உணவுக் கட்டுப்பாடு நீரிழிவு நோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு முறையானது நோயாளி மற்றும் அவரது குடும்ப உணவு முறையை ஒட்டி அமைவது அவசியம். நீரிழிவு நோயாளிகள் அரிசியே சேர்த்துக் கொள்ளக் கூடாது. கோதுமையும், கேழ்வரகும் தான் உட் கொள்ள வேண்டும் என்றகருத்து தவறானதாகும். அரிசி, கோதுமை, ராகி ஆகிய அனைத்திலும் 70% மாவுச்சத்து அடங்கியுள்ளது. எனவே, எந்த தானியமாக இருந்தாலும், சரியான அளவில் உண்பதே அவசிய மாகும்.

பயறுகள், பருப்புகள் போன்ற தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதங்கள் அசைவ புரதங்களை விடச் சிறந்தவை ஆகும். தானியங்களையும், பயறுகளையும் சேர்த்து உண்பது அதிலிருந்து கிடைக்கும் புரதத்தின் தரத்தை அதிகரிக்கிறது. காளான்களில் புரதச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது.

நார்ச்சத்து மிகுந்த உணவு வகைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், கொலஸ்டிராலைக் குறைப்ப தற்கும் உதவுகிறது. முழு தானியங்கள், கொண்டைக் கடலை, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகள் மற்றும் கீரை வகைகளில் இயற்கையாக நார்ச்சத்து மிகுந்து உள்ளது. வெந்தயத்திலிருந்து கிடைக்கும் நார்ச்சத்து வகை, இரத்தத்தில் சர்க்கரை அளவை ஓரளவு குறைப்பதால், அதை முளைக் கட்டி வைத்தோ, பொடியாகவோ உட்கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காய்கறி வகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

பூசணிக்காய், பீன்ஸ், பாகற்காய், சுரைக்காய், கத்தரிக்காய், முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், காலிப்ளவர், சௌ-சௌ. கொத்தவரைக்காய், கொத்தமல்லித் தழை, காராமணி, கறிவேப்பிலை, முருங்கைக்காய், குடைமிளகாய், இஞ்சி, கீரைகள் (எல்லா வகைகளும்) கோவைக்காய், வெண்டைக்காய். புதினா, வெங்காயம், பப்பாளிக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, பீர்க்கங்காய், புடலங்காய், தக்காளி (காய் & பழம்) டர்னிப், முள்ளங்கி, அவரைக்காய் போன்றவை.

உணவில், கொழுப்பைக் குறைப்பதன் மூலம், இரத் தத்தின் கொலஸ்டிரால் அளவு அதிகமா வதையும், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பையும் ஓரளவு தடுக்கலாம். சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெய் வகை மிகவும் முக்கியமானதாகும். ஒரு நாளில் உபயோகிக்கும் மொத்த எண்ணெய் அளவை குறிப்பாக செறிவடைந்த கொழுப்பு அளவை குறைப்பது நலம். தாவர எண்ணெய்களை குறைந்த அளவில் உபயோகிக்கலாம்.

செறிவடைந்த கொழுப்பு உள்ள நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாலின் வனஸ்பதி ஆகியவைகளை கூடுமானவரையில் தவிர்ப்பது நலம்.

செறிவடையாத கொழுப்பு உள்ள சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய் ஆகியவைகளை குறைந்த அளவில் உபயோகப் படுத்தலாம்.

கடலெண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், ஆகியவைகளைத் தேர்ந்தெடுப்பது நலம்.
நல்லெண்ணெய், அரிசி தவிடு எண்ணெய் ஆகிய வைகளை உபயோகப்படுத்தலாம்.
உடல் எடை அதிகமாய உள்ளவர்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் மொத்த கலோரி அளவையும் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒருநாளில் உண்ணும் உணவை பரவலாக சிறுசிறு இடைவெளி விட்டு உண்ண வேண்டும். ஒருவேளை உணவு உண்ணாமல் இருப்பதோ, விரதம் இருப்பதோ கண்டிப்பாக கூடாது.
அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடிய உணவுகள்

ஆடை நீக்கிய மோர், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை, தக்காளி ஜூஸ், தெளிந்த சூப், மிளகு ரசம், மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம், வெள்ளை முள்ளங்கி, குடைமிளகாய் ஆகிய காய்கறி சாலட் வகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

முறையான உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதன் மூலம்.

(அ) நீரிழிவு நோயை நல்ல கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

(ஆ) அதனால் வரும் பாதிப்புகளைத் தடுக்கலாம்

(இ) மாத்திரையின் தேவையைக் குறைக்கலாம்

(ஈ) சரியான உடல் எடையைப் பராமரிக்கலாம்.

உணவு முறை.

சர்க்கரை நோய் என்றால் இரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸ் உள்ளது என்பதுதான் அதனால் குளுக்கோஸை அதிகமாக்குகின்ற உணவுகளை இயன்ற வரை குறைத்து நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்ப்பதே சரியான உணவு முறையாகும். இதன் மூலமே பெரும்பாலும் சர்க்கரை நோயைக் (வகை 2 ) கட்டுப்படுத்த முடியும்.

படுக்கை காபி சரியா?

நமக்கு காலையில் எழுந்ததும் காபி, டீ, பால் போன்ற பானங்கள் அருந்தும் பழக்கம் உள்ளது. கட்டாயமாக காலையில் பால் சம்பந்தப்பட்ட பானங்களை குடிக்க விரும்புவோர் சர்க்கரை இல்லாமல் குடித்தால் ஓரளவு நல்லது. இனிப்பு விரும்பிகளால் சர்க்கரை இல்லாமல் குடிக்க முடியாது. அதனால் அவர்கள் சர்க்கரை இல்லாத இனிப்பு மாத்திரைகளை ஒரு டம்ளர் பாலுக்கு ஒன்று அல்லது இரண்டு சேர்க்கலாம். இதனால் இனிப்பு இருந்தாலும் அதிக அளவு குளுக்கோஸோ (அ) கலோரியோ உடலில் சேருவதில்லை.

காலையை சுறுசுறுப்பாக்குங்கள்

காலையில் எழுந்ததும் ஏதாவது உடற்பயிற்சியை செய்தால் நல்லது. அதன்மூலம் இரத்தத்திலுள்ள அதிகப் படியான குளுக்கோஸை செலவிட முடியும். இதன் மூலம் சர்க்கரைநோய் கட்டுப்படுவது மட்டுமல்லாமல் உடலில் எல்லா உறுப்புகளும் நல்ல இரத்த ஒட்டத்தைப் பெற்று வலிமையாகின்றன. குறிப்பாக நாள்தோறும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவு.

உடற்பயிற்சிக்கு நேரம் எப்போது?

எல்லா உயிரினங்களும் விழித்து எழுந்தது. சுறுசுறுப் பாக செயல்படும். (கட்டிப்போட்டோ அடைத்து வைத்தோ உள்ள விலங்குகளைத் தவிர) ஆனால் மனிதன் மட்டும் காலை எழுந்ததும் உடற்பயிற்சி செய்வதில் அக்கறை செலுத்துவதில்லை. பல்வேறு வேலைகள் மற்றும் போக்கு வரத்து காரணங்களைச் சொன்னாலும், உடற்பயிற்சி களை செய்யாததற்கு முக்கிய காரணம் சோம்பேறித்த னமும் அறியாமையும்தான்.

ஆகவே சர்க்கரை நோயுள்ளவர்கள் காலையில் ஒரு மணிநேரம் முன்னதாக படுக்கையை விட்டு எழுந்து குறைந்தபட்சமாக நடைபயிற்சியையாவது 30 முதல் 40 நிமிடங்கள் செய்ய வேண்டும். சுமார் 5 கி.மீ வரை நடக்கலாம். வெளியில் செல்ல வேண்டியவர்கள், சுமார் 3 கி.மீ தூரத்தை நடந்தே சென்றால் அதன்மூலம் நடை பயிற்சியைப் பெறமுடியும். நேரமும் கிடைக்கும். வாய்ப் புள்ளவர்கள் ஏரோபிக் பயிற்சி , டென்னிஸ் நீந்துதல் போன்ற விளையாட்டுகளையும் பயிற்சி செய்யலாம்.

யோகா செய்யலாம்

யோகா பயிற்சி மனிதனின் உடல் உள்ளுறுப்புகளுக்கு வலிமையைத் தருவதாகும். சர்க்கரை நோயாளி களின் குறையை (இன்சுலின் குறைவாக சுரத்தல்) யோகபயிற்சி ஓரளவிற்கு சமநிலைப்படுத்துவதால் தினமும் காலை, மாலை இருவேளையும் சுமார் 30 நிமிடங்களுக்கு யோக பயிற்சி செய்வது நல்லது.

(பளுதூக்கும் பயிற்சி போன்ற கடுமையான உடற் பயிற்சிகளை 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் செய்யக் கூடாது.

காலை சிற்றுண்டி

காலை உணவாக சிற்றுண்டியாக இட்லி 3 எண்ணிக்கை அல்லது பொங்கல் 1 கப் அல்லதுதோசை அல்லது சப்பாத்தி 3 எண்ணிக்கை, தேங்காய் இல்லாத சட்னியுடன் சாப்பிடலாம். எண்ணெய் இல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் எண்ணெய் உணவுகள் இரத்த கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அதனால் அதிக எடை, இரத்த கொதிப்பு, மாரடைப்பு போன்ற சிக்கல்கள் உண்டாகும். எளிமையான சோளம், கம்பு போன்றவற்றை கூழாக சாப்பிடலாம் கெட்டியாக சாப்பிடுதல் நல்லது. கூழாக சாப்பிட்டால் இரத்த குளுக்கோஸ் அதிகமாகும்.

இடைவேளை உணவு

காலை உணவிற்குப் பின் 3 மணி நேரம் கழித்ததும் (சுமார் 11 மணிக்கு) இடைவேளை உணவாக காபி, டீ., வடை, போண்டா, பஜ்ஜி குளிர்பானம் போன்றவற்றை சாப்பிடு வதற்கு மாறாக வெள்ளரிக்காய் , கொய்யா, மாதுளை, பப்பாளி தக்காளி, ஊறவைத்த பச்சைபயறு மற்றும் நிலக்கடலை போன்றவற்றை சாப்பிடலாம்.

இந்த உணவுகள் குடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுக்களையும் கிடைக்கச் செய்யும். பொதுவாக சர்க்கரை நோயினர் பட்டினி இருத்தல் மற்றும் வயிறு முட்ட சாப்பிடுதல் இரண்டையும் தவிர்த்து, சிறுசிறு அளவில் உணவை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உயருவது தவிர்க்கப்படும்.

சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு நீண்ட நேரம் பட்டினி இருந்தால் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு குறைந்து மயக்க நிலை ஏற்படும்.

மதிய உணவு

மதிய உணவாக அரிசி சாதம் 100 கிராம் அல்லது கோதுமை சாதம் அல்லது சப்பாத்தி 3 எண்ணிக்கையும் உண்ணலாம். சாம்பார், ரசம், பொரியல், போன்றவற்றில் மிகக் குறைந்த அளவான எண்ணெயையே பயன்படுத்த வேண்டும்.

வயிறு நிறைய சாப்பிட்டால்தான் திருப்தி என்ற உணர்வு உள்ளவர்கள் உணவு உண்ண ஆரம்பிப்பதற்கு முன்னரும் சாப்பிடும்போதும் பச்சை உணவுகளான வெள்ளரி, தக்காளி போன்றவற்றையும் காய்கறி மற்றும் கீரைகளை அதிக அளவிலும் சேர்த்தால் மற்ற மாவு உணவின் அளவு குறைந்து இரத்த குளுக்கோஸை கட்டுப் படுத்துவது எளிதாகிவிடும். தயிர், கொழுப்பு நிறைந்த உணவு என்பதால் தயிருக்குப் பதிலாக மோரையே அல்லது தயிர் இல்லாமல் சாப்பிடுதல் நல்லது.

தண்ணீரை எப்போது குடிக்கலாம்?

பொதுவாக உணவு சாப்பிடும் வேளையில் அதிக தண்ணீரைக் குடிக்காமல் காலை, மதியம், மாலை உணவு களுக்கு 1 மணி நேரம் முன்னரும் பின்னரும் ஒவ்வொரு முறையும் இரண்டு டம்ளர் தண்ணீரை அருந்தலாம். இதனால் சீரணம் நன்றாவதுடன் மலச்சிக்கலைத் தவிர்க்க முடியும். மாலை வேளையில் ( சுமார் 4 மணிக்கு ) மேற் கூறிய பச்சையான உணவுகளையோ அல்லது பட்டாணி சுண்டல் அல்லது காய்கறிகளின் ரசத்தையோ சர்க்கரை போடாத பாலையோ அருந்தலாம்.

இரவு உணவு

இரவு வேளை உணவாக அவரவர் பழக்கத்திற்கேற்ப சாதம் 100கி அல்லது சப்பாத்தி 2 எண்ணிக்கை தோசை 3 எண்ணிக்கை என உண்ணலாம்.

படுக்கும் முன்னர் பால் 100 மிலி (கொழுப்பு நீக்கியது) அருந்தலாம்.

மாமிச உணவு விரும்புவோர் வாரத்தில் மூன்று நாட்க ளுக்கு கோழி அல்லது மீன் 150 கிராம் உண்ணலாம். பிற மாமிச உணவுகளில் அதிக கொழுப்பு உள்ளதால் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது. முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு உள்ளதால் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுதல் நல்லது

முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள்

தேன், ஜாம், இளநீர், மதுபானங்கள் சர்க்கரை, கற்கண்டு, வெல்லம், குளுக்கோஸ், தேன்மிட்டாய், ஐஸ்கிரீம், ஹார்லிக்ஸ் போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கிழங்கு வகைகளான சர்க்கரை வள்ளி, உருளைக்கிழங்கு, மரவள்ளி, சேனை, கேரட், பீட்ரூட், போன்ற உணவுகள் இரத்தத்தில் குளுக்கோஸை அதிகரிப்பதால் அவற்றைத் தவிர்த்தல் நல்லது.

பழங்களல் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், அன்னாசி, சப்போட்டா, திராட்சை ஆரஞ்சு போன்றவை அதிக அளவு சர்க்கரை கொண்டவை அதனால் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் ஆப்பிள், மாதுளை, கொய்யா, பப்பாளி, போன்ற பழங்களைச் சேர்க்கலாம்.

பிற வழிமுறைகள்

பேக்கரி உணவுகளில் அதிக கொழுப்பும் மாவுச் சத்துக் களும் உள்ளதால் அவற்றைத் தவிர்த்தல் நல்லது. மேரி பிஸ்கட் போன்ற மிகக் குறைந்த கலோரி உள்ள உணவை மட்டும் சேர்க்கலாம்.

எண்ணெயின் அளவு நாளொன்றுக்கு சுமார் இரண்டு ஸ்பூன் மட்டுமே அதுவும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தலாம். தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் கொழுப்பு நிறைந்தது. அதனால் தவிர்க்க வேண்டும்.

இந்த புத்தகத்தை இ வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்