November, 2015

முழு உடற் பரிசோதனை!

இந்த நோய்க்கு இந்தந்த நோய் அறிகுறிகள் தான் தென்படும் என்பது இயற்கையான ஒன்று. ஆனாலும் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் சில நோய்கள் தீவிரமாக வருவதும் உண்டு.
உதாரணமாக ஒருவருக்கு சர்க்கரை நோயின் அறிகுறிகளான அடிக்கடி சிறுநீர் போதல், அடிக்கடி தண்ணீர் தாகம், உடலில் சோர்வு, மெலிவாகுதல், புண் ஆறாமல் இருப்பது போன்ற எந்த அறிகுறிகளையும் வெளிக் காட்டாமல் அவர் பார்ப்பதற்கு நலமாக இருப்பதைப்போல் தோன்றுவார்.
திடீரென ஒருநாள் அவர் மயக்கமடைந்து விழுந்துவிடுவார். அப்போது அவரின் சிறுநீரையும், இரத்தத்தையும் சோதனை செய்தால், அதில் அதிக அளவிலான சர்க்கரை இருப்பது தெரியவரும், அப்போதுதான் அவர் நீரிழிவு நோயாளி என்று அறியப்படுவார்.
அவர் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்த பரிசோதனைகளைச் செய்திருந்தால் அவர் முன்பே அதைத் தெரிந்துகொண்டு அதற்கான மருந்து மாத்திரைகளையும் முறையான உணவையும் கடைபிடித்திருந்தால் நோயின் வீரியத்தைக் குறைத்திருக்கலாம்.
எனவே உடற்பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.

Read More »

அதிக இரத்த அழுத்தம்

உணவு, மனநிலை, மருந்துகளின் தன்மை போன்றவற்றிற்கேற்ப ரத்த அழுத்தத்தின் தன்மை மாறுபடும்.
முதுமைக் காலத்தில் ரத்த அழுத்தத்தை ஒவ்வொரு முறையும் மூன்று விதங்களில் பரிசோதனை செய்வது அவசியம்.
முதலில் படுக்க வைத்து, அடுத்து உட்கார வைத்தும், அதன்பிறகு நிற்க வைத்தும் ரத்த அழுத்தப்பரிசோதனை செய்வது முக்கியம். ஏனெனில் சிலருக்கு படுத்த நிலையைவிட உட்கார்ந்த மற்றும் நிற்கும் நிலைகளில் ரத்த அழுத்தம் திடீரென குறைய வாய்ப்பு உண்டு.
மருந்தில்லாமல் இரத்த கொதிப்பு குறையுமா?
• உடல் எடையைக் குறைத்தல்
• புகைப்பிடிப்பதை நிறுத்துதல்
• தினமும் உடற்பயிற்சி செய்தல்
• தியானம் செய்தல்
• மன அழுத்தத்தைத் தவிர்த்தல்
போன்றவற்றால் லேசான இரத்தக் கொதிப்பை மருந்தில்லாமல் குறைக்க முடியும்.
இரத்தக்தொதிப்பிற்கு தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தபிறகும் மருந்துகளை மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
ரத்தஅழுத்தம் அதிகரிப்பதாக அல்லது குறைவதாக இருந்தால் மருந்தின் அளவை மாற்ற வேண்டும்.
முதுமை அடையும்போது இந்த ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியத் தொடங்குகிறது. இதனால் ரத்தக் குழாய்களின் தடிமன் குறைந்து ரத்தம் எளிதாக செல்லமுடியாத நிலை ஏற்படும்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements