January, 2016

வருங்காலத் தலைவர்களே!

சிலர் வாழ்நாள் முழுவதும் ஏன் அவதிப் படுகிறார்கள்? ஒரு சிலர் மட்டும் உயர்ந்த நிலையை அடைகிறார்கள்?

வெற்றி பெறுபவர்கள் பெரிய பெரிய வேலைகளைச் செய்வதாக நினைக்க வேண்டாம். அவர்கள் சாதாரண வேலைகளைக் கூட மிகச் சிறந்த முறையில் செய்கின்றனர். அதனால் உயர்வடைகின்றனர்.

ஏன் வேலை செய்ய வேண்டும்?

நமது கடமைகளை (பிடிக்கிறதோ இல்லையோ) அவசியமாக செய்ய வேண்டும். அதை விரும்பி செய்ய கற்றுக் கொண்டால் பெரிய சிரமமான காரியம்கூட எளிமையாகி விடும்.

Read More »

சைவமா? அசைவமா?

அசைவ உணவு உண்பவர்களைக் காட்டிலும் சைவ உணவு உண்பவர்களின் இரத்த அழுத்தம் சராசரியாக குறைவாகவே இருக்கும். இரத்த அழுத்தம் உள்ளவர் சைவ உணவுக்கு மாறினால் அழுத்தம் குறையும், பழங்கள், காய்கறிகளிலிருந்து பெறப்படும் பொட்டாசியம் இரத்த  அழுத்தத்தைக் குறைக்கும்.

சைவ உணவுகளில் பெருமளவு இழைச் சத்துகள் அடங்கிருக்கும். இழைச் சத்துக்கள் (Fibres) அதிக அளவில்  கொண்ட உணவுகள் மெதுவாக செரிமானமடைந்து உட்கிரகிக்கப்படும் எனவே உடல் எடைக்குறைப்பிற்கு இவ்வுணர்வுகள் பெரிதும் பயன்படும்.

பருப்பு வகைகளில் ‘கரையும் இழை’ (Solube  fibre) என்னும் இழைச்சத்துக்கள் அதிகம் காணப்படும். அவை இரத்தக் கொழுப்பின் (Blood cholestrol) அளவைக் குறைக்கப் பயன்படும்.

சைவ உணவு உண்பவர்களுக்கு சில வகைப் புற்றநோய்கள் ஏற்படும் வாய்ப்புக் குறைவு.

சைவ உணவுகளை மட்டும் உண்பதால் புதிய அணுக்களின் (cells) உருவாக்கத்திற்குத் தேவையான புரதம் நிறைவு செய்யப்படாமல் போகலாம். புரதக் குறைபாட்டை ஈடுசெய்ய பால், பாலாடைக் கட்டி தயிர் மற்றும் பாலகப் பொருட்களை சேர்க்கலாம்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements