மனச்சிதைவு உண்டாகக் காரணம் என்ன?

1.உறுதியான குடும்ப சரித்திரம் : மனச்சிதைவு குடும்பங்களில் தொடர்ந்து வருபவையாக அறியப்படுகிறது. பெற்றோர்கள், சகோதரர்கள் அல்லது சகோதரிகள் போன்ற முதல் நிலை உறவினர்கள் மனச்சிதைவின் உறுதியான சரித்திரம் கொண்டவர்களாக இருப்பின் அவர்களிடத்தில் இது மிக பொதுவாக காணப்படுகிறது.

2.மரபணு மற்றும் சுற்றுச்சூழல் குறுக்கீடு : மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் இடையேயான குறுக்கீடுகள்கூட நோய் உண்டாக பொறுப்பாகலாம் என்று எண்ணப்படுகிறது.

3.மூளையில் செயல்பாடு ரீதியான மாற்றங்கள் : குறிப்பிட்ட இரசாயனங்களின் பண்பு மாற்றம் அல்லது சமநிலையின்மையும் மனச்சிதைவுக்கு காரணமாகலாம் என்று நம்பப்படுகிறது.

4.மூளையில் கட்டமைப்பு மாற்றங்கள் : மனச்சிதைவு உள்ளவர்களின் மூளைகளில் சில கட்டமைப்பு மாற்றங்கள் காணப்படுகின்றன.

மனச்சிதைவு என்னும் Schizophrenia ஒரு முக்கியமான மனநோய்.

– ஒருவரின் முழு வாழ்க்கையையும் தடுமாற்றி, திசை மாற்றிவிடும்.

– எண்ணம், செயல் இரண்டையும் சிதைக்கும் தன்மையால் இதையே ‘பைத்தியம்’ என்பர்.

– நோயின் ஆரம்பத்திலேயே சிகிச்சையளித்தால்     நலமடையும் வாய்ப்புகள் அதிகம்.

– சிலர் முற்றும் குணமடைவர். ஒரு சிலர் வாழ்நாள் முழுதும் அவதிப்படுவர்.

மனச்சிதைவு நோயின் அறிகுறிகள் :

– இல்லாததை இருப்பதாக நம்புவது. இல்லாத உருவங்களை பார்ப்பதாக சொல்வர். இல்லாத குரல்களை கேட்பதாக கற்பனை செய்து பயம்   கொள்வர்.

– பேச்சில் தெளிவும் கோர்வையும் இல்லாதிருக்கும்.

– வித்தியாசமான விபரீதமான செயல்களை செய்வர்.

– சமூகத்திலிருந்து ஒதுங்குதல்.

– கவனக்குறைவு, செயலில் நோக்கமின்மை.

– உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலாமை.

சமூகப் பின்னடைவு செயல்பாடுகள்:-

– இயல்பாக பேசிப்பழகிக் கொண்டிருந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி, தனிமையாகி    விடுவார்.

– தன்மேலுள்ள ஆர்வம் குறைந்து குளிப்பது, உண்பது போன்றவற்றிலும் அக்கறையில்லாமல் எல்லா செயல்களிலும் ஆர்வமின்றி இருப்பர்.

மனச்சிதைவு நோய் என்று ஒருவரைச் சொல்வதற்கு மேற்கொண்ட அறிகுறிகள் சுமார் ஒரு மாதம் முதல் ஆறு மாதமாவது தொடர்ந்து தென்பட வேண்டும்.

சில செயல்பாடுகள்:

a) நியாயமான சாத்தியங்கள் எதுவும் இல்லாமலே ஒரு விஷயத்தை உண்மை என்று நம்புவார்.

– தனக்கு எதிராக சதி செய்வதாக சொல்வார் (அப்படி  எதுவும் இல்லாமல்)

– உடனிருப்பவர்கள் உணவில் விஷம் வைத்திருப்பதாக சந்தேகிப்பார்.

– காரணமில்லாமல் மனைவியை, கணவனை நடத்தையில் சந்தேகிப்பார்.

– இத்தனையும் உண்மையல்ல என்று நிரூபித்தாலும் அவர் ஏற்கமாட்டார். மாற்றிக் கொள்ள மாட்டார்.

b) ஐம்புலன்களிலும் இல்லாதவற்றை உணர்தல் :

– யாரும் இல்லாத இடத்திலும் அவசியம் யாரோ பேசுவதைப் போல இருக்கும். அந்த குரல்களின் கட்டளைக்கேற்ப  செயல்படுவார்.

– சிலர் காதில் கேட்கும் குரலுக்கேற்ப சத்தமாக பதில் கூறுவர்.

– அப்படி முணுமுணுப்பதை பார்த்தால் தாமாக பேசுவதாக வெளியில் தெரியும்.

– சிலருக்கு கண்களில் வித்தியாசமான காட்சிகள் தெரியும்.

c) சிலரின் வித்தியாசமான செயல்கள்

– குப்பையைப் பொறுக்கி வீட்டில் பத்திரப் படுத்துவார்.

– சிலர் தலையணை இல்லாமலேயே தலையை உயர்த்தி வைப்பர்.

d) சிலருக்கு மகிழ்ச்சி, துக்கம் எதுவுமே முகத்தில் வெளிப்படாது.

மனச்சிதைவில் சில வகைகள் :

a) எதையும் சந்தேகத்துடன் பார்ப்பது

b) பேச்சு, செயல் எல்லாம் மாறுபட்டதால் அவர்களுடைய பேச்சை புரிந்து கொள்ள முடியாது.

c) சிலர் வெறிப்பிடித்ததைப் போல கோபப்படுவர்.

d) தவறான நம்பிக்கைகளில் சில :

– என் மனைவி கள்ளக் காதலில் ஈடுபடுகிறாள் என அதற்கு சில சம்பவங்களை கோர்த்து சொல்வர்.

– முதல் அமைச்சர் , ஜனாதிபதி தன்னிடம் நேரில்      பேசியதாக சொல்வார். (அப்படி இல்லாமலேயே)

– என்மேல் அவர்களுக்கு பொறாமை என உறவினர்களைப் பற்றி தொடர்ந்து சொல்வர்.

மனச்சிதைவு நோய்களுக்கு வருட கணக்கில் மருந்துகள் தேவைப்பட்டால் மின் அதிர்வு சிகிச்சை போன்ற சிகிச்சைகள் தேவை.

மது, கஞ்சா, போதைப் பொருட்கள், போதை மாத்திரைகள், பான்பராக் போன்றவற்றை உபயோகித்து மனப்பாதிப்படைவோர். ஒருவகை மனநோயினர்.

சிலருக்கு மிகையான மகிழ்ச்சி/  சம்பந்தமில்லாத மகிழ்ச்சி

அல்லது கடுமையான மனச்சோர்வு

அல்லது சோர்வும் மகிழ்ச்சியும் மாறிமாறி வருதல்

போன்ற மனநிலை நோய்கள் இருக்கும்