அதிகாலை எழுந்தவுடன் தொடங்குகின்ற முதல் ஒரு மணி நேரம்தான் அந்த நாளின் மற்ற 23 மணி நேரங்களையும் நிர்ணயிக்கும். நன்றாக தொடங்கப்பட்ட நாளானது புத்துணர்வையும் செயலூக்கத்தையும் கொடுக்கும்.

அந்த ஒரு மணி நேரத்தில் ஊக்கமளிக்கும் நூல்களைப் படித்தும், உற்சாக ஒலி நாடாக்களைக் கேட்டும், உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை செய்தும் செயல்களைத் தொடங்கினால் ஆன்மா ஆற்றல் மிக்க சக்தியைப் பெறும்.

நேர நிர்வாகம் என்பது வாழ்க்கை நிர்வாகம். ஆகவே அதை சரியாக கண்காணித்தல் அவசியம். மிக அற்பமான செயல்களில் நேரத்தை வீணாக்கினால் மிக அத்தியாவசியமான செயல்களுக்கு நேரம் கிடைக்காது.

“இன்று உயர்ந்த நாளாக அமைவதற்கு நேரத்தைப் பயன்படுத்துவது எப்படி?” என்று திட்டமிடுதல் வெற்றிகளைக் குவிக்கும்.

தொலைபேசியில் எப்போதும் உற்சாக மாகப் பேசினால் அழைப்பவர் உங்களுடைய குரலுக்காக எப்போது வேண்டுமானாலும் காத்திருப்பார். தொலைபேசியில் பேசும் போது நல்ல பண்புகள் தெரியும். எழுந்துநின்று பேசினால் உங்களுடைய பண்பு உயர்ந்துவிடும்.

மகிழ்ச்சி எப்படி?

“நாம் மகிழ்ச்சியாய் இருப்பதனால் சிரிப்பதில்லை. சிரிப்பதனால் மகிழ்ச்சியாய் இருக்கின்றோம்” என்றார் வில்லியம் ஜேம்ஸ்.

ஆழமாக, முடிந்தால் சப்தமாக ஆஹ…ஹா… ஹா… என்று சிரிக்கலாம். சிரிப்பதால் உடலும் மனமும் மென்மையாகிவிடும்.

சிரிக்க சிரிக்க முகப்பொலிவு கூடிக் கொண்டே வரும். குழந்தையாக இருக்கும்போது பெரும்பாலான நேரங்களில் சிரித்துக் கொண்டே இருப்போம். வயதாக வயதாக சிரிப்பதற்கே மறந்துவிடுவோம். இன்று சிரிக்கவில்லையேல், இன்று வாழவில்லை என்று பொருள்.

சுய வசியம் : ஒரு கட்டிடத்தை கட்டும் முன்னர் காகிதத்தில் வரைபடம் போடுவார்கள். அதேபோல ஒவ்வொரு நாளும் அதி காலையிலேயே அன்றைய தினத்தைப் பற்றிய திட்டங்களை மனதில் வரைபடம் போடவேண்டும். அற்புதங்களை நிகழ்த்துவதாக மனதில் காட்சி காணுதலைச் செய்தால் ஆழ்மனம் அதற்கேற்ப செயல்பட்டு குறிக்கோளை நிறைவேற்றிவிடும்.

நமது செயல்பாடுகளில் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் செய்தால் உயர்வு. ஆனால் செயலிலேயே அடிமையாகி விட்டால் துன்பத்தையும் சிரமத்தையும் சந்திக்க நேரிடும்.

மகிழ்ச்சியாக இருப்பவர்கள், உலக விஷயங்களில் மாட்டிக் கொள்ளாமல் ஆக்கப் பூர்வமாக வாழ்கின்றனர்.

மனிதர்கள் நம்பகத்தன்மை உடையவர் களையே தேடுகிறார்கள்.

மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமா வதற்கு நேர்மையானவராக வாழ்ந்தால் போதும். உலகமே போற்றிப் புகழ காத்திருக்கும்.

மனித மனம் ஒரு பூத்தொட்டி. அதை நல்ல எண்ணங்களால் விதைத்து பாதுகாத்தால் அழகாக பூத்துக் குலுங்கும்.

பிற மனிதர்களின் எதிர்மறை விமர்சனங்கள், வன்முறை திரைப்படக் காட்சிகள், குப்பைச் செய்திகள் போன்றவற்றை உள்ளே போட்டால் குப்பைத் தொட்டியாகி விடும். குப்பையான விஷயங்களை தாட்சண்யம் பாராமல் விலக்கவும்.

தலையாட்டி பொம்மை :

“இல்லை என்று சொல்ல நினைத்தபோது மற்றவர்களின் திருப்திக்காக ஆம் என்று தலையாட்டாதே” என்றொரு ஆங்கில வாசகம் உண்டு. மற்றவர்களுக்காக, மற்றவர்களின் திருப்திக்காக வற்புறுத்தலுக்காக ஆம் என்று ஒப்புக் கொண்டால் உடன்பாடில்லாத சுமைகளை சுமக்க  நேரிடும்.

இளமை என்பது இளம் பருவத்தில் மட்டுமல்ல. அது ஒரு மனநிலை. மனதில் தளர்வான சோர்வான எண்ணங்கள், சந்தேகம், பயம் போன்றவை நிறைந்துவிட்டால் மூப்பு இள வயதிலேயே வந்துவிடும்.

குறிக்கோளை உயர்த்தி, ஆர்வத்தைப் பெருக்கி, நம்பிக்கையோடு செயலாற்றினால் இளமை எப்போதும் தொடரும்.

பக்கத்து வீட்டுக்காரர்களைத் தெரிந்து கொண்டு அவர்களோடு தொடர்பை வளர்த்தால் வாழ்க்கை வசந்தமாகும். எதிர்பார்க்காதபோதும் உதவிகள் கிடைக்கும்.

நாம் சந்திக்கும் மனிதர்களில் ஒரு மாதத்திற்கு ஒரு நல்லவரை தேர்வு செய்யலாம். அவர்களோடு உறவை வளர்ப்பதற்கு திட்டமிடலாம்.

பிறந்த நாள், மணநாளின் போது வாழ்த்துதல், அவர்களின் திறமைகளைப் பாராட்டுதல், வாய்ப்புக் கிட்டினால் அவர்களுக்கு விருந்தளித்தல் போன்றவை சிறந்த உறவுகளை வளர்த்து வாழ்க்கையை இனிமையாக்கும்.

சிலவற்றை அதிகமாகச் செய்யலாம்.

அதிகமாகப் படிக்கலாம்.

அதிகமாக கற்றுக் கொள்ளலாம்.

அதிகமாகச் சிரிக்கலாம்.

அதிகமாக நேசிக்கலாம்.

நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோம் என்றஉணர்வு இருந்தால் மகிழ்ச்சி தானாக வந்துவிடும். சக்தி பெருகும். வீண் பேச்சு, தொலைக்காட்சியில் நீண்டநேரம் அமர்தல், தொலைபேசியில் அரட்டை இவையெல்லாம் வளர்ச்சிக்குத் தடைகளாகும்.

‘நான்’ ‘எனக்கு’ என்ற வார்த்தைகள் மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிக்கும். இவ்விரண்டு வார்த்தைகளையும் இயன்றவரை பேசாமல் மற்றவர்களின் மீது கவனம் செலுத்துதல், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டல் போன்றவற்றைச் செய்தால் நட்புறவுகள் வளரும். அகந்தை அழியும்.

மற்றவர்களுடன் பழகும்போது குறைவாக பேசவும், அதிகமாக கேட்கவும். இதன் மூலம் மற்றவர்களுக்கு பிடித்தமானவர் ஆகிறோம். அத்துடன் நாம் பிறரிடம் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.

“என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், தொடக்கத்தில் அதற்குரிய ஆற்றல் இல்லாவிட்டாலும் நான் நிச்சயமாக தேவையான ஆற்றலை முயற்சித்து பெற்று விடுவேன்” என்றார் மகாத்மா காந்தி.ந்த ஒரு மணி நேரத்தில் ஊக்கமளிக்கும் நூல்களைப் படித்தும், உற்சாக ஒலி நாடாக்களைக் கேட்டும், உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை செய்தும் செயல்களைத் தொடங்கினால் ஆன்மா ஆற்றல் மிக்க சக்தியைப் பெறும்.

நேர நிர்வாகம் என்பது வாழ்க்கை நிர்வாகம். ஆகவே அதை சரியாக கண்காணித்தல் அவசியம். மிக அற்பமான செயல்களில் நேரத்தை வீணாக்கினால் மிக அத்தியாவசியமான செயல்களுக்கு நேரம் கிடைக்காது.

“இன்று உயர்ந்த நாளாக அமைவதற்கு நேரத்தைப் பயன்படுத்துவது எப்படி?” என்று திட்டமிடுதல் வெற்றிகளைக் குவிக்கும்.

தொலைபேசியில் எப்போதும் உற்சாக மாகப் பேசினால் அழைப்பவர் உங்களுடைய குரலுக்காக எப்போது வேண்டுமானாலும் காத்திருப்பார். தொலைபேசியில் பேசும் போது நல்ல பண்புகள் தெரியும். எழுந்துநின்று பேசினால் உங்களுடைய பண்பு உயர்ந்துவிடும்.

மகிழ்ச்சி எப்படி?

“நாம் மகிழ்ச்சியாய் இருப்பதனால் சிரிப்பதில்லை. சிரிப்பதனால் மகிழ்ச்சியாய் இருக்கின்றோம்” என்றார் வில்லியம் ஜேம்ஸ்.

ஆழமாக, முடிந்தால் சப்தமாக ஆஹ…ஹா… ஹா… என்று சிரிக்கலாம். சிரிப்பதால் உடலும் மனமும் மென்மையாகிவிடும்.

சிரிக்க சிரிக்க முகப்பொலிவு கூடிக் கொண்டே வரும். குழந்தையாக இருக்கும்போது பெரும்பாலான நேரங்களில் சிரித்துக் கொண்டே இருப்போம். வயதாக வயதாக சிரிப்பதற்கே மறந்துவிடுவோம். இன்று சிரிக்கவில்லையேல், இன்று வாழவில்லை என்று பொருள்.

சுய வசியம் : ஒரு கட்டிடத்தை கட்டும் முன்னர் காகிதத்தில் வரைபடம் போடுவார்கள். அதேபோல ஒவ்வொரு நாளும் அதி காலையிலேயே அன்றைய தினத்தைப் பற்றிய திட்டங்களை மனதில் வரைபடம் போடவேண்டும். அற்புதங்களை நிகழ்த்துவதாக மனதில் காட்சி காணுதலைச் செய்தால் ஆழ்மனம் அதற்கேற்ப செயல்பட்டு குறிக்கோளை நிறைவேற்றிவிடும்.

நமது செயல்பாடுகளில் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் செய்தால் உயர்வு. ஆனால் செயலிலேயே அடிமையாகி விட்டால் துன்பத்தையும் சிரமத்தையும் சந்திக்க நேரிடும்.

மகிழ்ச்சியாக இருப்பவர்கள், உலக விஷயங்களில் மாட்டிக் கொள்ளாமல் ஆக்கப் பூர்வமாக வாழ்கின்றனர்.

மனிதர்கள் நம்பகத்தன்மை உடையவர் களையே தேடுகிறார்கள்.

மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமா வதற்கு நேர்மையானவராக வாழ்ந்தால் போதும். உலகமே போற்றிப் புகழ காத்திருக்கும்.

மனித மனம் ஒரு பூத்தொட்டி. அதை நல்ல எண்ணங்களால் விதைத்து பாதுகாத்தால் அழகாக பூத்துக் குலுங்கும்.

பிற மனிதர்களின் எதிர்மறை விமர்சனங்கள், வன்முறை திரைப்படக் காட்சிகள், குப்பைச் செய்திகள் போன்றவற்றை உள்ளே போட்டால் குப்பைத் தொட்டியாகி விடும். குப்பையான விஷயங்களை தாட்சண்யம் பாராமல் விலக்கவும்.

தலையாட்டி பொம்மை :

“இல்லை என்று சொல்ல நினைத்தபோது மற்றவர்களின் திருப்திக்காக ஆம் என்று தலையாட்டாதே” என்றொரு ஆங்கில வாசகம் உண்டு. மற்றவர்களுக்காக, மற்றவர்களின் திருப்திக்காக வற்புறுத்தலுக்காக ஆம் என்று ஒப்புக் கொண்டால் உடன்பாடில்லாத சுமைகளை சுமக்க  நேரிடும்.

இளமை என்பது இளம் பருவத்தில் மட்டுமல்ல. அது ஒரு மனநிலை. மனதில் தளர்வான சோர்வான எண்ணங்கள், சந்தேகம், பயம் போன்றவை நிறைந்துவிட்டால் மூப்பு இள வயதிலேயே வந்துவிடும்.

குறிக்கோளை உயர்த்தி, ஆர்வத்தைப் பெருக்கி, நம்பிக்கையோடு செயலாற்றினால் இளமை எப்போதும் தொடரும்.

பக்கத்து வீட்டுக்காரர்களைத் தெரிந்து கொண்டு அவர்களோடு தொடர்பை வளர்த்தால் வாழ்க்கை வசந்தமாகும். எதிர்பார்க்காதபோதும் உதவிகள் கிடைக்கும்.

நாம் சந்திக்கும் மனிதர்களில் ஒரு மாதத்திற்கு ஒரு நல்லவரை தேர்வு செய்யலாம். அவர்களோடு உறவை வளர்ப்பதற்கு திட்டமிடலாம்.

பிறந்த நாள், மணநாளின் போது வாழ்த்துதல், அவர்களின் திறமைகளைப் பாராட்டுதல், வாய்ப்புக் கிட்டினால் அவர்களுக்கு விருந்தளித்தல் போன்றவை சிறந்த உறவுகளை வளர்த்து வாழ்க்கையை இனிமையாக்கும்.

சிலவற்றை அதிகமாகச் செய்யலாம்.

அதிகமாகப் படிக்கலாம்.

அதிகமாக கற்றுக் கொள்ளலாம்.

அதிகமாகச் சிரிக்கலாம்.

அதிகமாக நேசிக்கலாம்.

நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோம் என்றஉணர்வு இருந்தால் மகிழ்ச்சி தானாக வந்துவிடும். சக்தி பெருகும். வீண் பேச்சு, தொலைக்காட்சியில் நீண்டநேரம் அமர்தல், தொலைபேசியில் அரட்டை இவையெல்லாம் வளர்ச்சிக்குத் தடைகளாகும்.

‘நான்’ ‘எனக்கு’ என்ற வார்த்தைகள் மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிக்கும். இவ்விரண்டு வார்த்தைகளையும் இயன்றவரை பேசாமல் மற்றவர்களின் மீது கவனம் செலுத்துதல், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டல் போன்றவற்றைச் செய்தால் நட்புறவுகள் வளரும். அகந்தை அழியும்.

மற்றவர்களுடன் பழகும்போது குறைவாக பேசவும், அதிகமாக கேட்கவும். இதன் மூலம் மற்றவர்களுக்கு பிடித்தமானவர் ஆகிறோம். அத்துடன் நாம் பிறரிடம் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.

“என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், தொடக்கத்தில் அதற்குரிய ஆற்றல் இல்லாவிட்டாலும் நான் நிச்சயமாக தேவையான ஆற்றலை முயற்சித்து பெற்று விடுவேன்” என்றார் மகாத்மா காந்தி.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click