1.                            தொலைபேசியில் எதிர்முனையில்                               இருப்போரின்          பேச்சைக் கேட்க                               சிரமப்படுகிறீர்களா?

2. ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு                         மேற்பட்டவர்கள் பேசும்போது அந்த                                 உரையாடலை புரிவதில் பண்ணுவதில் சிரமம்                 இருக்கிறதா?

3. டி.வி – யில் ஒலி அளவை அதிகம் வைத்துக்     கேட்கிறீர்கள் என்று யாராவது புகார்                              சொல்கிறார்களா?

4.            அடுத்தவர்களுடனான உரையாடல்களைச்          சிரமப்பட்டுத்தான் புரிந்து கொள்கிறீர்களா?

5.            டெலிபோன் அல்லது காலிங்பெல் சத்தம்                               உங்களுக்குக் கேட்பதில்லையா?

6. சத்தமான இடங்களில் உரையாடல்களைக்                     கேட்பதில் கஷ்டம் இருக்கிறதா?

7.            சத்தம் எங்கிருந்து வருகிறது என்று குழப்பம்      அடைகிறீர்களா?

8. சில வார்த்தைகள் புரியாமல் அதைத் திரும்ப                 இன்னொரு தடவை சொல்லும்படி                 கேட்கிறீர்களா?

9.            குழந்தைகளின் பேச்சுக்கும் பெண்களின்                                 பேச்சுக்கும் வித்தியாசம் காண கஷ்டப்                            படுகிறீர்களா?

10.சத்தம் மிகுந்த இடத்தில் வேலை                                                 செய்கிறீர்களா?

11.          உங்களிடம் பேசுபவர்கள் தெளிவில்லாமல்        முணுமுணுப்பதாக தோன்றுகிறதா?

12.          பேசுவதைத் தப்பாக புரிந்து கொள்வதாக                 அடுத்தவர்கள் உங்கள் மீது எரிச்சலடை                              கிறார்களா?

13.          அடுத்தவர்களின் உரையாடலுக்குத் தப்பாக         செயல் பண்ணுவதாக உணர்கிறீர்களா?

14. காது சரியாக கேட்காததால், சரியாக புரிந்து கொள்ள முடிவதில்லை என்று பொது நிகழ்ச்சி        களில் கலந்து கொள்வதைத்  தவிர்க்கிறீர்களா?

15. இவருக்குக் காது சரியாக கேட்பதில்லை என்று        உடன் இருப்பவர்கள் நினைக்கிறார்களா?

பதினைந்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி ஆயிற்றா? உங்களது மதிப்பெண் 0 விலிருந்து 5 ஆக இருக்கும் பட்சத்தில் உங்களது கேட்கும் திறன் அபாரமாக இருக்கிறது. காது பற்றிய கவலையையே விட்டுவிடலாம்

6-லிருந்து 9-ஆக இருந்தால் காது, மூக்கு, தொண்டை நிபுணரை நீங்கள் பார்ப்பது நல்லது.

10க்கும் மேல் இருந்தால் காது பாதிப்பு உறுதி எனலாம்.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click