Articles

கல்லீரலில் சீழ்

அமிபா மற்றும் பாக்டீரியாவினால் கல்லீரல் சீழ்பிடிக்கும். இவற்றில் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும் அமீபா கிருமி பாதிப்பு உள்ளவர்களுக்கும் கல்லீரல் சீழ் பாதிப்பு அதிகம். அமீபா கிருமிகள் உள்ளவர்களின் குடலில் பல லட்சக்கணக்கான கிருமிகள் இருக்கும். மலம் கழித்துவிட்டு சரியாக கையை சுத்தம் செய்யாவிடில் அவர் தொடுகிற தண்ணீர் மற்றும் உணவுகளில் அக்கிருமிகள் பரவி பிறருக்கும் வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்றுக் கடுப்பு உண்டாகிவிடும்.
அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவின் மூலம் குடலுக்குள் அமீபா கிருமியின் முட்டை சென்று விடுகிறது. சிறுகுடலுக்குள் சென்ற அந்த முட்டையின் உறை பிரிந்து கிருமி வெளிவருகிறது. அதனால் சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும். பிறகு சிறுகுடலிலிருந்து இரத்தத்தில் கலந்து கல்லீரலை அடைகிறது. கல்லீரலில் வளர்ந்து, கல்லீரல் செல்களை அழித்து அங்கு சீழ்கட்டியாக மாறுகிறது. அதனால் கல்லீரல் பெரிதாகிறது.
கல்லீரல் வீக்கம் அதிகமானால் அந்த சீழ்கட்டி உடைந்து அருகிலுள்ள நுரையீரல், இதயம், வயிற்றின் உட்புறம் போன்ற உறுப்புகளிலும் பரவி விடும்.
சுத்தமான இடங்களில், சுத்தமான தண்ணீரில், சுத்தமான பாத்திரங்களில், சுத்தமான மனிதர்களால், சுத்தமாக செய்யப்பட்ட உணவை சாப்பிட்டால் இந்த பாதிப்பை தவிர்க்க முடியும்.
அமீபாக்களைப் போன்று ஜியார்டியா என்ற – நுண்ணிய ஒட்டுண்ணியும் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். அமீபாவிற்கும் ஜியார்டியாவிற்கும் மீட்ரனிடசோல் சிகிச்சை பூரண குணமளிக்கும்.

கல்லீரல் பாதிப்பின் போது உணவு முறைகள்.
கல்லீரல் பாதிப்படைந்தால் கொழுப்பு உணவுகளை சீரணிப்பது கடினம். எண்ணெய், வெண்ணெய், நெய், எண்ணெயில் பொறித்த உணவுகள் அனைத்தையும் சாப்பிடக்கூடாது.
திரவு உணவுகளை, இளநீர், குளுக்கோஸ், அரிசி கஞ்சி, பால் போன்றவற்றை அதிகமாக கொடுக்கலாம்.
அரிசி சாதம் மற்றும் கோதுமை உணவுகள் நல்லது.
பருப்பு உணவுகளை அளவுடன் சேர்க்கலாம். மாமிச உணவுகளை சீரணிப்பது கடினம்.
– கல்லீரல் சுருங்கி, வயிற்றில் வீக்கம் ஏற்பட்டவர்கள் திரவ அளவை குறைத்து உண்ண வேண்டும்.
– கல்லீரல் பாதிப்பினால் மயக்கநிலை உள்ளவர் களுக்கு புரத உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பொதுவாக பழங்கள், பழரசம், காய்கறி, கீரைகள், வெஜிடபுள் சூப் போன்ற உணவுகள் கல்லீரல் நோய்களுக்கு நன்மை செய்யும்.

ஆரோக்கிய வாழ்வில் உணவின் பங்கு

உணவு வகையில் நாம் குழம்பவே வேண்டியதில்லை. எந்த வடிவில் உணவை சாப்பிட்டாலும் எல்லா வகை உணவும் கிழே காணும் 7 பொருட்களில் அடங்கும்
(1) கார்போஹைட்ரெட் எனும் மாவுசத்து
(2) புரோடின் எனும் புரத சத்து
(3) ஊஅப எனும் கொழுப்பு சத்து
(4) வைட்டமின்கள், ஆண்டி ஆக்ஸிடென்ட்
(5) தாதுப் பொருட்கள்
(6) நார் சத்து (Fibre )
(7) தண்ணீர்
உடலுக்கு இவை அனைத்துமே அத்தியாவசிய மாக தேவை. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு கடைமையைச் செய்கின்றன, மாவு சத்து உடலுக்கு தேவையான எரிபொருளைக் கொடுக்கிறது. புரோட்டின் உடலை பாது காக்கிறது. கொழுப்பு எரிபொருள், உடலில் உற்பத்தியாகும் அமிலங்கள் போன்றவற்றை உருவாக்க உபயோகிக்கப்படும். இதுபோலவே எல்லா வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குத் தேவையான ஏதோ கடன்களை செய்கிறது. உடலில் பெரும் பகுதி தண்ணீர். நார்சத்து கழிவு பொருட்களை உருவாக்க உதவி செய்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இவ்வாறு நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் இந்த ஏழு பொருட்களில் அடங்கும்.
புரத சத்து
தொந்தரவு இல்லாத ஒரு உணவு நமது புரத சத்து. புரத சத்தும், மாவுசத்து போல் 1 கிராமுக்கு 4 கிலோரி சக்தி கொடுப்பவை. ஆனால் இவை ஜீரணிக்க தேவைப்படும் அமிலங்கள் வித்தியாசமாக இருப்பதால் இவை நீரிழிவு நோயையோ வேறு எந்த நோயையோ உருவாக்குவது இல்லை. அதாவது ஒருவர் புரதசத்தை தனது முழு சத்து தேவைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
ஒரே ஒரு பிரச்சனை. புரதசத்து அதிகமாக வாயுக்களை உருவாக்குவதால் எதிர்பாராத நேரங் களில் வாயு வெளியேறி சங்கடத்தை உண்டுபண்ணும். ஆகவே நமது தேவையில் சுமார் 30-40 சதவீத உணவு தான் புரதசத்தாக இருக்கும். அதற்கு மேல் சாப்பிட முடியாது.
பருப்பு வகைகள் புரத சத்து நிறைந்தவை. மீன். கோழிக்கறி போன்றவையும் புரதசத்து கொண்டவை தான். இப்பொழுது கோழிகளுக்கு தீவனங்கள் மாற்றி, கொலஸ்டிராலை குறைத்து புரத சத்து நிறைந்த கோழி முட்டைகளும் வரத் தொடங்கிவிட்டன. பொதுவாக புரத சத்து தனியாக இல்லாமல் மாவு சத்துடனோ அல்லது கொழுப்பு சத்துடனோ இணைந்து இருக்கும். ஆகவே ஒரு உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என அறிவது நல்லது.
புரத சத்துகள் உடலின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்பவை. இவற்றைஅதிகம் சாப்பிடுவது நல்லது.
கொழுப்பு சத்து
கொழுப்பு சத்து குறித்து நாம் மொத்தமாக அறியாமையில் மூழ்கியிருப்பதால் தான் உடல் பிரச்சனைகள் அதிகமாகி மாரடைப்பு ஏற்படு கின்றன. ஒரு உணவை சாப்பிட்டால் மாரடைப்பு நிச்சயம் வரும் என்பது கொழுப்பு சத்தை பொருத்தமட்டில் உண்மை. ஆனால் அதே நேரத்தில் எல்லா கொழுப்பு சத்துக்களும் மாரடைப்புக்கு காரணம் அல்ல.
கொழுப்பை குறித்து நமது அறியாமையை பல்வேறு முறைகளில் நாம் வெளிப்படுத்துகிறோம். அதிகம் பேசுபவரை உனக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்தி என்கிறோம். பணம் அதிகமாக ஒருவருக்கு இருந்து அவர் செலவும் செய்தால் எல்லாம் பணக்கொழுப்பு! இவ்வாறு கொழுப்பு என்ற வார்த்தையை திமிர் எனவும் அகம்பாவம் எனவும் பயன்படுத்துவதால் கொழுப்பை குறித்தும் அது உடலுக்கு செய்யும் தீமைகளைக் குறித்தும் நாம் கொஞ்சம் கூட கவலைப் படுவதில்லை. கொழுப்பைக் குறித்து பல்வேறு விதங்களில் நாம் பின்வரும் பகுதிகளிலே காண இருக்கிறோம். ஆனால் ஒன்றை உடனே தெரிந்து கொள்ளுங்கள் மாரடைப்புக்கு முக்கிய காரணம் கொழுப்பு சத்துள்ள உணவுதான்.
கொழுப்பு
உடல் ஆரோக்கியத்தைக் குறித்து பேசும் பொழுது அதிகமாக பயன்படும் ஒரு சொல் “கொழுப்பு”! ஆனால் இச்சொல் “கொழுப்பு”. ஒரே அர்த்தத்தைக் கொடுக்கவில்லை. குண்டான ஒரு மனிதர், எடை கூடியிருக்கும் பொழுது நீங்கள் குண்டாக இருக்க உடலில் உள்ள கொழுப்புகள் காரணம் எனக் கூறுவோம். இது உடல் கொழுப்பு”
இரத்த பரிசோதனை செய்யும் மருத்துவர் இரத்தத்தில் கொழுப்பு அதிகம் இருக்கிறது எனக் கூறுவார். இது “இரத்தக் கொழுப்பு”. உணவை உண்ணும் பொழுது இன்னின்ன பொருட்களில் கொழுப்பு அதிகம் என்று கூறுவார்கள். இது கொழுப்பு உணவு. உண்ணும் உணவு உடனே இரத்தத்தில் கொழுப்பாக மாறி, அது உடல் கொழுப்பை அதிகரிக்கிறது என நினைத்தால் இது மருத்துவ ரீதியாக தவறு! ஏனெனில் உடல் கொழுப்பு, கொழுப்பு உணவில் மாத்திரம் அல்ல, மற்ற உணவுகளிலும் உண்டாகும். ஒரு நாளைக்கு 1500 கலோரி தேவையான ஒருவர் 2000 கலோரி உணவு உண்டால் மீதமுள்ள 500 கலோரி கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும்.
அது போலவே அனைத்து கொழுப்புகளும் இரத்த கொழுப்பை அதிகப்படுத்தாது. சில வகை கொழுப்பு பொருட்களுடன் கொலஸ்டிரால் எனும் பொருளும் தான் இரத்த கொழுப்பை அதிகப்படுத்தும். கொழுப்பில் நல்ல கொழுப்பும், கெட்ட கொழுப்பும் உண்டு.
கொலஸ்டிரால்
மாரடைப்புக்கு முக்கிய காரணம் கொழுப்பு உணவு. இது 1 கிராமுக்கு 9 கலோரி சக்தி கொடுக்கும் ஆனால் கொலஸ்டிரால் உணவில் சக்தி கிடையாது. – ஆனால் இதுவும் கொழுப்புதான். பலவித ஹார்மோன்கள், செல் மெம்பிரேன் போன்றவற்றை உருவாக்க கொலஸ்டிரால் அவசியம் தேவை. ஆனால் தனது தேவையை உடலே உற்பத்தி செய்வதால் கூடுதல் கொலஸ்டிரால் உணவில் தேவையில்லை. தேவைக்கு மிஞ்சிய கொலஸ்டிரால் இதய இரத்த நாளங்களில் தங்கி, அவற்றைஅடைத்து இரத்த ஒட்டத்தை தடை செய்து மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. கொலஸ்டிரால் தவிர சில வகை கொழுப்பு பொருட்களும் இதே காரியத்தை செய்கின்றன. ஒரு உண்மையை இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள். கொலஸ்டிராலும், கொழுப்பும் ஒரே விதமாக செயல்பட்டாலும் கொலஸ்டிராலை சுமார் 300 கிராம் வரை நாம் சாப்பிடலாம். இது இருக்கும் பொருட்களில் குறிப்பிடத் தகுந்தது. முட்டையில் உள்ள மஞ்சள் கரு. 250 கொலஸ்டிரால் தரும். ஆனால் புரோட்டின் முட்டையில் இது சுமார் 140 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் அவ்வப்பொழுது புரோட்டின் முட்டையை சாப்பிடலாம். கடல் உணவாகிய இறால், நண்டு மற்றும் மூளை, ஈரல் என மாமிச உணவின் பகுதிகளில் கொலஸ்டிரால் அதிகம்.
கொலஸ்டிரால் உணவை நாம் பொதுவாக தினமும் சாப்பிடக் கூடாது. என்றாவது ஒருநாள் குறைந்த அளவுடன் சாப்பிடலாம். உங்கள் ரத்த கொலஸ்டிரால் அளவை 200 தாண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது கொழுப்பு உணவினாலும், கொலஸ்டிரால் உணவினாலும் அதிகமாகும்.
கொழுப்பு சத்து
கொழுப்பு சத்து என்பது உணவில் ஒரு வகை 1 கிராம் உணவில் 9 கலோரி உள்ள உணவாக இது இருப்பதால் மற்றஇரண்டு உணவு வகைகளை விட 2 மடங்கு கலோரி கொடுக்கும் சக்தி வாய்ந்தவை. கொழுப்பு சத்து நீரில் கரையாது. ஆகவே இது நேரடியாக இரத்தத்தில் சேருவதில்லை. நாம் சாப்பிடும் சத்து வயிற்றில் புரோட்டினுடன் சேர்ந்து கஐடஞ டதஞபஉஐச ஆகமாறி பின் இரத்தத்தில் சேருகிறது.
நாம் உண்ணும் அநேக பொருட்களில் கொழுப்பு சத்து இருந்தாலும் இது மற்றைய சத்துக்களாகிய கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டினுடன் சேர்ந்து இருக்கும். ஆனால் ஒரே ஒரு பொருள் கொழுப்பு மாத்திரம் உள்ள பொருள். அது தான் நாம் உபயோகிக்கும் எண்ணெய். எண்ணெயில் கொழுப்பு சத்துமாத்திரம் இருப்பதால் இதை உபயோகிப்பதைக் குறைக்க மருத்துவர்கள் வற்புறுத்துவார்கள்.

கொழுப்பு சத்து மூன்று வகைப்படும்
(1) பூரிதமடையாத கொழுப்பு (Unsaturated Fat )
(2) பூரிதமடைந்த கொழுப்பு (Saturated Fat)
(3) செயற்கை கொழுப்பு எனும் Transfat
இது தவிர கொலஸ்டிராலை கொழுப்புடன் நாம் சேர்க்கலாம். ஆனால் கொலஸ்டிரால் உணவில் கலோரிகள் கிடையாது.
கொழுப்பு உணவு ஜீரணம்
கொழுப்பு உணவு எவ்வாறு ஜிரணிக்கப் படுகிறது. கொழுப்பு தண்ணீரில் கரையாத பொருள். ஆகவே இது நேரடியாக இரத்தத்தில் சேர்வதில்லை. இது கைலோ மைக்ரான் எனும் சிறு துகள்களாக மாற்றப்பட்டு வேறு பாதையாகிய லிம்பாடிக் சிஸ்டம் மூலமாக ஜீரணிக்கப்பட்டு பின்பு புரோட்டினுடன் சேர்ந்து லைப்போ புரோட்டினாக இரத்தத்தில் சேருகிறது. கொழுப்பு உணவின் கடைசி பகுதி டிரைகிளிசரைடு ஆகும். (Triglyceride)
மருத்துவர்கள் உங்கள் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கொண்டு எவ்வளவு தூரம் உங்கள் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்க வாய்ப்புண்டு எனக் கூறுவார்கள். இவர்களுக்கு உதவும் கொழுப்பு ரத்த பரிசோதனையில் இந்த மூன்று பரிசோதனைகளும் உண்டு. மொத்த கொலஸ்டிரால் அளவு, லைப்போ புரோட்டின் அளவு, டிரை கிளிஸரெட்டு அளவு இந்த மூன்று அளவும் மருத்துவர் ஒரு முடிவு எடுக்க உதவும். அதிலும் லைப்போ புரோட்டின் மிக முக்கியம். ஏனென்றால் லைப்போ புரோட்டின் அளவு நல்ல லைப்போ புரோட்டின் எனவும், கெட்ட லைப்போ புரோட்டின் எனவும் வேறுபடும். நல்ல லைப்போ புரோட்டின் அதிக அடர்த்தியுள்ளது (High Density Lipo Protein) எனவும் , கெட்ட லைப்போ புரோட்டின் குறைந்த அடர்த்தியுள்ளது (Low Density Lipo Protein) எனவும் அழைக்கப் படுகிறது. இது முறையே உணவில் நாம் சேர்க்கும் நல்ல கொழுப்பையும், கெட்ட கொழுப்பையும் கொண்டு வருபவை.
நல்ல, கெட்ட கொழுப்பு உணவுகள்
பூரிதமடையாத கொழுப்பு உணவு 2 வகைப்படும். மானோ பூரிதமடையாத கொழுப்பு (MUFA) பாலி பூரிதமடையாத கொழுப்பு (PUFA). இந்த வகைகளில் மானோ பூரிதமடையாத கொழுப்பு அல்லது ஙமஊஅ உடலுக்கு நல்லது. ஏனெனில் இவை HDL அல்லது நல்ல கொழுப்பாக ரத்தத்தில் மாறும். ஏஈக, கெட்ட கொழுப்பாகிய LDL யை விரட்டும் தன்மை படைத்தது. இந்த HDL அல்லது நல்ல கொழுப்பு அவகேடோ என்னும் பட்டர் பழம், பூண்டு இவற்றில் உண்டு என நம்புவோரும் உண்டு. கெட்ட கொழுப்பு உணவுகளில் முக்கியமானது Transfat எனப்படும் செயற்கை கொழுப்பு. இது போலவே பூரிதமடைந்த கொழுப்பு பொருட்களும் கெட்டவையே (saturated Fat) ஏனெனில் இவை கஈக எனக் கூறப்படும் கெட்ட கொழுப்பாக இரத்தத்தில் மாறுகிறது.
உடலுக்கு கேடு தரும் கெட்ட கொழுப்பு
உடலுக்கு குறிப்பாக இதயம் மற்றும் மூளை இரத்தக் குழாய்களை அடைத்து கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் மூன்று வகையைச் சேர்ந்தது.
(1) கொலஸ்டிரால் உணவுகள்: முட்டையின் மஞ்சள்கரு, இறால், நண்டு, மாமிச உணவுகள், மூளை, ஈரல் எனும் மாமிச பாகங்கள். இரத்த கொலஸ்டிரால் அளவு அதிகமாக இருந்தாலும், 40 வயதிற்கு பிறகும். இவற்றைமொத்தமாக நிறுத்துவது நல்லது.
(2) SATURATED FAT எனும் பூரிதமடைந்த கொழுப்பு: நெய், வெண்ணெய், வனஸ்பதி, தேங்காய் எண்ணெய், தேங்காய் மாமிச உணவுகள், தோலுள்ள கோழிக்கறி போன்றவை இவற்றுள் அடங்கும். நஅபமதஅபஉஈ ஊஅப அதிகமாவது நமது இரத்த பரிசோதனையில் கஈக அதிகமாக உள்ளதாலும், டிரைகிளிசரைடு அதிகமாவதிலும் தெரியும்.
(3) TRANSFAT எனும் செயற்கை கொழுப்பு: இன்றைய நவீன உலகில் மிக்க ஆபத்தை உண்டு பண்ணும் கொழுப்பு. இதை தனியாக பார்ப்போம்.
செயற்கை கொழுப்பு – விழிப்புணர்வு
சிகரெட் உடலுக்கு கேடு விளைவிக்கும் என தெரிந்த நாம் இவற்றைவிட பன்மடங்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களை நாம் அறியாமலேயே நம் குழந்தைகளுக்கு கொடுத்து நாமும் உண்டு வருகிறோம். பதஅசநஊஅப எனும் செயற்கை கொழுப்பு நிச்சயமாக இதய இரத்த குழாய்களை அடைக்கச் செய்து மாரடைப்பை உண்டு பண்ணுவது. இப்பொழுது ஹார்வேர்ட் பல்கலைக்கழகம், உலக சுகாதார மையம் ஆகியவற்றால் உறுதி செய்யப்பட்டுள்ளது. TRANSFAT கொல்லும் கொழுப்பு என்பது எல்லோரும் அறிந்தாலும், இதை தடை செய்ய இயலாது. பல்வேறு கோடிக்கணக்கான பணம் படைத்த முதலாளிகள், இவற்றை தடை செய்யவிட மாட்டார்கள். ஆனால் இதை நீங்கள் உங்கள் வீட்டினுள் நுழையாதபடி நீங்கள் தடை செய்யலாம்.
செயற்கை கொழுப்பு எந்த உணவில் உள்ளது?
(1) பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் அனைத்து பொருட்களும் செயற்கை கொழுப்பு கொண்டவை. நட்ங்ப்ச் ப்ண்ச்ங் ஆகிய பதப்படுத்தி கால அளவை அதிகரிக்க, இவை அனைத்து பாக்கெட் உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது.
(2) FAST FOOD பர்கர், பிரென்சு பிரை, பிட்ஸா என ருசிமிக்க பொருட்கள் அனைத்தும் செயற்கை கொழுப்பினால் தயார் செய்யப்படுகிறது. சாப்பிடும் பொழுது ருசி தரும் இப்பொருட்கள் சூடு குறைந்தவுடன் ருசியை இழந்துவிடும். நாளடைவில் மாரடைப்பை உண்டுபண்ணும்.
(3) ஐஸ்கிரீம், பேக்கரி பொருட்கள், நெய், வெண்ணெய், வனஸ்பதி கொண்ட பொருட்கள். செயற்கை கொழுப்பு. பூரிதமடைந்த கொழுப்பை (நஹற்ன்ழ்ஹற்ங்க் ஊஹற்) விட பல மடங்கு அதிக பூரிதமாக ஹட்ராஜீனேவுடன் செய்யப்படுகிறது. இது அதிக ருசி படைத்தது. விலையும் குறைவு. இதை பயன்படுத்தினால் உணவு பொருட்கள் பல நாட்கள் இருக்கும். இவ்வாறு விற்பனையாளர்களுக்கு தேவை யான பல விஷயங்கள் செயற்கை கொழுப்பில் இருந்தாலும் இது நிச்சயம் மாரடைப்பை உண்டு பண்ணுவதால் Transfat யை சிறு வயதில் இருந்தே தடுக்கவும். இதற்கான முயற்சி பல்வேறு நாடுகளில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது

B or ஆ காமாலை

பொதுவாக காமாலைக்கு காரணங்கள் பல உண்டு. முக்கியமானது வைரஸ் கிருமிகள். வைரஸ் காமாலைகளில் அ, ஆ, இ, ஈ, உ என ஐந்து வகைகள் உள்ளன. மேலும் சில வகைகள் உள்ளன. அவற்றில் அ-வகை காமாலைதான் அதிகம். அவை இரண்டு முதல் மூன்று வாரங்களில் தாமாக குணமாகிவிடும்.
ஆனால் ஆ மற்றும் இ வகை மிகவும் ஆபத்தானவை. ஆ வகை வைரஸ் உடலுக்குள் சென்றஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை எந்த அறிகுறியும் தெரியாது. அறிகுறிகள் ஆரம்பித்த பிறகு வருடக்கணக்கில் அதன் பாதிப்பு தொடரும். சிலருக்கு தாமாகவே குணமாகும். பலருக்கு கல்லீரல் பாதிப்பு நிரந்தரமாக ஏற்படும். சிரோஸிஸ், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்ற ஆபத்தான விளைவுகள் ஆ காமாலை யினால் ஏற்படும்.
ஆ காமாலை பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தை ஏதாவது ஒரு வகையில் கையாளு பவர்களுக்கு கையில் காயம் இருந்தால் அதன் மூலம் பரவும். மேலும் காமாலை உள்ளவருக்கு பயன்படுத்திய ஊசியை சரியாக சுத்தம் செய்யாமல் மற்றவருக்குப் போடுதல், பாதிக்கப் பட்டவரின் இரத்தத்தை சரியாக பரிசோதிக் காமல் செலுத்துதல், உடலுறவு, ஹோமோ செக்ஸ் உறவு, தாயிடமிருந்து குழந்தைக்கு கருவிலேயே பரவுதல் போன்றவற்றால் இக்காமாலை பரவுகிறது.
இதைக் குணப்படுத்துவது சிக்கலான விஷயம். ஆனால் முற்றிலும் தடுக்க முடியும்.
பிறந்த குழந்தை முதல் எல்லா வயதினரும் இதற்கு தடுப்பு ஊசிகளை அவசியமாக போட வேண்டும். முதல் ஊசி போட்ட ஒருமாதம் கழித்து இரண்டாவது ஊசியையும், ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது ஊசியையும் போட வேண்டும். இம்மூன்று தடுப்பூசிகளை சரியாக போட்டுவிட்டால் ஆ காமாலை வராது என்பதற்கு உத்திரவாதம்.
அ வகை காமாலைக்கும் தடுப்பு ஊசி உண்டு. இவை பெரும்பாலும் அசுத்தமான தண்ணீராலேயே பரவுகிறது. அல்லது சுத்தமில்லாத உணவுகளால் பரவுகிறது.
இ காமாலையும் ஆ காமாலைப் போலவே தான். ஈ காமாலை மற்றும் உ காமாலை அதிகமாக காணப்படுவதில்லை. மேலும் ஊ,எ வகைகள் கண்டு பிடிப்பாக உள்ளன.
வைரஸ் பாதிப்பு தவிர இரத்தத்தின் சிவப்பணுக்களின் அழிவானால் ஹீமோலைடிக் காமாலை ஏற்படும். இவர்களுக்கு மண்ணீரல் வீக்கம் ஏற்படும்.
சிலருக்கு பித்தப்பையில் கல் மற்றும் சதை அடைப்பு ஏற்பட்டு அடைப்புக் காமாலை ஏற்படும். இதற்கு அடைப்பை நீக்கினால் காமாலை குணமாகிவிடும்.
பொதுவாக காமாலை ஏற்பட்டவருக்கு முக்கிய சிகிச்சையே ஓய்வுதான். அடுத்ததாக நல்ல சத்துள்ள உணவுகளை சுமார் 2500 கலோரிகள் வரை கொடுத்தல். கொழுப்பான மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்த்தல், வைரஸ் ஆண்டிபயாடிக் மற்றும் கல்லீரல் செயல்பாடுகளுக்கான மருந்துகளை தேவையானவர்களுக்கு கொடுத்தால் போதும்.

பல்வேறு உணவுகளின் கலோரி கணக்கு

மனிதரின் ஒரு நாளைய தேவை
50 ‘ வயது 1500
30-50 வயது 2000
30 வயது 2500

எடையும் கலோரியும்

10000 கலோரி – 1 கிலோ எடை
(எடை குறைக்கவும் எடை ஏறவும் இதை மனதில் கொள்ளுங்கள்)

கலோரி கணக்கு

1கிராம் மாவுச்சத்து – 4 கலோரி
1 கிராம் புரதச்சத்து – 4 கலோரி
1 கிராம் கொழுப்புச் சத்து – 9 கலோரி

சில சமையல் பொருள்களின் கலோரிகள்

1 டீஸ்பூன் எண்ணெய் ( 5 மில்லி) : 45
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் (15 மில்லி : 135
1 ஸ்பூன் நெய், வெண்ணெய் : 90
1 ஸ்பூன் சர்க்கரை : 20
1 டம்ளர் (240 மில்லி) அரிசி : 700
100 கிராம் கிழங்கு, காரட், பீட்ரூட் : 100
மற்ற காய்கறிகள் (கலோரி குறைவு) : 20-50
பால் 1 டம்ளர் (200 மில்லி) : 140
ஆடை நீக்கிய பால் 1 டம்ளர் : 40
முட்டை : 75
மீன் உணவுகள் : 70-100
சிக்கன் (ஆழ்ங்ஹள்ற்) 100 கிராம் : 140
சிக்கன் மற்ற பகுதிகள் 100 கிராம் : 200
மட்டன் 100 கிராம் : 300
தேங்காய் (முழு பெரியது) : 400

காலை உணவு பொருட்கள்

இட்லி2 : 80
தோசை (2ஸ்பூன் எண்ணெய்) : 140
காபி : 140
ஆடை நீக்கிய பால் காபி : 80
காபி ஆடை நீக்கிய பால் மாற்று
சர்க்கரை காபி : 40
உப்புமா : 150
பூரி (2) உருளை : 250
பொங்கல் (நெய் இல்லாமல்) : 100
பொங்கல் நெய்யுடன் : 190
2 சப்பாத்தி எண்ணெய் சேர்த்தது : 120
2 சப்பாத்தி எண்ணெயின்றி : 80
1 வடை : 140
ரொட்டி 1 துண்டு : 60
ஜாம் : 30
வெண்ணெய் : 100
ஓட்மீல், கார்ன் பிளேக்ஸ் : 100-150
தேங்காய் சட்னி : 30
பரோட்டா 1 : 120
மதிய உணவு பொருட்கள்

ஒரு சாப்பாடு (சைவம்) : 500-600
ஒரு சாப்பாடு நான் (அசைவம்) : 800-1000
தயிர் : 50
100 கிராம் மட்டன் (எண்ணெயில் வறுத்தது) : 400
100 கிராம் மட்டன் (எண்ணெயில் பொறித்தது): 600
100 கிராம் சிக்கன் – மட்டனிலிருந்து 100 கலோரி குறைக்கவும்.

சிறுதீனிகள்

1பிஸ்கெட் : 30
1 க்ரீம் பிஸ்கெட் : 50
10 சிப்ஸ் : 100
எண்ணெயில் வறுத்த பொருட்கள்
30 கிராம் : 100
ஐஸ்க்ரீம் (1 Scoop) : 250 -300
இந்தியன்ஸ்வீட் : 200
கேக்(டீகேக்) : 150
கேக் (Icing கேக்) : 250

ஜுஸ் பானங்கள்

ஜுஸ் சர்க்கரையுடன் : 150
ஜுஸ் சர்க்கரையின்றி : 100
300 மில்லி பானங்கள் : 250

மதுபானங்கள்

பீர் 4% (360 மி) : 120
பீர் 6% Above (360 மி) : 150
ஜின் பக்காடி (60 மி) : 130
விஸ்கி 90 Proof (60மி) : 150
பிராந்தி (60 மி) : 150

பழங்கள், காய்கறிகள்

வாழைப்பழம் 1 பெரியது : 60
மாம்பழம் 1 சிறியது : 100
ஆப்பிள் 1 : 60
நீர் நிறைந்த பழங்கள், காய்கறிகள் : 40
கடின பழங்கள்,காய்கறிகள் : 60-100

பொதுவாக காய்கறிகள், பழங்களின் கலோரி அளவு குறைவு.

அன்பு ஓர் ஆசிரியன்

அர்ப்பணிப்பு” இந்த வார்த்தையை அன்பின் இன்னொரு பரிமாணம் என்று கொள்ளலாம். நம் அர்ப்பணிப்பின் மூலமாகவும் பிறர் நம் மீது அன்பு செலுத்தலாம். நாம் மற்றவர் களுக்கு அன்பு செலுத்த ஆசிரியர் ஆகலாம்.
திருமண வீடுகளில், கோயில் களில் வாழை. இவைகளில் வெளியில் கட்டப்படும் . பெரும் பாலும் மங்களகரமான விஷயங் களுக்கு உபயோகப்படுத்தப்படும் வாழைமரம். கோயிலின் வெளியே தோரணத்தில் இருந்த வாழைக்கு ஓர் ஆசை. கடவுளுக்கு தன் இலைகளால் நிவேதனம் அளிக்கப் படுகிறது. தான் கொடுக்கும் பழங்கள் கடவுளுக்கு நிவேதனம் அளிக்கப்படுகிறது. நாம் எப்போது கடவுளை நிரந்தரமாக அடைவது? என்று யோசித்தது. அதற்காக தன்னை அர்ப்பணித்து கொண்டது. “வாழை இலை, வாழைப்பூ, வாழை பழம் இப்படி எல்லாமே மனிதனால் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையிலும் நம்பிக்கை தளராமல் வாழை தன் முயற்சியை தொடர்ந்தது. தன்னை சற்று இளக்கிக் கொண்டது. வாழை தன் “தண்டு” பகுதியை மனிதனுக்கு அளித்து இறுதியாக தன் உடலில் இருந்து “வாழை நாராக” வெளிப்பட்டு மணம் தரும் மலர்களோடு சேர்ந்து இறைவனை எப்பொழுதும் தழுவி நிற்கும் “மாலையானது”, அன்பான இந்த வாழையின் கடைசி பகுதியில் இருந்து வெளிப்பட்ட இந்த “நார்” தான்.
பல பூக்கள் ஒன்று சேர்ந்த மாலையின் இருப்பிடம். எங்கோ சுதந்திரமாக மலர்ந்த மலர். பல மலர்களுடன் சேரும் பொழுது சற்று இருக்கமாக இருக்கும். மலருக்கு வலிக்கும். மனிதர் களுக்கு பலவகையில் பயன்பட்டு இறுதியில் தான் “நார்” வடிவமாக ஆன போதிலும் மலர்கள் சுமக்கும் இனிய பணியை ஏற்று கொள்கிறது வாழை. காரணம் ‘அர்ப்பணிப்பு’ மலர்கள் மிக அன்பானவை. இந்த அன்பும், அர்ப்பணிப்பும் ஒன்று சேர்ந்து இறைவனை இதமாக தழுவுகிறது. அன்பு, அர்ப்பணிப்பு. இந்த உலகத்தில் வாழ தானே இன்னொரு “வாழைக்கன்றையும் உற்பத்தி செய்கிறது ‘வாழை’ வாழை கூட அன்பில் ஓர் ஆசிரியன்.
அதனால் தான் இல்லறத்தை இனிதே துவங்கும் திருமண தம்பதிகள் பரஸ்பரம் அன்பு, அர்ப்பணிப்பு இரண்டையும் இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் திருமணங் களில் மாலை மாற்றிக் கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது.

நடைப்பயிற்சி

1. காலையில் வெயில் உறைக்க ஆரம்பிக்கும் முன்னும், இளவயதிலும் விண்வெளியிலும். மாலையில் வெயில் இறங்கிய பின்னும் நடைப் பயிற்சி செய்யலாம்.
2. ஆரம்பத்தில் 15 நிமிடங்களுக்கு நடக்கலாம். பிறகு வாரத்திற்கு 15 நிமிடங்கள் வீதம் நடக்கும் நேரத்தைக் கூட்டலாம்.
3. வெறும் வயிற்றில் அல்லது சிறிதளவு திரவ உணவை எடுத்துக் கொண்டு நடைப்பயிற்சியை செய்யலாம். வயிறுநிறைய சாப்பிட்ட பின்னர் நடைப்பயிற்சியை செய்யக்கூடாது. மெதுவாக உலாவலாம்.
4. ஒரு மணி நேரத்தில் சுமார் 4 கி.மீ முதல் 6 கி.மீ வரை நடப்பது நல்ல பலனைத் தரும்.
5.கடைகளுக்கும் நண்பர்களைப் பார்ப்பதற்கும் நடந்தே செல்வது நல்லது. அது நடைப் பயிற்சியாகி விடும்.
6. வேகமான நடை இதயத்தை அதிக வேலை செய்யத் தூண்டுகிறது. கை-கால்களை ஆட்டி வேகமாக நடப்பது, மலை மேடுகள் ஏறுவதும் இதயத் துடிப்பை உயர்த்தி, இதயத்தசைக்கு வலுவைக் கொடுக்கும். இதயநோய் உள்ளவர்கள் இதைச் செய்யும் முன் டாக்டரைக் கேட்க வேண்டும்.
7. மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நடந்தால், 150 கலோரியும் 5 கி.மீ வேகத்தில் நடந்தால் சுமார் 300 கலோரியும் எரிக்கிறோம்.

மருத்துவம் பயில்பவர்களுக்கு டாக்டர் கலாமின் ஒன்பது உறுதிமொழிகள்!

1. நேசிக்கிறேன். அதை சேவையாகக் கருதுகிறேன்.
2. மனிதக்குலத்தின் துயரை நீக்கி, மகிழ்ச்சியை மலரச் செய்வேன்.
3.வாழ்க்கை முழுக்க கற்றுக் கொண்டே இருப்பேன். கற்றதை மக்களுக்கு சேவையாகச் செய்வேன். சக மருத்துவர்களுக்குப் பகிர்ந்தளிப்பேன்.
4. என்னிடம் வருபவர்களுக்கு நான் தரமான சிகிச்சையை மட்டுமே தருவேன்.
5. யாருக்கும் என்னால் துயர் இருக்காது.
6. எந்த நோயாளியாவது என் சிகிச்சையில் திருப்தி அடையாவிட்டால், அவர் திருப்தி அடையும்வரை கட்டணமின்றியே சிகிச்சை அளிப்பேன்.
7.ஒருமைப்பாட்டோடு பணிபுரிவேன், ஒருங்கிணைந்து வெற்றி காண்பேன்.
8. சமூகத்துக்காகத் தொடர்ச்சியாக உழைப்பேன். எய்ட்ஸ் எச்.ஐ.வி. போன்ற கொடூர நோய்களுக்கு எதிராகப் போர் தொடுப்பேன்.
9.நோயாளிகளுக்கு சேவையாற்றுவதை என்னுடைய பிறவிப்பயனாகவும், கடமையாகவும் கருதுவேன்.

இதய நோய்…இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

சுயநலமற்ற சேவை
2. பணியில் நேர்மை
3. சகிப்புத்தன்மை
4. முழுமையான அர்ப்பணிப்பு
5. ஒட்டுமொத்த முனைப்பு
6. புத்திக்கூர்மை
தன்னை நம்பி வரும் நோயாளிக்கு மருத்துவம் செய்யும்போது ஒரு மருத்துவருக்கு நிச்சயமாக இருந்தே ஆகவேண்டிய குணங்கள் இவை. மருத்துவர்களுக்கு
மட்டுமல்லாமல், அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்களும், மற்ற பணியாளர் களும் இத்தன்மையைத் தம்மிடம் கொண்டிருப்பதன் மூலமாக
மட்டுமே மருத்துவத்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த இயலும்.
மருத்துவமனைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை டாக்டர் கலாம் எளிய மொழியில் வரையறுக்கிறார்:
‘மருத்துவர்களுக்கும், மற்ற பணியாளர் களுக்கும் தடையின்றி பணியாற்றிட ஏதுவான சூழல் மருத்துவமனைகளில் இருக்க வேண்டும். மிகச்சிறந்த சேவையை
நல்ல சூழலில் மட்டுமே மருத்துவர் களிடம் இருந்து மக்கள் பெற இயலும்.
மனம், உடல், நோக்கம் மூன்றும் ஒன்றிணைந்தால் ஒரு மனிதன் மாபெரும் சாதனைகளை நிகழ்த்துகிறான் இல்லையா? இது எந்த விஷயத்துக்கும்
பொருந்தும். வெற்றிக்கான எளிய சூத்திரம் இது. மருத்துவமனைகளுக்கும் இதே சூத்திரம் பொருந்தும்.
– மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மனம் எனலாம்.
– மருத்துவத் தொழிலுக்கான அடிப்படை உபகரணங்களை உடல் எனலாம்.
– நோக்கம் என்பதை நிர்வாகத்தின் ஆன்மா எனலாம். மருத்துவமனை நிர்வாகத்தின் ஆற்றல், மதிப்பீடு மற்றும் செயல்பாடுகளே இதை முடிவு செய்யும்.
இந்த மூன்று விஷயங்களையும் ஒருங்கிணைத்து, சேவை புரிவதன் மூலம் ஒரு மருத்துவமனை மக்களின் மனதில் உயர்ந்த இடத்தை
பிடிக்கப்படும். நோயாளிகள் மீதான அக்கறை, பாதுகாப்பு, தொழில்மீதான அக்கறை இருந்தால் போதும். அப்பகுதியில் மக்களால் ராசியான மருத்துவமனை
என்று சுலபமாக பேர் எடுத்து விடலாம்.
வருமுன் காப்போம்
டாக்டர் கலாம் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தவர். அவர் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு நிறுவனத்தில் அப்போது பதினான்காயிரம்
பேருக்கு மேலாக நாற்பது வயதைக் கடந்தவர்கள் இருந்தார்கள்.
நாற்பதைக் கடந்த ஒவ்வொருவரும் கட்டாயம் மருத்துவச் சோதனையை மேற்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் உயரம், எடை, சிறுநீர்
பரிசோதனை, ரத்தப்பரிசோதனை, இதயப் பரிசோதனை, ஈசிஜி, அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட ஒட்டுமொத்த உடல் பரிசோதனையும் ஒவ்வொரு வருக்கும்
தனித்தனியாக எடுக்கப்பட்டது.
35 சதவிகிதம் பேரின் உடல்நலம் பல்வேறு காரணங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அவர்களில் 30% பேர் அதிக எடையோடு இருந்தார்கள்.
20% சதவிகிதம் பேரிடம் புகைப்பழக்கம் இருந்தது. 23% பேருக்கு மன அழுத்தம். 12% பேருக்கு சர்க்கரை நோய் என்று கண்டறியப்பட்டது.
ஒரு மருத்துú பணியில் மும்முரமானது. உணவுக் கட்டுப்பாடு, குடி மற்றும் புகைப்பழக்கத்தை கைவிடச் சிகிச்சை, நடைப்பயிற்சி மற்றும் லேசான
உடற்பயிற்சிக்கான ஆலோசனைகள், தியானப்பயிற்சி என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நோயாளிகளின் குடும்பத்தாரையும் அழைத்து, அவர்களி
டமும் மருத்துவர்கள் பேசினார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரின் வாழ்க்கை முறையையும் நல்ல விதமாக மாற்றினார்கள்.
ஓராண்டு கழிந்தபிறகு மீண்டும் ஒரு ஒட்டு மொத்த மருத்துவப் பரிசோதனை அங்கே நிகழ்த்தப் பட்ட போது, பெரிய மாற்றத்தைக் காண முடிந்தது. நோய்
முற்றிய பிறகு மருத்துவம் பார்ப்பதைவிட, வருவதற்கு முன்பாகவே தேவையான நடவடிக்கைகளை எடுத்துவிடுவதால் எத்தகைய நல்ல விளைவுகளை
மருத்துவர்களால் ஏற்படுத்த முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள டாக்டர் கலாமுக்கு அந்நிகழ்ச்சி உதவியது.
மருத்துவச் சமுதாயம் நோயாளிகளுக்கு நோய் தீர்ப்பதைவிட, யாருக்கு நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிந்து வராமல் தடுப்பதே மிகப்பெரிய
சேவையாகும்.
இதயநோய் – இந்தியர்களுக்கு எச்சரிக்கை
சமீபத்தில் ஒரு மருத்துவ அறிக்கையை டாக்டர் கலாம் வாசித்தார். MYBPC3 என்று சொல்லப்படும் ஙவஞநஐச BINDING PROTEIN C எனப்படும்
மரபணு ஐந்து கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்குப் பொதுவாக இருக்கிறது. இந்த மரபணு வாய்த்தவர்கள் 45 வயதை எட்டிவிட்டாலே மாரடைப்பு
ஏற்பட்டுவிடக் கூடிய சாத்தியக்கூறு அதிகம். இந்திய மருத்துவத்துறையின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு இது.
இதயநோய் நிபுணர்கள் ஒருங்கிணைந்து இந்தச் சவாலை முறியடிக்க வேண்டும். இந்த மரபணு வாய்த்தவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு இப்போதே
தேவையான ஆலோசனைகளைத் தர வேண்டும். தங்களிடம் இதயநோய் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளையும், அவர்களது குடும்பத்தாரையும் ஆராய்ந்து
யார் யாருக்கு இந்த மரபணு இருக்கிறது என்பதைக் கண்டறியலாம்.
கண்டறியப்பட்டவர்கள் இப்போதிலிருந்தே உணவுக்கட்டுப்பாடு மற்றும் பொதுவான முன்னேற்பாடுகள் மூலமாக இதயநோயிலிருந்து தப்பிக்கலாம்.
ஏரோபிக் பயிற்சிகள் மற்றும் தியானம் போன்றவை மேற்கொள்ளலாம். மருத்துவமனைகள் போர்க்கால அடிப்படையில் பணிபுரிந்து இந்த இதயநோய்
சிக்கலிருந்து இந்தியர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

தலைச்சுற்றல்

டாக்டர் நான் காலையில் எழுந்திருக்கும் பொழுதுதெல்லாம் தலைச்சுற்றல் வருகிறது.
‘தலைச்சுற்றல் எவ்வளவு நேரம் இருக்கிறது’ -டாக்டர்
சுமார் ஒரு மணி நேரம் இருக்கிறது – நோயாளி.
சரி. இனிமேல் ஒருமணி நேரம் கழித்து எழுந்திரியுங்கள் – டாக்டர்.
சற்று வேடிக்கையான வியாதி இந்த தலைச் சுற்றல். ரத்தக் கொதிப்பு அதிகமானாலும் தலை சுற்றும். இரத்தக் கொதிப்பு குறைவானாலும் தலைசுற்றும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் சர்க்கரை அளவு குறைந்தாலும் தலை சுற்றும். அதிகமானாலும் தலை சுற்றும். அதிகம் தூங்கினாலும் தலை சுற்றும். தூங்கவில்லை யென்றாலும் தலை சுற்றும்.
நன்து இரண்டு காதுகளிலும் 3 மிகச் சிறிய எலும்புகள், நாம் தலையையோ உடலையோ பல்வேறு விதமாக ஆட்டும் பொழுது நம் உடலை சமநிலை செய்ய உதவுகின்றன. படுக்கையிலிருந்து எழுந்து நிற்கும் பொழுது ரத்த அழுத்தம் குறைந்து தலை சுற்றல் வரலாம். மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் தலை சுற்றல் வந்தால் உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள். இவற்றை சற்று மாற்றுவார். படுக்கையில் இருந்து எழும்பொழுது முதலில் நன்றாக முழிக்கவும். பின்பு ஒரு பக்கமாக உடலைத் திருப்பி மெதுவாக எழுந்திரிக்கவும். இவ்வாறு செய்தால் தலை சுற்றல் குறையும்.

சிக்கலான உதிரப்போக்கு

பரிசோதனைகள்: உள் பரிசோதனைகளான கருப்பை, வயிறு, உள்ளுறுப்புகள், கருப்பையின் வாய், பாப் சோதனை மற்றும் மார்பக பரிசோதனை செய்ய வேண்டும்.
கருப்பையின் உள் தசையின் தடிமனையும் மற்றும் கருப்பையினுள்ளே வேண்டாத வளர்ச்சி ஏதாவது இருந்தால் அதை அல்ட்ரா சோனாகிராபி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஹிஸ்ட்ரோஸ்கோபி முறையில் மெல்லிய குழாயை கருப்பையின் வாய் வழியாக உள்ளே செலுத்தி கருப்பையின் உட்புறத்தை பரிசோதனை செய்வார்கள்.
டி & சி முறையில் கருப்பையின் உள்ளேயிருந்து சிறிதளவு திசுவை சுரண்டியெடுத்து அதை மைக்ரோஸ்கோப் வழியாக சோதனை செய்வார்கள்.

சிகிச்சைகள்
கருப்பையின் உட்புறம் மெல்லியதாக இருந்தால், ஈஸ்ட்ரோஜன் (ஹார்மோன்தெரபி) உதவும். ஒருவேளை கருப்பையின் உட்புறத்தின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் ப்ரோஜெஸ்ட்ரான் (ஹார்மோன்தெரபி) உதவும்.
கருப்பையினுள்ளே பாலிப்ஸ் அல்லது சிறிய நார்க்கட்டி போன்ற வேறு ஏதாவது வளர்ச்சி இருந்து, அதனால் இரத்தப்போக்கு ஏற்பட்டால் ஹிஸ்ட்ரோஸ்கோபி அல்லது டி & சி முறையில் சிகிச்சை அளிக்கலாம். எண்டோமெட்டிரியல் ஹைபர் பிளாசியா இருந்தால் மருந்து, மாத்திரைகளோ அல்லது அறுவை சிகிச்சையோ தேவைப்படும். புற்றுநோய் வந்தால் கருப்பையை அகற்றுதல் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் தேவைப்படும்.

Advertisements