January, 2015

உடலைபாதுகாக்கும்சக்திகள்

 • வைட்டமின் ‘இ’ மிகவும் முக்கியமானது. இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடை செய்யும். வைட்டமின் ‘இ’ கொழுப்பில் கரையும் தன்மையுடையதாக இருப்பதால் இத்தகைய செயலை செய்கிறது. எல்.டி.எல் இரத்தக் கொழுப்பை ஓரிடத்தில் இருந்து எடுத்துச் சென்று வேறோர் இடத்திற்கு மாற்றுவதால், இரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. வைட்டடிமின் ‘சி’ நீரில் கரையும் தன்மை கொண்டது. அது நல்ல ஆன்ட்டி ஆக்சிடென்ட். அது இரத்தத்தின் பிளாஸ்மா திரவத்திலும் காணப்படுகிறது. வைட்டமின் ‘சி’யானது என்டோதீலியத்தின் அமைப்பையும் செயல்களையும் பாதுகாக்கிறது.ற் வைட்டமின் ‘சி’ யின் மற்றொரு பயன் என்னவென்றால், அது வைட்டமின் ‘இ’யையும் மீண்டும் இரத்தத்தில் சேர்க்கும் ஆற்றலுடையது.
 • குளூட்டத்தயோன் மிகவும் சக்திமிக்க ஆன்ட்டிஆக்சிடென்ட். அது ஒவ்வோர் உயிரணுவிலும் உள்ளது. இதய தமனி தொடர்பான நோய் உள்ள நோயாளிகளுக்கு குறைந்த அளவு குளூட்டத்தயோனே உள்ளது. உடல்நலம் நன்றாக உள்ளவர்களின் உயிரணுக்களில் குளூட்டத்தயோனின் அளவு அதிகமாக உள்ளது.
 • குளூட்டத்தயோன் உண்டாக்குவதற்கு உயிரணுவிற்குத் தேவைப்படுகின்ற செலினியம், என் அசிடில்  சிஸ்டெய்ன், வைட்டமின் பி2 மற்றும் நியாசின் போன்றவற்றை உணவில் சேர்த்தால் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அமைப்பு முன்னேறும்.
 • பழங்களிலும் காய்களிலும் ஆயிரக் கணக்கான தாவர நிறமிகள் காணப்படுகின்றன. பழங்கள் மற்றும் காய்களின் நிறங்கள் பலவாறாக  இருப்பதால், அதை சாப்பிடும் போது பலவிதமான தாவர நிறமிகள் கிடைக்கும் அதிக திறனுள்ள இந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள் உடலின் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.
 • திராட்சைச்சாறு நாட்பட்ட நோய்களின் வீரியத்தைக் குறைக்கும். நல்ல தாவர நிறமி ஆன்ட்டிஆக்சிடென்ட்.
 • சுமார் 15 சதம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தோன்றுவதற்குக் காரணம் இரத்தத்தில் அதிக அளவு ஹோமோசிஸ்டின் இருப்பதுதான்.
 • ஹோமோசிஸ்டெய்ன் என்பது நமது உடலில் காணப்படும் மெத்தியோனைன் என்ற அமினோ அமிலம் வளர்சிதை மாற்றம் அடையும்போது தோன்றுகின்ற இடைநிலை துணைப் பொருளாகும். நாம் உயிர்வாழ மெத்தியோனைன் அவசியமான ஒன்றாகும்.
 • சிஸ்டெய்னும் மெத்தியோனைனும் உடலுக்கு எவ்விதத்திலும் இடர்களைத்  தோற்றுவிக்காத பொருட்களாகும். அவற்றின் பணியைச் சிறப்பாகச் செய்ய   ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை தேவைப்படுகின்றன. இந்த ஊட்டச் சத்துக்கள் குறைவைனால் இரத்த ஹோமோசிஸ்டின் அளவு அதிகமாகிவிடும்.
 • அதிகமான அளவு ஹோமோசிஸ்டின் உள்ளவர்களிடம் இதய நோய் தோன்றுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாகும். ஹோமோசிஸ்டினானது இதய நோய் தோன்றுவதற்கான முக்கிய  காரணியாகும்.
 • உயர் இரத்த அழுத்தம், அதிக இரத்தக் கொழுப்பு அளவு அல்லது புகைக்கும் பழக்கம் போன்ற மற்ற ஆபத்தான நோய்கள் உள்ளவர்களிடம் ஹோமோசிஸ்டின் அளவு அதிகமானால் அவர்களுக்கு இரத்தக் குழாய் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
 • கடுமையான மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாரடைப்பு நோயிலிருந்து மீண்டவர்களுக்கும் ஆஸ்பிரின் மாத்திரையைச் சாப்பிட்டால் மீண்டும் மாரடைப்பு ஏற்படுகின்ற வாய்ப்புகள் குறைவு,
 • இரத்த ஹோமோசிஸ்டின் அளவு ஏழுக்குக் கீழாக இருக்க வேண்டும் இந்த அளவு பன்னிரண்டுக்கு மேல் சென்றால் மிகவும் ஆபத்து.
 • மாமிச உணவுகளுக்குப் பதிலாக பழங்களும், காய்கறி களும் மற்றும் கீரைகளையும் உட்கொள்ள வேண்டும்.
 • சி.ஆர்.பி இரத்தப் பரிசோதனை மூலம் இதய நோயின் பாதிப்பை வருவதற்கு முன்னரே கண்டுபிடிக்க உதவும்.
 • இதயம் தசையாலான உறுப்பு. அதன் முதன்மையான பணி இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துவது. இரத்த உறைவால் ஏற்படும் மாரடைப்பு, மற்றும் கார்டியோமயோபதி இதயத் தசைகளைப் பாதிக்கும்.
 • மாரடைப்பு மற்றும் கார்டியோமயோபதி பல காரணங்களால் உண்டாகின்றன. அவை அதிக இரத்த அழுத்தம், தீவிர மாரடைப்பு, வைரஸ் தாக்குதல் மற்றும் இதயத் தசைகளை பாதிக்கின்ற  நோய்களான லூப்பஸ் அல்லது ஸ்கிலிரோடெர்மா போன்றவை.
 • துணை நொதி கியு 10 மிகவும் சக்தி வாய்ந்த ஆன்ட்டிஆக்சிடென்ட். சோயா எண்ணெய், மீன்கள், வேர்க்கடலை போன்ற உணவுப் பொருட்களில் காணப்படுகிறது. டைரோசின் என்ற அமினோ அமிலத்திலிருந்து துணை நொதி கியு 10ஐ உண்டாக்கின்ற ஆற்றல் உடலுக்கு உண்டு.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

முதுமையை மாற்ற முடியும்

துத்தநாகம்

நமது நோய் எதிர்ப்பு அமைப்பின் ஒவ்வொரு பகுதிக்கும் துத்தநாகம் தேவைப்படுகிறது. அதன் குறைவால் நோய் எதிர்ப்பு அமைப்பின் பல பகுதிகளை செயலிழக்கச் செய்கிறது. தைமஸ் சுரப்பியிலிருந்து சுரக்கின்றன. நோய் எதிர்ப்பு அமைப்பிற்கு தூண்டுகோலாக உள்ள ஹார்மோன் அளவு குறைகின்றது.

 • துத்தநாகம் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப் படுத்துவதுடன், நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ்களின் பெருக்கத்தையும் தடை செய்கிறது.
 • நமது நோய் எதிர்ப்பு அமைப்பின் எதிர் வினைகள் தடை செய்யப்படுவதால் தான் முதுமை உண்டாகிறது. இதன் விளைவாக அடிக்கடி கடுமையான நோய்கள் உண்டா கின்றன.
 • ஆன்ட்டி ஆக்சிடென்ட் கூட்டுச் சேர்க்கை மாத்திரைகள்தான் இதற்கு சரியான ஆயுதம், நமது நோய் எதிர்ப்பு அமைப்பை முன்னேற்ற மடையச் செய்கின்றன. நமது ஆன்ட்டி ஆக்சிடென்ட் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கு கின்றன. நமது சாதாரண உயிரணுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கின்றன.
 • எல்லா வகையான கொழுப்புகளும் மோச மானவை அல்ல. உண்மையிலேயே அடிப்படைத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானவை. உடலால் இப்பொருட்களை உற்பத்தி செய்ய இயலாது. அவற்றை உணவிலிருந்துதான் பெற வேண்டும். உடலானது கொழுப்புக்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான உயிரணுப் படலங்களையும் புராஸ்டாகிளான்டின்கள் போன்ற ஹார்மோன் களையும் உண்டாக்குகின்றன. ஒமோக 3 கொழுப்பு அமிலமான ஆஃல்பா லினோலியிக் அமிலம் நமக்கு அடிப்படைத் தேவையான கொழுப்பு அமிலம்.
 • ஒமோக 3 கொழுப்பு அமிலங்கள் தாவர எண்ணெய்களான தாவர விதை எண்ணெய், சனோலா எண்ணெய், பூசணிக்காய்  மற்றும் சில  மீன்களிலும் காணப்படுகின்றன.
 • அடிப்படைத் தேவையான கொழுப்புக்கள் நமது மொத்த இரத்தக் கொழுப்பு அளவைக் குறைக்கும். கெட்ட கொழுப்பான எல்டிஎல் இரத்தக் கொழுப்பு அளவுகளையும்  குறைக்கின்றன.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

இம்மாத கட்டுரைகள்

Advertisements