பிரெஞ்சு மருத்துவர் ஆல்பர்ட் ஸ்வைட்சரின் கருத்தின்படி ==உங்கள் விதி எப்படியிருக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் அறிந்தது என்னவென்றால் உங்களில் யாரெல்லாம் மற்றவரை தேடிப்போய் சேவை புரிகின்றீர்களோ அவர்களே மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்++.

வெறுமனே நன்றியுணர்வு கொண்டால் மட்டுமே நாம் பெற்றதை திருப்பிக் கொடுத்தல் போலாகாது. பொருளால் (சேவை செய்தே) மட்டுமே நன்றிக் கடன் செலுத்த முடியும்.

தன்னார்வத்துடன் சேவை புரிய முனைவதால் மற்றவர்க்கு உதவ உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைப்பது மட்டுமன்றி, உங்களுக்கு உதவியோருக்கு நன்றிக் கடன் செலுத்தவும் முடியும்.

நட்பை வளர்த்துக் கொள்வது என்பது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சந்தோஷத்தையும் காண்பதற்கான நிச்சயமான வழி., பெரிய நண்பர் வட்டம் மற்றும் குடும்பம் உள்ளோர் அதிகம் சிரிக்கின்றனர். குறைவாக கவலைப்படுகின்றனர்.

மேலும் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு தத்துவ ஞானி பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதியது. உலகில் நட்பை விட விலை மதிப்புள்ளது வேறு எதுவும் இல்லை. தங்கள் வாழ்க்கையிலிருந்து நட்பை ஒழித்து விட்டவர்கள் பூமியிலிருந்து ஆதவனைப் பிரித்து விட்டது போலாகும். ஏனென்றால், இயற்கை தந்த பரிசுகளில் இதுவே மிக அழகானதும் மகிழ்ச்சி தருவதும் ஆகும்.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click