மனம், எண்ணங்கள், ஹார்மோன்கள், நரம்புகளின்/இரத்த நாளங்களின் செயல்பாடுகள், உறுப்புகளின் இயக்கம், ஆரோக்கியம்? உடல்/மனம் நலம்.
இதுதான் நம் உடல்நலத்தின் அடிப்படை. மனத்தின் எண்ணங்களுக்கேற்ப நாளமில்லா சுரப்புகளில் மாற்றங்களும் சுரப்பிகளும் நடக்கின்றன. அதன் ஹார்மோன்களின் செயல்பாட்டிற்கேற்ப நரம்புகளும் இரத்த நாளங்களும் செயல்படுகின்றன. அதற்கேற்ப உடலுறுப்புகள் இயங்குகின்றன. அதன் முடிவே உடல் மற்றும் மனத்தின் நலம். இதுதான் உடல் நலத்தின் அடிப்படை. மற்ற காரணிகளின் பங்கு மிகக் குறைவுதான்.
நாளமில்லா சுரப்பிகளான தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரீனல், கணையம், சினைப்பை, விதைப்பை போன்ற எல்லாவற்றையும் இயக்கவல்ல ஒரு சாதனம் யோகா / தியானம். அப்பயிற்சிகளைச் செய்யும்போது மூளையின் சக்தி பன்மடங்காகிறது. சிந்தனைகள் தெளிவாகின்றன. செயல்கள் நம் கட்டுப்பாட்டிற்குள் அமைகின்றன. தீய எண்ணங்கள் விலகுகின்றன. சவால்கள் எளிதில் சமாளிக்கப்படுகின்றன. மனப்பதட்டம் மற்றும் மனச்சோர்வு நீங்குகின்றன.
நாள்தோறும் 30 நிமிடங்களாவது யோகா தியானம் செய்தால் சிந்தனை, செயல்கள், பழக்கங்கள், பண்புகள் என எல்லாமே உயர்வடைகின்றன. நாகரீக வாழ்க்கையின் தீமைகளைக் களைய, இன்று உலகில் பெருகி வருகின்ற வன்முறைகள் நீங்கி அமைதியான உலகம் உண்டாக ஒரே வழி ஆன்மீக நெறிமுறைகள் தான். அப்பயிற்சிகளை மானிட உலகம் முழுதும் மேற்கொள்ளும் நாளே உலக அமைதி நாள்.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click