1. காலையில் எழுந்தவுடன், மலம் கழித்தவுடன், சாப்பிடுமுன், கையை நன்றாக சோப்பால் கழுவ வேண்டும்.

2. கோடையிலும் கடுமையான உழைப்பின் பிறகும் வியர்த்த  பின்னரும் குளிப்பது நல்லது. அடிக்கடி குளித்தால் தோலில் கிருமிகள், பொடுகு, முகப்பரு, அரிப்பு, தடிப்பு போன்றவை உண்டாகாது.

3. காலில் செருப்பு அணியாமல் செல்லும்போது கொக்கிபுழு தோலில் புகுந்து, பிறகு குடலை அடைந்து இரத்த சோகையை உண்டாக்கிவிடும், ஆகையால் செருப்பு அணிதல் அவசியம்.

4. ஒவ்வொருமுறை சாப்பிட்ட பின்னரும் பல் துலக்கினால் வாய் சுத்தமாகும்,

5. நாய், பன்றி, கோழி போன்றமிருகங்களை வீட்டிற்குள் விடக்கூடாது.

6. குழந்தைகள் மலம் கழித்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்துதல் மிக அவசியம்.

7. துவைத்த துணிகளை வெயிலில் நன்கு காய வைத்தால் பல கிருமிகள் அழியும்.

8. தலையில் பேன் மற்றும் உண்ணி கிருமிகள் உள்ளவர்கள் (குடும்பத்தினர் அனைவரும்) ஒரே சமயத்தில் மருந்தை போட்டு சரி செய்துவிட வேண்டும்.

9. தரையில் எச்சில் துப்பக்கூடாது.

10. தும்மும்போதும், இருமும் போதும் வாயைத் துணி வைத்து மூடிக் கொள்ளவேண்டும்.

11. வீட்டின் தரை, சுவர், சாமான்களின் கீழ்பகுதி போன்ற அனைத்தையும் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click