Articles

புற்று நோயைத் தவிர்க்கும் வழிகள்

  • அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறுவது மிக நல்லது.
  • புகையிலை மற்றும் குடிப்பழக்கத்தால் புற்றுநோய் ஏற்படுகின்ற வாய்ப்பு அதிகம்.
  • உணவில் பச்சைக் காய்கறிகளையும் பழங் களையும் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். இதனால் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக கிடைக்கிறது.
  • கொழுப்புச் சத்தை குறைத்தால் புற்றுநோய் ஏற்படுகின்ற வாய்ப்புகள் குறையும். கொழுப்புச் சத்தையும் கலோரிகளையும் குறைக்க நார்ச்சத்து மிகவும் உதவும்.
  • வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால் பல புற்றுநோய்களைத் தவிர்க்கலாம்.
  • பீட்டா கரோட்டின் சத்தானது உருளைக் கிழங்கு, கேரட், பப்பாளி, மாம்பழம் பச்சை இலைகள் மற்றும் காய்கறிகளில் அதிகமாக உள்ளது. இது நமது உடலில் வைட்டமின் ஏ சத்தினை அதிகரிக்கிறது. புற்று நோயைத் தடுக்க இந்த வைட்டமின் ஏ மிக அவசியம்.
  • வைட்டமின் சி வகையும் புற்றுநோயை வராமல் தடுக்கும் சக்தி கொண்டது. பச்சை இலை உணவுகள், காய்கறிகள், தக்காளி, ஸ்ட்ராபெரி போன்றவற்றில் இது அதிகம்.
  • மேலும் கீரைகள், முட்டைக் கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில் இவற்றில் உள்ள சத்துக்கள் புற்று நோயைத் தடுக்கும் தன்மை கொண்டது.
  • தினமும் தவறாமல்  பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வைட்டமின் சி மற்றும் ஏ வகை உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
  • உடல் எடை கூடாமல், கலோரிகள் அதிகமாக சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • தினமும் உடற்பயிற்சியும் நடைப் பயிற்சியும் அவசியம்.
  • எண்ணெயில் பொரித்தவற்றைத் தவிர்க்கவும். நொறுக்கு தீனிகள், மற்றும் பேக்கரி உணவுகளைக் குறைக்கவும்.
  • காபி, டீ போன்றவற்றை குறை வாகவும் பான்பராக், புகை, மது போன்றவற்றை நிரந்தரமாகவும் தவிர்க்கவும்.
  • கண்ட இடங்களில் கண்ட நேரங்களில் கண்டதைச் சாப்பிடுவது, மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக வேண்டாததைச் சாப்பிடுதல், நாக்கின் சுவைக்காக அதிகம் சாப்பிடுதல் போன்ற வற்றைத் தவிர்த்து நல்ல உணவுமுறைகளைப் பின்பற்றினால் புற்றுநோயைத் தவிர்க்கலாம்.

இயற்கையே மனிதனுக்கு நல்லது!

இயற்கை வளங்களே உடலுக்கு நல்லது. முடிந்த அளவுக்கு செயற்கை உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களை உபயோகிக்க வேண்டும்.

  • பூச்சி மருந்து இல்லாமல் விவசாயம் செய்ய வேண்டும்.
  • உணவு முறையில் சிறு தானியங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். (கம்பு, சோளம், ராகி, தினை, கொள்ளு).
  • பிளாஸ்டிக் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும்.
  • வீட்டிலேயே தேவையான காய்கறிகளைப் பயிர் செய்ய வேண்டும்.
  • காடுகளை அழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • மழைநீரைத் தவறாமல் சேகரிக்க வேண்டும். மழைநீர் சுத்தமானது.
  • வீட்டிலும், வெளியிலும் சுத்தமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.
  • வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் மற்றும் அனைத்துப் பொது இடங்களிலும் மரம் நடுதலை கட்டாயமாக்கி, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டால் இன்னும் சுமார் 5 ஆண்டுகளில் நம் நாடு பசுமையாக மாறும்.
  • ஆரோக்கியமான வாழ்வுக்கு சக்தி நிறைந்த பழங்கள் இன்றியமையாதவை. பழச்சாற்றினை விட, பழத்தையே சாப்பிடும்போது அதனுடைய நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்குகிறது. அதில் உள்ள வைட்டமின்கள், புரதங்கள், தாது சத்துகள், இரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் போன்ற நோய்களைத் தீர்க்க உதவுகிறது.
  • பப்பாளி, மற்றும் கொய்யாப் பழம் மலச் சிக்கலை நீக்குகிறது. நீரிழிவு நோயாளி களுக்கு கொய்யா, மாதுளை, ஆப்பிள் போன்ற பழங்கள் நல்லது.
  • கர்ப்பிணிப் பெண்கள் நிறைய பழங்களை உட்கொண்டால் மலச்சிக்கல் வராது.
  • பழத்தையே ஆகாரமாகக் கொண்டால் எடை குறைவதோடு தோலும் மினுமினுப்படையும். மொத்தத்தில் காலையில், வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது.
  • டின்களில் அடைக்கப்பட்ட பானங்கள் ‘ஜுஸ்களைவிட, பழத்தை நன்கு கழுவிவிட்டு அப்படியே சாப்பிடுவது சிறப்பு.
  • உடலுக்குத் தீங்கு விளைக்கும் சோடா, குளிர் பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயைத் தவிர்க்க

  • உணவு உண்டவுடன், அதனை ஜீரணிக்க உதவும் வகையில் வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது இயற்கை. இதனால் தலை மற்றும் கால் பாகங்களுக்கு ஓரளவு இரத்த ஓட்டம் குறையும். எனவே ‘சாப்பிட்ட பின்பு அமைதியாக சற்று நேரம் ஓய்வில் இருப்பது நல்லது. இது முக்கியமாக நடுத்தர வயதைக் கடந்த எல்லோருக்குமே நல்லது.
  • உயர் இரத்த அழுத்தத்துக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட, கால இடைவெளிக்குப் பிறகு இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை கொள்ள வேண்டும்.
  • நடக்கும் பயிற்சியை அரை மணி நேரத்திற்கு மேல் மாற்றினால் மேலும் இரத்த அழுத்தம் குறையும்.
  • காய்கறிகளைச் சமைப்பதனால், அவற்றிலுள்ள சத்துப் பொருட்கள் வீணாகிப் போகின்றன. அதனால் பச்சையாகவே உண்ணலாம்.
  • வேகவைத்து சாப்பிடுவதைவிட ஆவியில் அவித்துச் சாப்பிடுவது நல்லது.
  • ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களை அப்படியே தோலுடன் சாப்பிடுவதே நல்லது, மேல் தோலில் அரிய பல சத்துக்கள் உள்ளன.
  • கிழங்கு வகைகளில் காரட், பீட்ரூட் இவற்றைப் பச்சையாகவே சாப்பிடுங்கள். கொத்துமல்லிக் கீரை சாப்பிடுங்கள்.
  • காய்கறிகளை வேக வைக்கும்போது அளவோடு தண்ணீர் வையுங்கள். காய்கறி வெந்ததும் தண்ணீரை நாம் கொட்டி விடுகிறோம். காயின் சத்து எல்லாம் கொட்டிய தண்ணீரில் வீணாகிறது. அதனால் அளவோடு தண்ணீர் வைத்து வேக வைப்பதே நல்லது.
  • மாவுப் பொருட்கள் சர்க்கரைப் பொருட்கள் மற்றும் கொழுப்புப் பொருட்களை குறைக்கவும்.
  • வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.
  • பழங்களுக்கு அடுத்தப்படியாக காய்கறிகளை நறுக்கிப் போட்டு சாலட் மாதிரி செய்து சாப்பிடலாம். அதில் சிறிது உப்போ, எலுமிச்சம் பழச்சாறோ சேர்த்துக் கொள்ளலாம்.
  • அரிசி, கோதுமை போன்ற மாவு உணவுகளை சாப்பிடுகிறவர்கள், அத்துடன் இரண்டு மடங்கு அளவு காய்கறி உணவைச் சாப்பிட வேண்டும். பழங்கள் சாப்பிடுவதும் நல்லது.

உண்ணாவிரத மருந்து

  • மாதத்திற்கு ஒரு நாளேனும் உண்ணாநோன்பு இருந்து வந்தால் நோய்கள் நம்மை அணுகாது.
  • உண்ணாவிரதம் இருப்பதற்கு மனவலிமை வேண்டும். வெறும் உடல் வலிமை மட்டும் போதாது. அப்படி உண்ணா நோன்பு இருக்கும் நாட்களில் தேவையான அளவில் தண்ணீர் மட்டும் குடித்து வரலாம்.
  • பழச்சாறு சாப்பிடலாம். பழச்சாற்றை அருந்தும் போது ஒரே மூச்சில் முழு சாற்றையும் அருந்திவிடக் கூடாது. சிறிது சிறிதாகச் சில வேளைகளில் சாப்பிட்டு முடிக்கலாம். இந்த சாறுகள் உண்ணா நோன்பு காலத்தில் உடம்பில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதற்கு மிகவும் உதவி புரிகின்றன.
  • சிலருக்கு விரதத்தின் போது களைப்பு ஏற்படுவதுண்டு. அது தானே சரியாகிவிடும். அல்லது தண்ணீர் அருந்தினால் சரியாகி விடும்.
  • பருமனாக உள்ளவர்கள் உண்ணாநோன்பு இருந்து வந்தால் ஊளைச்சதையெல்லாம் வற்றிப் போகும்.
  • முதலில் ஒரு வேளைச் சாப்பாட்டை மட்டும் உண்ணாமல் தவிர்த்து பழகலாம். பிறகு இரண்டு வேளை உணவைத் தவிர்க்கவும். அதன்பிறகு நாள் முழுவதும் உணவைத் தவிர்த்து உண்ணாநோன்பு இருந்து பழகலாம்.
  • உண்ணாவிரதத்தை முடிக்கும்போது ஏதேனும் பழச்சாறு சாப்பிடவும். உடனே ஏதேனும் கடினமான ஆகாரத்தை உண்ணுதல் கூடாது. நீராகாரமான உணவைத் தான் சாப்பிட வேண்டும்.
  • உண்ணாநோன்பு இருக்கும்பொழுது உடல் உறுப்புகள் புத்துயிர் பெறுகின்றன. வலுவடைகின்றன. மேலும் பல நாட்கள் பல வருடங்கள் பழுது படாமல் உழைக்கத் தயாராகிவிடுகின்றன. உயர் இரத்த அழுத்தமும் குறையத் தொடங்கும்.

நன்றியுணர்வை வளருங்கள்

  • உங்கள் வாழ்வில் உச்சகட்ட சக்தியாக அன்பைப் பயன்படுத்துவதற்கு நீங்கள்  இது வரை நேசித்திராத அளவுக்கு நேசிக்க வேண்டும். வாழ்க்கையை நேசியுங்கள்.
  • அன்பை மட்டுமே பாருங்கள், அன்பை மட்டுமே கேளுங்கள், அன்பை மட்டுமே பேசுங்கள். அன்பை உங்கள் இதயபூர்வமாக உணருங்கள்.
  • நீங்கள் உணரக்கூடிய அன்பிற்கு எல்லையோ, மேல் மட்ட வரம்போ இல்லை. அந்த அனைத்து அன்பும் உங்களுக்குள் இருக்கிறது! நீங்கள் அன்பால் நிறைந்துள்ளீர்கள்.
  • நீங்கள் விருமபும் விஷயங்களை ஒவ்வொன் றாகப் பட்டியலிட்டு, அவற்றை உணர்வதன் மூலம் நீங்கள் நேசிப்பவற்றை ஒவ்வொரு நாளும் ஈர்ப்பு விதியிடம் கூறுங்கள்.
  • நீங்கள் உணரும் விதத்தை நீங்கள் மாற்ற விரும்பினாலோ அல்லது உங்கள் நல்ல உணர்வுகளை மேலும் உயர்த்திக் கொள்ள விரும்பினாலோ, நீங்கள் நேசிக்கும் மற்றும் ஆராதிக்கும் விஷயங்கள் அனைத்தையும் உங்கள் மனத்திற்குள் ஒரு பட்டியலிடுங்கள்.
  • ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்த அளவுக்கு அன்பு செலுத்துவதுதான் உங்கள் வேலை.
  • உங்களைச் சுற்றிலும் இருக்கும், நீங்கள் நேசிக்கும் விஷயங்களை உங்களால் முடிந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் உற்று நோக்குவதற்கு வலிந்து முயற்சி செய்யுங்கள்.
  • நீங்கள் நன்றியை உணரும் ஒவ்வொரு முறையும் அன்பைக் கொடுத்துக் கொண்டிருக் கிறீர்கள்.
  • உங்கள் வாழ்வில் நீங்கள் இது வரை பெற்றுள்ள அனைத்து விஷயங்களுக்காகவும் நன்றியுடன் இருங்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களுக்காகவும் நன்றியுடன் இருங்கள்.
  • உங்கள் நன்றியுணர்வு உங்கள் வாழ்வில் உள்ள அனைத்தையும் பன்மடங்காகப் பெருக்கும்.
  • எதிர்மறை உணர்வுகளில் இருந்து வெளிவந்து அன்பின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான பாலமாக அமைவது நன்றியுணர்வுதான்.
  • நன்றியுணர்வின் சக்தியைப் பயன் படுத்துவதற்கு அதை நீங்கள் கடை பிடிக்க வேண்டும். உங்களது நாளில் ஏதேனும் ஒரு நல்ல விஷயம் நிகழ்ந்தால் நன்றி தெரிவியுங்கள். அந்த விஷயம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி. நன்றி என்று கூறுங்கள்.
  • நீங்கள் எவ்வளவு அதிகமாக நன்றியை உணர்கிறீர்களோ அவ்வளவு அதிகமான அன்பைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு அதிகமான அன்பைக் கொடுக்கிறீர்களோ அவ்வளவு அதிமாகப் பெறுகிறீர்கள்.
  • ஒவ்வொரு நொடியும், நாம் நன்றி தெரிவித்து, நாம் விரும்பும் விஷயங்களைப் பெருக்குவதற் கான வாய்ப்பாக விளங்குகிறது.

பசுமையான இளமை

  • சுமார் 10 சதவிகித குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
  • ஆஸ்துமாவை சரியாக கையாளாவிட்டால் மற்ற குழந்தைகளைப் போல வெளியே சென்று விளையாட முடியாது. அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை எடுத்தல், இளம் குழந்தைகளின் உடலும் மனமும் பாதிக்கப்பட்டு வாழ்வின் பசுமையான இளமைக் காலம் வேதனைக் காலமாகிவிடும்.
  • பொதுவாக மூச்சை இழுக்கும்போது நுரையீரலின் சின்னச் சின்னகுழாய்கள் வழியாக நுரையீரலின் அனைத்துப் பகுதிகளுக்கும் காற்று செல்கிறது. ஆஸ்துமா பாதிப்பில் இந்தக் குழாய்கள் சுருங்கிவிடும். மருந்து செலுத்தியதும் மீண்டும் பழைய வடிவத்திற்கு திரும்பிவிடும். இந்தத் தடுப்பு மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நிரந்தரமாகவே அந்தக் குழாய்கள் சுருங்கி விடுகின்றன.
  • தற்காலிக நிவாரணம் கிடைத்துவிட்டது என்பதற்காக மருந்து எடுப்பதை நிறுத்தி விடாமல் குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து சிகிச்சை செய்வது அவசியம்.
  • குழந்தைகளுக்கு தூசு அலர்ஜி மிகப்பெரிய பிரச்சனை. அதற்காக அந்தக் குழந்தையை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியாது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு அந்த அலர்ஜியைத் தவிர்க்க சப்லிங்குவல் இம்யூனாதெரபி அறிமுகமாகி உள்ளது.
  • அலர்ஜிக்கு எதிரான நோய் எதிர்ப்பை உருவாக்கும் ‘அலர்ஜனை’ அந்தக் குழந்தையின் நாக்கில் வைப்பர். முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து நாளுக்கு நாள் அலர்ஜனின் அளவை அதிகமாக்குவர். இதனால், குழந்தையின் உல்லில் அலர்ஜிக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கூடிக்கொண்டே போகும். சிறிது காலத்தில் அந்தக் குழந்தைக்கு அலர்ஜி என்பதே இல்லாமல் போய்விடும்.
  • பெற்றோரில் ஒருவருக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தாலும் குழந்தைக்கும் வர வாய்ப்பு உண்டு. தாய் கருவுற்று இருக்கும்போது புகை பிடித்தாலும் குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற் கான வாய்ப்பு அதிகம். மற்றவர்கள் புகைக்கும் போது அதை கர்ப்பிணி சுவாசித்தாலும் அது கருவையும் பாதிக்கும்.
  • குழந்தைக்கு ஆறு மாதங்களுக்கு வேறு ஆகாரங்களைத் தவிர்த்து தாய்ப்பால் மட்டுமே புகட்டினால் அந்த குழந்தைக்கு ஆஸ்துமா வருதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

அன்பையே வாரி வழங்குங்கள்

  • நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நபரிடமும் நீங்கள் அன்பைக் கொடுக்கிறீர்கள் அல்லது அன்பைக் கொடுப்பதில்லை. அவ்வளவுதான் நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ, அதையே பெறுகிறீர்கள்.
  • பரிவு, ஊக்குவிப்பு, ஆதரவு, நன்றியுணர்வு, அல்லது வேறு ஏதேனும் ஒரு மகிழ்ச்சியான உணர்வின் மூலம் பிறரிடம் அன்பை வெளிப் படுத்துங்கள். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் அது பன்மடங்காகத் திரும்பி வரும்.
  • ஒருவரிடம் இருக்கும் எதிர்மறையான விஷயங்களைப் பார்ப்பதைவிட, அவரிடம் நீங்கள் நேசிக்கும் விஷயங்களைப் பாருங்கள். அப்போது அடுத்தவரிடம் ஏதோ ஒரு நம்ப முடியாத விஷயம் ஏற்பட்டுள்ளது போல் உங்களுக்குத் தோன்றும்.
  • அடுத்தவரை மாற்ற முயற்சிப்பது. அடுத்த வருக்கு எது நல்லது என்று நீங்களாக முடிவு செய்வது, நீங்கள் நினைப்பதுதான் சரி. அடுத்தவர் கூறுவது தவறு என்று சிந்திப்பது அன்பிற்கு எதிரானது.
  • அடுத்தவரை விமர்சிப்பது, அவர்மீது பழி போடுவது, அவரைக் குறைகூறுவது, நச்சரிப்பது, அல்லது அவரிடம் குற்றம் கண்டுபிடிப்பது ஆகியவை அன்பு ஆகாது.
  • அடுத்தவர்களுடைய மகிழ்ச்சியான அவதாரங் களைப் பெறுவதற்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
  • அன்பின் ஆற்றலானது, உங்கள் உணர்வுகளை ஒழுங்கமைக்க உதவுகின்ற ஏராளமான தனிப்பட்ட பயிற்சியாளர்களை அன்றாடம் நீங்கள் சந்திக்கும் மக்களின் வடிவத்தில் உங்களுக்கு வழங்குகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் நீங்கள் அன்பைத் தேர்ந்தெடுப் பதற்கு உங்களைப் பயிற்றுவிக்கின்றனர்.
  • நீங்கள் நேசிக்கும் விஷயங்களை அடுத்த வரிடத்தில் பார்த்து அவற்றிற்கு உங்கள் இதய பூர்வமாக ‘ஆமாம்’ என்று கூறுவதன் மூலம், நீங்கள் நேசிக்கும் மற்றும் உங்களுக்கு வேண்டிய அனைத்து விஷயங்களையும் உங்களால் உங்களிடம் கவர்ந்திழுக்க முடியும்.
  • எதிர்மறையானவற்றைப் பற்றிப் பேசும்போதோ அல்லது அதைப் பற்றிக் கேள்விப்படும்   போதோ, உங்களால் மகிழ்ச்சியான உணர்வுகளைக் கொண்டிருக்க முடியாது!.
  • உங்களுக்கு விருப்பமான விஷயங்களையும், உங்களுக்கு விருப்பமில்லாத விஷயங்களையும் தேர்ந்தெடுப்பதற்கு வாழ்க்கை உங்களுக்கு ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு சூழ்நிலை யையும் வழங்குகிறது. நீங்கள் அவற்றிற்குச் செயல்விடை அளிக்கும்போது உங்கள் உணர்வுகளால் செயல்விடை அளிக்கிறீர்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்!
  • மோசமான உணர்ச்சிகளைக் கொண்டு எதிர் மறையான சூழ்நிலையை உங்களால் மாற்ற முடியாது. நீங்கள் தொடர்ந்து எதிர்மறையாக செயல்விடை அளித்துக் கொண்டிருந்தால் உங்கள் மோசமான உணர்வுகள் பன்மடங்கில் அதிகரித்து எதிர்மறைகள் பெருகும்.
  • நீங்கள் அற்புதமாக உணர்கிறீர்கள் என்றால், எந்தவிதமான எதிர்மறைகளும் ஊடுருவ முடியாதபடி உங்கள் காந்த சக்தியின் ஆற்றல் ஒரு பாதுகாப்புக் கேடயத்தை உருவாக்கும்.
  • வெளியுலகத்தில் உள்ள சூழ்நிலைகளை மாற்ற முயற்சிப்பதைவிட, நீங்கள் உணரும் விதத்தை மாற்றுவது சுலபமானது. உங்கள் உணர்வுகளை மாற்றுங்கள். அப்போது வெளிப்புறச் சூழல்கள் மாறும்!
  • நீங்கள் எவ்வளவு அதிகமாக அன்பு செலுத்தி, மகிழ்ச்சியாக உணர்கிறீர்களோ, உங்கள் புலம் அவ்வளவு அதிகமான காந்த சக்தியைப் பெற்று, அதிகமாக விரிவடைந்து, நீங்கள் நேசிக்கும் அனைத்தையும் நீங்கள் விரும்பும் அனைவரையும் உங்களிடம் கவர்ந்திழுக்கும்.

மயக்கம் கொடுப்பதில் பல வகைகள்

  • மயக்க மருந்தை கொடுத்ததும் உடல் உணர்ச்சி முழுவதும் இருக்காது. இது பொது அனஸ்தீசியா. அடுத்து ரீஜினல் அல்லது லோக்கல் அனஸ்தீசியா, இந்த முறையில் எந்த பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமோ அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டுமே மரத்துப்போகச் செய்வர்.
  • தற்போது இரண்டு புதிய தொழில்நுட்பங்களை மயக்க மருந்தியல் துறையில் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். முதலாவது அல்ட்ராசவுண்ட், இரண்டாவது நெர்வ் ஸ்டிமுலேட்டர்.
  • அல்ட்ராசவுண்ட் இயந்திரத்தை கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளின் உடல் உள் உறுப்புகளின் செயல்பாடு பற்றி அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தினார்கள். இப்போது அந்தக் கருவியை மயக்க மருந்தியல் துறையில் பயன்படுத்துகிறார்கள். உணர்வு நீக்க மருந்து செலுத்துவதற்காக ஊசியை உள்ளே செலுத்தி, அது குறிப்பிட்ட நரம்பை அடைந்துள்ளதா என்பதை உறுதி செய்தபிறகே மருந்து செலுத்தப்படும்.
  • நெர்வ் ஸ்டிமுலேட்டர் என்ற கருவி மூலம், கைப் பகுதி மட்டுமே மரத்துப்போக வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நரம்பு பகுதியில் ஊசியைக் கொண்டு செல்வார்கள். அதன் முனையில் மைக்ரோ அளவுக்கு மின்சாரம் செலுத்தப்பட்டு இருக்கும். அதனால் சரியான நரம்பைத் தொட்டதும் கை அசையும். இதன் மூலம் சரியான நரம்பை அடையாளம் கண்டு மருந்தை செலுத்தி அந்த பகுதியை மட்டும் மரத்துப்போகச் செய்வர்.
  • மனித இதயம் ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 முறை துடிக்கவேண்டும். மனிதனின் செயல் பாடு மற்றும் எண்ணத்தைப் பொறுத்து துடிப்பின் எண்ணிக்கை வித்தியாசப்படலாம். இதயத் துடிப்பு கடுமையாக குறையும்போது அதை சீராக வைத்திருக்க, பேஸ்மேக்கர் கருவி பயன்படுத்தப்படுகிறது.
  • நோயாளிக்கு உணர்வு இழப்பு மருந்து கொடுத்து, சிறிய அறுவை சிகிச்சை செய்து மார்புப் பகுதியில் ஒரு மணி நேரத்தில் இந்தக் கருவியைப் பொருத்துவர். இதயத்திற்கு செல்லும் குழாய் வழியாக இந்த ஒயரை இதய அறைகளுக்குள் கொண்டு சென்று சிறிய ஸ்க்ரு போட்டு முடுக்கிவிட்டால், இதயத் துடிப்பு சீராகிவிடும்.
  • சில நோயாளிகளுக்கு திடீரென எதிர்பாராத நேரத்தில் இதய துடிப்பு அதிகமாகி… சில மணி நேரங்களில் மரணம் ஏற்படலாம். மரபியல் ரீதியாக பிரச்சனை உள்ளவர்களுக்கும், ஏற்கெனவே மாரடைப்பு வந்து இதயம் பலவீனம் ஆனவர்களுக்கும் இந்தப் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. இம்பிளான்டபிள் கார்டியோவெர்டர் – டீஃபிப்ரிலேட்டர் என்ற சிறப்புக் கருவியை பொருத்திக் கொள்வது நல்லது.
  • இந்த கருவியில் உயர் அழுத்த பேட்டரி இருக்கும். இதயத் துடிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகரித்தால் சில நொடிகளில் அதைக் கண்டறிந்து இதயத்திற்கு ஷாக் கொடுத்து… மீண்டும் சகஜ நிலைக்குக் கொண்டு வரும்.

காமாலையை கவனிக்க வேண்டும்

  • மஞ்சள் காமாலைக்கு ஆங்கில மருத்துவத்தில் சரியான மருந்து கிடையாது என்பது மக்களின் தவறான நம்பிக்கை. இந்த விழிப்பு உணர்வு மக்களிடம் இல்லாத காரணத்தால், பலரும் நோய் மிகவும் முற்றிய நிலையில்தான் அலோபதி மருத்துவர்களைத் தேடி வருகிறார்கள்.
  • காமாலைக்குத் தைலம், மந்திரம், சிறப்பு மூலிகை என்பதெல்லாம் ஏமாற்று வேலை. பெரும்பாலான காமாலை தானாக குணமாகி விடும். இதையே அவரவர் தன்னுடைய மந்திர சிகிச்சையால் குணமாகிவிட்டது என்று விளம்பரம் செய்து ஏமாற்றுகிறார்கள்.
  • மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கு, மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. நமது உடலின் உள்ள ரத்த சிவப்பு அணுக்கள் சராசரியாக 120 நாட்கள் உயிருடன் இருக்கும். பின்னர் அவை மண்ணீரலில் அழிக்கப்பட்டு ஹீம் மற்றும் குளோபின் என்றும் இரண்டு தனித்தனிப் பொருளாகப் பிரிக்கப்படுகின்றன. ஹீம் என்பது கல்லீரலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிலிரூபினாக மாற்றம் அடைந்து பித்த நாளம் வழியாகக் குடலுக்குள் செல்லும். மலம் மஞ்சள் நிறத்தில் இருக்க இதுவே காரணம். இந்த செயல்பாட்டில் எங்கு பிரச்சனை வந்தாலும் மஞ்சள் காமாலை நோய் ஏற்படலாம்.
  • 120 நாட்களுக்கு முன்னதாகவே சிவப்பணு அழிக்கப்படும்போது அதிக அளவு ஹீம் கல்லீரலுக்குள் நுழைவதால் அதை சமாளிக்க முடியாத நிலையும் உண்டாகும். இந்த நிலைக்கு ஹீமோலைடிக் காமாலை என்று பெயர்.
  • இரண்டாவதாக ஹெபடைடிஸ் வைரஸ் தொற்று காரணமாகவும், மது அருந்துவதாலும் சிலருக்கு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இதில் கல்லீரல் திசுக்கள் 80 சதவிகிதம் பாதிக்கப்படும் வரை காமாலை வராது. அதற்கு மேலும் பாதித்தால் காமாலை மற்றும் கல்லீரல் சுருக்கம் ஏற்படுகிறது.
  • மூன்றாவதாக, குடலுக்குச் செல்லும் பித்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டாலும், மஞ்சள் காமாலை வரலாம். பித்தப் பையில் உள்ள கல், பித்தப் பையிலேயே இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் அது பித்த நாளத்துக்கு வந்து அடைப்பு ஏற்படுத்தும்போது மஞ்சள் காமாலை வரும்.
  • இதுபோன்ற பாதிப்புகள் இருந்தால், உடனடியாக கல்லீரல் சம்பந்தமான இரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட ஸ்கேன் செய்ய வேண்டும். அதில் எந்த வகையான மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
  • இ.ஆர்.சி.பி எனப்படும் ‘எண்டாஸ்கோபிக் ரீட்ரோகிரேட் கொல்ஞ்சியோ பாங்க்ரியாடோ கிராஃபி என்ற சிகிச்சை வழியாக எண்டாஸ் கோபியை செலுத்தி பித்த நாளம், குடலில் சேரும் இடத்தை அடைந்து, கல் எங்கே அடைத்து உள்ளது என்பதைக் கண்டுபிடித்து பேஸ்கெட் பலூன் மற்றும் லித்தோட்ரிப்டர் கருவிகளைக் கொண்டு கற்களை உடைத்து வெளியேறசெய்யலாம். உடைக்கப்பட்ட கற்கள் கழிவு மூலம் வெளியே சென்று விடுவதால் நோயாளிக்கு முழு நிவாரணம் கிடைத்துவிடும்.
  • பித்த நாளத்தில் கல், அதிகமாக மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று ஆகியவற்றால் கணையம் அழுகிப்போய் அதனால் உடலில் மற்ற பாகங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த அழுகிய பகுதி உடலுக்கு உள்ளே இருப்பதால், தொற்று அதிகமாகி, உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. இந்த அபாயத்தில் இருந்து நோயாளியைக் காப்பாற்ற ஒரு புதிய சிகிச்சை முறை வந்துவிட்டது.

வலியிலிருந்து விடுதலை

  • புற்றுநோய் தாக்கப்பட்டவர்களில் பெரும் பாலோர், தாங்கமுடியாத வலியினால் அவதிப் பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள். நவீன மருத்துவத்தில் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி (Intrathecal drug delivery) சிஸ்டம் என்ற கருவி கொண்டு வலி நிவாரண சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
  • வலி மேலாண்மை என்பதை உலக சுகாதார நிறுவனம் நான்கு படிகளாக பிரிக்கிறது.
  • முதலாவது வலியைக் கண்டறிந்து அதற்கு வலி நிவாரண மாத்திரைகளை அளிப்பது.
  • இரண்டாவது, மனோதத்துவ ரீதியான சிகிச்சை மற்றும் ப்ருஃபன் போன்றவலியைக் குறைக்கின்ற மாத்திரைகளை அளிப்பது.
  • மார்ஃபின் அல்லது பென்டனைல் போன்று வலிக் குறைப்பதில் சக்தி வாய்ந்த மாத்திரைகள் கொடுப்பது மூன்றாவது வகை.
  • நான்காவது வகை, நமது உடலில் ஓர் உள்ளார்ந்த வலி கட்டுப்பாடு அமைப்பானது, மூளை மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றி அமைந்துள்ளது. எந்த ஒரு வலியும் இதன் மூலமாக பயணம் செய்து மூளையை அடையும் போதுதான், வலியை உணர்வோம். வலியை சமாளிக்க மார்ஃபின் என்றமாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரை உடனடியாக வேலை செய்யாது. வயிற்றில்  கரைந்து, ரத்தத்தில் கலந்து, நஜ்ம்பு மண்டலத்தை அடைய சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். ஒரு மைக்ரோ கிராம் அளவு மார்பின் முதுகுத்தண்டு வடத்தை அடைந்தால் போதும்.
  • இப்படி மருந்தை நேரடியாக முதுகுத் தண்டு வடத் திரவத்தில் சேர்ப்பதால், அதிகப் படியான மார்ஃபின் எடுப்பது தேவை இல்லாமல் போய் விடுகிறது
  • புதிய தொழில்நுட்பத்தின் படி, இதயத்திற்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்துவது போன்று நோயாளியின் வயிற்றின் தோலுக்கு அடியில் ஒரு சிறிய கருவியைப் பொருத்துவர். இந்தக் கருவியின் முனையை முதுகுத் தண்டுவடத்தில் இணைத்து அறுவை சிகிச்சை செய்யப்படும். இந்தக் கருவி தோலுக்கு அடியில் இருக்கும் என்பதால் வெளியே எதுவும் தெரியாது.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்து தொடர்ந்து செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், நோயாளிக்கு வலி உணர்வே இருக்காது. மருந்து காலியானதும், அந்த கருவியை வெளியே எடுக்காமலே, மீண்டும் நிரப்பிக்கொள்ள முடியும். மேலும், தேவைக்கேற்ப அளவை அதிகரித்துக் கொள்கிற வசதியும் உள்ளது.

Advertisements