Editorial

பயத்தை வெல்ல வேண்டும்

எந்த வகை பயமாக இருந்தாலும் அதை வென்று விட வேண்டும். இல்லையேல் பயம் மனிதனை வென்றுவிடும். பயத்தை வென்றால் நம்பிக்கை, சக்தி, புதுமை, சுதந்திரம் எல்லாம் வந்துவிடும்.

உலகில் மாற்றம் மட்டுமே நிலை யானது. புதிய யோசனைகள் மற்றும் புதிய அனுபவங்கள்  வளர்ச்சியைக் கொடுக்கும்.

பொதுவாக 40 வயதைத் தாண்டிய பின்னர் காதின் கேட்கும் திறன் குறையும். அதன் முக்கிய காரணம் காது நரம்புகளின் ரத்தக் குழாய்கள் குறுகி விடுவதால்தான். குறைந்த கொழுப்பு உணவு, குறைவான உப்பு, நாள்தோறும் உடற்பயிற்சி போன்றவை கேட்கும் திறனுக்கு நன்மையாகும்.

அதிகப்படியான நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவோருக்கு அதிக கொழுப்பு சேர்ந்து ஆண்களின் வீரிய ஹார்மோனை (டெஸ்டோஸ்டீரானை)  குறைக்கும்.

Read More »

பழக்கமும் இளமையும்

அதிக அளவு காபி குடிப்பவர்கள் தினமும் (ஐந்திற்கு மிகாமல்) ஒன்று அல்லது இரண்டு மட்டும் குடித்தால் இரத்தக் கொதிப்பு குறையும்.

தினமும் சிரிக்கும் பழக்கம் இருந்தால் மன அழுத்தம் குறைந்து இரத்த அழுத்தம் குறையும்.

செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்கு பிற உயிர்களை நேசிக்கும் பழக்கத்தால் இரத்த அழுத்தம் குறையும்.

ஆவேசமாக கத்துவதை குறைத்தால் இரத்த அழுத்தம் குறையும்.

நாள்தோறும் வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்தால் இரத்த அழுத்தம் குறையும்.

அசைவப் பிரியர்கள் மீன் உணவை வேக வைத்து சாப்பிட்டால் ஒமேகா – 3 – கொழுப்பு அமிலம் சேர்ந்து இரத்த அழுத்தம் குறையும்.

உணவில் அதிக அளவு நார்ச்சத்தை சேர்த்தால் இரத்த அழுத்தம் குறையும்.

அதிக உடல் எடையைக் குறைத்தால் இரத்தக் கொதிப்பு குறையும்.

தினமும் பழவகை உணவுகளை 500 கிராமுக்கு மேல் சேர்த்தால் இரத்தக் கொதிப்பு குறையும்.

தினமும் ஏரோபிக் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்தால் இரத்த அழுத்தம் குறையும்.

மனிதன் மனஇயல், உடலியல், சமூகவியல் ரீதியாக வாழும் உயிர். அதனால் பிற மனிதர்களிடம் தொடர்பு மற்றும் கற்றவர்களின் ஒத்துழைப்புடன் வாழும்போது அவனுடைய மகிழ்ச்சியும் ஆயுளும் அதிகம்.

மாறாக கவலையுடன் தனிமையுடன் வாழும்போது அவனுடைய வலிமை குறையும். ஆயுளும்  குறையும்.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

முதுமையை மாற்ற முடியும்

துத்தநாகம்

நமது நோய் எதிர்ப்பு அமைப்பின் ஒவ்வொரு பகுதிக்கும் துத்தநாகம் தேவைப்படுகிறது. அதன் குறைவால் நோய் எதிர்ப்பு அமைப்பின் பல பகுதிகளை செயலிழக்கச் செய்கிறது. தைமஸ் சுரப்பியிலிருந்து சுரக்கின்றன. நோய் எதிர்ப்பு அமைப்பிற்கு தூண்டுகோலாக உள்ள ஹார்மோன் அளவு குறைகின்றது.

  • துத்தநாகம் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப் படுத்துவதுடன், நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ்களின் பெருக்கத்தையும் தடை செய்கிறது.
  • நமது நோய் எதிர்ப்பு அமைப்பின் எதிர் வினைகள் தடை செய்யப்படுவதால் தான் முதுமை உண்டாகிறது. இதன் விளைவாக அடிக்கடி கடுமையான நோய்கள் உண்டா கின்றன.
  • ஆன்ட்டி ஆக்சிடென்ட் கூட்டுச் சேர்க்கை மாத்திரைகள்தான் இதற்கு சரியான ஆயுதம், நமது நோய் எதிர்ப்பு அமைப்பை முன்னேற்ற மடையச் செய்கின்றன. நமது ஆன்ட்டி ஆக்சிடென்ட் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கு கின்றன. நமது சாதாரண உயிரணுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கின்றன.
  • எல்லா வகையான கொழுப்புகளும் மோச மானவை அல்ல. உண்மையிலேயே அடிப்படைத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானவை. உடலால் இப்பொருட்களை உற்பத்தி செய்ய இயலாது. அவற்றை உணவிலிருந்துதான் பெற வேண்டும். உடலானது கொழுப்புக்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான உயிரணுப் படலங்களையும் புராஸ்டாகிளான்டின்கள் போன்ற ஹார்மோன் களையும் உண்டாக்குகின்றன. ஒமோக 3 கொழுப்பு அமிலமான ஆஃல்பா லினோலியிக் அமிலம் நமக்கு அடிப்படைத் தேவையான கொழுப்பு அமிலம்.
  • ஒமோக 3 கொழுப்பு அமிலங்கள் தாவர எண்ணெய்களான தாவர விதை எண்ணெய், சனோலா எண்ணெய், பூசணிக்காய்  மற்றும் சில  மீன்களிலும் காணப்படுகின்றன.
  • அடிப்படைத் தேவையான கொழுப்புக்கள் நமது மொத்த இரத்தக் கொழுப்பு அளவைக் குறைக்கும். கெட்ட கொழுப்பான எல்டிஎல் இரத்தக் கொழுப்பு அளவுகளையும்  குறைக்கின்றன.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

இளமை ரகசியம்

  • வயதாகுதல் குறித்த சில நம்பிக்கைகள் நம் மனத்தில் ஆழப் பதிந்துள்ளன. அவற்றை உங்களது மனத்திலிருந்து வெளியேற்றிவிட வேண்டும். ஆரோக்கியம் மற்றும் மாறாக இளமை குறித்து கவனம் செலுத்துங்கள்.
  • வயதாகுதல் மற்றும் நோய் குறித்து சமுதாயம் கொண்டிருக்கும் கருத்துக்களுக்கு செவி சாய்க்காதீர்கள். எதிர்மறையான எண்ணங்களால் உங்களுக்கு ஒரு நன்மையும் கிடையாது.

    Read More »

உயர்ந்த ஆரோக்கியம்

நாமனைவரும் இவ்வுலகில் பிறந்ததிலிருந்தே நம்முடைய நினைவுடனோ, நினைவில்லாமலோ தொடர்ந்து சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். நாம் நிமிடத்துக்கு 14 முதல் 24 முறை மூச்சு எடுத்து விடுகிறோம். ஆகவே ஒரு நாளைக்கு சுமார் 25,000 முறை சுவாசிக்கிறோம். நாம் விழித்திருக்கி றோமோ, உறங்குகிறோமோ, வேலை செய்து கொண்டிருக்கிறோமோ, எவ்வேலையாக இருந்தாலும் தானாக தொடர்ந்து சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

Read More »

வயிற்று வலி ஏன்?

வயிறு என்பது பல்வேறு முக்கிய உறுப்புகளின் பெட்டகம். சாதாரண அஜீரணத்தில் தொடங்கி புற்று நோய் வரை அனைத்து நோய்களிலும் வயிற்றுவலி ஏற்படும்.

ஆகையால் வலி எந்த இடத்தில் எவ்வளவு நாட்கள், எந்த மாதிரி, எவ்வளவு நேரம், சாப்பாட்டிற்கு உள்ள தொடர்பு, மலம் கழிப்பதில் உள்ள தொடர்பு, வாந்தியுடன் உள்ளதா மற்ற இடங்களுக்கு பரவுகிறதா என்பதைப் பொறுத்து எதனால் உண்டாகிறது என்பதை அறியலாம்.

இரைப்பையின் பாதிப்பில் மேல் வயிற்றின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். குடல்வால் பாதிப்பில் தொப்புளைச் சுற்றி ஆரம்பித்து கீழ்வயிற்றின் வலப்புறத்தில் தொடர்ந்து வலிக்கும்.

Read More »

மனித இனத்தின் அடுத்த உயரிய நிலை

மனிதனுக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம் அறிவு. அறிவைக் கொண்டு தன்னையறியவும் சூழ்நிலைகளை சரியாக கையாளவும் மனிதனுக்கு கிடைத்திருக் கின்ற அற்புத ஆயுதம் யோகா.

இதை மதத்தின் அடிப்படையிலோ, இந்திய மண்ணில் தோன்றியது என்பதன் அடிப்படை யிலோ பார்க்காமல் ஒரு உடல் அறிவியலாக ஆய்ந்து மேற்கத்தியர்கள் ஏற்றுக் கொண்டு இன்று மருத்துவ அறிவியலில் முக்கிய பாடமாக உருவாகிவிட்டது.

Read More »

செழிப்பான வாழ்க்கை

தொழில்களிலும் வாழ்க்கையிலும் வெற்றி என்பது புள்ளிகளை இணைக்கும் செயல் முறையாகும்.

நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் வெற்றியடைந்தவர் கடைப்பிடித்த பழக்க வழக்கங்கள். நற்பயிற்சிகள், யுக்திகள் ஆகியவை என்னவென்று கண்டு அறிந்து அவர்களின் செயல்களைப் பின்பற்றி புள்ளிகளை இணைக்க வேண்டியது மட்டுமே. அவர்கள் வழி நடந்து அச்செயல்களை அதே வரிசையிலும் பின்பற்றினால், அதேபலன் கிடைக்கும் என்பது நிச்சயம்.

Read More »

குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்?

* பாராட்டுதலோடு வளர்ந்தால், அவன் உற்சாகத்தைக் கற்றுக் கொள்கிறான்.

* குறைசொல்லி விமர்சனத்தோடு வளர்ந்தால், அவன் குறைகூறக் கற்றுக் கொள்கிறான்.

* பகைமையோடு வளர்ந்தால் அவன் சண்டையிடக் கற்றுக் கொள்கிறான்.

Read More »

சமூக நாணம் தேவையா?

உறக்கம், உற்சாகம், நிறைவான உணவு – இம்மூன்றும் நலமான மனத்திற்கு அடிப்படை. நாகரீக காலத்தின் வேகத்தில் பலருடைய உறக்கமும் அடித்துபோய் விட்டது. அதனால் தான் இன்று அதிக அளவு தூக்க மாத்திரைகளும் மது மற்றும் போதை பொருட்களும்.

அமைதியான உறக்கமே மனதிற்குசக்தியைக்கொடுக்கும். ஆசைஅச்சம்கோபம்எதிர்பார்ப்பு, ஏக்கம் – போன்றவை அதிகமாகும் போதும் தூக்கம் குறைந்து விடும்.உடல் வலி, மூளைபாதிப்பு, நரம்பு பாதிப்பு, நாளமிலாச் சுரப்பிகளின் குறைபாடு உணவு மாற்றங்களும் உறக்கத்தை பாதிக்கும்.

Read More »

Advertisements