December, 2015

இனிமையான வாழ்க்கைமுறை மாற்றம்

Dr. இராமநாதன்  M.D.,

சர்க்கரை நோய் என்றால் இரத்தத்தில் அதிகபடியான குளுக்கோஸ் உள்ளது என்பது தான். அதனால் குளுக்கோஸை அதிகமாக்குகின்ற உணவுகளை இயன்றவரை குறைத்து நார்சத்து. வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்ப்பதே சரியான உணவுமுறையாகும். இதன் மூலமே பெரும்பாலும் சர்க்கரை நோயை (வகை 2) கட்டுப்படுத்த முடியும்.

படுக்கை காபி சரியா?

நமக்கு காலையில் எழுந்ததும் காபி, டீ, பால் போன்ற பானங்கள் அருந்தும் பழக்கம் உள்ளது. பால் சேர்க்கா விட்டால் அதன் மூலம் உடலுக்குள் சேருகின்ற குளுக்கோஸ் அளவு குறைகிறது.

கட்டாயமாக பால் குடிக்க விரும்புவோர் சர்க்கரை இல்லாமல் குடித்தால் ஓரளவு நல்லது, இனிப்பு விரும்பிகளால் சர்க்கரை இல்லாமல் குடிக்க முடியாது.

Read More »

சுயமதிப்பை உயர்த்துவது எப்படி?

சுயமதிப்பையும் தன்னம்பிக்கையையும் சற்றும் குறைய விடாமல் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள நாள்தோறும் எல்லா நேரங்களிலும் மனதில் வளர்க்க வேண்டிய சிந்தனைகள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையிலும் நான் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.
நான் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதரிடத்திலும் பயனுள்ள விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.
என்னுடைய அன்பை, நம்பிக்கையை திறமையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் சந்திப்பவர்களை ஊக்குவிக்கிறேன்.
நான் மற்றவர்களை புரிந்துகொண்டு மென்மையாக நடத்துகிறேன்.
நான் ஒவ்வொரு நாளும் அதிக உற்சாகமாகவும் பிரபலமாகவும் உருவாகி வருகிறேன்.
என்னுடைய அன்பால் பிறரை ஈர்க்கிறேன்.
நான் மிகவும் சக்திவாய்ந்த எண்ணங்களால் சூழப்பட்டிருக்கிறேன்.
நான் இயன்றவரை பிறரை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றேன்.
வெற்றி என்பது விடாமுயற்சியுடன் சவால்களை அடைவதுதான் என்பதை உணர்கிறேன்.
என் மன உணர்வுகளை என் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளேன்.செயல்பாடுகளின்போதும் தடைகள் வந்தாலும் அவைகளில் மூலமும் சிலவழி முறைகளைக் கற்றுக் கொள்கிறேன்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements