அதிக எடை உள்ளவர்கள் தற்போதுள்ள உணவு முறைகளை மாற்றி ஆக வேண்டும்

 • மொத்தமாக உணவின் அளவைக் குறைத்தல்.
 • ஒவ்வொருவரும் உணவு சாப்பிடும் அளவை ஒரு டைரியில் ஒவ்வொரு நாளும் எழுதி அதன் மொத்த அளவை அறிய வேண்டும்.
 • சரியான அளவில் உணவை சாப்பிட வேண்டும்.
 • அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிடக்      கூடாது.
 • அடிக்கடி உணவை உண்ணக் கூடாது.
 • உடற்பயிற்சி, யோகா போன்றவைகளை தினமும் செய்தல் நல்ல பலனளிக்கும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்

 • அதிக அளவில் காய்கறி, கீரைகளை சேர்த்தல்.
 • குறைந்த அளவில் பாலை சேர்த்தல் (கொழுப்பு நீக்கிய பாலே நல்லது)
 • காய்கறி, சூப், பழங்கள், எலுமிச்சை, வெள்ளரி போன்றவைகளை இடைவேளை உணவாகக் கொள்ளுதல்
 • நாளொன்றுக்கு இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் மட்டும் (தாளிப்பதற்கு).
 • நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள், பச்சை பயறு, கொத்துக்கடலை ஆகியவற்றை அதிகமாக சேர்க்க வேண்டும். சோயா, காளான் போன்ற உணவுகளும் நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுகள் :

 • எண்ணெயில் பொறித்த அனைத்து உணவு களையும் (சிப்ஸ், அப்பளம், வடை, போண்டா, பூரி , பஜ்ஜி) தவிர்க்க வேண்டியவை.
 • முட்டை (மஞ்சள் கரு) மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி.
 • தேங்காய், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு
 • நெய், வெண்ணெய்.
 • பால்கட்டி, பாலேடு, சாக்லேட், ஐஸ்கீரிம், பேக்கரி  உணவுகள்.
 • மதுபானங்கள், கிரீம், சூப்
 • இனிப்பு பண்டங்கள் போன்றவை.