Cover Story

மனச்சிதைவு உண்டாகக் காரணம்

மனச்சிதைவு உண்டாகக் காரணம் என்ன?

1.உறுதியான குடும்ப சரித்திரம் : மனச்சிதைவு குடும்பங்களில் தொடர்ந்து வருபவையாக அறியப்படுகிறது. பெற்றோர்கள், சகோதரர்கள் அல்லது சகோதரிகள் போன்ற முதல் நிலை உறவினர்கள் மனச்சிதைவின் உறுதியான சரித்திரம் கொண்டவர்களாக இருப்பின் அவர்களிடத்தில் இது மிக பொதுவாக காணப்படுகிறது.

2.மரபணு மற்றும் சுற்றுச்சூழல் குறுக்கீடு : மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் இடையேயான குறுக்கீடுகள்கூட நோய் உண்டாக பொறுப்பாகலாம் என்று எண்ணப்படுகிறது.

Read More »

மன நல பழக்க வழக்கங்கள்!

 • அதிகாலை எழுந்தவுடன் தொடங்குகின்ற முதல் ஒரு மணி நேரம்தான் அந்த நாளின் மற்ற 23 மணி நேரங்களையும் நிர்ணயிக்கும். நன்றாக தொடங்கப்பட்ட நாளானது புத்துணர்வையும் செயலூக்கத்தையும் கொடுக்கும்.

அந்த ஒரு மணி நேரத்தில் ஊக்கமளிக்கும் நூல்களைப் படித்தும்,    உற்சாக ஒலி நாடாக்களைக் கேட்டும், உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை செய்தும் செயல்களைத் தொடங் கினால் ஆன்மா ஆற்றல் மிக்க சக்தியைப் பெறும்.

 • நேர நிர்வாகம் என்பது வாழ்க்கை நிர்வாகம். ஆகவே அதை சரியாக கண்காணித்தல் அவசியம். மிக அற்பமான செயல்களில் நேரத்தை வீணாக்கினால் மிக அத்தியா வசியமான செயல்களுக்கு நேரம் கிடைக்காது.

“இன்று உயர்ந்த நாளாக அமைவதற்கு  நேரத்தைப் பயன்படுத்துவது எப்படி?” என்று திட்டமிடுதல் வெற்றிகளைக் குவிக்கும்.

தொலைபேசியில் எப்போதும் உற்சாகமாகப் பேசினால் அழைப்பவர் உங்களுடைய குரலுக்காக எப்போது வேண்டுமானாலும் காத்திருப்பார். தொலைபேசியில் பேசும் போது நல்ல பண்புகள் தெரியும். எழுந்துநின்று பேசினால் உங்களுடைய பண்பு உயர்ந்துவிடும்.

மகிழ்ச்சி எப்படி?

 • “நாம் மகிழ்ச்சியாய் இருப்பதனால் சிரிப்பதில்லை. சிரிப்பதனால் மகிழ்ச்சியாய் இருக்கின்றோம்” என்றார். வில்லியம் ஜேம்ஸ். ஆழமாக, முடிந்தால் சப்தமாக ஆஹ…ஹா…ஹா… என்று சிரிக்கலாம். சிரிப்பதால் உடலும் மனமும் மென்மையாகிவிடும்.
 • சிரிக்க சிரிக்க முகப்பொலிவு கூடிக் கொண்டே வரும். குழந்தையாக இருக்கும் போது பெரும்பாலான நேரங்களில் சிரித்துக் கொண்டே இருப்போம். வயதாக வயதாக சிரிப்பதற்கே மறந்துவிடுவோம். இன்று சிரிக்கவில்லையேல், இன்று வாழவில்லை என்று பொருள்.
 • சுயவசியம் : ஒரு கட்டிடத்தை கட்டும் முன்னர் காகிதத்தில் வரைபடம் போடுவார்கள். அதே போல ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே அன்றைய தினத்தைப் பற்றிய திட்டங்களை மனதில் வரைபடம் போட வேண்டும். அற்புதங்களை நிகழ்த்து வதாக மனதில் காட்சி காணுதலைச் செய்தால் ஆழ்மனம் அதற்கேற்ப செயல்பட்டு குறிக்கோளை நிறைவேற்றிவிடும்.
 • நமது செயல்பாடு களில் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் செய்தால் உயர்வு. ஆனால் செயலிலேயே அடிமையாகிவிட்டால் துன்பத்தையும் சிரமத்தையும் சந்திக்க நேரிடும்.
 • மகிழ்ச்சியாக இருப்பவர்கள், உலக விஷயங்களில் மாட்டிக்கொள்ளாமல் ஆக்கப் பூர்வமாக வாழ்கின்றனர்.
 • மனிதர்கள் நம்பகத்தன்மை உடையவர்களையே தேடுகிறார்கள்.
 • மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமா வதற்கு நேர்மையானவராக வாழ்ந்தால் போதும். உலகமே போற்றிப் புகழ காத்திருக்கும்.
 • மனித மனம் ஒரு பூத்தொட்டி. அதை நல்ல எண்ணங்களால் விதைத்து பாதுகாத்தால் அழகாக பூத்துக் குலுங்கும். பிற மனிதர்களின் எதிர்மறை விமர்சனங்கள், வன்முறை திரைப்படக் காட்சிகள், குப்பைச் செய்திகள் போன்றவற்றை உள்ளே போட்டால் குப்பைத் தொட்டியாகிவிடும். குப்பையான விஷயங்களை தாட்சண்யம் பாராமல் விலக்கவும்.
 • “இல்லை என்று சொல்ல நினைத்த போது மற்றவர்களின் திருப்திக்காக ஆம் என்று தலையாட்டாதே” என்றொரு ஆங்கில வாசகம் உண்டு.

மற்றவர்களுக்காக, மற்றவர்களின் திருப்திக்காக வற்புறுத்தலுக்காக ஆம் என்று ஒப்புக்கொண்டால் உடன்பாடில்லாத சுமைகளை சுமக்க நேரிடும்.

 • இளமை என்பது இளம்பருவத்தில் மட்டுமல்ல. அது ஒரு மனநிலை. மனதில் தளர்வான சோர்வான எண்ணங்கள், சந்தேகம், பயம் போன்றவை நிறைந்துவிட்டால் மூப்பு இள வயதிலேயே வந்துவிடும்.

குறிக்கோளை உயர்த்தி, ஆர்வத்தைப் பெருக்கி, நம்பிக்கையோடு செயலாற்றினால் இளமை எப்போதும் தொடரும்.

 • பக்கத்து வீட்டுக்காரர்களைத் தெரிந்து கொண்டு அவர்களோடு தொடர்பை வளர்த்தால் வாழ்க்கை வசந்தமாகும். எதிர்பார்க்காதபோதும் உதவிகள் கிடைக்கும்.
 • நாம் சந்திக்கும் மனிதர்களில் ஒரு மாதத்திற்கு ஒரு நல்லவரை தேர்வு செய்யலாம். அவர்களோடு உறவை வளர்ப்பதற்கு திட்டமிடலாம். பிறந்த நாள், மணநாளின் போது வாழ்த்துதல், அவர்களின் திறமைகளைப் பாராட்டுதல், வாய்ப்புக் கிட்டினால் அவர்களுக்கு விருந்தளித்தல் போன்றவை சிறந்த உறவுகளை வளர்த்து வாழ்க்கையை இனிமையாக்கும்.

சிலவற்றை அதிகமாகச் செய்யலாம்.

அதிகமாகப் படிக்கலாம்.

அதிகமாக கற்றுக் கொள்ளலாம்.

அதிகமாகச் சிரிக்கலாம்.

அதிகமாக நேசிக்கலாம்.

 • நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோம் என்ற உணர்வு இருந்தால் மகிழ்ச்சி தானாக வந்து விடும். சக்தி பெருகும். வீண்பேச்சு, தொலைக் காட்சியில் நீண்ட நேரம் அமர்தல், தொலை பேசியில் அரட்டை இவை யெல்லாம் வளர்ச்சிக்குத் தடைகளாகும்.
 • ‘நான்’ ‘எனக்கு’ என்ற வார்த்தைகள் மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிக்கும். இவ்விரண்டு வார்த்தைகளையும் இயன்ற வரை பேசாமல் மற்றவர்களின் மீது கவனம் செலுத்துதல், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டல் போன்றவற்றைச் செய்தால் நட்புறவுகள் வளரும். அகந்தை அழியும்.

சிரிப்பு மருந்து

 • பல நோய்கள் மன அழுத்தத்தாலும், மனச் சோர்வாலும்தான் உண்டாகின்றன. நாம் சிரிக்கும் போது நம் உடலில் 300 தசைகள் வலிமை பெறுகின்றன. கோபப்பட்டால் அதிக தசைகள் இறுகுகின்றன.
 • நாம் சிரிக்கும்போது உண்டாகின்ற ஒருவித நோய் எதிர்ப்புப் புரதம், நம் உடலுக்குள் பாக்டீரியாக்கள், வைரஸ் மற்றும் புற்று நோய்களை பாதிக்கவிடாமல் தடுக்கிறது.
 • நன்றாக சிரிப்பதால் நன்றாக மூச்சுவிட முடிகிறது, அதனால் ஆக்ஸிஜன் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது, ஹார்மோன் களில் மாறுதல் ஏற்பட்டு இதயத் துடிப்பு சீராக நடக்கிறது. செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன.
 • மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இரத்த நாளங்களை நன்றாகச் செயல்பட வைக்கிறது.
 • கிருமிகளால் உண்டாகின்ற சளி, புளு, சைனஸ் தொல்லைகளை குறைக்க எதிர்ப்பு சக்தி உதவுகிறது.
 • காலை எழுந்ததும் சோம்பல் முறித்துவிட்டு, நன்றாக ஐந்து நிமிடங்கள் சிரியுங்கள். சிரிக்க வேண்டும் என்பதற்காகவே சிரியுங்கள்.
 • இரவு படுக்கப் போகும் முன்பும் இப்படி மனம் விட்டு சிரிக்கவும். தினமும் நன்கு சிரிப்பது மிக முக்கியம்.
 • ஆப்பிளில் உள்ள கரையும் தன்மையுள்ள நார்ப் பொருள்களும், கரையாத் தன்மையுள்ள நார்ப்பொருள்களும் பெருங்குடல் புற்று நோயை மட்டுமல்லாமல் பிற புற்று நோய்களை தடுக்கவும் துணை புரிகின்றது.
 • ஆப்பிளில் அதிக அளவு ‘பெக்டின்’ என்ற கரையும் தன்மையுள்ள நார்ப்பொருள் உள்ளது. இது இரத்தத்தில் அதிக அளவு பொதிந்திருக்கிற தீமை தரும் கொலஸ்டிராலைக் குறைத்து உடலிலுள்ள கொழுப்பு அளவை சீராக வைத்துக் கொள்ளத் துணை புரிகின்றது.
 • ஆப்பிளில் அதிக அளவு பொட்டாசியம் என்ற இயற்கை வடிவ தாது உப்பு உள்ளது. இது இதயத்தின் தசைகளை வலுவாக்கி, இதயத்தின் சுருங்கி விரியும் திறனை அதிகரித்து, இதயத்தை நலமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
 • ஆப்பிளில் உள்ள “பைட்டோ நியுட்ரன்ட்’ அளவு அதிகமாக இருப்பதால், இந்தத் தாவரச் சத்து, இரத்தத்தில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ரேடிக்கல்கள் கடினமா வதைக் கட்டுப்படுத்தி உடலில் முதுமை மாற்றங்கள் விரைவாக ஏற்படாதவாறு தடுக்கிறது.
 • ஆப்பிளில், அதிக அளவு இருக்கும் நார்ப் பொருட்கள் இயற்கையாகவே மலச் சிக்கலைத் தடுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.
 • ஆப்பிளில், அதிக அளவில் இயற்கையாக நீர்ச்சத்தும் நார்ப் பொருட்களும் இருப்பதால், ஆப்பிளை அப்படியே தோலுடன் கடித்து உண்பதால், வயிறு விரைவாக நிரம்பிவிட்ட உணர்வு பெறுவதால், அதிக அளவு உணவு உண்பதைத் தடுத்து உடலின் எடையைக் குறைக்கிறது.
 • மஞ்சள் காமாலையில் அவதியுறுபவர் களுக்கும், கல்லீரல் நோயினால் அவதியுறு பவர்களுக்கும் ஆப்பிள் சிறந்த பலனைத் தருகிறது.
 • நன்றாகக் கனிந்த ஆப்பிளின் சதைப் பகுதியை நன்றாகக் கூழாக்கி, வயிற்றுப் போக்கினால் அவதியுறுவோருக்கும் கொடுத்தால் வயிற்றுப்போக்கு கட்டுப் படுத்தப்படும். முதுமைப் பருவத்தில், மூளையின் கோடிக் கணக்கான செல்களில் சுரக்கும் ‘அசிடைல் கோலின்’ என்றவேதிப் பொருள் குறைகிறது. ஆப்பிளை தொடர்ந்து உண்டால் மேற்சொன்ன வேதிப் பொருளின் சுரப்பு அதிகமாகி, முதுமையில் மூளையில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கும்.
 • ஆப்பிளை சாப்பிட இயலாவிட்டால், கொய்யா, மாதுளை போன்ற பழங்களைச் சாப்பிட்டால் போதுமானது.
 • சர்க்கரை நோயினரும் தினமும் ஒரு ஆப்பிள் பழத்தைச் சாப்பிடலாம்.

சிறுநீரகம்

 1. கீழ்முதுகு பகுதியில், பக்கத்துக்கு ஒன்றாக முதுகுத் தண்டுக்கு இருபக்கமும் மொச்சைவடிவம் கொண்டவை சிறுநீரகங்கள்.

சிறுநீரகம் ஒரு வடிகட்டி 

 1. இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற பொருட்களை வடிகட்டி தங்கவைத்து, பிறகு, அப்படி தங்கிப் போன அழுக்குகளைத் தண்ணீரோடு சேர்த்து சிறுநீராக வெளியேற்றுகிறது.
 2. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் நெஃப்ரான்கள் உள்ளன. ஒவ்வொரு நெஃப்ரானிலும் ஒரு கிண்ணம் போன்ற அமைப்பு. இந்த கிண்ணத்துக்கு இரண்டு சுவர்கள் – இது பௌமன்ஸ் காப்ஸ்யூல்.
 3. கிண்ணத்துக்குள் நுழைந்து பல கிளைகளாகப் பிரியும் ஒரு சிறிய ரத்தக்குழாய். இந்த கிளைகளெல்லாம் மீண்டும் சேர்ந்து இன்னுமொரு ரத்தக்குழாயாக உருவாகி, அது கிண்ணத்தைவிட்டு வெளிவரும். உள்நுழையும் ரத்தக்குழாய் – கிளைகள் வெளிவரும் ரத்தக்குழாய் – இவையெல்லாம் சேர்த்து க்ளாமெருலஸ் எனப்படும்.
 4. பௌமன் கிண்ணத்திலிருந்து புறப்படும் சிறுநீரகக்குழாயும், பல நெஃப்ரான்களின் சிறுநீரகக் குழாய்களும் ஒன்று சேர்ந்து, ஒரு சேகரிப்புக் குழாய் உருவாகும். ஒரு சிறுநீரகத்தை நெடுக்காக வெட்டிப் பார்த்தால், குழிந்திருக்கும் பகுதியில், ஒரு பெரிய பை போன்ற அமைப்பு இருக்கும். இது ரீனல் பெல்விஸ் ஆகும்.
 5. ரீனல் பெல்விஸி லிருந்து ஒரு குழாய் புறப் பட்டு சிறுநீரகத்தைவிட்டு அதன் குழிவுப்பகுதியில் வெளிவரும். இரண்டு சிறுநீரகங்களிலிருந்தும் இப்படி இரண்டு குழாய்கள் (யூரிட்டர்) – புறப்பட்டு, சிறுநீர்ப்பையில் சேரும்.
 6. கிளாமெருலஸ்ஸின் ரத்தக் குழாய் களுக்குள் ரத்தம் பாய்ந்து அதில் இருக்கும் கனிம உப்புகள் வேதிமப் பொருட்கள் தேவையான அளவில் மட்டுமே இருக்க  வழி செய்கிறது.
 1. வேண்டாத பொருட்கள் அல்லது அதிகப் படியாக இருக்கும் பொருட்கள், ரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்டு பௌமன் கிண்ணத்துக்குள் தள்ளப் படுகின்றன. இவை கிண்ணம் வழியாக ரீனல் குழாய்க்குள் பாய்கின்றன.
 2. பௌமன் கிண்ணத்தில் வடிகட்டப்பட்ட பொருட்கள் குழாயில் வந்து கொண்டிருக்கின்றன தேவைப்படுபவற்றை சிறுநீரகக் குழாய் சுவரின் அணுக்கள், மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும்.
 3. யூரிட்டர் வழியாக சிறுநீர்ப்பையை அடையும். சிறுநீர், நிறைய சேர்ந்துவிட்டால், சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உணர்வு ஏற்படுகிறது.
 4. உடலிலும் ரத்தத்திலும் சரியான பொருட்களை சரியான அளவில் வைத்திருக்கும் முக்கியப் பணி சிறுநீரகத்தின் மூலமாகத்தான் நடக்கிறது. இப்படி உடலுக்குள் இருக்கவேண்டிய பல பொருட்கள், இருக்கவேண்டிய விதத்தில் இருப்பது உடலின் உள்சூழல் ஆகும்.
 5. உள்சூழலை சமநிலையில் வைக்க, வெயில் காலத்தில் உடலுக்குத் தண்ணீர் நிறைய வேண்டும் என்றால், தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும். உப்பு தேவையென்றால், உப்பை உறிஞ்சிக்கொள்ளும்.
 6. சிறுநீரக அணுக்களில் ரெனின் என்றொரு பொருள் சுரக்கப்படுகிறது. இந்த ரெனின், ரீனல் குழாயில் உறிஞ்சப்படும். சோடியம் உப்புகளின் அளவைத் தீர்மானிப்பதோடு, உடலின் ரத்த அழுத்தத்தை நிலைப்படுத்துவதிலும் பெரும்பங்கு ஆற்றுகிறது.
 7. மூளைக்கு கீழ் உள்ள பிட்யூட்டரி என்னும் சுரப்பியில் இருந்து வரும் ஆன்ட்டி டையூரட்டிக் ஹார்மோன், அட்ரினல் சுரப்பிகளில் சுரக்கப்படும் அல்டோஸ்டீரான் ஆகிய முக்கிய சுரப்புகளும் சிறுநீரகப் பணிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை.

உடலின் தேவைக்கேற்ப தண்ணீரையும் தாது உப்புகளையும் வெளியேற்றுகின்றன அல்லது உறிஞ்சிக் கொள்கின்றன.

 1. உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகிய மூன்று வகை உணவுப் பொருட்களும் மற்றும் வைட்டமின்களும் சம நிலையில் இருப்பதுதான் உடலுக்கு ஆரோக்கிய மானது.

அதுபோலவே நம் உடலில் பல்வேறு பொருட்களும், அழுத்தங்களும், வெப்பமும் சமநிலையில் இருக்க வேண்டும்.

நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படும் பல்வேறு உயிர்ச்சத்துக்களும், மின்னணுப் பொருட் களாகிய பொட்டாசியம், சோடியம் குளோரைடு மற்றும் குளுக்கோஸ் போன்ற சத்துக்களும் சம நிலையில் இருக்க வேண்டும்.

இந்த சமநிலைப்படுத்தும் பணியில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

சர்க்கரை நோயில் சிறுநீரக பாதிப்பு

 1. சர்க்கரை நோய் சிறுநீரகங்களின் நாளங்களைச் சேதப்படுத்தி விடுகிறது. இவ்வகை சிறுநீரக பாதிப்பு நெப்ரோபதி எனப்படும். இதன் ஆரம்பத்தில் அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. ஆனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
 2. உடலில் கழிவுப் பொருட்கள் சிறுநீருடன் வெளியேறாமல் அப்படியே உடலில் தங்கி விடுகிறது.
 3. உடலில் அப்படியே நிலைத்திருக்க வேண்டிய புரோட்டீன் போன்ற முக்கிய சத்துக்கள் வெளியேறிவிடுகின்றன.
 4. உடலில் தங்கிவிட்ட கழிவுகள் படிப்படியாக இரத்த ஓட்டத்தில் படிந்து போய் விடுகின்றன.
 5. இவ்வாறான சேதங்கள் தொடர்ந்து நீடித்தால் சிறுநீரகம் முழுமையாக செயலிழந்து விடக்கூடும்.

சிறுநீரகம் செயலிழந்து விட்டால் இரத்த ஓட்டத்தில் படிந்துபோன கழிவுகளையும் அசுத்தங்களையும் வெளியேற்ற தீவிர சிறுநீரக சிகிச்சை தேவைப்படும். இது டயாலிஸில் எனப்படும்.

 1. சர்க்கரை கட்டுப்படாமல் இயல்பு அளவை விட அதிகமாக இருக்கும் போது நெப்ரான் முடிச்சுகளில் சர்க்கரை படிகிறது. இங்குள்ள புரதங்களின் மீது சர்க்கரை படியப்படிய அவை கெட்டியாகி கெட்டு விடுகின்றன. மேலும் அதிகப் படியான சர்க்கரை, நுண்ணிய இரத்தக் குழாய்களில் பாதிப்புகளை ஏற்டுத்துகிறது. இவ்விரு பாதிப்புகளால் நுண்ணியச் சல்லடைகள் தங்கள் வழக்கமான பணியிலிருந்து மாறுபட்டு வேலை செய்கின்றன. கழிவுப் பொருட்களை மட்டும் வெளியேற்றாமல் உடலுக்குத் தேவையான புரதங்களையும் வேறு முக்கியப் பொருட்களையும் ஒழுகச் செய்கின்றன. இதனால் வேண்டாத பின் விளைவுகள் உண்டாகும்.
 2. உயர் இரத்த அழுத்தம், புகைப்பழக்கம், அதிக புரத உணவு மற்றும் கொழுப்பு உணவுகளை உண்ணுதல், நீடித்த சர்க்கரை நோய், கொழுப்பு நோய், சிறுநீரக நோய் உள்ளோர், இளம் வயதில் சர்க்கரை நோய் – போன்றவை சிறுநீரக பாதிப்பை அதிகரிக்கும்.
 3. சிறுநீரகங்களின் கசிகின்ற புரத இழப்பினால் இரத்தம் தன் அடர்புத் தன்மையில் குறைந்து நீர்த்து விடுகிறது. நீர்த்த இரத்தத்திலிருந்து நீர், இரத்தக் குழாய்கள் வழியாக வெளியேறி உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் கண் இமைகளில் வீக்கம் என்று ஆரம்பித்து நாளடைவில்கால்களில் வீக்கம் ஏற்படும். பாதிப்பு முற்றிய நிலையில் உடல் முழுவதும் வீக்கம் உண்டாகும்.

இரத்தத்திலிருந்து நீர் வெளியேறி உடலில் படர்வதால் எடை அதிகரிக்கும். சிறுநீரில் புரதம் வெளியேறுவதால் நுரை தழும்பிய சிறுநீர் வெளிப்படும்.

24.சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்:

 • பசியின்மை
 • குமட்டல், வாந்தி, சோர்வு
 • விக்கல்கள்
 • உடல் முழுவதும் அரிப்பு
 • சிறுநீர் அளவு குறைதல்
 • இரத்த அழுத்தம் அதிகரித்தல்.
 • இரத்த அழுத்தம் உயர உயர பாதிப்புகள் முற்றிய நிலையை அடைதல்.
 • புரதங்கள் குறைவதால் இரத்தத்தில் கொழுப்பு      அளவு அதிகரித்தல்.
 • இரத்தத்தில் உப்பு சத்துக்கள் அதிகரித்தல்,  சிறுநீரில் அதிக அளவு புரதம் வெளியேறுதல்..
 • இரத்த சோகை போன்றவை.
 1. சிறுநீரக பாதிப்புடன் கண்ணின் விழித் திரையிலும் மாற்றங்கள் ஏற்படலாம். பார்வை கோளாறுகள் மற்றும் கண்விழித்திரை பாதிப்புகள் ஏற்படும்.
 2. சிறுநீரகங்களின் வடிகட்டும் திறனில் கோளாறினால் சர்க்கரை நோய்க்குத் தரப்படும் மருந்துகள் அதிகநேரம் இரத்தத்தில் தங்குகின்றன. எனவே திடீரெனஇரத்த சர்க்கரை அளவு குறையும். இது ஒரு மாயத் தோற்றம். நோய் உண்மையில் கட்டுப்படவில்லை. சிறுநீரக பாதிப்பு முற்றிவிட்ட நிலையை அடைந்து விட்டது. இதை பலர் அறிவதில்லை.
 3. சிலருக்கு சர்க்கரை நோய்க்கான மருந்துகள் இரத்தத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் தங்குவதால் குறைந்த மருந்து எடுத்துக் கொண்டாலும் அடிக்கடி சர்க்கரை தாழ்நிலை உண்டாகும்.
 4. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையாம லேயே சிறுநீரில் சர்க்கரை அளவு குறைந்து காணப் படலாம்.

எல்லா அறிகுறிகளும் ஒருவருக்கே தோன்றுவதில்லை. அறிகுறிகள் தோன்றும் விதம் காலகட்டம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடலாம்.

 1. சர்க்கரை நோயைத் தவிர சிறுநீரக பாதிப்பிற்கான காரணங்கள்
 • பிறவியிலேயே சிறுநீரகக் குறைபாடு
 • அடிபடுதலால் பாதிப்பு
 • பாக்டீரியாக்களின் பாதிப்பு
 • இரத்தக் கொதிப்பு நோய்களின் விளைவு.
 • சிறுநீர் கற்கள் மற்றும் சிறுநீர்ப் பாதை அடைப்பு.
 • புற்று நோய்கள்
 • பிற நோய்களினால் சிறுநீரக பாதிப்பு.
 1. சிறுநீரக பாதிப்பிற்கான  பரிசோதனைகள்
 • சிறுநீர் பரிசோதனை
 • இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின், சர்க்கரை     முதலிய பரிசோதனை
 • எக்ஸ்ரே
 • ஸ்கேன் பரிசோதனை
 • பிற நோய்களுக்கான பரிசோதனைகள்.
 1. சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக கோளாறுகள்:
 • சிறுநீரில் கிருமிகள்
 • நரம்புக் பாதிப்பின் காரணமாக சிறுநீர்ப்பையில் கோளாறுகள்.
 • சிறுநீரக பாதிப்பு
 • சிறுநீரக செயலிழப்பு
 • இரத்தக் குழாயில் அடைப்பு.
 1. சிறுநீரக பாதிப்பை அறிவது எப்படி?

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப் பாடில்லாமல், சரியான சிகிச்சை பெறாமல் இருந்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.

அறிகுறிகள்:

 • கால்வீக்கம், முகத்தில் வீக்கம்.
 • இரத்த அழுத்தம் அதிகமாகுதல்
 • கண்பார்வை (விழித்திரை) பாதிப்பு
 • சிறுநீரில் புரதம் வெளியேறுதல்.

நீண்ட காலமாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வருடம் ஒருமுறையாவது சிறப்பு சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

சிறப்பு சிறுநீர் பரிசோதனை என்பது சிறுநீரில் மைக்ரோ அல்பியூமினூரியா எனப்படும் சோதனை.

அப்படி இருந்தால் சிறுநீரகம் மேலும் பாதிப்படையாமல் இருக்க வேண்டிய சிகிச்சை களைச் செய்ய வேண்டும்.

 1. சிறுநீரக பாதிப்பை தவிர்க்க.
 • இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாடுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
 • இரத்தஅழுத்தம் அதிகமாகாமல் கட்டுப் பாட்டில் கொண்டு வர வேண்டும்.
 • எடை குறைப்பு, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும்.
 • மருத்துவர் அறிவுரைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
 1. சர்க்கரை வியாதியினால் சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் நிரந்தர சிறுநீரக செயல் இழப்பு ஏற்படுகிற அபாயம் உள்ளது. பல வருடங்களாக சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்றவை கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு இந்த செயலிழப்பு விரைவில் ஏற்படும்.

 1. சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்
 • பசியின்மை
 • உடல் சோர்வு
 • வாந்தி, குமுட்டல்
 • மூச்சுத் திணறல்
 • மயக்கம்
 • கால்வீக்கம், முகவீக்கம்
 • இரத்த சோகை
 • அதிக இரத்த அழுத்தம்
 • சிறுநீரின் அளவு குறைவு
 • கண் பார்வை பாதிப்பு
 • தலைவலி, தலைசுற்றல்
 • தோல்களில் வறட்சி மற்றும் அரிப்பு
 • எதிலும் கவனம் செலுத்த இயலாமல் மனக் குழப்பம்

ஆகிய அறிகுறிகள் சிறுநீரக செயலிழப்பின் பின் விளைவுகள்.

 1. நிரந்தர சிறுநீரக செயலிழப்பிற்கு சிகிச்சை முறைகள் :

நிரந்தர சிறுநீரக செயலிழப்பு ஆரம்பக் கட்டமாக இருந்தால் உணவில் புரதத்தை குறைத்தல், பழம், இளநீர், பருப்பு போன்றவை களைத் தவிர்த்தல், உப்பு அளவைக் குறைத்தல், தண்ணீரை குறைவாக குடித்தல். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்தல்.

சர்க்கரை நோய்க்கான மாத்திரை, ஊசி, போன்றவற்றின் அளவுகளைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் சர்க்கரை மிகவும் குறைந்து மயக்கம் ஏற்படும்.

 1. நிரந்தர சிறுநீரக செயலிழப்பு அதிகமானால் :

உணவுக் கட்டுப்பாடு, மருந்து , சிகிச்சை போன்றவற்றுக்குப் பின்பும் சிலருக்கு செயலிழப்பு அதிகமாகும். இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் போன்ற ரசாயனப் பொருட்கள் அதிகமாகும். அந்த கட்டத்தில் டயாலைசிஸ் எனப்படுகிற இரத்த சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.

இரண்டு வகை டயாலைஸிஸ்:

 1. கருவிகளை உபயோகித்து ரத்தத்தை சுத்தப்படுத்தும் செயற்கை சிறுநீரக முறை.
 2. கருவிகள் இல்லாமல் வயிற்றில் செய்யப்படும் ரத்த சுத்திகரிப்பு முறை.

வாரத்திற்கு இரண்டுமுறை ரத்தத்தை சுத்தப்படுத்த வேண்டும்.

 1. நிரந்தர சிறுநீரக செயலிழப்புக்கு நிரந்தர தீர்வு.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது தான் நல்லது. 60 வயதுக்கு உட்பட்ட கடுமையான இருதயக் கோளாறுகள் இல்லாத நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

 1. சிறுநீரகத்தை தானமாக யார் தரலாம்?

நோயாளியின் இரத்த உறவினர்கள் கொடுப்பதுதான் சிறந்தது. சிறுநீரக தானம் கொடுப்பவர் வயது 50க்குள் இருக்க வேண்டும்.

அவருக்கு எந்த விதமான நோய்களும் இருக்கக் கூடாது. இரத்த வகை பொருத்தமாக இருக்க வேண்டும்.

பல்வேறுவித இரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன், எக்ஸ்ரே மூலமாக சிறுநீரக தானம் செய்ய முன் வருபவரின் தகுதிகளை அளவிடப்படும்.

 1. சிறுநீரக செயலிழப்பைத் தவிர்க்க:
 • உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு      வரவேண்டும்.
 • இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்
 • வலி மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும்.
 • புகைபிடித்தல், மதுஅருந்துதல் ஆகியவற்றைத்     தவிர்க்க வேண்டும்.
 • இரத்தத்தில் கொழுப்பு சத்து கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • மருத்துவர் ஆலோசனையுடன தவறாமல் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
 • கண் பரிசோதனைகளை (முக்கியமாக விழித் திரை பரிசோதனையை) செய்து கொள்ள         வேண்டும்.
 • சிறுநீரில் மைக்ரோ – அல்பிமினூரியா மற்றும் புரதச்சத்து உள்ளதா என்று பார்த்துக்        கொள்வது அவசியம்.
 • சிறுநீரக பரிசோதனைகளை அவரவரின் உடல் நிலைக்கேற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்தல் நல்லது.
 1. சிறுநீரக செயலிழப்பு வகைகள்

1. திடீர் செயலிழப்பு, (ஒரு சில நாட்களில்      ஏற்படுவது)

2. நீடித்த செயலிழப்பு. (சில மாதங்கள் முதல் வருடங்கள் வரை ஏற்படுவது.)

3. இறுதிக்கட்ட செயலிழப்பு (இரு சிறுநீரகங்களும் முற்றிலுமாக செயலிழந்துவிட்ட நிலை.)

திடீர் செயலிழப்பு :

மாரடைப்பு, உடலில் இரத்தக் கசிவு, கடுமையான வயிற்றுப்போக்கு போன்றவற்றைத் தொடர்ந்து சிறுநீரகத்திற்கு செல்கின்ற இரத்தத்தின் அளவு குறைதல், சிறுநீரக நெப்ரானில் குளோமெருளஸ் பகுதி பாதிப்பு, சிறுநீரகப் பாதையில் அடைப்பு, மருந்துகள் மற்றும் இராசயனப் பொருட்களின் விளைவாக சிறுநீரக பாதிப்பு போன்றவற்றால் திடீர் செயலிழப்பு ஏற்படும்.

ஒரு நாளுக்கு சிறுநீரின் அளவு 400 மிலிக்கு கீழாக குறைதல், குமட்டல், வாந்தி, மயக்கம், தலைவலி, இடுப்புவலி போன்றவை சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்.

இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின், ஸ்கேன் பரிசோதனை மற்றும் பயாப்சி பரிசோதனை மூலம்  இதை உறுதிப்படுத்தலாம். எக்காரணத்தினால் செயலிழப்பு ஏற்பட்டதோ அதை சரிசெய்து தேவைப் படுவோருக்கு டயாலைஸிஸ் செய்தால் ஆறு வாரங்களில் சிறுநீரகம் இயல்பான நிலையை அடையும்.

நீடித்த சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரகத்தின் செயல்பாடு பல மாதங்களாக படிப்படியாக குறைந்து இறுதியில் முற்றிலும் செயலிழப்பு ஏற்படுதல்.

குளோமெருளஸ் பாதிப்பு, சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு நோய், இரத்த அணுக்களின் பாதிப்பு நோய், சிறுநீர்ப் பாதை அடைப்பு போன்றவற்றால் ஏற்படுகிறது.

 1. சிறுநீரக செயலிழப்பிற்கு உணவு முறை

சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் ள் பொதுவாக அளவான தண்ணீர், மிகக் குறைவான உப்பு – போன்றவைகளைக் கடை பிடிக்க வேண்டும்.

 1. சாப்பிட வேண்டிய உணவுகள்
 • இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி
 • ரசம், மோர்சாதம், பால் சாதம்
 • காய்களை வேகவைத்து வரும் தண்ணீரை கொட்டிவிட்டு சமைக்கவும்.
 • முட்டையில் வெள்ளைக் கரு (2 அல்லது 3) தினமும் சாப்பிடலாம்.
 • வேகவைத்த கோழி, அல்லது மீன் (வாரத்தில் இருமுறை)
 1. சாப்பிடக் கூடாத உணவுகள் (தவிர்க்க வேண்டியது)
 • பருப்பு
 • பழங்கள்
 • பழத்தால் செய்யப்பட்ட ஜாம், பழரசம்
 • இளநீர்
 • குளிர்பானங்கள்
 • ஊறுகாய்
 • தக்காளி.
 1. சிறுநீர்க் கற்கள் உண்டாக காரணங்கள்:
 • தண்ணீர் சரியாக பருகாமல் இருப்பது.
 • சிறுநீர் பாதையில் கிருமிகள் தாக்கப்படுவது
 • சிறுநீர் பொருட்களில் கால்சியம் மற்றும் யூரிக்      அமிலம்  அதிகம் இருப்பது.
 • உணவு பொருட்களில் கால்சியம் மற்றும் யூரிக்     அமிலம் அதிகம் இருப்பது.
 • வைட்டமின் சி மற்றும் டி நிறைந்த உணவு பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்       கொள்வது.
 • ஒரு சில மருந்துகளின் பாதிப்புகள்.
 • பிறப்பிலேயே கற்கள் உண்டாகும் தன்மை போன்றவை.
 1. சிறுநீரகக் கற்கள்அறிகுறிகள்
 • முதுகின் விலாப்பகுதியில் மிக அதிகமான வலி.
 • சிறுநீர்க் கழிக்கும் போது வலி, எரிச்சல், மற்றும் அடைப்பு .
 • இரத்தம் கலந்து சிறுநீர் வெளியேறுதல்
 • வாந்தி மற்றும் குளிர் காய்ச்சல்.
 • முழுமையாக சிறுநீரக அடைப்பு ஏற்படுதல்
 1. சிறுநீர் கற்கள் உண்டாகும் விதம் :

நமது சிறுநீரில் உள்ளதாது உப்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து சிறு துகள்காளக மாறுகின்றன. அவற்றின் மீது மேலும் உப்புகள் படிந்து சிறுநீர்க் கற்கள் உருவாகின்றன.

இவை பல்வேறு வடிவங்களைக் கொண்டவை. இக்கற்களில் பெரும் பாலும் 70 முதல் 80 சதவிகிதம் கால்சியம் ஆக்ஸலேட்களால் ஆனவை. மீதம் உள்ளவை யூரிக் அமில கற்கள் மற்றும் சிஸ்டைன் கற்களாகும். இதில் கடுகளவு உள்ளவை சிறுநீரில் எளிதாக வந்துவிடும். ஓரளவு பெரிய கற்கள் சிறுநீரகப் பாதையில் அடைத்துக் கொள்ளலாம்.

இவ்வகைக் கற்கள் பெரும் பாலும் 20 வயதிலிருந்து 40 வயது வரையிலான ஆண்களையே பெரும்பாலும் பாதிக்கின்றன.

 1. சிறுநீர்க் கற்களால் ஏற்படும் விளைவுகள்

பெரிய அளவு கற்கள் (5மிமீ-க்கு மேல்) சிறுநீர்க் குழாய் களில் அடைத்துக் கொள்வதால் சரிவர சிறுநீர் கீழே இறங்காமல் சிறுநீரகங்கள் வீக்க நிலையை அடைகின்றன.

இதனால் சிறுநீரக திசுக்கள் சிதைவடைந்து தற்காலிக அல்லது நிரந்தர சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

 1. சிறுநீரக கற்களை கண்டுபிடிக்கும் பரிசோதனைகள்

சிறுநீர் பரிசோதனையில் தாதுப்படிவங்கள் மற்றும் இரத்தக் கசிவை அறிதல்.

இரத்தத்தில் கால்சியம், மற்றும் யூரிக் அமில அளவுகள்.

எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கற்களின் அளவையும் இருக்குமிடத்தையும் அறிதல். மேலும் சிலருக்கு ஐ.வி.யூரோகிராபி மூலம் சிறுநீரகங்களின் செயல்பாடுகளைப் பரிசோதிக்கலாம்.

51.கற்களுக்கு சிகிச்சை:

சிறிய அளவு கற்களாக இருப்பின் அதிகப் படியான தண்ணீர் பருகுதல் மற்றும் மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.

மருத்துவமனையில் தங்கி இரத்தக் குழாய் மூலம் திரவம் ஏற்றிக் கொள்வதன் மூலம் கற்களைக் கரைத்து வெளியேற்றலாம்.

 1. சிறுநீர்ப் பாதையை அடைத்துக் கொள்ளும் அளவு பெரிய கற்களாக இருப்பின் எண்டோஸ்கோபி முறை மற்றும் அதிர்வு அலைகளை செலுத்தி கற்களை தகர்க்கும் முறை போன்ற சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
 2. எண்டோஸ்கோபி முறை

யூரடெரோஸ்கோப் கருவியை சிறுநீர் கழிக்கும் வெளிப்புற பாதை வழியாக செலுத்தப் பட்டு சிறுநீர் குழாயின் மேற்பகுதி வரை இந்த கருவியை செலுத்தலாம். அப்படியே கற்களைக் கரைத்து வெளியேற்றலாம். சிறுநீர் பையில் உண்டாகும் கற்களை  சிஸ்டாஸ்கோப் எனப்படும்  கருவியின் வழியாக அகற்றலாம்.

 1. துளையிட்டு சிகிச்சை :

இம்முறையில் முதுகின் விலா பகுதியில் ஒரு சிறுதுளை போடப்பட்டு அதன் வழியாக கருவி சிறுநீரகத்துக்குள் செலுத்தப்பட்டு கற்கள் மின் கதிர்களால் உடைக்கப்பட்டு நீக்கப் படுகின்றன.

சிறுநீரகத்துக்குள் புதைந்துள்ள கற்கள் மற்றும் மேல் சிறுநீர் குழாய் கற்கள் முதலியவற்றை இம்முறையில் அகற்றலாம்.

சிறுநீரக கற்களைத் தவிர்க்க

 1. 55. உணவில் தவிர்க்க வேண்டியவை :
 • பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் (நெய், வெண்ணெய், தயிர்)
 • எள் கடுகு, சீரகம், கசகசா.
 • கீரை வகைகளில் தண்டுக்கீரை, அகத்திக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை.
 • பதப்படுத்தப்பட்ட இறைச்சி, டப்பாக்களில் அடைத்த மீன், உப்பிடப்பட்டு பதப்படுத்திய …….உணவுப் பொருட்கள், வற்றல், ஊறுகாய்.
 • காய்கறிகளில் முருங்கை, முட்டைக்கோஸ், பீன்ஸ், மரவள்ளி, சர்க்கரைவள்ளி, உருளைக் கிழங்கு, குடைமிளகாய், சிவப்பு முள்ளங்கி காலிப்பிளவர், தக்காளி ஆகியவற்றை தவிர்க்கவும்.
 • பழங்களில் கொய்யா, ப்ளம்ஸ், நெல்லிக்கனி, பலாப்பழம், வாழைப்பழம்.
 • டீ., சாக்லேட், ரொட்டி கொட்டை, சமையல் உப்பு, சமையல் சோடா.
 • செயற்கை பானங்களை போன்றவற்றைத் தவிர்க்கவும்.
 1. சாப்பிட வேண்டியவை:
 • இளநீர், பார்லி தண்ணீர்
 • வெள்ளரி, வாழைத்தண்டு, பூசணி ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக்      கொள்ளவும்.
 • தர்பூசணி பழத்தை அடிக்கடி சேர்க்கவும்
 • அதிக அளவு தண்ணீரைக் குடித்தால் சிறுநீரகக் கற்கள் உண்டாகிற வாய்ப்புகள்            குறைவு.
 • நாள்தோறும் சுமார் இரண்டு முதல் மூன்று லிட்டர் நீரைப் பருக வேண்டும்.
 • பாலில் கால்சியம் அதிகமாக உள்ளதால் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கால்சியம் மருந்துகளைக் குறைக்க வேண்டும்.
 • சிறுநீர்ப் பாதையில் கிருமிகளின் பாதிப்பு இல்லாமலிருக்க சரியான மருத்துவ            சிகிச்சையைப் பெற வேண்டும்.

சிறுநீரக நீர்க்கட்டி

 1. சிறுநீரகத்தின் மேற்புறத்தில் பலருக்கு சிறிய அளவில் நீர் அடங்கிய கட்டி இருப்பதுண்டு பெரும்பாலும் சமயங்களில் இதனால் எந்த தொல்லையும் வருவதில்லை. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள் இருக்கலாம்.
 2. சிலருக்கு பெரியதான கட்டியில் வலி ஏற்படும். சில சமயங்களில் சிறுநீரில் இரத்தமும் வெளிப்படும்.
 3. பல்வேறு காரணத்திற்காக ஸ்கேன் செய்யும்போது இக்கட்டி தற்செயலாக தெரிய வரும். தேவைப்பட்டால் ஐ.வி.பி பரிசோதனை செய்தல் அவசியம்.

புற்றுநோய் பற்றிய சந்தேகம் ஏற்பட்டால் ஊசிமூலம் கட்டியிலுள்ள நீரை உறிஞ்சி பரிசோதிக்க வேண்டும். பெரிய, வலியை உண்டாக்குகின்ற கட்டியை அறுவை சிகிச்சையில் அகற்ற வேண்டும்.

கிருமிகளால் பாதிக்கப்படுகின்ற சிறுநீரக நோய்

 1. சிறுநீரகங்கள் எப்படி பாதிப்படைகின்றன?

இனப்பெருக்க உறுப்பு உடலின் வெளிப் புறத்துடன் தொடர்பு கொள்ளுவதால் அதிலிருந்து கிருமிகள் மேல் நோக்கி சென்று சிறுநீரகத்தை பாதிக்கும்.

உடலுறவைத் தொடர்ந்து சிலருக்கு இத்தொல்லை ஏற்படும்.

பெண்களுக்கு மலவாயின் அருகிலேயே சிறுநீர்த் துவாரம் உள்ளதால் மலவாயிலிருந்து பாக்டீரியாக்கள் சிறுநீர்ப் பாதைக்கு சென்று அதனால் பாதிக்கப்படும்.

சர்க்கரை நோயினருக்கு சிறுநீரில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதால் கிருமிகள் எளிதில் பெருக்கமடைந்து அதன்மூலம் பரவி விடும்.

சிறுநீரை அதிக நேரத்திற்கு அடக்கி வைக்கிற பழக்கம் உள்ளவர்களுக்கு அதிலுள்ள கிருமிகள் அதிகமாகின்ற வாய்ப்பு உண்டு.

சிறுநீர்ப்பாதையில் கற்கள் அல்லது கட்டிகளின் அடைப்பு, பெண்களுக்கு கருப்பை பெரிதாகி சிறுநீர்ப் பாதையை அழுத்துதல், ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி பெரிதாகுதல் போன்ற காரணங்களினால் சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உண்டாகி கிருமி பாதிப்பு ஏற்படும்.

சில சமயங்களில் இரத்தத்திலுள்ள கிருமிகள் சிறுநீரகத்தைப் பாதிக்கும்.

நீடித்த, கடுமையான கிருமிகளின் பாதிப்பால் சிலருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.

பெண்களின் சிறுநீர் சிக்கல்கள்

 1. பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுகிற பிரச்சனை சிறுநீர்ப்பையில் கிருமிகளின் பாதிப்பு. பலரும் அடிக்கடி சூடுபிடிக்கிறதென அவஸ்தை. இதன் முக்கிய காரணங்கள்: அதிக அளவு தண்ணீரைக் குடிக்காமை, அதிகநேரம் சிறுநீரை அடக்குதல், பிற உறுப்புகளின் பாதிப்புகளால் சிறுநீர்ப்பாதையில் தடை போன்றன.
 2. சில பெண்களுக்கு சிறுநீர் துவாரமே மிகச் சிறியதாக இருக்கும். நாளாகும் போது மேன்மேலும் குறுகி முற்றிலும் அடைத்துவிட்டால் சிறுநீர் வருவது நின்று சிறுநீர்ப்பை வீங்கி விடும். இதை ஆரம்பத்திலேயே ஆண்டிபயாடிக் மருந்துகளின் மூலம் சிகிச்சை செய்தால் குணப்படுத்திவிட முடியும்.

ஆனால் முற்றிய நிலையில் சிறுநீரை வெளியே எடுக்க அறுவை சிகிச்சை தேவைப் படும். மேலும் அடைப்பு ஏற்படாமலிக்க துவாரத்தை விரித்துவிடுதலை அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்ய வேண்டும்.

 1. சிலருக்கு சிறுநீர்ப் பையிலிருந்து வெளியேறுகின்ற சிறுநீர்ப்பாதை சுருக்கமாகி விடும்.

குறிப்பாக அடிப்பட்டதால் ஏற்படுகிற காயம் மற்றும் கிருமிகளினால் ஏற்படுகின்ற சுருக்கமே சிறுநீரை அடைத்துவிடும். இதற்கு சிறுநீர் பாதையை விரிக்கும் முறை சிகிச்சையை செய்ய வேண்டும்.

 1. சிறுநீர்ப்பாதை கட்டிகள்

சாதாரண கட்டி, பாலிப் கட்டி, புற்று நோய்க் கட்டிகள் போன்றவற்றாலும் சிறுநீர் அடைப்பு ஏற்படும். இதற்கு அறுவை சிகிச்சை அவசியம்.

 1. சிறுநீர் கற்கள்:

சிறுநீர்ப்பையிலோ அல்லது மேற்பகுதி யிலோ உள்ள கற்கள் கீழிறங்கி சிறுநீர்த் துவாரத்தை அடைத்தால் சிறுநீர் கழிப்பதில் சிக்கலாகிவிடும்.

சிலருக்கு சிறுநீர்ப்பாதையின் உட்புற சவ்வு துருத்தி சிறுநீர் துவாரத்தை அடைக்கக்கூடும். குறிப்பாக தொடர்ந்து நீண்ட நாட்களாக முக்குதல், தொடர் இருமல், மலச்சிக்கல் போன்றவற்றை தொடர்ந்து இதுபோன்றசிக்கல் ஏற்படும்.

சிலருக்கு சிறுநீர்ப்பை, மற்றும் சிறுநீர்ப் பாதையானது, கருப்பையின் அழுத்தத்தால் பாதிக்கப்படலாம்.

சிலருக்கு கதிரியக்க சிகிச்சையை தொடர்ந்தும் இந்த சிக்கல் ஏற்படும்.

விரை வீக்கம்

 1. மருத்துவரை அணுகும் போது வெட்கத்துடனும் வேதனையுடனும் பயத்துடனும் திக்கித் திணறி தனக்குள்ள நோயைப் பற்றிக் கூற ஆரம்பித்தால் அந்த நோய் பெரும்பாலும் தங்கள் ஆண் பிறப்பு உறுப்பு மற்றும் விரையில் ஏற்படும் நோயைப் பற்றியதாக இருக்கும் என்பது நிச்சயம்.

குழந்தை தன் தாயின் வயிற்றில் உள்ள 12 வார கருவாக உள்ள போதே விரைகள் சிறுநீரகங்களுக்கு கீழே வளர ஆஜ்ம்பிக்கின்றன.

அப்படி வளரும் டெஸ்டிஸ் என்றழைக்கப்படும் விரைகள் படிப்படியாக கீழே இறங்கி குழந்தை பிறக்கும்போது அல்லது 4 வாரங்களுக்குள் விரைப்பையை அடைந்து விடுகிறது. 2% குழந்தைகளுக்கு மட்டுமே விரை அதன் வழியிலேயே தங்கி விட நேரிடுகிறது.

 1. விரைகளானது வயிற்றிலிருந்து கீழே இறங்கும் போது வயிற்றில் உள்ள பெரிட்டோனியம் என்றழைக்கப்படும் உறையிலிருந்து தங்களுக்கும் ஒரு உறையை உருவாக்கி கொள்கிறது.
 2. 10% குழந்தைகளுக்கு பெரிட்டோனியல் உறையும் விரையின் உறையும் முழுமையாக பிரியாமல் இருக்கும் போதுதான் விரை வீக்கமும் பிறவியிலேயே அல்லது குழந்தை பருவத்திலேயே ஹெர்னியா என்று அழைக்கப்படும் குடல் இறக்கமும் ஏற்படுகின்றன. குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போதுதான் விரையைச் சுற்றி ஏற்படும் வீக்கத்தை கவனிப்பார்கள்.
 3. பிறவியிலேயே குடல் இறக்கம் இருக்கு மானால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்வதே நல்லது. யானைக்கால் வியாதியை ஏற்படுத்தும் கொசுக்களாலும் மற்றும் மம்ஸ் என்றழைக்கப் படும் உமிழ்நீர் சுரப்பிகளை பாதிக்கும் வைரஸ் நோய் கிருமிகளின் பாதிப்பின் போதும் விரைகள் பாதிக்கப்படும்.

மம்ஸ் என்ற நோய் குழந்தைப் பருவத்தில் விரைகளைத் தாக்கினால் மலட்டுத் தன்மை உண்டாகும்.

விரைகளில் செமினோமா, டெரட்டோமா போன்ற கடுமையான புற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. விரையில் ஏற்படும் புற்று நோய்கள் பெரும்பாலும் 25 வயது முதல் 45 வயதிற்கு அதிகம்.

ஆண்கள் தங்கள் விரைகளை குளிக்கும் போது தினமும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

விரையிலோ,  விரைப்பையிலோ வீக்கம் ஏற்பட்டால் 90% சாதாரண வீக்கங்களாகவே இருக்கும்.

இன்றைய மருத்துவம்

 • நவீன மருத்துவத்தில் உடல் உறுப்புகளைப் படம் பிடிக்கும் கருவிகளில் 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன்  என்பது மிகவும் வேகமானது. இதில், தலை முதல் கால் வரை ஒரு நிமிடத்திற்குள் ஸ்கேன் செய்து படம் எடுத்து விட முடியும். இதன் மூலம், இதயம், மூளையில் உள்ள பிரச்சனைகளை மிகத் துல்லியமாகக் கண்டு பிடிக்கலாம்.
 • இதன் மூலம் இதயத் தசைகளுக்கு ரத்தம் செல்லும் ரத்தக் குழாயில் எவ்வளவு கொழுப்பு உள்ளது? எத்தனை ஆண்டுகளாக நீடித்து உள்ளது? என்பதைக்கூட கண்டறிந்து விட முடியும்.
 • பரம்பரையாக மாரடைப்பு நோய் உள்ளவர்கள், இரத்தத்தில் அதிகக் கொழுப்பு, அதிக எடை, புகைபிடிக்கும் பழக்கம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக மன அழுத்தம் உள்ளவர் களும் மருத்துவரின் பரிந்துரைப்படி, இந்த ஸ்கேன் செய்து, தங்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளதா என்பதைக் கண்டறியலாம்.
 • மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நோயாளியை சிகிச்சைக்கு எவ்வளவு சீக்கிரம் கொண்டு வருகிறார்களோ, அந்த அளவிற்கு இதயத் தசைகளைக் காப்பாற்றமுடியும்.
 • இதயத் தசைகள் ஒரு முறைசெயல் இழந்து விட்டால், அதை மீண்டும் இயங்கவைக்க முடியாது.
 • இதயத் தசைகளுக்கு தங்குதடை இன்றி இரத்தம் செல்ல, இரத்தக் குழாயின் அடைப்பை விரிவாக்கும் ஸ்டென்ட்  தொழில்நுட்பம் மிகவும் முன்னேற்றமானது.
 • எம்கார்ட் ஸ்டென்ட் என்றபுதிய கருவி இப்போது அறிமுகமாகி உள்ளது. இதில் வழக்கமான ஸ்டென்ட்டுக்கு வெளியே, மைக்ரான் அளவு தடிமன்கொண்ட பாலிமர் என்ற பொருளால் செய்யப்பட்ட சிறிய மீன் வலை போன்றஅமைப்பும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த வலையும் ஸ்டென்ட்டுடன் இணைந்து ஒன்றாக விரியும் தன்மை  கொண்டது. இதய இரத்தக் குழாயின் உள்ளே பலூன் மூலம் ஸ்டென்ட் விரிக்கப்படும்போது, இந்த வலை அமைப்பு கசடுகளை வெளியே விடாமல் பிடித்துக் கொள்கிறது. இதனால் சிறிய இரத்தக்குழாய்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் கூட தவிர்க்கப்படுகிறது.

முதுமையல்ல… இளமை!

 1. இன்றைய நாளில் இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடியைத் தாண்டி விட்டது . சராசரி மனிதனின் ஆயுள் 27-லிருந்து 70 வயதிற்கு மேல் அதிகமாகிவிட்டது. இப்படி முதியோர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களுடைய பிரச்சனைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
 2. உடலில் முதுமையாகி விட்டாலும் அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ச்சியான நிலை. உலகத்தின் அங்கீகாரத்திற்காக உழைத்து, குடும்பத்தினருக்காக உழைத்துவிட்டு ஒய்வு பெறும் நிலை.
 3. சொந்த பந்தங்களில் கட்டுப்பட்டு பின்னர் அதைவிட்டு தனிமையாகி, பல இடங்களுக்கு செல்கின்ற ஆசையுடன் அவை முடியாமல் போகின்ற உடல் நிலை.
 4. முதுமை நோய்கள், தனிமைநிலை, உடனிருந்தோரின் பிரிவு, மரண பயம் போன்றவற்றுடன் போராடும் வயது.
 5. முதுமை என்பது உடல் உறுப்புகளின் அமைப்பு மற்றும் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் தான்.
 6. முதுமை ஏன்?
 • செல்கள் அழிதல்
 • செல்கள் உறுதியில்லாமை
 • கழிவுப் பொருட்கள் தேங்குதல்
 • செல்லின் அமைப்பு, நச்சுக்களால் அழிதல்
 • மன பதிப்பு
 • ஹார்மோன் குறைதல் – போன்றவற்றால் முதுமை உண்டாகிறது.
 1. முதுமைûயின் போது எல்லா உறுப்புகளும் சுருங்கத் தொடங்கிவிடும். ஆண்களுக்கு மட்டும் சிறுநீர்ப் பாதையில் உள்ள புராஸ்டேட் உறுப்பு வழக்கமான அளவைவிட பெரிதாகும்.
 2. உறுப்புகளின் செயல்பாடுகள் குறைவதுதான் முக்கிய அம்சம். ஜீரண உறுப்புகளில் அமிலம் உற்பத்தியாவது குறையும். பெருங்குடல் இயக்கத்தின் வேகம் குறையும். சிறுநீரகங்கள் செயல்பாட்டிலும் வேகம் குறையும். இப்படி எல்லா உறுப்புகளின் செயல்களுமே குறைந்துகொண்டே வரும்.

முதுமையின் பாதிப்புகள்

 1. கண்களில் புரை ஏற்படுதல், கேட்கும் திறன் குறைதல், சுவை அறிதலில் குறை, தோல் உலர்ந்து சுருங்கி விடுதல், கை, கால்களில் நடுக்கம், மலச்சிக்கல் ஏற்படுதல், தோல் கறுத்துவிடுதல், உடல் மெலிதல், முடி உதிர்தல் போன்ற மாற்றங்கள்.
 2. மூட்டுவலி, அதிக உடல் எடை, சத்துக்குறைவு, புற்றுநோய், இதய செயல்பாடு குறைவு, சுவாச நோய்கள் போன்றவை அதிக தொல்லைகளைத் தருபவை.
 3. நோய்கள் ஏன்?

பரம்பரையியல் முறையில் நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தத்தில கொழுப்பு, உடல் பருமன் மற்றும் புற்று நோய்கள் ஏற்படலாம்.

 1. பழக்கவழக்கங்கள் இளம்வயதிலிருந்தே நல்ல பழக்கங்கள், நம்பிக்கை மனம் இருந்தால் முதுமையில் நோய்கள் குறைவு.
 2. சூழ்நிலை அமைதியான சூழ்நிலை, சுத்தமான காற்று மற்றும் சுத்தமான நீர் மூன்றும் இருந்தால் முதுமையில் நோய்கள் குறைவு.
 3. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மனச் சோர்வு, மன அழுத்தம் போன்ற மன ரீதியான பிரச்சனைகள் அதிகம். கிராமப்புறங்களில் வாழ்பவருக்கு ஊட்டச்சத்து குறைவு, தோல் மற்றும் நுரையீரல் தொற்று, கண்களில் புரைநோய், மூட்டு வலி போன்றவை அதிகம்.
 4. முதுமையின் முக்கிய நோய்கள்:
 • அறிவுத் திறன் குறைதல்
 • எலும்பு பலவீனம்
 • பார்க்கின்ஸன்ஸ் என்றநடுக்கநோய்
 • புற்றுநோய்கள்
 • தடுமாறிக் கீழே விழுதல் / எலும்பு முறிவு
 • சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை
 • இதய செயல்பாடு குறைவு போன்றவை.

முதுமையைத் தள்ளிப்போட முடியும்!

 1. தனிமை : முதுமையில் தனிமையாவது இயல்பு, வேலையில், உறவுகளில், குடும்பங்களில் உள்ளசெயல்பாடுகள் குறைவதால் பிறமனிதர்களின் தொடர்புகளும் குறைந்து தனிமையாகிவிடுவர்.
 2. புத்தகம் படித்தல், கணிணியில் பார்த்துக் கேட்டல், வானொலி, தொலைக்காட்சி, ஆன்மிகம், உடற்பயிற்சி, வீட்டு வேலைகள் என ஏதாவது ஒன்றில் ஈடுபாட்டுடன் செயல்படுதல் நல்லது.
 3. உடற்பயிற்சி, யோகா போன்றவற்றின் மூலம் உடல்வலிமையை பெருக்கி மற்றவர்களைச் சார்ந்து இல்லாமல், தாமே சுய தேவைகளை செய்கின்ற பழக்கம் மனதிற்கு ஊக்கமாகும்.
 4. உலகப்பற்றுதான் மனிதனின் முக்கிய பலவீனம். தண்ணீரில் தாமரைப் போல உலக வாழ்வில் இருந்தாலும் பாசங்களை குறைத்து வாழ வேண்டும்.
 5. தியானம் : காலை, மாலை இரு வேளைகளிலும் செய்தால் மன அமைதி, மன வலிமை, மன திருப்தி பெருகும்.
 6. விரதங்கள் : தினமும் ஒரு மணி நேரம் மௌன விரதம் மனதிற்கு நல்லது. வாரத்தில் ஒருவேளை உண்ணாவிரதம் இருந்தால் ஜீரணம் நன்றாகும். ஆயுள் அதிகம். உண்ணாவிரதத்தின் போது பழங்களைச் சாப்பிடலாம்.
 7. குடும்பத்தினரிடம் எதிர்பார்ப்புகளைக் குறைத்து, முடித்த அளவிற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தால் குடும்ப உறவுகள் வளரும். மற்றவர்களுக்கு உதவும் வகையில் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்தால் தம் பிரச்சனைகள் தானாக குறையும்.
 8. ஆன்மிக நெறிகள் : ஆன்மீக நம்பிக்கைகள் மனதிற்கு இதமானவை. வாழ்விற்கு அமைதியைத் தரும்.
 9. மருத்துவ பரிசோதனை / ஆலோசனை :

ஆண்டுக்கு ஒருமுறை உடலில் தொல்லைகள் இல்லாமல் இருந்தாலும் மருத்துவ பரிசோதனை / ஆலோசனை அவசியம்.

 1. உணவுகள்:

கோதுமை, ராகி, பருப்பு வகைகள், கீரை, பால், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்ற சத்தான உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும்.

முதுமைக்கான சேமிப்பு :

 1. நடுவயதிலிருந்தே முதுமைக் காலத்துக்காக ஒரு கட்டாய சேமிப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் சொத்துக்கள் முழுவதையும் தனது வாரிசுகளுக்கு கொடுத்து விடக்கூடாது. இறுதிவரை தனக்கு தேவையான அளவு சேமிப்பு அவசியம்.
 2. உறவுகள், நட்புகள் என நான்கு பேர்களாவது நெருங்கியவர்களாக இருக்க வேண்டும். தள்ளாத காலத்தில் உதவும்.
 3. ஓய்வு : சிலர் முதுமையிலும் அலைந்து கொண்டே இருப்பார்கள். முதுமையிலும் ஒய்வு இல்லாவிட்டால் எப்போதுதான் ஒய்வு எடுப்பது?
 4. முதுமையில் வசிக்கின்ற இடம், வசதிகள் போன்றவற்றை முன்பே திட்டமிட வேண்டும்.
 5. பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லாதது. மரணம் வலியானது அல்ல. மரண பயமே வேதனையானது. குழந்தை பருவம், வாலிப பருவம், முதுமை, இறப்பு போன்றஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகை உயர்நிலை. இதை மனம் ஏற்றுக்கொண்டால் இறப்பும் மகிழ்ச்சியானநிகழ்வாகிவிடும்.

முதுமையின் பராமரிப்புகள்

 1. முதுமையில் உடல், மன நலனைப் பாதுகாத்தல், சமச்சீரான உணவுமுறை, உடற் பயிற்சி, மன அழுத்தம் குறைத்தல், மருத்துவ பரிசோதனை, யோகா, தியானம் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும்.
 2. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பேணுவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை அளித்து அதற்கேற்ப தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
 3. வீட்டிற்குச் சென்று உதவி செய்யும் செவிலியர்களின் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும்.
 4. ஏழ்மையில் உள்ள முதியோருக்கு இலவச மருத்துவம் செய்யும் வகையில் சட்ட வழி முறைகள் வேண்டும்.
 5. குடும்பத்தினரால் கைவிடப்பட்டு நோயால் நலிவுற்ற முதியோருக்கு மாநில மற்றும் பொதுத்தொண்டு நிறுவனங்கள் பொறுப்பு ஏற்று பராமரிக்கலாம்.
 6. காது கேட்க உதவும் கருவி, மூக்குக் கண்ணாடி, நடை உபகரணங்கள் ஆகியவற்றை ஏழை முதியோருக்கு இலவசமாக அளிக்க வேண்டும்.
 7. முதியோருக்கு இலவசமாக ஆரோக்கிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆலோசனை வழங்கவும் வேண்டும்.
 8. முதியோர் இல்லங்களில் உடல் இயக்கச் சிகிச்சை வேண்டும்.
 9. முதியோர் பென்ஷன் திட்டம் எல்லோருக்கும் நடைமுறைப்படுத்தலாம்.
 10. முதியோர் நல காப்பீட்டு திட்டம் எல்லா நோய்களுக்கும் கிடைக்குமாறு செயல்முறைப் படுத்தவேண்டும்.
 11. கூட்டுக்குடும்பம் மாறி தனிக்குடித்தனம் நமது நாட்டில் வளர்ந்து விட்டதால் முதியோர் இல்லம் எல்லா ஊர்களிலும் செயல்படுத்த வேண்டும்.
 12. வசதியான வீடுகளைச் சேர்ந்த முதியவர் களும் வீட்டில் தனிமையில் இருப்பதைவிட, முதியோர் இல்லத்தில் மற்றவர்களுடன் சேர்ந்திருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
 13. ஊட்டச்சத்துள்ள உணவு, நல்ல மருத்துவ வசதி, சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இல்லங்கள் முதியோருக்கு அவசியம்.
 14. முதியோர் இல்லங்களுக்கு வருவோர்கள் யார்?
 • பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள்,
 • பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் தங்களால் தொந்தரவு வேண்டாம் என்று நினைக்கும் முதியவர்கள்,
 • பிள்ளைகள் இல்லாத முதியவர்கள்,
 • பிள்ளைகள் அயல்நாட்டில் இருக்கும் சூழ்நிலையில், முதியோர் இல்லத்தை      நாடுபவர்கள்.
 • கணவன், பிள்ளைகள் இல்லாத பெண்கள் போன்றோர் விரும்பாவிட்டாலும் முதியோர் இல்லத்தை நாடுகின்றனர்.
 1. பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து சொந்த பந்தங்களோடு வாழ்க்கையை அனுபவித்த அவர்களுக்கு, வாழ்க்கையின் கடைசிப் பகுதியில் முதியோர் இல்லம் என்ற புது இடம் எப்படி மகிழ்ச்சி தரும்? முதியோர்களிடம் மனித நேய மிக்கவர்கள் செயல்பட்டால் ஓரளவு திருப்தியைக் கொடுக்கமுடியும்.
 2. தற்கால சூழலில் திருமணத்திற்குப் பின்னர் தம்பதியரை தனிக்குடித்தனம் வைத்து அன்பான சூழ்நிலையில் அனுப்பி வைத்தால் அவர்கள் அடிக்கடி பாச உணர்வோடு பெற்றோர்களைப் பார்க்க வந்து போவார்கள். முதியவர்களும் அதே அன்போடு பிள்ளைகள் வீட்டுக்கும் சென்று வரலாம்.

முதுமையின் வேதனைகள்

 1. தனிமை ஏன்?

இப்போதுள்ள குடும்ப அமைப்பில் ஒரு வீட்டில் சராசரியாக ஒரு குழந்தைதான் இருக்கிறது. அது பெண்ணாக இருந்தால் கணவன் வீட்டுக்குச் செல்வது, ஆணாக இருந்தால், படித்து வேலைக்காக வெளியூருக்கோ வெளிநாட்டுக்கோ செல்கின்ற நிலை. இதனால் பெற்றோர்கள் தனியாக விடப்படுகின்றனர்.

 1. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து போனதால் (குறிப்பாக மாமியார் மருமகள் சண்டை) குடும்பங்கள் பிரிகின்றன. தனிமை ஏற்படுகின்றன.
 2. புதிய தலை முறையினர் நன்கு படித்து, நல்ல வேலையில் சேர்ந்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் அவர்கள் முதியோர்களை கவனிப்பதை முக்கியமாக நினைப்பதில்லை.
 3. பெற்றோரின் எதிர் பார்ப்பிற்கும் பிள்ளைகளின் மனநிலைக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டு குடும்ப உறவுகள் சிதறுகின்றன.
 4. தனிமையில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் முதியோருக்கு மன அழுத்தம் ஏற்படும்.
 5. சிலர் படுத்த படுக்கையாக இருக்கலாம். பக்கவாதம், மூட்டுவலி, பார்வைக்குறைபாடு, பார்க்கின்சன்ஸ் போன்ற வற்றால் முடக்கப் பட்டிருக்கலாம். அதனால் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கும்.
 1. உடல்நலப் பிரச்சனை களால் எதிர்பாராத விதமாகப் பெரும் செலவு ஏற்படும்போது முன்னரே சேமிப்பு, ஓய்வூதியம், காப்பீடு போன்றவை இல்லாதவர் களுக்கு பரிதாப நிலைதான்.
 2. இளைய தலை முறையினர் தங்களுடைய பெற்றோரை எப்படிப் பொறுப்புடன் கவனித்துக் கொள்கிறார்களோ, அதைப்பின் பற்றித்தான் இன்றைய தலை முறையினர் வயதாகும் போது அவர்களுடைய பிள்ளைகள் கவனித்துக் கொள்வார்கள். இது வாழ்க்கை நடைமுறை என்பதை இன்றைய இளைய சமுதாயத்தினர் மறந்துவிடக்கூடாது.
 3. கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து அதனால் சமூகத்தின் மாற்றங்களால் முதியோர்களில் பலருக்கு அனாதை நிலை. அவர்களை பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமை.
 4. யாரும் சுய மரியாதை, சுய கௌரவம், சுய மதிப்பு போன்றவற்றை இழக்க விரும்ப மாட்டார்கள். இளையவர்கள் அதை உணராத போது மனமுடைந்து விடுவர்.
 5. பெரியோர் தன்னால் முடிந்த சிறுசிறு உதவிகளைச் செய்யலாம். பேரக்குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு விடுதல், கடைகளுக்குச் சென்றுவருதல் போன்று வீட்டிற்குத் தேவையான வற்றை செய்யும்போது இளைய தலைமுறைக்கு பெரியோர்களின் துணை அவசியமாகிறது. முதியோர்களுக்கும் உடற்பயிற்சியாகி விடும்.
 6. உடல் வலுவின்மை, பசியின்மை போன்றவை முதுமையில் இருக்கும். இவை காசநோய், நீரிழிவு, புற்றுநோய் போன்றவற்றின் அறிகுறிகளாக இருந்தாலும், ஒரே மாதிரியான அறிகுறிகளோடு பல்வேறு நோய்கள் தாக்குவது முதுமையில் ஏற்படும்.
 7. முதியோரைப் பரிசோதிக்கும்போது, அவருக்கு உள்ள நோய் சாதாரணமானதா இல்லை தீவிரமானதா என்று நன்கு ஆய்வு செய்ய வேண்டும்.
 8. நோயைக் கண்டறிவதைப் போல சிகிச்சை அளிக்கும்போது நோயாளியின் வயது மற்றும் நோயின் தன்மைக்கேற்ப மருந்தையும் அளவையும் மாற்ற வேண்டும்.

முதுமையில் தடுப்பூசிகள்

 1. இன்ஃப்ளூயன்ஸா என்ற நோய் வைரஸால் ஏற்படுகிற ஃப்ளூ காய்ச்சல். இதனால் நிமோனியா, எடை இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். வருடத்திற்கு ஒருமுறை குளிர் காலத்துக்கு முன்பே இந்த தடுப் பூசியைப் போட்டுக்கொண்டால் நல்லது.
 2. நிமோகாக்கல் எனப்படும் கிருமியால் ஏற்படுவது நிமோனியா காய்ச்சல். தடுப்பூசி போட்டுக் கொண்டால் இந்நோயிலிருந்து தப்பிக்கலாம்.
 3. முதுமையில் காயமும் விபத்தும் தவிர்க்க முடியாதது, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட்டனஸ் டாக்ஸாய்டு போட்டுக் கொண்டால் முதுமையில் ரணஜன்னி நோய் வராது.
 4. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை டைபாய்டு தடுப்பூசியைப் போடவும்.
 5. ஹெபடைடிஸ் – பி தடுப்பூசி மூன்று ஊசிகளைப் போட்டு விட்டால் பி-காமாலையைத் தவிர்க்கலாம்.
 6. இதயத்தில் நோய்த்தொற்று, பக்கவாதம், கை, கால் இழப்பு, இதயநோய், கண்புரை, காது கேளாமை, மனச்சோர்வு, பார்வை இல்லாமை, ஞாபக மறதி, பார்க்கின்சன்ஸ் போன்றவற்றினால் முதியோர் தனித்துச் செயல்பட முடியாமல் பிறரை சார்ந்திருக்கும் நிலையாகிறார்கள்
 7. படுக்கை நிலை:
 • எலும்பு மூட்டுகளில் தேய்மானம்
 • நடையில் ஏற்படும் மாற்றங்கள்
 • தசைகளின் பாதிப்பு
 • நீரிழிவு, தைராய்டு பிரச்சனைகள், ரத்த சோகை, புற்றுநோய், பக்கவாதம் மற்றும் நரம்பு தளர்ச்சி போன்றவற்றால் உறுப்பு களின் செயல்பாடுகள் குறைந்து படுக்கை நிலை ஏற்படும்.
 1. கண், சிறுநீரகம் மற்றும் உடலை தானமாக கொடுக்க விரும்புவோர் அதற்கான சம்மதத்தை முன்னரே செய்திருக்க வேண்டும். குடும்பத் தினரும் அதை அறிய வேண்டும். உறுப்பு தானம் செய்தால் இறந்த பின்னரும் வேறொரு உடலில் வாழும் நிறைவு கிடைக்கும்.
 2. மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் தாக்கத்தால் பெரியவர்களுக்குரிய மரியாதை வெகுவாகக் குறைந்துவிட்டது. குடும்பத்தில் முக்கியமானவராக கருதப்பட்டவர்கள் இன்று வீண் உறுப்பினர் என்ற அளவில் வைத்துத்தான் பார்க்கப்படுகிறார்கள்.

சொத்தும் சட்டமும்

 1. தான் வாழ்ந்த காலத்தில் தன் சுய சம்பாத்தியத்தில் சம்பாதிக்க சொத்துக்களை, தன் இறப்புக்குப் பிறகு யார் அனுபவிக்கலாம் என்பதை விளக்கமாக எழுதிக் கொடுக்கும் படிவம் உயில் என்பது. உயில் எழுத கண்டிப்பாக ஒரு வழக்கறிஞரின் உதவி தேவை.
 2. நல்ல உடல் மற்றும் மன நலத்தோடு இருக்கும் போதே உயில் எழுதிவிடுவது நல்லது.
 3. எளிதாகவும், எல்லோருக்கும் புரியும் படியாகவும் உயில் இருக்க வேண்டும்.
 1. கையில் எழுதியதாகவோ, டைப் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம். அரசு முத்திரைத் தாளில் இருக்கவேண்டிய அவசியமில்லை.
 2. சொத்துக்கள் சரியாக அவரவர்களுக்கு பிரித்து எழுதப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்கநம்பகமானநபர் தேவை.
 3. சாட்சிக் கையெழுத்துப் போட இரண்டு பேர் தேவை.
 4. எழுதிய உயிலைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
 5. உயில் எழுதியவரின் இறப்பிற்குப் பிறகுதான் உயிலில் எழுதப்பட்டது நடைமுறைக்கு வரும்.
 6. உயிலைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். வங்கியில் வைக்கலாம். உயிலின் ஒரு பிரதியை வழக்கறிஞரிடம் கொடுத்து வைக்கலாம்.
 7. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு போதுமான பண வசதி தேவை. அதனால் இளமையிலேயே தேவையான பணத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். தான் சம்பாதித்த சொத்துக்களையும் , பணத்தையும் தன் வசமே வைத்துக் கொள்ள வேண்டும்.
 8. யார் யார் பலனடைவார்களோ அவர்களிடம் உயிலின் விவரங்களை மேலோட்டமாக சொல்லிவிட்டால் அவர்கள் முதியோர்களைப் பராமரிப்பதில் அக்கறைக் காட்டுவார்கள்.

பிரிவும் மரணமும்

 1. வாழ்க்கைத் துணை’யை இழப்பது என்பது தாங்கமுடியாத துக்கத்தையும், மன வேதனை யையும் தரும். முதுமையின் வேதனைஅப்போது தான் அதிகமாகிறது.
 2. துயரங்களைக் குறைப்பதற்கு….
 • நன்றாகச் சாப்பிட்டு ஓய்வு எடுத்தல்.
 • விபத்துகள் நேராமல் கவனமாக இருத்தல்.
 • பண முதலீடு மற்றும் பண சம்பந்தமான விசயங்களில் இயன்றவரை பணவிரயத்தைத் தவிர்த்தல்.
 • புகை, மதுபழக்கங்களைத் தவிர்த்தல்
 • திருப்தியான இடத்தில் வசித்தல் போன்றவை     நல்லது.
 1. முதுமையில் ஏற்படுகின்ற இழப்புகளை சமாளிக்க மன உறுதியையும் மன அமைதியையும் வளர்க்க வேண்டும்.
 2. இறப்பு என்பதை அறியாமலேயே மரணம் அடைந்தால் மனவேதனை அதிகமிருப்பதில்லை.
 3. எப்போதோ ஏற்படப்போகும் தன் மரணத்தைப் பற்றிக் கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. வருவது வரட்டும் என்று மரணத்தை ஏற்கும் மனப்பக்குவம் தேவை.

முதுமையில் மனநிலை

 1. கோபத்துடனும் பிடிவாதத்துடனும் வாழ் பவர்கள் தமக்கும் மற்றவர்களுக்கும் வேதனை யானவர்கள்.
 2. சிலர் தனது நிலைக்கு தன்னைத்தானே நொந்து கொண்டு விரக்தியோடு வாழ்வர். இவர்களையும் பிறர் வெறுப்பார்கள்.
 3. ஓய்வாக தன் கடந்த காலத்தின் பசுமை நினைவுகளை மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் நினைவு கொள் பவர்கள் பயமின்றி வாழ்வார்கள்.
 4. எந்த பிரச்சனையையும் தானே சமாளிக்கும் திறமை படைத்தவர்கள் இறுதிவரை உற்சாகமாகவே வாழ்வார்கள்.
 5. மனஅழுத்தம் முதுமையில் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எல்லோருக்கும் அவசியம். தன்னால் இயலாத சூழ்நிலையில் மன அழுத்தம் வந்தால் மருத்துவ சிகிச்சை அவசியம்.

முதியோருக்கு சிகிச்சை

 1. முதியோருக்கு உடல் எடை குறையும். அதற்கேற்ற அளவில் மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.
 2. வயது அதிகரிக்கும் போது சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும். குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனைகள் செய்தால் ஆரம்பத்திலேயே அறியலாம்.
 3. இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளும் செயல்பாடு குறைந்திருக்கும்.
 4. ஊட்டச்சத்து குறைவு ஏற்படும்போது அதை சரிப்படுத்தலாம். உணவு மூலமே சரிப்படுத்தலாம்.
 5. முழங்கால் வலிக்கும் பிறமூட்டு வலிகளுக்கும் உடல் இயக்கச் சிகிச்சை நல்ல பலன் அளிக்கும்.
 6. நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே உணவு முறையில் மாற்றமும், உடற்பயிற்சியும் செய்தால் நல்ல பலன்கள் கிட்டும்.
 7. நார்ச்சத்து உணவுகளை அதிகமாக சாப்பிடு வதன் மூலம் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்.
 8. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கண்டிப்பாக மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
 9. மருந்துகளின் அளவுகளை நோயாளியே கூட்டியோ, குறைத்தோ சாப்பிடக் கூடாது
 10. மருந்துகளை திடீரென நிறுத்தி விடக் கூடாது.

முதுமையில் உடற்பயிற்சி

 1. உடற்பயிற்சியினால் உடலும் மனமும் புத்துணர்வு பெறுவது எல்லோருக்கும் பொதுவானது.
 2. முதியோர்களுக்குள்ள அதிக இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு, இதய நோய், சர்க்கரை நோய், அதிக உடல் எடை போன்ற வற்றிற்கு உடற்பயிற்சி ஒரு சிகிச்சை யாகும்.
 3. மலச்சிக்கலைத் தவிர்க்கவும், குணப் படுத்தவும் உதவும்.
 4. இரவில் தூக்கம் அமைதியாக கிடைக்கும்.
 5. எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு குறையும்.
 1. முதுமையில் ஏற்படுகின்ற பெருங்குடல் புற்று நோய், மார்பு புற்றுநோய் போன்றவை உடற் பயிற்சிகளால் குறையும் வாய்ப்புகள் உண்டு.
 2. தினமும் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். சைக்கிள் ஒட்டுதல், யோகா போன்றவற்றையும் செய்யலாம்.
 3. எச்சரிக்கை : உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், மூட்டுகளில் அதிக வலி, இதய படபடப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே நிறுத்திவிட்டு மருத்துவரிடம் ஆலோசனைப் பெறவும்.
 4. வைட்டமின்-இ, பீட்டா கரோட்டின் வைட்டமின்-சி, செலினியம், துத்த நாகம் போன்றவை நோயை எதிர்க்கவும் முதுமையைத் தள்ளிப்போடவும் உதவும்.
 5. சிட்ரஸ் பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுதானியங்கள், கொட்டை வகைகள், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய், பச்சைக்காய்கறிகள், மஞ்சள், ஆரஞ்சு நிறமுள்ள பழங்கள், பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, கேரட், பூசணி போன்றவற்றைஅதிகமாக உபபோகித்தால் உடலுக்கு சக்தி கிடைக்கும்.
 6. முதியோர்கள் காலையில் வயிறு நிறைய நன்றாக சாப்பிடவும், மதியம் மிதமாகவும், இரவு மிகக் குறைவாகவும் சாப்பிட வேண்டும். இரவில் அதிகமாக சாப்பிட்டால் சீரணத் தொல்லைகள் உண்டாகும்.
 7. பொறித்த உணவுகள், நெய், வெண்ணெய் மற்றும் இனிப்புகளைத் தவிர்க்கவும்.
 8. உப்பைக் குறைக்கவும். குறிப்பாக ஊறுகாய், பதப்படுத்திய உணவுகளைத் தவிர்க்கவும்.
 9. தினமும் 6 முதல் 8 டம்ளர் அளவில் நன்கு காய்ச்சிய தண்ணீர் குடிக்கவும்.
 10. ஒரு டம்ளர் சூடான பாலை படுக்கும் முன்னர் குடிக்கவும்.
 11. முதியோருக்கு சாப்பிடும் உணவின் அளவு குறைந்துகொண்டே போகும்.
 • சுவை அறியும் திறன் மற்றும் மணம் அறியும் திறன் குறைவதால்,
 • பல்வேறு நோய்களாலும், 119. பால், பீன்ஸ், பட்டாணி, தானியங்கள், கொட்டைகள், காளான், முட்டை, மீன், கோழி போன்றவற்றில் புரதசத்து அதிகம் இருப்பதால் உணவில் அவசியமாக சேர்க்கவும்.
 1. பால், ராகி (கேழ்வரகு) கீரைகள், மீன், நண்டு போன்ற உணவுகளில் கால்சியம் அதிகமாக கிடைக்கும்.
 2. கோதுமை மாவு, வெல்லம், பச்சைக்கீரைகள், தேன் மற்றும் பேரீச்சம்பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து அதிகம்.
 3. பச்சைக்காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கின்றன.
 4. முதியவர்கள் எந்த வேளையிலும் வயிறு புடைக்க சாப்பிடக்கூடாது. அரை வயிறு உணவு – கால் வயிறு தண்ணீர் -கால் வயிறு வெற்றிடம் என இருந்தால் ஆயுள் அதிகம்.
 5. சைவ உணவுகளை எளிதில் மென்று சாப்பிட முடியும். குறிப்பாக பல் இல்லாத முதியவர்கள், சைவ உணவுகளை மிக எளிதாகச் சாப்பிட முடியும்.
 6. பச்சைக் காய்கறிகளிலும், பழங்களிலும் ஊட்டச்சத்து அதிகமாகக் கிடைக்கிறது. அவற்றை அதிகமாக சேர்ப்பது அவசியம்.

செயற்கைப் பல் அவசியம்

 1. முதுமையில் பல் விழுதல் இயற்கையானது. அதனால் உணவை நன்கு மென்று சாப்பிட முடியாமலும் சாப்பிடும் உணவின் அளவு குறைந்தும் ஊட்டச்சத்துக் குறைபாடும் உருவாகி உடல்நலம் பாதிக்கப்படும்.
 2. செயற்கைப் பல் பொருத்திக் கொண்டால் மேற்கண்ட பிரச்சனைகளைக் குறைக்கலாம்.
 • உடல் இயக்கம் குறைவதாலும்,
 • ஏழ்மை, தனிமை, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றாலும்     சாப்பிடும் உணவின் அளவு குறையும்.
 1. ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகள் அவசியம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
 2. கோதுமை, ராகி போன்ற நார்ச்சத்து அடங்கிய உணவுகள் நல்லது.

பல் பிரச்சனைகளைக் குறைக்க

 1. ஒவ்வொரு முறைஉணவு சாப்பிட்ட பிறகும் பிரஷ்ஷால் பல் மற்றும் ஈறுகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
 2. இனிப்பு, சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றை குறைக்கவும்.
 3. புகையிலை, வெற்றிலைப் பாக்கு பழக்கத்தைத் தவிர்க்கவும்.
 4. பச்சைக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடவும்.
 5. பல்லில் சிறு பிரச்சனை என்றாலும் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 6. ஆண்டுக்கு ஒருமுறையாவது பல் மருத்துவரிடம் சென்று பற்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 7. செயற்கைப் பற்களால் முகப்பொலிவு, உணவை மென்று உண்ணுதல், பேச்சில் தெளிவு போன்ற நன்மைகள் உண்டு.

காது மந்தமாகுதல்

 1. முதியோர் கேட்கும்திறன் இக்ஷ்க்கும் போது சுற்றியிருப்பவர்களிடம் இருந்து விலகிவிட நினைப்பார்கள்.
 2. காது கேட்கும் திறன் குறைவு ஏன்?
 • உடலில் ஏற்படும் மாற்றங்கள்
 • பரம்பரைத் தன்மை
 • நோய்த் தொற்று
 • மெழுகு போன்ற பொருள் உருவாகி காதை அடைத்துக் கொள்ளுதல்
 • சத்தம் அதிகம் உள்ள பகுதியில் வசிப்பது போன்றவை
 1. வயதான எல்லோருக்கும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் காது கேட்கும் திறன் பரிசோதிக்கப்பட வேண்டும்.
 2. தேவைப்படும் பட்சத்தில் காதுகளில் பொருத்திக்கொள்ளும் கருவியைப் பயன் படுத்தலாம்.
 3. கேட்கும்திறன் குறைந்தவர்களிடம் பேசுபவர், முதியவரின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்து உரையாட வேண்டும். உதாரணமாக கை அல்லது தோளைத் தொட்டுப் பேசுதல்.
 4. நேருக்குநேர் நின்று நல்ல வெளிச்சத்தில் அவருடைய முகத்தைப் பார்த்துப் பேசினால் அவர்களுக்கு எளிதில் புரியும்.
 5. காது கேளாதவர்களிடம் சற்று உரக்கப் பேசவும். ஆனால் கத்திப் பேசக்கூடாது.
 6. நிறுத்தி, நிதானமாகப் பேசவும். தேவைப் பட்டால் எழுதிக் காட்டவும்.

கண் புரை

 1. ‘இன்ட்ரா ஆகுலர் லென்ஸ்’ (IOL) எனப்படும் கண்ணுக்குள் லென்ஸ் பொருத்திச் செய்யப்படும் முறைதான் மிகச்சிறந்தது.
 • அறுவைசிகிச்சை முடிந்து ஒரு வாரத்திலேயே சாதாரண பார்வை கிடைக்கும்
 • கண்ணாடி தேவையில்லை
 • பார்வையில் எந்த மாற்றமும் இருக்காது

கண்களைப் பாதுகாக்க

 • ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்யவும்.
 • அழுக்கான கைகளால் கண்களைத் தேய்க்கக் கூடாது.
 • கண்களில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் தாமதிக்காமல் உடனே கண் மருத்துவரை அணுக வேண்டும்.
 • கண்ணாடி பரிந்துரைக்கப்பட்ட பிறகு அதைத் தொடர்ந்து அணிந்து கொள்ள வேண்டும்.
 1. முதியோர்களில் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தால், பெரும்பாலானவர்களுக்குப் பித்தப் பையில் கற்கள் இருக்கும்.
 2. பெரும்பாலான முதியோர்களின் பித்தப் பையில் கற்கள் ஏற்படுகின்ற வாய்ப்பு அதிகம்.
 1. வயது அதிகரிக்க அதிகரிக்க பித்தப்பை கற்கள் உருவாவதும் அதிகரிக்கும். எந்த அறிகுறியும் இல்லாமல் பித்தக்கற்கள் இருக்கலாம்.
 2. எழுபது வயதிற்கு மேல் எந்தவித அறிகுறியும் இல்லாமல் பித்தப்பையில் கற்கள் தோன்றுவது இயல்பானது. அறிகுறிகளுடன் தோன்றும் பித்தப்பைக்கற்களுக்கு அறுவை சிகிச்சை தேவை.
 3. வயிற்றில் நுண் குழாயைச் செலுத்தி பித்தப் பை அறுவை (லேப்ராஸ்கோபி) சிகிச்சையை எளிதில் செய்யமுடியும்.
 4. முதியோரின் காமாலைக்கு கணையத்தில் புற்றுநோய், பித்தப்பை கற்களும் முக்கிய காரணங்களாகும். அதனால் வயதான காலத்தில் மஞ்சள் காமாலை வந்தால் அதை சாதாரணமாக நினைக்கக்கூடாது.
 5. காமாலைக்கு மந்திரம்போடுதல், தழைச்சாறு கொடுத்தல்,, கடுமையான உணவு பத்தியம் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

தைராய்டு நோய்

 1. தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பது பெண்களுக்கே அதிகம். பெண்களுக்கு வயதாகும்போது மேலும் அதிகமாக இருக்கும்.
 2. உடலின் எதிர்ப்புத் திறன் குறைவிற்கான காரணங்கள்:
 • தைராய்டு சுரப்பியின் மேல் செய்துகொண்ட கதிர்வீச்சு
 • அறுவை சிகிச்சையின் மூலம் தைராய்டு சுரப்பி நீக்கம் போன்றவற்றால் தைராய்டு குறைவு உண்டாகும்.
 1. உடற்சோர்வு, மந்த நிலை, மனச்சோர்வு, மலச்சிக்கல், காதுகேளாமை போன்ற தொல்லைகளுடன் உடல் வீக்கம், குரல் மாற்றம், தோல் வறட்சி போன்ற அறிகுறிகள் இருந்தால் தைராய்டு குறைவு எனலாம்.
 2. இந்நோயைக் குணப்படுத்த தைராக்ஸின் என்ற மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். மருத்துவ ஆலோசனையில்லாமல் மாத்திரையின் அளவை மாற்றக் கூடாது.
 3. தைராய்டு கட்டிகள் இருந்தால் அது புற்றுநோயாக இருக்கலாம். அதனால் உடனடி சிகிச்சை அவசியம்.

காய்ச்சல்!

பன்றிக் காய்ச்சலை உண்டாக்கும் ‘இன்ஃபுளூ யன்ஸா’ வைரஸ் கிருமி, வட அமெரிக்க பன்றி,  அமெரிக்க பறவை, மனித இன்ஃபுளூயன்ஸா, பன்றி ஆகியவற்றில் உற்பத்தி ஆகிறது.

பரவும் முறை

 • இன்ஃபுளூயன்ஸா வைரஸால் பாதிக்கப் பட்ட ஒருவர் தும்மும்போது வெளிப்படும் எச்சில் துளிகள் மூலமும், அவர் அணிந்திருக்கும் துணிகள் மூலமும் மற்றவர்களுக்கும் பரவுகிறது.
 • ஒருவருடைய உடலுக்குள் இந்த வைரஸ் கிருமிகள் நுழைந்த ஒன்று முதல் ஏழு நாட்களுக்குள் நோய் அறிகுறிகளும் நோயும் ஏற்படும்.
 • பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து ஆறாவது நாளில் இருந்து வைரஸ் கிருமிகள் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கும்.

இந்த நோய் ஏழு நாட்களுக்கு மேல் இருந்தால் நோய் குணமாகும் வரை கிருமிகள் பரவிக் கொண்டே  இருக்கும்.

நோய் அறிகுறிகள் :

காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல் வலி, பேதி, வாந்தி, உடல் அசதி போன்றவை.

விளைவுகள் :

 • சைனுசைடிஸ்
 • காது வலி
 • நிமோனியா
 • பிராங்கியோலைட்டீஸ்
 • தீவிரமான ஆஸ்துமா
 • இதய பதிப்பு
 • இதயத்தைப் பாதுகாக்கும் ஜவ்வு பாதிப்பு
 • தசை பாதிப்பு
 • வைரஸ் நோயால் வரும் மூளைக் காய்ச்சல்
 • வலிப்பு
 • டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம்
 • பாக்டீரியாவால் வரும் நிமோனியா போன்றவை.

இந்த நோய், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

யார் யாருக்கு வரலாம்?

 • பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் என்று உறுதியாகத் தெரிந்த ஒருவருடன்  வேறு யாராவது நெருங்கிப் பழகினால் அவருக்கு ஏழு நாட்களுக்குள் பன்றிக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
 • பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ள இடத்திற்குச் சென்று வந்த ஏழு நாட்களுக்குள் அந்த நோய் ஏற்படலாம்.
 • பன்றிக் காய்ச்சல் பாதித்தவர்கள், வசிக்கும் பகுதிகளில் இருக்கும் மற்றவர்களுக்கும்  பன்றிக் காய்ச்சல் வரலாம்.

பரிசோதனைகள் :

ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் என்பதை உறுதி செய்வதற்கு

 • ரியல் டைம் பிசிஆர்
 • வைரஸ் கல்ச்சர்
 • பன்றிக் காய்ச்சல் இன்ஃபுளூயன்ஸா A (HINI) நியூட்ரலைஸிங் ஆன்டிபாடி (நான்கு   மடங்கு அதிகரித்தல்)
 • ரத்தப் பரிசோதனை
 • பயோகெமிக்கல் பரிசோதனை
 • எக்ஸ்ரே
 • நுண்ணுயிர் பரிசோதனை
 • தொண்டைக்குள் சுவாப் எடுத்து பரிசோதிப்பது
 • மூக்கின் உட்பகுதியில் இருந்து சுவாப் எடுத்துப் பரிசோதிப்பது
 • மூச்சுக் குழாய்க்குள் இருந்து சளியை எடுத்துப் பரிசோதிப்பது.

தடுக்கும் முறைகள் :

 • நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது
 • உடனடியாக சிகிச்சை அளித்து நோயாளியை மரணத்தில் இருந்து காப்பாற்றுவது
 • பாதிக்கப்பட்டவர்களைத் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் இல்லா விட்டால் நல்ல காற்றோட்டம் உள்ள அறையில் ஒரு படுக்கைக்கும் மற்றொரு படுக்கைக்கும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு படுக்க வைக்கவும்.
 • பன்றிக் காய்ச்சலுக்கு ஒசெல்டாமிவீர் (OSELTAMIVIR) என்ற மருந்துதான் பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது.
 • இரத்தக் குழாய் மூலம் மருந்து, சத்துள்ள திரவங்களைக் கொடுப்பது.
 • செயற்கை சுவாசிப்பான் வழியாக ஆக்ஸிஜன் செலுத்துதல்.
 • ஆன்டிபயாடிக் கொடுப்பது.
 • காய்ச்சல், உடல் வலி மற்றும் தலைவலி இருந்தால் பாரசிட்டமால் மருந்தைக் கொடுக்கலாம்.
 • குடிக்க நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும்.
 • நோயாளி உள்ள இடத்திலோ அல்லது அறையிலோ யாரும் சிகரெட் பிடிக்கக் கூடாது.
 • ஆவி பிடித்தல் மிகவும் உதவியாக இருக்கும்.
 • ஆஸ்பிரின், சாலிசிலேட் மருந்துகளைக் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது.
 • மூச்சு செல்லும் வழி, மூச்சு விடுதல் மற்றும் ரத்த ஒட்டம் ஆகியவற்றை ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும்.
 • நோயின் தன்மை குறைந்த பிறகு 14 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பலாம்.
 • நோய்ப் பாதிப்பில் இருந்து மீண்ட குழந்தைகளை உடனேயே பள்ளிக்கு அனுப்பக் கூடாது.

வரும் முன் தடுத்தல்

 • நோய் வந்திருக்குமோ என்று சந்தேகப் படக்கூடியவர், நோய் இருக்கலாம் மற்றும் நோய் தாக்கி இருக்கிறது என்று உறுதியானவர்களுக்கு கண்டிப்பாக மருந்து கொடுக்க வேண்டும்.
 • நோய் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களைப் பழகிய இறுதி நாளில் இருந்து ஏழு நாள்கள் வரை வீட்டிலேயே இருக்கச் சொல்ல வேண்டும்.
 • நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் மாஸ்க் அணிய வேண்டும்.
 • ஆம்புலன்ஸில் வருபவர்கள் மூக்கிற்கு மாஸ்க் அணிய வேண்டும்.
 • ஆம்புலன்ஸ் டிரைவர்களை மூன்று மடிப்பு சர்ஜிகல் மாஸ்க் அணியச் சொல்ல வேண்டும்.
 • நோயாளியை மருத்துவமனையில் சேர்த்த உடன், ஆம்புலன்ஸ் உள்ளேயும் வெளியிலேயும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருள்களையும் சோடியம் ஹைப்போ குளோரைட் / குவார்டனரி அமோனியம் காம்பவுண்ட் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
 • கையை நன்றாகக் கழுவிய பிறகே நோயாளியைத் தொட வேண்டும் நோயாளியைத் தொட்ட பிறகும் கை கழுவ வேண்டும்.
 • நோயாளிகள் தங்கிய அறையை சில நாட்களுக்குத் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும்.
 • எந்தப் பொருளையும் கை உறைஅணிந்துதான் எடுக்க வேண்டும்.
 • பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் தங்கி இருக்கும் அறையில் உள்ள பொருட்களை மிகவும் கவனத்துடன் கையாள அல்லது வெளியேற்ற வேண்டும்.

உயர்ந்த வாழ்க்கைக்கு பிரபஞ்ச ரகசியம்!

மருத்துவத்தில் பிளசபோ என்ற மருந்தைக் கொடுப்போம். சில நோயாளிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி சரிவர உடல்நிலை இயங்காத நிலை, மனம் செயல்பட முடியாத நிலைக்கு போனவர்கள் கூட இந்த பிளசபோ மருந்தைக் கொடுத்ததும் முற்றிலும் குணமாகி புதிய வாழ்க்கையை வாழ்கின்றனர்.

இந்த மருந்து குணப்படுத்த வேண்டுமெனில் முக்கிய நிபந்தனை மருந்தின் மூலமும் மருத்துவர் மூலமும் முழு நம்பிக்கை வேண்டும்.

இது எப்படி குணப்படுத்துகிறது?

இந்த மருந்தை சாப்பிட்டால் முற்றிலும் குணமாகிவிடும் என்ற எண்ணமும், உணர்வும் உடலின் பௌதிக தன்மையை மாற்றி குணப் படுத்துகின்றன.

ஆனால், இந்த பிளசபோ மருந்தின் உண்மையென்றால் பார்ப்பதற்கு மற்ற மருந்து மாத்திரைகளைப் போல இருக்கும்.

உடலில் எந்த மாற்றத்தையும் செய்யாது. ஆனால் நோயை குணமாக்கியது நம் மனம்தான்.

அந்த மருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று நம்பினால் அவர் நம்பிய மாற்றங்களை உடலில் பெறுவார். பூரண குணம் பெறுவார்.

எவ்வளவு பெரிய அதிசயம்?

அதனால் எல்லா நோய்களுக்கும் பிளசபோ மருந்தையே கொடுத்து விடலாமே என நீங்கள் கேட்கலாம்.

கடுமையான உறுப்பு பாதிப்புகளால் அவதிப் படுகின்றநோயாளிக்கு அதற்கு தகுந்த, அதை சரி செய்கின்றமருந்தைத் தான் கொடுக்க வேண்டும்.

அந்த நோய்க்கான உடலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மருந்தை மருத்துவர் கொடுத்தாலும் சிலருக்கு பலனளிப்பதில்லை.

காரணம் என்ன?

இங்கு மருந்துகள் வேலை செய்கின்றன. ஆனால் மனம் நம்பவில்லை. அதனால் நோய் குணமாகாமல் தொல்லைகள் தொடருகின்றன. நோயாளியும் பரிசோதனை மேல் பரிசோதனைகளைச் செய்வார். மருத்துவர்களை மாற்றிக் கொண்டே இருப்பார், நோய் மட்டும் தீராது.

நம் உடலும் மனமும் பிரபஞ்ச விதிகளின் படி இயங்குகின்றன மனதில் அமைதி, அன்பு, நன்றி, நிறைவு, நிறைந்து விட்டால் உடலின் ஆரோக்கியம் பெருகிவிடும்.

மாறாக மன இறுக்கம் பெருகிவிட்டால் உடலில் உள்ள ஒத்துழைப்பு செயல்பாடு சிதைக்கப்பட்டு நோய், அமைதியின்மை, கவலை, சோகம் எல்லாம் பெருகிவிடும்.

இதையே “உங்கள் நம்பிக்கை உறுதியாக இருக்குமானால் உங்களால் முடியாதது என்பது ஒன்றும் இல்லை” என்கிறது பைபிள்.

உடலாக இருந்தாலும் வாழ்வாக இருந்தாலும் எண்ணமும், நம்பிக்கையும்தான் நம்மை இயக்குகிறது.

இதை புத்தர் “இன்றிருக்கும் நாம், நம் எண்ணங்களின் விளைவே” என்றார்.

விவேகானந்தர் “நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகி விடுவாய்” என்றார்.

ஆகவே உயர்வான வாழ்வின் நான்கு நிலைகள்.

 1. குறிக்கோளை நிர்ணயிப்பது
 2. அதை அடைந்துவிட்டாதாக நம்புதல்
 3. அதை அடைந்ததற்கு நன்றி கூறுதல்
 4. அடைந்த பிறகு அதை அனுபவிப்பதாக உணருதல்

முதல் நிலை : குறிக்கோளை நிர்ணயிப்பது

ஒரு மனிதனுக்கு எது உயர்ந்த குறிக்கோள்?

உங்கள் வாழ்வின் நோக்கம் இதுதான் என்பதை கடவுள் சொல்ல முடியாது. வேறுயாரும்  சொல்ல முடியாது. சொன்னாலும் ஏற்க முடியாது. நீங்கள் ஒருவர்தான் நிர்ணயிக்க வேண்டும். உங்களுக்கு என்ன வேண்டுமோ? எது மகிழ்ச்சியோ? அதை உங்கள் குறிக்கோளாக நிர்ணயிக்கவும்.

வாழ்க்கையே ஒரு திருவிழா அதைக் கொண்டாடுங்கள் என்றார் ஒஷோ. நீங்கள் நிர்ணயிக்கின்றகுறிக்கோளில் உயர்வும், மகிழ்ச்சியும், மற்றவர்களுக்கு பயனும் இருந்தால் அதுதான் சரியான குறிக்கோள்.

அதில் மகிழ்ச்சி, அன்பு, சுதந்திரம், பெருமிதம், சிரிப்பு போன்றவையெல்லாம் கிடைக்குமானால் அதைத்தான் உடனே செய்ய வேண்டும்.

அதன்முதல் நடவடிக்கையாக உங்களுக்கு ஒத்துவராத நீங்கள் போற்றாத கடந்த கால நினைவுகள், மனிதர்கள் அனைத்தையும் மனதிலிருந்து தூக்கி எறியுங்கள். உங்களுடைய புதிய குறிக்கோளின் துவக்கத்திற்கு தள்ளப் பட்டதற்கு நன்றி சொல்லுங்கள். இதுவரை உங்கள் வயது, பதவி, உடல் நிலை, எதுவாக இருந்தாலும் உங்களுடைய புதிய வாழ்க்கையை இன்றிலிருந்து இக்கணத்திலிருந்து துவங்குங்கள். உங்கள் வாழ்க்கையே மகிழ்ச்சிக் கடலாக மாறிவிடும்.

இரண்டாம் நிலை : அடைந்துவிட்ட நம்பிக்கை

உங்களுடைய குறிக்கோள் என்பது என்ன?

என்ன வேண்டும் என்றதெளிவுதான். இப்போது நீங்கள் விரும்பியது எதுவோ அது ஏற்கெனவே உங்களுடையதாகி விட்டதாக முழுமையாக நம்பவேண்டும்.

அடைந்துவிட்டால் என்ன மனநிலையோ அதே மனநிலையை இப்போதே அடைந்து விட வேண்டும். இதில் ஒரு துளி சந்தேகமும் இருக்கக் கூடாது, முழுமையாக நம்பிக்கையாக வேண்டும்.

இப்படி கற்பனை செய்வது சரியோ? என்றகேள்வி ஏற்பட்டதா?

இதற்கு பதில்: நீங்கள் இப்போது இருக்கின்ற நிலை ஏற்கெனவே நீங்கள் நினைத்ததுதான். நம்பியதுதான்.

இல்லை, இல்லை இப்படிப்பட்ட சோதனை களையா, சிரமங்களையா, நான் நம்பினேன்?” என்று நினைக்கலாம்.

உண்மை என்னவெனில்? தெரிந்தோ தெரியாமலோ இப்படியெல்லாம நடக்குமோ என்று மனதில் எண்ணி இருந்தால்கூட அதன்  விளைவாக இப்போது ஆகிவிட்டீர்கள் என்பதுதான்.

சரி போகட்டும். உங்களுடைய இப்போதைய வாழ்க்கை உண்மையிலேயே நீங்கள் விரும்பிய ஒன்றாக இல்லையா? அப்படியெனில் அதை மாற்றிக் கொள்ள இதுதான் சரியான நேரம். “கற்பனைதான் எல்லாம். அது வாழ்க்கையில் வரப்போகும் வசந்தங்களின் முன்னோட்டம்”

மூன்றாவது நிலை : குறிக்கோளை பெற்று விட்ட நிலை

“உங்கள் கற்பனைக் காட்சி வெளி உலகில் பெரிதாக வடிவத்தைப் பெறுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. உங்களைத் தவிர”

மனிதர்களுடைய பிரச்சனையே இதுதான்.

மனிதர்களின் கவனம் சில காலம் மட்டுமே நிலைத்திருக்கும் அதில் அவர்கள் வல்லவர்கள். “என் வாழ்க்கையையே மாற்றி விடுவேன்” என்று சவால்கூட விடுவார்கள். ஆனாலும் எதிர்பார்த்தது நடக்காது, ஏன்?

எதிர்பார்த்தது கிடைப்பதற்கு வெளியில் தெரியாமல் இருக்கும்; துளிர்விட்டிருக்கும்; ஆனால் அந்த மனிதர் மேலோட்டமாக பார்த்து விட்டு “இது ஒன்றும் சரிபட்டு வராது” என்று நினைப்பார். அதற்கு சப்பைக் கட்டாக உடனிருப் போர்கள் “எதுக்கு உனக்கு இந்த வம்பு? இப்போது என்ன குறைந்து விட்டது?” என்பார்கள்.

உடனே மனமும் அப்படியே நம்பும். ஒரு போலியான பாதுகாப்பை உணர்வதில் மனதிற்கு அலாதி பிரியம் உண்டு.

நான் முன்னர் சொல்லியது போல உங்களுடைய மனதில் ஒரே ஒரு துளி சந்தேகத்தை நுழைய அனுமதித்து விட்டால் அடுத்தடுத்தாக சந்தேகங்களை வரிசையாக அணிவகுத்து நிறுத்திவிடும்.

ஒரு சந்தேகமோ, முடியாது என்று எதிர்மறைஎண்ணமோ முளைவிட்டால் அதை உடனடியாக கிள்ளி எறிந்துவிடுங்கள்.  நான் விரும்பியதைப் பெறப்போகிறேன் என்று உடனே மனதிற்குள் முழுமையாக நம்பி அவ்விடத்தை நிரப்பி விடுங்கள். மனதில் நடந்து விட்டதாக உணருங்கள்.

மன உணர்வுதான் மிக முக்கியம்.  நீங்கள் நினைத்த அனைத்தையும் உங்களை நோக்கி இழுக்கும் அலைவரிசைகளை உண்டாக்கிவிடும்.

“நான் இப்போது எனது குறிக்கோளை பெற்றுக் கொண்டிருக்கிறேன். அதன் அத்தனை சிறப்புகளும் என்னை வந்தடைகின்றன.  நான் இப்போது என் (குறிக்கோளை) பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்றஉணர்வை நிலை நிறுத்துங்கள். நினைத்தது நடந்து விட்டது போன்றே உணருங்கள். (இப்போதுள்ள நிலை எதுவானாலும்).

இதை பைபிளில் “நீங்கள் நம்பிக்கையுள்ளவர்களாய் ஜெபத்திலே எவற்றைக் கேட்டீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” என்றார் ஏசு.

மேலும், “ஆதலால் நீங்கள் ஜெபம் பண்ணும் போது எவைகளைக் கேட்டுக் கொள்கிறீர்களோ அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசத்துடன் நம்புங்கள். அப்பொழுது அவை உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்” என்றார்.

நான்காம் நிலை : குறிக்கோளை அடைந்து விட்டதற்காக நன்றி கூறுதல்

நாம் உணர்ந்துள்ளதை விட அதிகமான சக்தியையும் அதிகமான சாத்திய கூறுகளையும் நாம் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட மாபெரும் சக்திகளில் ஒன்றுதான் அடைந்து விட்டதற்காக நன்றி தெரிவித்தல்.

அன்பும் நன்றியும் எல்லாவற்றையும் கரைத்துவிடும்; ஈர்த்துவிடும்.

மனிதர்களுடைய அடுத்த பிரச்சினை என்ன வென்றால், “இந்த குறிக்கோளை அடைய எவ்வளவு காலம் ஆகும்?” என்பதுதான்.

காலம் என்பது நாம் நினைப்பதுதான். நீங்கள் எதிர்காலத்தில் அடைய வேண்டும் என்று விரும்பும் அனைத்துமே ஏற்கெனவே இருக்கிறது என்பதுதான் உண்மை.

நீங்கள் விரும்பியதை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்க பிரபஞ்சத்திற்கு ஒரு நொடிப் பொழுதே போதுமானது. உங்களுக்கு தாமத மாகிறது என்றால் அது ஏற்கெனவே கிடைத்து விட்டது என்று நம்புகிறமனதில் அறிந்துள்ள உணர்வு பெறுவதில் உள்ள குறைபாடுதான். ஒரு வேளை செய்த நான்கு நிலைகளும் சரியாக இருந்து நீங்கள் நினைத்ததை அடையவில்லை என்றால், நீங்கள் நினைத்ததை விட  வேறு உருவத்தில் அல்லது உயர்ந்த ஒன்று வரப் போகிறது என்பதே பிரபஞ்ச இரகசியம்.

நடைமுறையில் ஒரு சில குறிக்கோளுக்கு இத்தனை நடைமுறை. சிந்தனை காலம் என்று இருந்தாலும் அது ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான்.

பிரபஞ்சத்தைப் பொறுத்தவரையில் அளவு ஒரு விஷயமே அல்ல. சிறிய ஒன்று கொடுப் பதற்குப் பெரிய ஒன்றைகொடுப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஒரு புல் வளர்வதற்கு சிரமப்படுவதில்லை.

ஒரு பெரிய ஆறு ஓடுவதற்கு சிரமப்படுவதில்லை.

இது சிறியது. அதை ஒருசில மணி நேரத்தில் அடையலாம். அது பெரியது அதற்கு நிறைய காலம் பிடிக்கும் என்ற வரையறை எல்லாம் நாம் நினைப்பது தான்.

இப்போதே உங்கள் குறிக்கோள் உங்களிடம் இருப்பதாக நம்புங்கள். உணருங்கள். அதற்கு நன்றி கூறுங்கள். உங்களிடம் இருப்பதாக உணரும் உணர்வுகளை அளியுங்கள். அது எதுவாக இருந்தாலும் சரி. பிரபஞ்சம் உங்களிடம்  இருப்பதாக உணரும் உணர்வுகளை அளியுங்கள். அது எதுவாக இருந்தாலும் சரி. பிரபஞ்சம் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

நான் இங்கு வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் ஒருவர் சொன்னார். நான் வாழ்க்கையில் எதை எதையோ மாற்ற முயன்றேன். ஆனால் ஒன்றுமே முடியவில்லை அதற்கு உங்கள் பதிலை மேடையில் பேசும் போது சொல்லுங்கள் என்றார்.

அதற்கு பதிலாக ஒரு அறிஞரின் கடைசி நிமிட கவிதையைச் சொல்கிறேன்.

நான் சிறுவனாக இருந்த பொழுது உலகையே மாற்ற நினைத்தேன்; முடியவில்லை.

நான் இளைஞனாக இருந்த போது என் ஊரை மாற்றிவிட நினைத்தேன்; அதுவும் முடியவில்லை,

நான் குடும்பஸ்தனாகும்போது என் குடும்பத்தை மாற்றிவிட  நினைத்தேன்; நடக்க வில்லை.

நான் தந்தையானபோது மகனையாவது மாற்றிவிட  நினைத்தேன்; மகன் என் பேச்சை கேட்கவில்லை.

இப்போதுதான் எனக்குப் புரிந்தது. இவ்வளவு காலமும் மற்றவற்றை மாற்ற முயற்சித்ததற்குப் பதிலாக என்னை கொஞ்சம் மாற்றியிருந்தால் வாழ்க்கையே ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்திருக்குமோ என்று.

ஆனால், காலம் கடந்துவிட்டது. என்னுடைய இறுதி நேரம் வந்துவிட்டது என்று எழுதியபடி கண்களை மூடினார்.

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி,

உலகை மாற்றுவது எளிதா?

உங்களை மாற்றுவது எளிதா?

எல்லோரும் ஒத்து கொள்வீர்கள். உங்களை மாற்றுவதுதான் எளிது என்று. மாற்றம் என்றால் எப்படி ஆரம்பிக்க வேண்டும்.,

நீங்கள் பழகுகின்ற மனிதர்கள், படிக்கின்ற நூல்கள் ஐந்தாண்டுகளுக்கு மேலும் அப்படியே இருந்தால் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் இல்லை என்று பொருள்.

ஆகவே, புதிய மனிதர்களிடம் பழகுவோம் புதிய புதிய புத்தகங்களைப் படிப்போம். மாற்றங்கள் தொடங்கிவிடும், வாழ்க்கை உயர்ந்து விடும்.

பிரச்சினைகளே உயர்வுக்காகத்தான்

“நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்பது தான் உங்களுக்குத் தெரியும். நீங்கள் எப்படி ஆகப்போகிறீர்கள்? என்பது உங்களுக்குத் தெரியாது” என்றார் அறிஞர் ஒருவர்.

இவ்வுலகம் பலகோடிக் கிரகங்களால் இயங்குகின்றன.

 • அதில் ஒரு சிறிய கிரகம் சூரியன்.
 • அதிலிருந்து பிரிந்த ஒரு துண்டு பூமி.
 • பூமியில் பல லட்சம் ஆண்டுகளின் பரிணாமத்தில் எண்ணற்ற உயிரினங்கள்.
 • அவற்றில் மனிதன் ஒரு உயிரினம்.
 • மனித உடல் கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பு.
 • ஒவ்வொரு செல்லிலும் உள்ள அடிப்படை உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களிலும் பிற பொருட்களிலும் உள்ளன. இவற்றை பஞ்ச பூதம் என்றும் கடவுள் என்றும் மதங்கள் கூறுகின்றன.
 • புவி ஈர்ப்பு சக்தி போன்று ஒரு இயற்கை சக்தி உலகின் பலகோடி கிரகங்களை இயக்குகின்றன என்று விஞ்ஞானிகள் ஆதாரத்தோடு கூறுகின்றனர்.
 • மகாத்மா, எடிசன், தெரசா, பீத்தேவன், நியூட்டன், பிளேட்டோ ஷேக்ஸ்பியர் போன்றோர் இத்தகைய சக்திகளை உணர்ந்தவர்கள் என்பதை அவர்களுடைய எழுத்துக்கள் செயல்களின் மூலம் உணர முடியும்.
 • இந்த பிரபஞ்ச சக்தி பல்வேறு காலங்களில் மதங்களின் பெயரிலும் அறிவியலாலும் உலக படைப்புகளாலும் பல்வேறு விதமாக வெளிப் பட்டு வருகின்றன என்பது தான் வரலாறு.

இதை எல்லோரும் அடைய முடியும். அதனால் பலன் பெற முடியும் என்பதும் நடைமுறை சாத்தியம்.

உதாரணத்திற்கு ஒருவருக்கு சிக்கலான சூழ்நிலை ஏற்படும்போது (அது சிக்கல் அல்ல நம் பார்வையில் பெரிய சிக்கலான பிரச்சனையாக தெரிகிறது) அதற்கான விடையை பிரபஞ்சம் வெவ்வேறு வகையில் அனுப்பிவிடும்.

மனிதர்களின் பிரச்சனையே அதை ஒரு சம்பவமாக பார்க்காமல் பெரிய தடையாக தம் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்றகோணத்தில் பார்ப்பதும்தான். இதற்கு ஒரு சிறு உதாரணம்.

மகன் தன் தாயிடம் கேட்டான். “அம்மா உங்களுக்கு நல்ல செய்தி ஒன்று கெட்ட செய்தி ஒன்று. எதை முதலில் சொல்லட்டும்”.

“நல்லதையே சொல்லு” அம்மா

“அம்மா உன் மகள் தன் கணவருடன் தனிக் குடித்தனம் போய் செட்டில் ஆயிட்டாளாம்”.

“அப்பாடா! பெரிய விஷயம். அவளுக்கு அந்த மாமியார் கொடுமையிலிருந்து விடுதலை கிடைச்சது நல்ல செய்திதான்” – மகிழ்ந்தாள் அம்மா.

“சரி கெட்ட செய்தின்னு சொன்னியே! அதென்ன” மேலும் வினவினாள்.

“வருகிற முதல் தேதியிலிருந்து நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போக வீடு பார்த்து முன்பணம் கொடுத்துவிட்டேன்” மகன்.

அம்மாவின் மகிழ்ந்த முகம் அப்படியே இறுகிவிட்டது மனதிற்குள் வெறுப்பு, கோபம், ஆற்றாமை எல்லாம் புகுந்துவிட்டது.

சம்பவங்கள் இரண்டுமே ஒரே தன்மையைக் கொண்டதுதான். ஆனால் பார்க்கும் விதத்தில்தான் மகிழ்ச்சியோ துக்கமோ அமைகிறது.

அடுத்ததாக நமக்குள்ள பிரச்சினைகள் என்னவென்றால் தவறு நடந்துவிடுமோ? இறந்து விடுவோமோ? தோற்று விடுவோமோ? மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? வறுமை வந்து விடுமோ? நோய் வந்து விடுமோ? எல்லோரும் ஒதுக்கிவிடுவார்களோ? என்ற பய உணர்வுகள்.

புத்தரைப் பற்றிய ஒரு சம்பவம்

புத்தரின் சீடர்கள் அவரிடம் தீட்சை பெற்று வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்து செல்ல ஆயத்தமானார்கள். அப்போது ஒரு சீடனின் மனபக்குவத்தை அறிய அவனிடம் “எந்த ஊருக்கு போகிறாய்?” என்றார்.

சீடன் சொன்ன ஊர் மக்கள் மிக கொடியவர்கள், வஞ்சகம் நிறைந்தவர்கள் அராஜகமானவர்கள்.

“அந்த மக்கள் உன்னை தரக்குறைவாக திட்டுவார்கள்” – புத்தர்.

“பரவாயில்லை. அடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்வேன்” – சீடன்

“ஒருவேளை அடித்துவிட்டால்?” – புத்தர்.

“பரவாயில்லை கொல்லாமல் விட்டு விட்டார்களே என மகிழ்வேன்” – சீடன்.

“சரி! கொன்னுட்டாங்கன்னா?” – புத்தர். “இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை என்ற நிறைவோடு ஏற்பேன்” – சீடன்.

புத்தர் “உனக்கு எதையும் எதிர் கொள்கின்ற மனப்பக்குவம் வந்துவிட்டது. அதனால் உலகத்தின் எந்த மூலையிலும் நீ வாழ முடியும்” என்று ஆசிர்வதித்து அனுப்பினார்.

வருவது எதையும் எதிர்கொள்ளத் தயார் என்கிற மனநிலைதான் வாழ்வை உயர்த்தும் முக்கிய அம்சம்.

சாமானியனுக்கும் சாதனையாளனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

பயம் என்று நடுங்குபவன் – சாமானியன்

எதையும் எதிர் கொள்பவன் – சாதனையாளன்.

நமக்கேன் வம்பு எப்படியோ நடப்பது நடக்கட்டும் – சாமானியன்.

அதையும் சமாளிப்போமே என சிக்கலிலும் தொடர்பவன் – சாதனையாளன்.

மாற்றமே வேண்டாம் – சாமானியன்

மாற்றம் அவசியம் – சாதனையாளன்

எதிர்பார்த்தது நடக்காத போது சோர்வடைபவன் – சாமானியன்.

ஏமாற்றத்தின் போதும் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்ற உந்துதலைப் பெறுபவன் – சாதனையாளன்.

இதெல்லாம் சரிதான் எனக்கு எதையாவது செய்தால் உடனே தடை, எதிர்ப்பு, ஏமாற்றம், சிக்கல்கள், புதிய பிரச்சனைகள் உண்டாகி விடுகின்றனவே என்ன செய்வேன்? என்றகேள்வி எழும்.

ஒரு மனிதன் காட்டுவழியே பயணம் செய்கின்றான்.

வெயிலில் களைப்பு. சோர்ந்து மரத்தடியில் சாய்ந்தான்.

மர நிழலில் சுகம். ஒரு டம்ளர் ஜீஸ் கிடைச்சா நல்லாயிருக்குமே என்று நினைத்தான் உடனே வந்து விட்டது (அவன் படுத்திருந்தது கற்பகத்தரு மரத்தின் கீழ்).

 • அவனுக்கு ஜீஸ் குடித்ததும் களைப்பு போய் விட்டது. பெரிய ஆச்சரியம்.
 • அடடே! ஒரு நீச்சல் குளம் இருந்தால் இந்த வெயிலில் ஆனந்தமாய் நீந்தலாமே’ என்று நினைத்தான்.

உடனே அழகான நீச்சல் குளம் தோன்றியது. தண்ணீரில் இறங்கி ஆட்டம். பாட்டம், குளியல், சுகமோ சுகம்.

 • மகிழ்ச்சியின் உச்சிக்கே போய்விட்டான்.
 • அப்பாடா. இனிமேல் நமக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது’ என நினைத்தான்.

திடீரென இடம் மாறியது. அவன் மயானத்தில் அமர்ந்திருந்தான்.

இனி கதையை விட்டு நடைமுறைக்கு வருவோம்.

இந்த உலகத்தில் இரண்டே இரண்டு பேருக்குத்தான் பிரச்சினைகளோ, சிக்கல்களோ, தொல்லைகளோ வராது.

 • ஒருவன் மயானத்தில் சமாதியானவன்.
 • இரண்டாமவன், எதையும் செய்யாமல் சோம்பேறியாக பொழுதைக் கழிப்பவன்.

பிரச்சினைகளோ தடைகளோ ஏமாற்றங் களோ நோய்களோ நமக்குப் பிடிப்பதில்லை. ஆனால், அவற்றுக்கு நம்மை பிடிக்கும். இதெல்லாம் இல்லையென்றால் வாழ்க்கையே கசப்பாகிவிடும்.

அதற்கு என்ன செய்வது? இனிமேல் எந்த சிக்கல் வந்தாலும் அதை சிக்கலாக பார்க்காமல் சம்பவமாக பார்ப்பதுதான்.

அது வரும்போது நமக்கு பெரிய தலை வலியாக தெரிவது நாம் சிக்கலாக, எதிர்பார்ப்பாக பார்ப்பதினால்தான். அதையே சம்பவமாக பார்த்தால் நமக்கு பாதிப்பே இராது.

இன்னும் ஒரு முக்கிய அம்சம் ஒவ்வொரு சோதனையும் ஒரு நல்ல பரிசை தம்மோடு மறைத்து கொண்டு வருகிறது.

எது எப்படி? எப்போது? என்பதுதான் அதிலுள்ள சூட்சுமம். அதுவரை பொறுமையாக, நிதானமாக, திறந்த மனதோடு செயல்படும் போதுதான் நம்மால் உணர முடியும். இப்போது ஒரு கேள்வி. – நீரில் ஒருவன் தவறி விழுந்து மூழ்கி விடுகிறான் என வைத்துக் கொள்வோம்.

அவனை எப்படி காப்பாற்றுவது?

 • நீருக்கு வெளியே இருந்து ஒரு உறுதியான கயிற்றைஉள்ளே போட்டோமானால் அவன் அதை இறுகப் பிடித்துக் கொள்வான்.
 • டக்கென அவனை வெளியே இழுத்துப் போட்டு காப்பாற்றி விடலாம்.
 • மாறாக நீருக்குள் நாமும் குதித்து அவனை பிடித்துக் கொண்டோம் என்றால் என்னாகும்?
 • ஒருவேளை அவன் நம்மைவிட வலிமை யானவன் என்றால் நம்மையும் சேர்த்து நீருக்கு அடியில் இழுத்து சென்று விடுவான்.

அதைப்போல எந்த ஒரு பிரச்சினையிலும் நாம் வெளியிலிருந்து செயல்பட்டால் (அதை நம்முடையதாக எடுத்து அதிலேயே மூழ்கி விடாமல்) அங்கு எளிதில் தீர்க்கின்ற வழி பிறக்கும்.

அதைத் தொடர்ந்து முன்னேற்றம் பெருகும். இதுதான் வாழ்வின் நியதி.

இதை இன்னும் விளக்கமாக சொன்னால் ஒரு விளையாட்டுப் போட்டியில் களத்தில் நுழைந்து விளையாடுபவனை விட களத்திற்கு வெளியே நின்று சொல்லித்தருகிறாரே அந்த பயிற்சியாளருக்கு எந்த பந்தை எப்படி அடித்தால் கோல் போட்டு வெற்றியாகலாம் என்பது நன்றாக தெரியும்.

வாழ்க்கை என்ற விளையாட்டு களத்திலும் நாம் பயிற்றுவிப்பவராக வெளியிலிருந்து பார்த்தால் சரியான வழி தெரியும். குறிக்கோளும் வெற்றியாகிவிடும்.

நம் பிரச்சினைகளுக்கு தீர்வாக ஒரு புதிய மனிதரின் சந்திப்பு கிடைக்கலாம். ஒரு பாட்டின் வரிகளில் இருக்கலாம். ஒரு புத்தகத்தின் எழுத்தில் இருக்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கிடைக்கலாம். ஒருவரின் மேடைப்பேச்சில் தெரியலாம். உறக்கத்தின் போது கனவாக வரலாம். தூங்கி விழித்தால் தெளிவான சிந்தனையாக பெறலாம். இன்னும் எத்தனையோ வழிகளில் சரியான தீர்வுகள் கிடைக்கும்..

“உலகம் பிறந்ததும் எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்ந்ததும் எனக்காக

அன்னை மடியை விரித்தாள் எனக்காக”

என்று கவிஞர் கண்ணதாசன் பாடினார். இந்த உலக படைப்புகள் எல்லாமே ஒன்றைஒன்று சார்ந்து ஒன்றுக்கு ஒன்று உதவுவதற்குத்தான். மரங்கள் சுவாசித்து ஆக்ஸிஜனை நமக்கு கொடுக்கிறது.

சூரியன் கதிரொளி தந்து நமது உடலில் வைட்டமின் டியை உருவாகச் செய்து உடலை வலிமையாக்குகிறது.

பகலைவிட்டு இரவு வேளை தினமும் வந்து நமக்கு ஒய்வையும் வலிமையையும் தருகிறது.

நிலத்தில் உள்ள நீரைக் குடித்து, குளித்து அனுபவித்து உயிர் வாழ்கிறோம்.

மிருகங்கள் நமக்கு உணவாகவும் துணை யாகவும், தொழிலாகவும் பல்வேறு விதங்களில் உதவுகின்றன.

இப்படி உலக படைப்புகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்தால் நமக்காக படைக்கப்பட்ட உண்மை தெளிவாக புரியும்.

இதுவரை நமக்குத் தோன்றிய பிரச்சினைகள் தான் – புதிய பாதைகளைக் காட்டி

 • புதிய செயல்களை செய்ய வைத்தன
 • புதிய முடிவுகளைத் தந்தன
 • புதிய மனநிலையை சிந்திக்க வைத்தன.
 • புதியவர்களை சந்திக்க வைத்தன.
 • புதியவற்றைகற்க உதவின.
 • செல்வங்களை  உருவாக்கின.
 • உடலை வலிமையாக்கின.

இன்னுமா பிரச்சினையில் சோர்ந்து கிடக்கிறீர்கள்.

அந்த போர்வையை உதறிவிட்டு எழுந்து பாருங்கள். ஆனந்த உலகம் விடிந்து நமக்காக காத்திருப்பது புலப்படும்!

மருத்துவர்கள் சொல்லாத மருத்துவங்கள்

 • ஆக்சிஜன் நாம் உயிர் வாழ முக்கியத்    தேவையான ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேசமயம் ஆக்சிஜன் ஆபத்தான ஒன்றாகவும் உள்ளது. இதற்கு ‘ஆக்சிஜன் முரண்பாடு” என்று பெயர். ஆக்சிஜனேற்ற அழுத்தம் என்றழைக்கப்படும் எதிர்வினை யாற்றும் மூலக்கூறுகளால் உயிரணுக்களில் ஏற்படும் சிதைவு., எழுபதுக்கும் மேற்பட்ட நாள்பட்ட சீர்கேடு விளைவிக்கும் நோய் களுக்கு மூலக்காரணமாக விளங்குகிறது.
 • காற்று, உணவு மற்றும் நீரில் காணப்படும் மாசுக்களால் நமது உடல் தொடர்ந்து தாக்கப் படுகின்றது. பரபரப்பான நமது வாழ்க்கை முறையும் அதன் தாக்கத்தைத் தோற்றுவிக் கின்றது. நாம் இதைத் தடுக்க இயலாவிட்டால் இறுதியாக. உயிரணுச் சேதம் ஏற்பட்டு நோய் உண்டாகின்றது.
 • நோய்களுக்கு எதிரான பலம் வாய்ந்த பாதுகாப்பு அமைப்பு நமது உடலில் காணப் படும் ஆன்ட்டிஆக்சிடென்ட்களும், நோய் எதிர்ப்பு அமைப்புகளுமே.
 • உண்மையான நோய்த் தடுப்பு மருந்தானது நோயாளிகளை ஊக்குவித்து, அவர்கள் மூன்று வகையான நோக்கங்களை மேற்கொள்ள ஆதரிக்கவேண்டும். அவை உடல்நலம் பெறும் படி உண்ணுதல், தொடர்ச்சியான உடற்பயிற்சி களை மேற்கொள்ளுதல் மற்றும் உயர்தர ஊட்டச்சத்து மருந்துகளை உட்கொள்ளுதல் ஆகியவை.

நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதன் பயன்கள் :

 • எடைக் குறைதல்
 • இரத்த அழுத்தம் குறைதல்
 • வலுவான எலும்புகள் உருவாதல், முதுமை மூட்டு அழற்சி தோன்றுவது குறைதல்
 • ‘நல்ல’ இரத்தக் கொழுப்பின் அளவு அதிகரித்தல்
 • ‘கெட்ட’ இரத்தக் கொழுப்பின் அளவு குறைதல்
 • செயல் ஒருங்கிணைப்பு மற்றும் உடல்வலு அதிகரித்தல், அதன் மூலம் கீழே விழுதல் தவிர்க்கப்படுகிறது.
 • உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருத்தல்
 • நோய் எதிர்ப்பு அமைப்பு பலப்படுத்தப்படுதல்.

தினமும் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களைச் சாப்பிடுவதன் பயன்கள் :

 • எடை இழப்பு
 • நீரிழிவு நோய் தோன்றும் வாய்ப்பு குறைதல்
 • எல்லா வகையான புற்றுநோய் ஆபத்துக்களும் குறைதல்
 • உயர் இரத்த அழுத்த ஆபத்து குறைதல்
 • நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவடைதல்
 • உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப் படுத்துதல்
 • அதிக சக்தி மற்றும் ஒருமுகப்படுத்துதலுக்குத் தேவையான அதிக ஆற்றல் பெறுதல்
 • தொடர் உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் எடுத்துக்கொள்ளும் நோயாளிகள், ஊட்டச்சத்து மாத்திரைகளையும் உட்கொண்டால், அவர்களது, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் உயர்கொழுப்பு அளவு ஆகியவற்றை மருந்து தேவைப்படாத அளவுக்குக் குறைக்க முடியும்.
 • நாட்பட்ட நோய்களுக்காக மருந்துகளை உட்கொள்ள துவங்கும் முன்னர், நோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதை ஒருமுறை முயற்சித்துப் பார்க்க வேண்டும்.
 • உயிர் வேதியியல் ஆய்வுகள் மூலம் சீர்கேடு விளைவிக்கும் நோய்கள் தோன்றுவதற்கும் முதுமைக்கும், எதிர்வினையாற்றும் மூலக் கூறுகளால் தோற்றுவிக்கப்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தமே காரணம்.
 • பி1, பி2, பி6, பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் தாதுக்கள் போர்க்காலங்களில் எரிபொருட்கள் தோட்டாக்கள், மற்றும் உணவு வழங்குபவர் களைப் போன்றும் போர்க் கருவிகளை இயக்கும் இயந்திர வல்லுனர்களைப் போன்று செயல்படுகின்றன.
 • நமது உடல் தனக்குச் சொந்தமான ஆன்ட்டி ஆக்சிடென்டுகளைத் தோற்றுவிக்கக்கூடிய திறன் பெற்றது. உண்மையிலேயே உடலானது மூன்று பெரிய ஆன்ட்டிஆக்சிடென்ட் பாது காப்பு அமைப்புகளைத் தோற்றுவிக்கின்றது. அவை முறையே சூப்பராக்சைடு டிஸ்மியூட் டேஸ், கேட்டலேஸ் மற்றும் குளூட்டோத்தி யோன் பெராக்சிடேஸ் ஆகியன.
 • நமது உடல் நமக்குத் தேவையான எல்லா ஆன்ட்டிஆக்சிடென்ட்டுகளையும் தோற்று விப்பதில்லை. நமக்குத் தேவையான மீதமுள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்டுகள் நாம் உட்கொள்ளும் உணவிலிருந்தோ அல்லது ஊட்டச்சத்து மாத்திரைகளிலிருந்தோ பெறப்பட வேண்டும்.
 • பெரும்பாலான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளை நாம் காய்கள் மற்றும் பழங்களிலிருந்து பெறுகிறோம். அவை வைட்டமின் ‘சி’ வைட்டமின் ‘இ’ வைட்டமின் ‘ஏ’ மற்றும் பீட்டா கரோட்டீன் ஆகியவை.
 • சில ஆன்ட்டிஆக்சிடென்ட்டுகள் வேறு ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளை மீண்டும் தோற்றுவிக்கும். எடுத்துக்காட்டாக வைட்டமின் ‘சி’ நீரில் கரையும் தன்மையுடையதால் இரத்தத்திலும், பிளாஸ்மாவிலும் காணப்படும் எதிர்வினை யாற்றும் மூலக்கூறுகளைத் தாக்கி சமன்செய்யும் ஒரு நல்ல திறன் மிக்க ஆன்ட்டி ஆச்சிடென்ட் ஆகும். வைட்டமின் ‘இ’ கொழுப்பில் கரையக்கூடியது. அதனால் இது உயிரணுச் சவ்விற்குப் பாதுகாப்பான மிகச்சிறந்த ஆன்ட்டி ஆக்சிடென்டாக விளங்குகிறது. ஆல்ஃபா லிப்பாயிக் அமிலம் உயிரணுச் சவ்விற்கு உள்ளாகவும், பிளாஸ்மாவிலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாகப் பணியாற்று கின்றது. வைட்டமின் ‘இ’ யையும் குளூட்டத்தி யோனையும் மீண்டும் தோற்றுவிக்கும் திறன் பெற்றவை.
 • ஆன்ட்டிஆக்சிடென்ட் தாதுப்பொருள் செம்பு, துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் செலீனியம் ஆகிவை.
 • மிகமிக கடினமாக உடற்பயிற்சி செய்பவர்கள் வயதாகும் முன்னரே இதய பாதிப்பு, பக்கவாதம் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப் படுகிறார்கள்.
 • ஓரளவு சுமாராக உடற்பயிற்சி செய்யும்போது அல்லது குறைந்த அளவு உடற்பயிற்சி செய்யும்போது எதிர்வினையாற்றும் மூலக் கூறுகளின் எண்ணிக்கை சிறிதளவுதான் அதிகரிக்கும். இதற்கு மாறாக நாம் அளவிற்கு அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போது தோன்றும் எதிர்வினையாற்றும் மூலக்கூறுகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும். மிக அதிகமான உடற்பயிற்சி நமது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
 • அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும்போது அடிக்கடி உடல் நலமில்லாமல் போய்விடுவதை நீங்கள் எப்போதாவது கவனித்துள்ளீர்களா? நீண்டகால உணர்வுப் பூர்வமான அழுத்தத்தால் உங்கள் உடல்நலத்தில் தோன்றும் அபாய கரமான விளைவுகளை நீங்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்தால்,  அதற்கு எதிரான சிகிச்சையை உங்களால் துவங்க முடியும்.
 • காற்றில் உள்ள தூசுகளில் ஒசோன், நைட்ரஜன் டைஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, மற்றும் பல மைக்ரோகார்பன் மூலக்கூறுகள் அடங்கும்  நச்சுப்பொருள்களைத் தினமும் சுவாசிக்கும் போது, அவை உடல்நலத்தை மிகவும் பாதிக்கும் விளைவுகளை ஏற்படுத்தும். காற்று மாசுறுதல், ஆஸ்துமா, நாட்பட்ட பிராங்கைட்டில், மாரடைப்பு மற்று புற்றுநோயைக்கூட தோற்றுவிக்கக்கூடும்
 • நமது உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்துக் கான முக்கியக் காரணம், சிகரெட் மற்றும் சுருட்டு புகைப்பதுதான். புகை பிடிப்பதால் ஆஸ்துமா எம்ஃபைசீமா, நாள்பட்ட பிராங் கைட்டிஸ், நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதய இரத்தக்குழாய் நோய்கள் போன்ற நோய்கள் தோன்ற அதிகமாக வாய்ப்புள்ளது. புகைப்பிடிப் பவரின் அருகில் இருப்பவருக்கும் அப்புகையால் பாதிப்பு ஏற்படும்.
 • பலருக்கு சாராயம் குடிப்பதை நிறுத்துவதை விட, புகைப்பதை நிறுத்துவது மிகவும் கடினமான ஒரு செயல்.
 • இரண்டாம் நிலை புகையை குறிப்பிடத்தக்க அளவு உள்ளிழுக்கும் மனிதர்களுக்கு அதிக அளவு ஆஸ்துமா, எம்ஃபைசீமா, மாரடைப்பு மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் தோன்றும் வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. இது மற்றவர் புகைபிடிக்கும்போது நாம் சுவாசிக்கின்ற காற்றில் கலக்கும் புகையால் ஏற்படுவது.
 • குடிக்கும் நீரில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வேதிப் பொருட்களால் தற்போது மாசு படுத்தப்படுகின்ற நீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் இந்த வேதிப் பொருட்களில் முப்பத்திலிருந்து நாற்பது வரையிலான வேதிப் பொருட்களைத் தான் சோதித்து அறிகின்றன.’
 • ஒவ்வோர் ஆண்டும் ஓராயிரத்திற்கும் குறையாத நச்சுத் தன்மையுடைய புதிய  வேதிப் பொருட்கள் நமது சுற்றுச்சூழலில் அறிமுகப் படுத்தப்படுகின்றன. களைக் கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகள் ஆகியவை நமது உணவு உற்பத்தியில் பயன் படுத்தப்படுகின்றன.
 • மக்கள் தங்களது இருபதாவது வயதிற்கு முன்னதாகவே தங்களது வாழ்நாளில் தங்கள் தோல் பகுதிக்குத் தேவையான மூன்றில் இரண்டு பகுதி சூரிய ஒளியைப் பெறுகின்றனர். அதற்குமேல் படுகின்ற அதிகப்படியான சூரிய ஒளியால் உடலில் பாதிப்புகள் உண்டாகும்.
 • தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ள நம் உடலுக்குள் ஒர் அமைப்பு இருக்கின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 • கண் விழித்திரை மட்டும் பன்னிரண்டு மெல்லிய படலங்களாலும் இலட்சக்கணக்கான தனித் திறன் வாய்ந்த உயிரணுகளாலும் ஆக்கப்பட்டிருக் கிறது.
 • காற்று மற்றும் நீர் மாசுக்கள், புகைப்பதால் ஏற்படும் நாட்பட்ட விளைவுகள் மற்றும் வேகமான அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை ஆகியவை நமது உடலின்மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
 • ஓரிரு தலைமுறைகளுக்கு முன்னால் மக்கள் நல்ல உடல்நலத்துடன் முழுமையடைந்து காணப்பட்டதற்குக் காரணம் அவர்கள் அதிக ஆன்ட்டிஆக்சிடென்ட்டுகளைக் கொண்ட (தற்போது உள்ளதைவிட) நல்ல புதிதான உணவுகளை உட்கொண்டதுதான். ஆனால், தற்போது நமது சுற்றுச்சூழலில் அளவுக் கதிகமான நச்சுப்பொருட்கள் காணப்படுவதன் விளைவாலும், மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவில் ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைவாக இருப்பதாலும் மக்கள் பெருமளவில் பாதிப்படைகிறார்கள்.
 • ஹெச்டிஎல் இரத்தக் கொழுப்பு நல்ல இரத்தக் கொழுப்பாகும். நமது உடலில் ஹெச்டிஎல் இரத்தக் கொழுப்பு அதிகமாக இருந்தால் நல்லது. இதற்கு நேர் எதிராக எல்டிஎல் இரத்த கொழுப்பு மிகவும் மோசமானமாகும். எல்டிஎல் இரத்தக் கொழுப்பு தமனிகளின் உட்சுவர்களில் ஒரு படிவைத் தோற்றுவித்து தமனிகளின் உட்பகுதியைச் சுருக்குகின்றது, ஹெச்டிஎல் இரத்தக் கொழுப்பு, அத்தமனிகளின்  கொழுப்பை அகற்றி இரத்தக் குழாயை பாதுகாக்கிறது.
 • எல்டிஎல் இரத்தக் கொழுப்பு மட்டும் இரத்தக் குழாய்களின் வீக்கத்தைத் தூண்டும் ஒரே பொருள் அல்ல ஹோமோசிஸ்டெய்ன் மற்றும் சிகரெட் புகைத்தல், உயர் இரத்த அழுத்தம். கொழுப்பு  நிறைந்த உணவு மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றால் தோற்றுவிக்கப்பட்ட எதிர் வினையாற்றும் மூலக்கூறுகள் ஆகியவையும் பிற காரணங்களில் அடங்கும்.
 • ஆன்ட்டிஆக்சிடென்ட்களும் அவற்றிற்கு ஆதரவான ஊட்டச்சத்துக்களும், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தை தோற்றுவிக்கின்ற காரணங்களை முற்றிலும் நீக்கலாம் அல்லது குறிப்பிடத்தக்க அளவில் எல்லாக் காரணி களையும் குறையச் செய்யலாம்.

கருத்தரித்தல் எப்படி நிகழ்கிறது?

கருவின் வளர்ச்சியில் பல்வேறு நிலைகள்

ஆணின் விந்தணு பெண்ணின் சினை முட்டையைச் சினைப்படுத்தும்போது உயிர் உண்டாகிறது.

இது உயிரியல் இயக்கங்களில் மிக முக்கியமானதாகும். சினைப்பட்ட சினைமுட்டை கொஞ்சம் கொஞ்சமாகக் கருவின் துகள் (Blastocyst) என்ற நிலையிலிருந்து (embryo) மாறிப் பிறகு குழந்தையாக உருவெடுக்கிறது.

சினைப்படும் முறை

மாதவிடாய்ச் சுழற்சிக் காலத்தில் சினைப் பைகள் (Ovaries) இரண்டில் ஒன்றிலிருந்து ஒரே ஒரு சினைமுட்டை (ovum) வருகிறது இது அநேகமாக, மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு 14 நாட்களுக்கு முன் நிகழும். இந்த இயக்கத்தைச் சினைமுட்டைப்படுதல் (Ovulation) என்று கூறலாம்.

சினைக்குழாயில் (Fallopian tubes) இருக்கும் விரல்கள் போன்ற நீட்சிகள் சினை முட்டையைச் சினைக் குழாயின் குவிந்த முனைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திச் செல்லும்.

சினை முட்டை படும்போது கருப்பை வாயில் இருக்கும் சளி போன்ற கொழகொழப்பான திரவம் நீர்த்துப் போகிறது. இதனால் விந்தணு கருப்பைக்குள் எளிதில் நுழைய முடிகிறது. சற்று நேரத்தில், வாக்கமாகச் சில நிமிடங்கிலேயே, விந்தணு பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து கருப்பை வாய் வழியாகக் கருப்பைக்குள்ளும், சினைக் குழாய்ககுள்ளும் விரைவாக நகர்ந்து சென்று விடும்.

சினைக் குழாயில் தான் சினைப்படுதல் நிகழ்கிறது. அவ்வாறு சினைப் படவில்லையென்றால், சினைமுட்டை சிதைந்து கருப்பை வழியே அடுத்த மாதவிடாயின்போது வெளியேறிவிடும்.

சினைமுட்டையை விந்தணு துளைத்துக் கொண்டு உள்ளே போனபிறகு சினைப்படுதல் (Fertilisation) நிகழ்கிறது. சினைப்பட்டதும், சினை முட்டை பிரிந்து செல்களால் ஆன பந்தாக ஆகிறது. இதற்கு “சைகோட்” (Zygote) என்று பெயர்.

சினைக் குழாயின் உட்படலத்தில் இருக்கும் நுண்ணிய மயிர் போன்ற அமைப்பு இந்தத் திரண்ட பந்து போன்ற சைகோட்டைக் குழாய் வழியே கருப்பையை நோக்கித் தள்ளிக்கொண்டு போகும். சினைக்குழாயில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் போதே சைகோட்டின் செல்கள் மேன்மேலும் பிரிகின்றன.

மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் சைகோட் கருப்பையை அடையும். கருப்பையில் செல்கள் தொடர்ந்து பிரிந்து மேலும் பிரிந்து செல்களால் ஆன ஒரு பந்து போல உருவெடுத்து (Blastocyst) கருவின் துகளாக மாறும்.

கருத்துகளின் வளர்ச்சி     

சினைப்பட்ட ஆறு அல்லது ஏழு நாட்களுக்குப் பிறகு கருவின் துகள் கருப்பையின் உட்படலத்தில் ஒட்டிக்கொள்ளும். பெரும்பாலும், இது கருப்பையின் மேல் பக்கத்தில் நிகழும். இப்படி ஒட்டிக் கொள்வதைப் பதிதல் என்று சொல்லலாம். இப்படிப் பதிவது சினைப்பட்டதிலிருந்து ஒன்பதாவது அல்லது பத்தாவது நாளில் நடைபெறும். இந்தச் சமயத்தில் நான்கு நாட்கள் வரை கருப்பையின் உட்படலம். கருவின் துகளை ஏற்பதற்கும் அது உட்படலத்தில் பொதிந்து கொள்வதற்கும் தயாராக இருக்கும்.

கருப்பையின் சுவருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இடத்தில் கருவின் துகள் மூன்று அல்லது நான்கு செல்கள் அளவு தடிமனாக இருக்கும். அதற்கு எதிர்ப்புறம் ஒரு செல் தடிமனில் இருக்கும். கருப்பையின் சுவரில் ஒட்டியிருக்கும் பகுதியின் உட்புறத்தில் இருக்கும் செல்கள் கருவாக உருவெடுக்கும். கவரைப் பற்றிக் கொண்டிருக்கும் வெளிப்புறச் செல்கள் நச்சுக் கொடியாக உருவெடுக்கும். இதுதான் சிசுவிக்கும் தேவையான பிராண வாயுவையும். சத்து களையும் அது கொண்டு செல்கிறது. அதே போல் அது சிசுவின் கழிவுகளைத் தாய்க்கு வெளியேற்றுகிறது.

இதன் முக்கியமான பணிகளில் ஒன்று, கருவைத் தக்கவைத்துக் கொள்வதில் உதவும் இயக்குநீர்களைச் சுரப்பது. எடுத்துக்காட்டாக சினைப்பைகள் தொடர்ந்து சினை முட்டைகளை உருவாக்குவதைத் தடுக்கும் hCG என்னும் இயக்குநீரை நச்சுக்கொடி உற்பத்தி செய்கிறது. இதை இயக்குநீர் மாதவிடாய் ஏற்படுவதை நிறுத்தி, சினைப்பைகள் இஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்டரோன் என்னும் இயக்குநீர்களை உற்பத்தி செய்வதைத் தூண்டுகிறது.

இந்த கருத்துகளின் சுவர் போன்ற பகுதிதான், கருவைச் சுற்றியுள்ள மெல்லிய தோள் பகுதியாக (Chorion) மாறுகிறது. 10வது நாளிலிருந்து 12வது நாளுக்குள் உட்புறமும் ஒரு மெல்லிய படலம் (amnion) உருவாகி அதுவே பனிக்குடமாக மாறுகிறது. இது பனிநீரால் நிரம்பியிருக்கும். கருவும் அதில் மிதந்த படியே வளரும்.

நச்சுக்கொடி வளர்ச்சியடையும்போது நுண்ணிய விரல்களைப் போன்ற நீட்சிகளைக் கருப்பையின் சுவருக்குள் நீளச்செய்கிறது. இந்த நீட்சிகள் கிளைத்து, அவை மேலும் குறுக்கும்நெடுக்கும் வளர்ந்து ஒரு மரத்தைப் போன்ற அமைப்பாக உருவெடுக்கின்றன. இந்த அமைப்பு நச்சுக்கொடியும் கருப்பையின் சுவரும் ஒன்றை ஒன்று உறுதியாகப் பற்றியிருக்குமாறு செய்கிறது.

வில்லை (Villi) என்று அழைக்கப்படும் இந்த நீட்சிகள் தாயின் ரத்த ஓட்டத்துடன் எப்போதும் தொடர்பு கொண்டதாக இருக்கும். இப்படி இருப்பதால் சத்துகள் உறிஞ்சப்படுவதும், எளிதாக நடக்கின்றன. பிரசவத்தின் போது நச்சு கொடி சுமார் 500 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

கருவின் வளர்ச்சி

கருத்தரிப்பில் அடுத்த கட்டம் கருவின் (embryo) வளர்ச்சி. கருவின் இந்தக் கட்டம் கர்ப்பகாலத்தில் ஐந்தாவது வாரம் முதல் பத்தாவது வாரம்வரை நீடிக்கிறது. உள்ளுறுப்புகளிலும், வெளி உறுப்பு களிலும் பெரும்பாலானவை இந்தக் கட்டத்தில் உருக் கொள்கின்றன.

அங்கங்கள் உருக்கொள்வது கருத்தரித்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, அடையாளம் காண முடிகிற அளவுக்கு நிகழ்கிறது. விரைவில், பிற்பாடு மூளையாகவும், முதுகுத் தண்டாகவும் உருவாகும். பகுதிகள் தோன்றுகின்றன.

இதயமும் முக்கியமான ரத்தக் குழாய்களும் 16வது அல்லது 17 வது நாளில் வளரத் தொடங்கும். 20ஆம் நாள் இதயம் குழாய்களில் திரவத்தைச் செலுத்த ஆரம்பிக்கும். அடுத்த நாள், முதல் சிவப்பு ரத்த அணுக்கள் தோன்றும். பத்தாவது வாரத்திற்குப் பிறகு, இப்படி வளரும் செல் தொகுதியை கருக்குழந்தை (Fetus) என்று கூறுவோம்.

கருவில் குழந்தை மேலும் வளர்ச்சியடைதல்

12வது வாரம்

நீங்கள் கருத்தரித்து 12வது வாரம் ஆன பிறகு, உங்கள் அடிவயிற்றில் லேசாகத் தோட்டுப் பார்த்தால் கருப்பையை உணர முடியும். அப்போது உள்ளே இருக்கும் குழந்தை 6&7 செ.மீ. வரை வளர்ந்திருக்கும். உள்ளே உறுப்புகள் உருவாகத் தொடங்கி, முழுவதும் வளர்ச்சிய¬டாமல் இருக்கும்.

கைகளிலும் கால்களிலும் விரல்களும் மெல்லிய நகங்களும் உருவாக ஆரம்பித்திருக்கும் பருவம் இது. தோல் மெதுவாக வளர்ச்சியடையும். இது மிகவும் மெல்லியதாக இருக்கும். கொஞ்சம் தலை முடியையும் காண முடியும்.

இந்தக் கால கட்டத்தில்தான் தசைகளும் எலும்புகளும் வளர ஆரம்பிக்கின்றன. கால்களை

கருஎன்ற நிலையிலிருந்து கருக்குழந்தையாக மாறுதல்!

6 வது வார முடிவில்

 • உடலில் உறுப்புகள் வளரத் தொடங்கி அவற்றின் கூட்டமைகளும் (Systems) உருவாக ஆரம்பிக்கின்றன.
 • உள்ளே உள்ள கரு ஒரு தவளைக் குஞ்சு போலத் தோற்றமளிக்கும்.
 • நரம்புக் குழாய், மூளை மற்றும் முதுகுத் தண்டாக பின்பு மாறக்கூடியவை. ஜீரண உறுப்புகள், இதயம் மற்றும் இரத்தக் குழாய்கள் போன்றவை உருவாகத் துவங்குகின்றன.
 • கண்கள் மற்றும் காதுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
 • கைகால்களின் முளைகள் அரும்புகின்றன (இவையே பின்பு கைகள், கால்களாக வளர்ச்சி அடைகின்றன).
 • இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது.

8 வது வார முடிவில்

 • உடலின் அனைத்து உறுப்புகள், அவற்றின் கூட்டமைப்புகள் வளர்ந்து கொண்டே செயல்படவும் ஆரம்பிக்கின்றன. இரத்தக்குழாய்கள். நரம்பு மண்டலம், ஜீரண மண்டலம், சிறுநீரக மண்டலம் போன்றவை உட்பட அனைத்துமே வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன.
 • கருவிற்கு மனித உயிரை ஒத்த வடிவம் வந்து விடுகிறது. பிற உறுப்புகளை விடத் தலை மிகவும் பெரிதாக உள்ளது.
 • வாய்ப்பகுதி வளர்ந்து, பல்லின் முளைகளும் (இவை பின்பு பால் பற்களாக மாறும்) தோன்றுகின்றன.
 • கண்கள், மூக்கு, வாய், காதுகள் போன்றவை தனித்தனியாகத் தெரிய ஆரம்பிக்கின்றன.
 • கைகளும் கால்களும் நன்கு தனித்தனியாக வெளியே தெரிகின்றன.
 • கைவிரல்களும், கால் விரல்களும் தனித்தனியாகப் பிரிந்திராமல் ஒட்டிக் கொண்டதுபோல இருக்கின்றன. ஆனாலும் தெளிவாகத் தெரிகின்றன.
 • உடலின் முக்கிய உறுப்புகள் வளரத் தொடங்குகின்றன.
 • மெதுவாக எலும்புகள் வளர ஆரம்பிக்கின்றன. மூக்கு, மேல் அன்னம், கீழ் அன்னம் போன்ற பகுதிகள் வேகமாக வளர்கின்றன.
 • உடலின் முக்கிய உறுப்புகள் வளரத் தொடங்குகின்றன.
 • மெதுவாக எலும்புகள் வளர ஆரம்பிக்கின்றன. மூக்கு, மேல் அன்னம், கீழ் அன்னம்.
 • உள்ளே இருக்கும் கரு எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும். ஆயினும் அதைத் தாயால் உணர முடியாது.
 • 10 வாரங்களுக்குப் பின் கரு, “கருவில் உள்ள குழந்தை, என்றே அழைக்கப்படுகிறது; அறியப்படுகிறது. இந்தக் கால கடத்தில் கரு 2.5 முதல் 3.5 செ.மீ அளவு மட்டுமே வளர்ந்திருந்தாலும் எல்லா உறுப்புகளும் அவற்றின் கூட்டமைப்புகளும் உள்ளே உருவாகியிருக்கும்.

10 முதல் 12 வாரங்கள் வரை

 • வெளியே உள்ள பாலின உறுப்புகள் வளர ஆரம்பிக்கிறன்றன.
 • கை, கால் விரல்களுக்கு நகங்கள் வளர்கின்றன.
 • கண் இமைகள் தோன்றுகின்றன
 • கருவில் உள்ள குழந்தை வேகமாக அசைந்து கொண்டே இருக்கிறது
 • கைகள், கால்கள், முழுவதுமாக உருவாகி விடுகின்றன.
 • குரல் வளை, தொண்டைப் பகுதியில் உருவாகத் தொடங்குகிறது.

விடக் கைகள் சற்று வேகமாக வளருகின்றன. சாதாரணமாக கைகள் கால்களை விட நீளமாகவும் இருக்கும். பாலின உறுப்புகள் தோன்ற ஆரம்பித்து குழந்தை ஆணா பெண்ணா என்ற வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். கருவில் உள்ள குழந்தை ஒரே சீராக இல்லாமல் துள்ளலுடன், மாறி மாறி நகர்ந்து கொண்டே இருக்கும்.

ஆனால் தாயால் இந்த நிலையில் அந்த இயக்கத்தை உணர முடியாது. சில மாதங்களுக்குப் பிறகுதான் தாயால் குழந்தையின் அசைவுகளை உணரமுடியும், ஆனால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் வெகு தெளிவாகக் குழந்தையின் அசைவுகளை, இந்த நிலையிலேயே பார்க்க முடியும்.

இந்த முதல் 12 வாரங்களில், கருவில் உள்ள குழந்தை மிக எளிதில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் அப்போது தான் அதன் முக்கிய உறுப்புகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

ஒரு சில மருந்துகளைத் தாய் எடுத்துக் கொண்டாலோ, ஜெர்மன் மீஸில்ஸ் நோயினாலோ, கதிரியக்கத்தினாலோ (radiation) அல்லது இராசயனப் பொருட்கள், நச்சுப் பொருட்கள் இவைகளினாலோ கருவிற்கு ஆபத்துகள் நேரலாம்.

இந்த 12 வாரங்களிலேயே கருவில் உள்ள குழந்தைக்கு கை, கால்கள் முளைத்து பிற உறுப்புகளும் ஓரளவு உருவாகி இருந்தாலும், அதனால் தாயின் வயிற்றுக்கு வெளியே தனி உயிராக செயல்பட முடியாது.

16வது வாரம்

16 வாரங்களின் முடிவில் கருவில் உள்ள குழந்தையின் எடை 110 கிராம் வரை இருக்கும். 15&17 செ.மீ நீளமாய் இருக்கும். கண் இமைகள், புருவங்கள், நகங்கள் பிறப்புறுப்புகளும் முழுவதும் தோன்றியிருக்கும். தோல் சுருக்கங்களுடன் இருக்கும்.

உடலின் மேல் மெழுகுப் பிசின் போல ஒன்று (vernix) தடவப்பட்டது போலவும், மெல்லிய ரோமங்களும் (lanugo) காணப்படும். காதுகளின் வெளிப்புறங்கள் மெதுவாக வெளியே வரத் தொடங்கும். இந்தச் சமயத்தில் தான் கருவில் உள்ள குழந்தையால் முழுங்க முடியும். சிறுநீரகங்களும், சிறுநீரை வெளியேற்றத் தொடங்குகின்றன.

20 வது வாரம்

கர்ப்ப காலத்தில் கிட்டத்தட்ட நடுப் பகுதிக்கு வந்துவிட்டீர்கள் என்றே கொள்ளலாம். சாதாரணமாக கர்ப்ப காலம் என்பது 40 வாரங்கள் வரை இருக்கலாம்.

இப்போது கருவில் உள்ள குழந்தையின் எடை ஏறக்குறைய கருவில் உள்ள குழந்தையின் எடை ஏறக்குறைய 300 கிராம் வரை இருக்கும்.

இந்த சமயத்திலிருந்து கருவில் உள்ள குழந்தை மிக வேகமாக வளர ஆரம்பிக்கிறது. 25 செ.மீ நீளம் இருக்கும். தானாகவே “சப்புதலை” அறிந்து கொள்கிறது. அதன் கைகள் ஒரு வேளை வாய்க்குப் பக்கத்தில் வந்தால் உடனே விரல் சப்ப ஆரம்பித்து விடுகிறது!

அது மட்டுமில்லாமல் தூங்குவது, விழிப்பது இவை எல்லாவற்றையுமே கிட்டத்தட்ட ஒரு குறிப்பிட்ட முறையில் செய்யத் துவங்குகிறது!

நாம் “தொட்டில் பழக்கங்கள்” என்று நினைத்துக் கொண்டிருக்கும் இவை எல்லாம் உண்மையிலேயே இங்கேயே தொடங்குகின்றன  விரல்களின் நுனிகளில் சின்னச் சின்ன நகங்கள் போட்டு விடும்.

அவனோ அவளோ சுறுசுறுப்பாய் உள்ளே அசையத்துவங்கி, தாய்க்கும் அந்த அசைவுகள் தெரிய ஆரம்பிக்கும்.

குழந்தை பெண்ணாக இருந்தால், அதற்குள்ளாகவே சினைப்பையில், அக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தோன்றக் கூடிய சினை முட்டைகள் எல்லாமே உருவாகி இருக்கும். ஆணாக இருந்தால், விரைப் பைக்குள் விரைகள் இறங்கி அடிவயிறிலிருந்து வெளியே வர ஆரம்பிக்கும்.

24 வது வாரம்

24 வது வாரம் முடிவடையும் சமயத்தில் கருக்குழந்தை 30 செ.மீ நீளமும் ஏறக்குறைய 630 கி எடையும் இருக்கும். தோல் சுருங்கி, தோலின் கீழ் கொழுப்பு சேர ஆரம்பிக்கும் பருவம் இது.

இன்னும் தலை பெரிதாகவேதான் இருக்கும். தலை முடி வளரத் தொடங்கும். இந்தக் காலத்தில் கண் இமைகளின் ரோமங்கள் புருவங்களும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும். மூளை வேகமாக வளரத் தொடங்கும்.

கண்களை மெதுவாகத் திறக்கும். கை கால் விரல்களின் ரேகைகள் அறிய முடியும். நுரையீரல்கள் முழுவதும் உருவாகியிருக்கும். ஆனால் செயல்படத் துவங்கியிருக்காது. இந்த சமயத்தில் அக்குழந்தையால் ஒலிகளைக் கேட்கவும் முடியும். இந்தச் சமயத்தில் குழந்தை பிறந்து விட்டால், மூச்சுவிட முயற்சிக்குமே தவிர, நுரையீரல்களால் சரிவர வேலை செய்ய முடியாது-

28வது வாரம்

35 செ.மீ நீளமும் 1100 கிராம் எடையுமாய் கருவில் குழந்தை நன்கு வளர்ந்திருக்கும் காலம் இது. ஒளியை உணர்ந்து கண்களை மூடித் திறக்கும். லானுகோ (lanugo) முடிகள் மறைய ஆரம்பிக்கும்.

தோல் சற்று சிவப்பாக மாறி, மெழுகுப் பிசின் போன்ற “வெர்னிக்ஸ்” என்பதால் பூசப்பட்டது போல் இருக்கும். ஒலியைப் புரிந்து கொண்டு அசையும் தன்னுடைய உடலை நீட்டி முறுக்கி சோம்பல் முறித்து, உதைத்து விளையாடும்.

32 வது வாரம்

எல்லா வளர்ச்சியும் கிட்டத்தட்ட முழுமையடைந்துள்ள இந்த நிலையில் கருவில் உள்ள குழந்தை 45 செ.மீ நீளமும் 1800 கிராம் எடையும் இருக்கும். இன்னும் வேகமாக எடை கூட ஆரம்பிக்கும். எலும்புகள் உறுதியாகும்.

ஆனால் மண்டை ஓட்டுப் பகுதிய மட்டும், பேறு காலத்தில் வெளியே வர வசதியாக மிருதுவாகவே இருக்கும். நாக்கில் உள்ள சுவை அரும்புகள் செயல்படத் துவங்கி, குழந்தை இனி இனிப்பையும் புளிப்பையும் சப்புக் கொட்டத் துவங்கும்! எப்போதாவது ஒரே இடத்தில் தொடர்ந்து அசைவு தெரிந்தால். உங்கள் குழந்தையில் விக்கல் தான் அது!

36 வது வாரம்

இந்த மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். 50 செ.மீ நீளமம் 1800 & 2500 கி எடையுமுள்ள குழந்தை ஒவ்வொரு வாரமும் 400 & 500 கி வரை எடை கூடும். தோலின் சுருக்கங்கள் உடல் ஒரு வடிவத்தைப் பெற்று, முகமும் சுருக்கங்கள் நீங்கிக் காணப்படும். நுரையீரல்கள் நன்கு செயல் படத் துவங்கும். பிரசவ காலத்திற்கு ஏற்ப குழந்தையின் தலைப் பகுதி கீழே வந்து விடும் என்பதும் இந்த சமயத்தில் ஒரு முக்கிய நிகழ்வு.

40 வது வாரம்

கருவில் குழந்தையின் வளர்ச்சி முழுவதுமாக தெளிவு பெறும் காலம் இது. ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும் காலத்தில் எடை மாறுபட்டாலும் சாதாரணமாக ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது சராசரியாக 2500 கி & 3500 கிராம் வரை இருக்கும்.

எப்போது குழந்தை பிறக்கும்?

சாதாரணமாக கர்ப்ப காலம் என்பது 280 நாட்கள் அல்லது 40 வாரங்கள். இது கடைசியாக உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளிலிருந்து கணக்கிடப்படும். குழந்தை என்று பிறக்கும் என்பதை மிகவும் துல்லியமாகக் கணக்கிட்டு சொல்ல முடியாது. 5% குழந்தைகள்தான் அவ்வாறு மிகச் சரியாக எதிர்பார்த்த தேதியிலேயே பிறக்கின்றன. சாதாரணமாக கர்ப்பகாலம் 259 நாட்கள் முதல் 294  நாட்கள் வரை இருக்கலாம் (37 & 42 வாரங்கள்)

சரியாக மாதவிடாய் சுழற்சி இல்லாத பெண்களுக்கு, குழந்தை பிறக்கும் நாளைக் கணக்கிட. கர்ப்ப காலத்தின் முற்பகுதியிலயே அல்ட்ராசவுண்ட் பரிசோதனை தேவைப்படலாம். சில சமயங்களில் சரியாக மாத விடாய் சுழற்சி இருக்கும் பெண்களுக்கும் கர்ப்ப காலத்தின் முற்பகுதியில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை தேவைப்படலாம். அந்தப் பரிசோதனை மூலம் கருக்குழந்தையின் வயதை அறிந்து கொண்டு, அதன்மூலம் பிரசவ நாளைக் கண்க்கிட முடியும். முடிந்தவரை கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே, பிரசவ நாளைக் கணக்கிடுதல் நல்லது. நாட்கள் செல்லச் செல்ல இதைச் சரியாகக் கணிப்பது கடினமாகிவிடும்.

கர்ப்பகாலத்தின் 40 வாரங்களை மூன்று மும்மாதங்களாகப் பிரிக்கலாம்.

ஒவ்வொன்றும் ஏறக்குறைய 12 – 13 வாரங்கள் இருக்கும்.

முதல் மும்மாதம் – 1 – 13 வாரங்கள் ( 1 – 3 மாதங்கள்

2வது மும்மாதம் – 14 – 27 வாரங்கள் (4 – 6 வாரங்கள்)

3வது மும்மாதம் 28 – 40 வாரங்கள் (7 – 9 மாதங்கள்)

குழந்தை பிறக்கப் போகும் நாள் அல்லது பிரசவ நாளை ஆங்கிலத்தில் ணிஞிசி என்றும் குறிப்பிடுவார்கள். இந்த நாளைக் கணக்கிட்டுத் தெரிந்துகொண்டால், நீங்கள் எத்தனை மாதம் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதையும் அதற்கேற்ற அளவில் கருவின் வளர்ச்சி இருக்கிறதா என்பதையும் மகப்பேறு மருத்துவரால் நன்கு அறியமுடியும்.

கருத்தரித்து எத்தனை வாரங்கள் ஆகின்றன?

சென்ற முறை உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளிலிருந்து, நீங்கள் கருத்தரித்த நாளை, உங்கள் மருத்துவர் கணக்கிடுவார். உதாரணமாக மே மாதம் 1ம் தேதி அன்று உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்டிருந்தால், ஜுன் 12ம் தேதி அன்று, உங்கள் கருவின் வயது 6 வாரங்கள் எனக் கொள்ளலாம். உண்மையில் கருத்தரித்த நாளிலிருந்து கணக்கிட்டால் 4 வாரங்களாகக் கொள்ளலாம்.

கருத்தரிப்பதற்கு முன்பு ஆலோசனைகள் (கலந்தாய்வு)

கருத்தரிப்பதற்கு முன்பான ஆலோசனை என்றால் என்ன?

அடிப்படையாக ஒரு ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு தேவையானவை எவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பட்டியல் என்றே இதைச் சொல்லலாம். குழந்தை பெறுவதும் அதன் மூலம் “பெற்றோர்” என்ற நிலையை அடைவதும் ஒவ்வொருவர் வாழ்விலும் மிகத் தெளிவாக எடுக்க வேண்டிய முடிவுகள். குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்யும் போதே, அதனுடன் பல்வேறு சந்தேகங்கள், பயங்கள், தயக்கங்கள் போன்றவை வந்து விடுகின்றன.

கருத்தரிப்பதற்கு முன்பு மருத்துவ ஆலோசனைகள் ஏன் தேவை?

உங்கள் கர்ப்பத்தை நீங்கள் சரியாகத் திட்டமிடுவதன் மூலம், விவேகமாக, பல விஷயங்களை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும். இவை உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும். பல சமயங்களில், கருத்தரித்துப் பல வாரங்கள் வரை பெரும்பாலான பெண்கள், தாம் கருவுற்றிருக்கிறோம் என்பதையே உணர்வதில்லை.

ஆனால், கருவில் வளரும் குழந்தைக்கு இந்த “முதல் சில வாரங்களின்” வளர்ச்சி மிக மிக முக்கியமானது. இந்தச் சமயத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், உங்களது கருக் குழநதையின் வளர்ச்சியும் பாதிக்கலாம்.

இவ்வாறு கருத்தரிக்கும் முன்பு நீங்கள் மருத்துவ ஆலோசனை பெறச் செல்லும் போது, மகப்பேறு மருத்துவர், உங்களுக்கும் உங்களுள் உருவாகப் போகும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியவற்றை விளக்கமாகக் கூறுவார்.

நீங்கள் நல்ல சத்துள்ள உணவை உட்கொள்ளுதல், கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய சில விஷயங்களைச் செய்யாதிருத்தல் போன்றவைதான் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு அடிப்படை என்றே கூறலாம்.

இதற்கு முன்பாகவே உள்ள மருத்துவ சிக்கல்கள்

சில பெண்களுக்கு, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம். இரத்த சோகை, ஆஸ்த்துமா. எபிலெப்ஸி அல்லது இதயம் மற்றும் இரத்தக் குழாய்கள் சார்ந்த பிரச்சினைகள் போன்ற நோய்கள் இருக்கலாம். இவர்கள் கருத்தரிக்கும் போது இவர்களுக்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்புகள் ஏற்படலாம்.

சர்க்கரை நோய்

கருவுற்றிருக்கும் பெண்கள், தங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டப்பாட்டிற்குள் வைத்திக்க வேண்டியது மிகவும் அவசியம். சர்க்கரை நோய்க்காக அவர்கள் அதுவரை மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருந்தால், இன்சுலினுக்கு மாற வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

பிறக்கப் போகும் குழந்தைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக குழந்தை கருவில் உருவாகும் சமயத்தில் தாயின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பது மிக அவசியம்.

உயர் இரத்த அழுத்தம்

ஒரு பெண்ணிற்கு உயர்இரத்த அழுத்தம் இருந்தால், அப்பெண் கருத்தரிப்பதற்கு முன்பே, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்காக கர்ப்ப காலத்திலும் பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.

இரத்த சோகை anemia

இந்தியக் பெண்கள் பலருக்கு, இரும்புச் சத்து குறைபாட்டினால் இரத்தசோகை (anemia) ஏற்படும். எனவே கருவுற்ற பெண்னின் ஹீமோக்கோளபின் அளவைப் பரிசோதித்து தேவைப்பட்டால் இரும்பு சத்து அதிகரிப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.

இறந்திருந்தாலோ, மகப்பேறு மருத்துவர் அவ்வாறு நேர்ந்ததற்கான காரணங்களை ஆராய சில பரிசோதனைகளை மேற் கொள்ளலாம்.

முந்தைய குழந்தைப்பேறுகள் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் பத்திரமாக வைத்திருந்து, அதை உங்கள் மருத்துவரிடம் காண்பிப்பது மிகவும் அவசியம்.

குடும்பத்தினரின் மருத்துவப் பின்னணி

சாதாரணமாக பல குடும்பங்களில் சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை இருக்கும். கருவுற்றிருக்கும் தாய்க்கு இந்தநோய்கள் இல்லையென்றாலும் குடும்பத்தினரின் மருத்துவப் பின்னணி பற்றிய விவரங்களை அறிவது அவசியம். ஏனெனில் இவை சில சமயங்களில் கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படலாம்.

உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருத்தல்

நல்ல ஆரோக்கியம் என்பது சரியான உணவு மற்றும் தேவையான உடற்பயிற்சி இவை இரண்டும் இணையும்போதுதான் சாத்தியமாகும். கருத்தரிப்பதற்கு முன்பே, எப்போதும் வழக்கமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால், கர்ப்ப காலத்திலும் எளிதாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கமுடியும். நீங்கள் கருத்தரித்த பின்பு, எந்த அளவு சுறுசுறுப்பாக இயங்கலாம் என்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள்

ஃபோலிக் ஆசிட் கூடுதலாக அளிக்கத் துவங்குதல் கர்ப்பம் தரிப்பதற்கு 1 முதல் 3 மாதங்கள் முன்பு வரை இச்சத்து மிகவும் அவசியம். குழந்தையின் மூளை மற்றும் முதுகுத் தண்டு இவற்றின் முழுமையான சீரான வளர்ச்சிக்கு இது அவசியமாகிறது. கால்சியம். பிறக்கப் போகும் குழந்தைக்கும் தாய்க்கும் மிகவும் அவசியம். பால் மற்றும் தயிர் இவற்றிலிருந்து அதிக அளவு கால்சியம் சத்தைப் பெற முடியும்.

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை ஏற்படாமல் இருக்க இரும்புச் சத்து தேவை. இரத்த சோகை நோய் இல்லையா என்பதை உறுதுப்படுத்திக் கொள்ள ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் இரும்புச் சத்து மாத்திரைகள் 3 மாதங்கள் அல்லது அதற்கு மேலோ எடுத்துக் கொள்ளலாம், இதன் மூலம் உடலின் தேவையான அளவு இரும்பு சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

ஆஸ்த்துமா

ஆஸ்த்துமாவைப் பொருத்தவரை, கர்ப்ப காலத்தில் மிகுந்த கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். நீங்கள் கருத்தரிக்க திட்டமிடும்போது. இந்நோய்க்கன மருந்துகளில் பாதுகாப்பானவை எவை என்று உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும். ஏனெனில் அவற்றை பயன் படுத்தும்போது இரத்தத்தில் மருந்துகள் கலப்பதில்லை.

வலிப்புநோய் (எபிலெப்ஸி)

பொதுவாக, வலிப்பு நோயால், பாதிக்கப் பட்டிருந்தாலும், வழக்கமாக மருந்து எடுத்து கொள்பவராக இருந்தால், பெரும்பாலானவர்களுக்கு. கருத்தரிக்க முயற்சிப்பது பாதுகாப்பானதாகத்தான் இருக்கும்.

வலிப்பு நோய்க்குக் கொடுக்கப்படும் பல மருந்துகள் கருக் குழந்தைக்கு சில அசாதாரண இயல்புகளை, உடற்கூறுகளை ஏற்படுத்தக் கூடியவை. ஆனாலும் இரண்டு அல்லது முன்று மருந்துக்குப் பதிலாக ஒரே ஒரு மருந்து கொடுக்கப்பட்டால், இத்தகைய ஆபத்துகளுக்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன.

எனவே கருத்தரிக்கத் திட்டமிடும்போதே உங்கள் மருத்துவரிடம் எந்த மருந்து மிகவும் அவசியம் அதே சமயம் நீங்கள் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தி விடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

முந்தைய கருத்தரிப்புகளின்போது ஏற்பட்ட பிரச்சினைகள்

முந்தைய கருத்தரிப்புகளின் போது ஏற்பட்ட சில பிரச்சனைகள், சில சமயங்களில் மறுபடியும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஒரு முறைக்கு மேல் குறைப் பிரசவம் ஏற்பட்டிருந்தாலோ, இதற்கு முன்பு குழந்தை பிறக்கும் போதே குறைபாடுகளுடன் பிறந்திருந்தாலோ, இறந்தே பிறந்திருந்தாலோ, பிறந்தவுடன்

ஃபோலிக் ஆசிட் கீழ்க்கண்டவற்றில் உள்ளது

பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகள்

சிட்ரஸ் பழங்கள் மற்றும் பழரசங்கள்(ஆரஞ்சு போன்றவை)

உறுப்பு இறைச்சி (கல்லீரல் போன்றவை)

உலர்ந்த பயறு வகைகள் (ராஜ்மா, காபூலி, சென்னா, சாராமணி)

வைட்டமின் மாத்திரைகள்.

தொற்றுக்களைத் தடுத்தல்

ரூபெல்லா அல்லது ஜெர்மன் மீஸல்ஸ் என்பது மிகத் தீவிரமான ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படக்கூடிய தொற்றாகும்.

இதன் மூலம் குழந்தைக்கு தீவிரமான பிரச்சனைகள் ஏற்படலாம். அதுவும் குறிப்பாக கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதங்களில் ஏற்பட்டால், குழந்தைக்குப் பிரச்சினைகள் அதிகமாகலாம்.

கருத்தரிக்க திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணிற்கும் இத்தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அல்லது நேரடியாகவே “ரூபெல்லா” வை எதிர்க்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். தடுப்பூசி போடப்பட்டு மூன்று மாதங்கள் வரை கருத்தரிக்காமல் இருப்பது மிகவும் அவசியம்.

வைரல் ஹெப்படைடிஸ்

ஹெப்படைடிஸ் ‘B’ க்கு எதிரான “தடுப்பூசி” போட்டுக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு இதற்கு முன்பே ஹெப்படைடிஸ் ‘B’ இருந்திருந்தால், உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் தகவல் அளிக்க வேண்டும். அப்போதுதான் அவரால் குழந்தைக்கு அத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

காப்பீடு மற்றும் மகப்பேறு விடுமுறை இவை குறித்து திட்டமிடுதல்

நீங்கள் எடுத்திருக்கும் காப்பீட்டின் கீழ் (இன்ஷ்யூரன்ஸ்) மகப்பேறு மற்றும் பிரசவத்தின் போது ஏற்படக் கூடிய சிக்கல்கள் போன்றவற்றிற்கு காப்பீட்டுத் தொகை கிடைக்குமா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

மேலும் நீங்கள் பணிபுரியும் இடத்தில் எத்தனை நாட்கள் பிரசவத்திற்காக விடுப்பு கிடைக்கும் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளவும். குழந்தை பிறந்த பிறகு குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு குடும்பத்தினரின் உதவியுடன் திட்டமிட இது மிகவும் உதவியாக இருக்கும்.

நீங்கள் பிரசவத்திற்கு உங்கள் தாய் வீட்டிற்கு செல்வதாக இருந்தால், பயணத்தை வெகு நாட்கள் வரை ஒத்திப் போட வேண்டாம்.

நீங்கள் அலுவலகம் செல்பவராக இருந்தாலோ அல்லது உங்கள் முதல் குழந்தை பள்ளிக்குச் செல்வதாக இருந்தாலோ நீங்கள் தாய்வீடு செல்வதை முடிந்தவரை ஒத்திப்போட நினைக்கலாம்.

ஆனாலும் தோராயமாக பிரசவம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் நாளுக்கு பீuமீ பீணீtமீ 6 வாரங்களுக்கு முன்பு பயணம் செய்வதே சிறந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதாவது கருத்தரித்து 34 வாரங்கள் உங்கள் தாய் வீட்டிற்குச் சென்றவுடன் உடனடியாகத் தெரிவிக்க வேண்டிய விவரங்கள் உள்ளனவா என்று இந்த மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

சாதாரணமாக பிரசவத்திற்கு முந்தைய 6 வாரங்களில்தான் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே 6 வாரங்களுக்கு முன்பே சென்றுவிடுவது நல்லது.

மேலும் உங்களது புதிய மருத்துவரிடம் நன்கு பழகி அவர் உங்களை நன்கு புரிந்து கொள்ளவும் இந்த கால அவகாசம் மிகுந்த உதவியாக இருக்கும்.

கருத்தரிப்பதற்கு முன்பு செய்ய வேண்டியவை

 • ஒரு சரிபார்ப்பு பட்டியல்
 • ஃபோலிக் ஆசிட் எடுத்துக் கொள்ள வேண்டும்
 • கருத்தரிப்பதற்கு முன்பு மருத்துவரை ஆலோசிக்கவும் பல் மருத்துவரையும் சந்தித்து ஆலோசனை பெறவும்
 • சரியான உணவு உட்கொள்ளவும்
 • சரியான எடையுடன் உடலை, ஆரோக்கியமாக வைத்திருக்கவும்
 • தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளவும்
 • ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்களையும் இரசாயனப் பொருட்களையும் தவிர்க்கவும்.
 • உங்கள் குடும்பத்தில் பரம்பரையாக இருந்து வரும் பிரச்சினைகள் /நோய்கள் ஏதேனும் உள்ளனவா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
 • மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்
 • நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் அதை நிறுத்தவும். புகைபிடிப்பவர் அருகில் இருப்பதையும் தவிர்க்கவும்.
 • மது அருந்துபவராக இருந்தால் அதை நிறுத்தவும்.

நான் கருவுற்றிருக்கிறேனா?

பொதுவாகப் பல பெண்கள் கேட்கும் கேள்வி “நான் கருவுற்றிருக்கிறேனா?” என்பது தான். முதல் முறை கர்ப்பம் தரிக்கும்போது கூட, முந்தைய அனுபவம் இல்லாத போது கூட, கர்ப்பம் தரிக்கும் போது ஏற்படும். அறிகுறிகளை பலர் அறிந்திருப்பார்கள்.

முன்பே கருத்தரித்த அனுபவம் உடையவர்கள், அடுத்த முறை கருத்தரிக்கும் போது, முன்பு தோன்றிய அறிகுறிகளை அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆனால் சில பெண்களுக்கு ஒரு முறை இந்த அறிகுறிகள் மிகத் தீவிரமாகவும், மறு முறை மிக லேசாகவும் தோன்றலாம்.

ஒவ்வொரு கர்ப்பமும் தனிப்பட்டது. தனித்துவமானது. ஒரு முறை தோன்றிய அறிகுறிகள் அடுத்த முறை தோன்றாமலே போவதும், ஒரு முறை இருந்த அளவு இந்த அறிகுறிகள் அடுத்த முறை தீவிரமாக இல்லாதிருப்பதும் மிகவும் சகஜம்தான்.

கருவுற்றிருக்கிறோமா என்று எப்போது சந்தேகம் தோன்றலாம்?

மாதவிடாய் தப்புதல்

கருவுற்றிருக்கிறோமா என்று ஒருவர் சந்தேகப்பட பெரும்பாலான சமயங்களில் இதுதான் காரணமாக இருக்கும். மாதவிடாய் சுழற்சிகள் மிகச் சரியாக உள்ள பெண்கள் மாதவிடாய் தவறிப்போனால் அதைத்தான் முதல் அறிகுறியாகக் கொள்வார்கள். ஆனால் சிறுநீர்ப் பரிசோதனை அல்லது இரத்தப் பரிசோதனை, அதைத் தொடர்ந்து உட்புறப் பரிசோதனை போன்றவைதான் கர்ப்பத்தை உறுதிப்படுத்தமுடியும்.

எப்போதாவது சில இயக்குநீர் (Harmone) பிரச்சனைகளால்கூட மாதவிடாய் தாமதமாகலாம். நீர்கள் கர்ப்பம் தரிக்க திட்டமிட்டு முயல்பவராக இருந்தால் மாதவிடாய், தேதிகளை கவனமாகக் குறித்து வைத்துக் கொள்வது அவசியம்.

ஒவ்வொரு முறையும் மாதவிடாய் தொடங்கும் நாளை காலண்டரில் குறித்து வைக்கவும். இந்தத் தேதியின் மூலம்தான் பிரசவ நாளைக் கணக்கிட முடியும்.

மாதவிடாய் ஏன் தவறிப் போகிறது?

ஒவ்வொரு மாதமும், மூளையிலிருந்து சினைப் பைக்கு, ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்னும் இயக்கு நீரை வெளியேற்றச் சொல்லி. ஆணை பிறப்பிக்கப் படுகிறது. இந்த ஈஸ்ட்ரோஜென் கர்ப்பப்பையின் உட்புறப்படலத்தின் மேல் (endometrium) படருகிறது. உடனே கர்ப்பப்பையின் உட்புறச் சவ்வு தடிமனாகி மேலும் பஞ்சுபோல் ஆகிறது.

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக் காலத்தின் நடுப்பகுதியில் அதாவது 11 & 16வது நாளுக்குள் ஒரு சினை முட்டை உருவாகும். இதைத் தொடர்ந்து சினைப்பையில் ப்ரோஜெஸ்டிரான் என்ற இயக்குநீர் சுரக்கும்.

அந்த சுழற்சியில் முட்டையில் கருத்தரித்தல் நிகழவில்லையென்றால், ப்ரோஜெஸ்டிரான் அளவு குறைய ஆரம்பிக்கிறது. கர்ப்பப்பையின் உட்புறச் சவ்வுப்படலம் வெளியே தள்ளப்படுகிறது. இதுவே மாதவிடாய் எனப்படுகிறது.

சொல்லப்போனால், மாதவிடாய் என்பதையே “ஏமாந்து நிற்கும் கர்ப்பப்பையின் இரத்தக் கண்ணீர் என்றே குறிப்பிடுவார்கள்” கருத்தரித்தல் நிகழும்போது ப்ரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் அளவுகள் மிகவேகமாக அதிகரிக்கின்றன. கர்ப்பப் பையின் உட்புறம் மேலும் தடிமனாகி, கருவை வரவேற்கத் தயாராகிறது. அவ்வாறு நிகழும் போது மாதவிடாய் தப்பிப் போகிறது. கடைசியாக மாதவிடாய் தொடங்கிய நாளின் அடிப்படையில்தான் பிரசவ தேதி கணக்கிடப்படுகிறது.

பிரசவத் தேதியைக் கணக்கிடுதல்

சென்ற முறை மாதவிடாய் தொடங்கிய நாளிலிருந்து சரியாக 2 வாரங்களில் “கருத்தரித்தல்” ஏற்பட்டிருக்கிறது என்ற அனுமானத்தல் பிரசவத் தேதி கணக்கிடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் கீழ்க்கண்ட முறையில்தான் பிரசவத் தேதியைக் கணக்கிடுகிறார்கள். கடைசியாக மாதவிடாய் தொடங்கிய தினத்திலிருந்து 7 நாட்களைக் கூட்டி, 3 மாதங்களைக் கழித்தால் கிடைக்கும் தேதிதான் பிரசவத் தேதியாகக் கணக்கிடப்படுகிறது.

ஏன் மார்பகங்கள் மிருதுவாகின்றன; புண்ணாகின்றன?

கருத்தரித்தவுடன் உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் போன்ற இயக்குநீநர்களை அதிகம் சுரக்க சக்தி இருக்காது போல் உணர்வீர்கள். இரவில் நன்கு தூங்கினாலும், காலையில் மிகுந்த சோர்வுடன், சோம்பலாக எழுந்திருப்பது வழக்கமாகி இருக்கும்.

முடியும்போதெல்லாம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் சோர்வடையும் போதெல்லாம் அதைப் புரிந்துகொண்டு ஓய்வெடுங்கள். முடிந்தால் வெளியிலிருந்து உணவு வரவழைத்துக் கொள்ளுங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியை நாடுங்கள். இரவில் விரைவிலேயே உறங்கச் சென்று விடுங்கள். உங்கள் மூத்த குழந்தை குழந்தைகளை உங்கள் கணவர் சற்று வெளியே அழைத்துச் சென்றால் உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்.

கவலைப்படாதீர்கள்! இவையெல்லாமே கர்ப்ப காலத்தின் முதல் 12 & 14 வாரங்களுக்கு இருக்கும். உங்கள் உடலில் சுரக்கும் இயக்கு நீர்களால் ஏற்படும் வளர்சியை மாற்றங்களுக்கு (metabolic changes) உங்கள் உடல் பழகி விட்டால் இந்த அறிகுறிகள் மறையத் தொடங்கி விடும்.

பின்பு நல்ல சுறுசுறுப்பாகி, அதிக சக்தியுடன் செயல்படத் தொடங்குவீர்கள். சில பெண்கள் வேடிக்கையாக “இப்போது கருத்தரிப்பது போலவே இல்லையே” என்று கூடக் குறிப்பிடுவார்கள். தன் மனைவி தூங்கும் போது அவளை எழுப்பாமல் அவளது வேலைகளைச் செய்யும் கணவனுக்கு ஈடாக

தொடரும்….

கர்ப்பத்திற்கான பரிசோதனைகள்

இந்தப் பரிசோதனைகள் மூலம், கருவுற்றபின் உங்கள் சிறுநீரில் சுரக்கக் கூடிய ஹ்யூமன் கோரியானிக் கோனாடாட்ராபின் (hCG) எனம் இயக்குநீரின் அளவைக் கண்டறிவார்கள். ஒவ்வொரு பரிசோதனையும் கண்டறியும் சிறுநீலலின் அளவு மிகுந்த வித்தியாசப்படும். அதேபோல சுரக்கும் hCG இயக்குநீரின் அளவும் பெண்ணுக்குப் பெண் வேறுபடலாம். “ஹோம் பிரக்னன்ஸி கிட்ஸ்” என்று கடைகளில் கிடைக்கும். வீட்டிலேயே பரிசோதனை செய்து கர்ப்பத்தை உறுதி செய்யும் வசதி மூலம் 25 & 50 ML hCG யை அளந்து கண்டறிய முடியும். பொதுவாக கர்ப்பம் தரித்து 4 & 5 வாரங்களில் இந்த அளவு hCG சிறுநீரில் காணப்படும். காலையில் எழுந்ததும் முதலில் வெளிவரும் சிறுநீரில்தான் இது அதிக அளவில் இருக்கும். ஆனாலும் பல முறை சிறுநீர் கழித்து 4 மணிநேரத்திற்குப் பிறகு இப்பரிசோதனையை செய்து கொள்ளலாம். அந்த இடைவெளியில் hCG சிறுநீரில் சேகரிக்கப்படும். பொதுவாக இப்பரிசோதனைகள் மிக சரியான முடிவைத்தான் யூரும். சில சமயங்களில் தவறான முடிவுகள் வரலாம். முதலில் “இல்லை என்ற முடிவு வந்து பின்பு கர்ப்பம் உறுதியானால், அதற்குக் காரணம், அந்தப் பரிசோதனை மிகவும் ஆரம்ப காலத்திலேயே செய்யப்பட்டிருப்பதாக இருக்கும். சில சமயங்களில் நீங்கள் கர்ப்பம் தரிக்காத போதும் கூட +Ve என்று முடிவு வரலாம். இது போன்ற ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.

Advertisements