டாக்டர்.கோமதி இராமநாதன்

மும்தாஜூக்கு அது பதினாறாவது பிரசவம். குழந்தை பிறந்த அடுத்த நிமிடமே அந்த சிக்கல் ஆரம்பித்து விட்டது. அதுவே அவளுடைய உயிருக்கு எமனாகியது.

பொதுவாக பிரசவத்தின் போது எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு இரத்தப் போக்கு ஏற்படும். தாயின் கருப்பையிலிருந்து குழந்தைக்கு இரத்தத்தை கொடுக்கின்ற பிளஸென்டா பிரிந்து விடுவதால் ஏற்படுகிற இரத்தப்போக்கு. அதுவே அடுத்த சில நிமிடங் களில் கருப்பை நன்றாக சுருங்கியதும் இரத்தம் கசிவது குறைந்துவிடும். பின் மூன்று அல்லது நான்கு நாட்க ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முற்றிலும் நின்றுவிடும். சிலருக்கு ஒரு மாதத்திற்குக்கூட குறைந்த பட்ச இரத்தப் போக்கு இருக்கலாம்.

ஆனால், குழந்தை பிறந்தவுடன் அரை லிட்டருக்கு மேல் உதிரப் போக்கு ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தான ஒன்று. அதை பிரசவத்தின் பின் உதிரப்போக்கு (டர்ள்ற் ல்ஹழ்ற்ன்ம் ட்ங்ம்ர்ழ்ழ்ட்ஹஞ்ங்) என்பர்.

பெரும்பாலும் கருப்பையிலிருந்து உண்டாகிற இரத்தக் கசிவே இதற்கு முக்கிய காரணம். அவைத் தவிர கருப்பை வாய் மற்றும் பெண்ணுறுப்பிலிருந்தும் இரத்தப் போக்கு உண்டாகலாம்.

எதனால் ஏற்படுகிறது?

வயிறு முழுவதும் விரிவடைந்து குழந்தையை சுமந்து கொண்டிருந்த கருப்பை, குழந்தை பிறந்த அடுத்த நிமிடமே நன்றாக சுருங்க ஆரம்பித்து விடும். அப்படி சுருங்கும்போது குழந்தைக்கு இரத்தத்தை கொடுப்பதற்கு விரிவடைந்த இரத்தக் குழாய்களும் சுருங்கிவிடும். அதனால் குழந்தை பிறந்ததும் உண்டாகிற இரத்தக்கசிவு, அடுத்த நில நிமிடங்களில் பெரும்பாலும் குறைந்துவிடும்.

ஒருவேளை கருப்பை சரியாக சுருங்கவில்லை என்றால் இரத்தப் போக்கு மிக அதிகமாகி விடும். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

à கருப்பையின் தசைகள் கலைப்பாகிவிட்டால்

à பல பிரசவங்களாகி தளர்ந்து விட்டால்

à பனிக்குடத்தில் நீரின் அளவு அதிகமாகியிருந்தால்

à கருப்பைக்குள் ஏதாவது கட்டி வளர்ந்தால்

à பிளஸெண்டா முற்றிலும் பிரியாமல் அதன் ஒரு பகுதி தங்கிவிட்டால்

à மயக்கமருந்து கொடுத்தால்

à பிளஸெண்டா கருப்பையின் கீழ்பகுதியில் அமைந்து விட்டால் போன்ற காரணங்களால் கருப்பை சரியாகாமல் இரத்தக் கசிவு ஏற்படும்.

மேலும் கருப்பையின் வாய் கிழிந்தாலோ, பெண்ணு றுப்பில் கிழிசல் ஏற்பட்டாலோ, ஆயுதப் பிரசவத்தாலோ, கிருமிகளின் பாதிப்பினாலோ இரத்தக் கசிவு ஏற்படலாம்.

மும்தாஜூக்கும் பல பிரசவங்களானதால் இதே பாதிப்பு ஏற்பட்டு அளவிற்கதிகமான இரத்தப் போக்கு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து உடலில் இரத்தக் குறைவு, நாடி ஓட்டம் குறைதல், இரத்த அழுத்தம் குறைதல் ஏற்பட்டு சுயநினைவு இழக்கிற நிலையாகியது.

இதற்கு சிகிச்சைகள்

மருத்துவமனையில் பிரசவமானால் அதை உடனுக் குடன் அறிந்து சிகிச்சையளித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்.

கருப்பையை சுருங்க வைக்கவும், அதிக இரத்தக் கசிவை நிறுத்தவும் மிதெர்ஜின் மற்றும் பிராஸ்டிடின் மருந்துகளைக் கொடுக்கலாம். பிளஸெண்டா தங்கியிருந்தால் அதை எடுத்து விட்டால் இரத்தப் போக்கு நின்றுவிடும்.

கருப்பையின் வாயிலோ அல்லது மற்ற இடங்களிலோ கிழிந்திருந்தால் அதை தைத்து விட்டால் போதும். சிலருக்கு ஆண்டிபயாடிக் மருந்துகளை கொடுக்கலாம். இதற்குப் பின்னும் இரத்தக் கசிவு நிற்காதபோது கருப்பையையே அகற்றினால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும். இவற்றில் முக்கியமாக இரத்த இழப்பை சரிகட்ட தேவையான அளவு இரத்தத்தைச் செலுத்தினால் உயிரைக் காப்பாற்றலாம்.

மும்தாஜின் பிரசவத்தின்போது, (அக்காலத்தில்) மருத்துவ சிகிச்சைகள் இந்த அளவுக்கு முன்னேற வில்லை. மாபெரும் மொகலாய ராஜ்ஜியத்தின் ராணியாக இருந்தும் சிகிச்சையில்லாமல் உயிரி ழக்க வேண்டியதாயிற்று. ஒரு வேûளை அந்த பதினாறாவது பிரசவத்தின் பிறகு உயிர் பிழைத்தி ருந்தால் இன்னும் எத்தனை கர்ப்பங்களை தாங்கி யிருப்பாரோ? ஷாஜஹானும் தாஜ்மஹாலை கட்டி யிருப்பாரா?

இந்த புத்தகத்தை இ வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்