October, 2015

புற்றுநோய் வகைகள்

மார்பகப் புற்றுநோய் யாருக்கு அதிக வாய்ப்புகள்?

  • குடும்பத்தில் மார்பக புற்று ஏற்பட்டிருந்தால்
  • முன்னரே மார்பக கட்டி ஏற்பட்டிருந்தால்
  • குழந்தை பெறாதிருந்தால்
  • பாலூட்டாதிருந்தால்
  • 30 வயதுக்குமேல் முதல் குழந்தை பெற்றால்
  • புகைபிடித்தால்
  • மாதவிடாய் நின்ற பிறகு மார்பில் கட்டி வந்தால் இவர்களுக்கு புற்றுநோய் வாய்ப்புகள் அதிகம்

அறிகுறிகள்

  • பெண்கள் தங்களுடைய மார்பகத்தை தாங்களே கண்ணாடி முன் நின்று பார்த்தால், அதில்
  • வழக்கத்திற்கு மாறான வீக்கம் இருந்தால்
  • கட்டியானது வலி எடுத்தால்
  • மார்பு காம்பில் திரவ கசிவு இருந்தால்
  • மார்பகத் தோல் ஆரஞ்சு தோல் போல் குழி விழுந்து காணப்பட்டால்
  • மார்பகம் கனமாக இருந்தால்
  • மார்பக கட்டியுடன் அக்குளில் நெறிகட்டு இருந்தால்  அது மார்பக புற்று நோய் எனலாம்.

Read More »

புற்றுநோய்

முதியவர்களின் இறப்புக்கு முதல் ஐந்து காரணங்களில் ஒன்றாக புற்றுநோயும் இருக்கிறது. முதுமையில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.

புற்றுநோய்க்கான காரணங்கள்

  • சிதைவடைந்த செல்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள முடியாத நிலை
  • ஜீன்கள் செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடு,
  • நோய் வராமல் தடுக்கும் ஜீன்கள் செயல் இழந்து போதல்
  • புகைப்பழக்கம், மதுப்பழக்கம், வெற்றிலை பாக்கு பழக்கம்.
  • பாரம்பரியம் போன்ற காரணங்களால் புற்றுநோய் ஏற்படும்.

தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் தோன்றும் புற்றுநோய், நுரையீரல் புற்று, பெண்களின் பிறப்பு உறுப்புப் பகுதிகளில் வரும் புற்றுநோய், ஜீரண மண்டலத்தில் உணவுக் குழாய் பாதையில் தோன்றும் புற்றுநோய், கணையம் மற்றும் ஆண்களின் புராஸ்டேட் சுரப்பியில் வரும் புற்று போன்றவை முதியோர்களுக்குத்தான் அதிகம்.

பெரும்பாலான புற்றுநோய்களுக்கு சிகிச்சை உண்டு. புற்றுநோய் வந்துவிட்டாலே மரணம்தான் என்ற மனநிலை தவறு.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements