January, 2014

மனநல பழக்கவழக்கங்கள்

1. அதிகாலை எழுந்தவுடன் தொடங்குகின்ற முதல் ஒரு மணி நேரம் தான் அந்த நாளின் மற்ற 23 மணி நேரங்களையும் நிர்ணயிக்கும். நன்றாக தொடங்கப்பட்ட நாளானது     புத்துணர்வையும் செயலூக்கத்தையும் கொடுக்கும். அந்த ஒரு மணி நேரத்தில் ஊக்கமளிக்கும் நூல்களைப் படித்தும், உற்சாக ஒலி நாடாக்களைக் கேட்டும், உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை செய்தும் செயல்களைத் தொடங்கினால் ஆன்மா ஆற்றல் மிக்க சக்தியைப் பெறும்.

Read More »

சாதனைகளின் அடிப்படை

இந்த உலகத்தில் கடினமான விஷயங்கள் எளிதான வற்றிலிருந்து தொடங்குகின்றன. இந்த உலகத்தில் பெரிய விஷயங்கள் சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன. ஒன்பது மாடி கோபுரம் சிறுமண் குவியருந்து எழும்புகிறது. ஆயிரம் மைல் பயணம் முதல் அடியிருந்து தொடங்குகிறது. அதனால் தான் சிறிய விஷயங்களிருந்து பெரிய விஷயங்களைச் சாதிக்க முடிகிறது என சீன ஞானி சொன்னது போல சிறியதிருந்து தொடங்குகின்ற செயல்கள் சாதனைகளாகின்றன.

உங்கள் குழந்தைகளைத் தயவு செய்து படித்த ஆசிரியர்களிடம் ஒப்படைப்பதை விட படிக்கின்ற ஆசிரியர்களிடம் ஒப்படையுங்கள் என்றார் அறிஞர்.

Read More »

இம்மாத கட்டுரைகள்

Advertisements