழமொழி.உணவுப் பற்றாக்குறை நிலையிலிருந்து மாறி அதிக உணவுகள் கிடைக்கின்ற இக்கால கட்டத்தில் சரியான உணவைத் தேர்வு செய்வதே அறிவு.

முக்கிய பொறுப்பு எது?

* உங்கள் குழந்தையை உங்கள் எதிர்பார்ப்பு களுக்கு அடிப்பணிச் செய்வது உங்கள் வேலை அல்ல. மகிழ்ச்சியானவனாகவும் அவனை நீங்கள் உருவாக்குவதுதான் உங்கள் பொறுப்பு.

* தங்கள் பருவ வயதிலும், இருபதுகளின் துவக்கத்திலும் குறிப்பிடத்தக்க சாதனை களைப் படைத்தச் சிறுவர்களும் சிறுமியரும்தான் பிற்காலத்தில் உயர்ந்த சாதனையாளர்கள்.

Read More »

Advertisements