பிறந்த குழந்தை ஒரு மாதம் வரை தினமும் 18 மணி நேரம் தூங்குகிறது. 12 வயது வரை 10 மணி நேரமும், 25 வயது வரை 8 மணி நேர தூக்கமும், அதன்பின் 6 அல்லது 7 மணி நேர தூக்கமும் போதுமானது.

* மிக அதிகமான வேலைப்பளு உள்ள மிக முக்கியமான நாட்களில் கூட குறைந்தது இரண்டு மணி நேரமாவது படுத்து உறங்க வேண்டும். முழு இரவும் பகலுமாக தொடர்ந்து விழிந்திருந்தால், அப்படி ஒரு நாள் விழித்திருந்தால் கூட அதன் பாதிப்பு உடலில் ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும்.

மனிதன் தூக்கத்தில் மூன்றுவித ஓய்வைப் பெறுகிறான்.

–  உடல் சார்ந்த ஓய்வு

– கண், கண் சம்பந்தப்பட்ட நரம்புகளின் ஓய்வு

– மூளையும் , மூளை சார்ந்த நரம்புகளின் ஓய்வு

*  நமது கால்கள் இதயத்தை விட்டு சற்று தூரத்தில் இருக்கின்றன. மேலும் புவியீர்ப்பு விசைக்கு எதிராக கால்களில் இருந்து இரத்தம்மேல்நோக்கிப் பாய வேண்டியிருக்கிறது. இதில் இதயத்திற்கு சற்று சிரமம் ஏற்படுகிறது. இதனால் மாலை வருவதற்குள் ஒரு சோர்வும் வருகிறது.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click