டாக்டர் ஸ்ரீ ஆர்த்தி இராமநாதன்

மனதில் உற்சாகத்தையும், சிந்தனைகளையும் பாதித்து, அன்றாட செயல்களை தடைசெய்து, உடலையும் உள்ளத்தையும், உறக்கத்தையும் பாதிக்கும் நிலையே மனச்சோர்வு ஆகும்.

மனச்சோர்வின் அறிகுறிகள் என்னென்ன?

1. சோகமான மனநிலை நாள் முழுதும் இருக்கும். எதையோ பறிகொடுத்துவிட்ட உணர்வு, எதிலும் நாட்டமில்லாத மனநிலை தோன்றும். சிறுவர்களுக்கு உள்ள மனச்சோர்வு எரிச்சலாக வெளிப்படும்.

2. சிந்திக்கும் ஆற்றல் குறைந்து கொண்டே வரும். அதனால் சிறு பிரச்சனைக்குகூட, முடிவெ டுக்க முடியாமல் தடுமாற நேரிடும். எதிலும் கவனம் செலுத்த இயலாமை ஏற்படும்.

3. தான் எதற்கும் பயனில்லாதவன், தகுதியில்லாதவன் என்ற தாழ்வான எண்ணங்கள் தோன்றும், அதைத் தொடர்ந்து ஏதோ தவறு செய்து விட்ட குற்றவுணர்வு உண்டாகிக் கொண்டே இருக்கும்.

4. உடலில் மிகுந்த அசதி ஏற்படும். ஒரு வேலையையும் செய்யாமலே எல்லா சக்தியையும் இழந்துவிட்ட உணர்வு ஏற்படும்.

5. தூக்கமின்மை அல்லது தூங்கினாலும், ஆழ்ந்த உறக்கமின்மை ஏற்படும். அதிகமான கனவுகள் உண்டாகும். அதிகாலையில் விழிப்பு ஏற்படும். விழித்தபின்பும் களைப்பாகவே இருக்கும்.

6. தன் தொழிலைப் பற்றிய, நண்பர்களைப் பற்றிய உறவினர்களைப் பற்றிய ஆர்வம் குறைந்து கொண்டே வரும். முன்பு மகிழ்ச்சியை கொடுத்த செயல்கள் இப்போது தேவையற்ற தாக தோன்றும்.

7. பசியின்மையால், சாப்பிடுவதில் ஆர்வமின்மை ஏற்படும். அதனால் எடை குறைவு ஏற்படும். சிலருக்கு மட்டும் அளவிற்கதிகமாக பசி ஏற்பட்டு, உடல் பருமனாகும்.

8. மகிழ்ச்சியுணர்வு சிறிதும் இல்லாமல் கவலையே மேலிடும். சிலருக்கு பதட்டமும், எதைச் செய்தாலும், பரபரப்பும் எரிச்சலும், கோபமும் அதிகமாக உண்டாகும்.

9. இறப்பு பற்றிய எண்ணங்கள் அடிக்கடி உண்டாகும். சிலருக்கு தற்கொலை செய்து கொள்ளும் உந்துதல் ஏற்படும்.

10. பிறருடன் பழகுவதில் விருப்பமில்லாமல் தனிமையையே நாடும் மனநிலை, காரணமின்றி அழுதல் போன்றவைகள் ஏற்படும்.

11. காலையிலும், மாலையிலும் வெவ்வேறு மனநிலை உண்டாகும்.

12. சிலருக்கு உடலில் சில அறிகுறிகள் தோன்றும்.

– தீராத தலைவலி-குறிப்பாக தலையின் பின்புறம் வலி நெஞ்சு வலி, வயிற்று வலி, இடுப்பு வலி

– மலச்சிக்கல்

– உடலுறவில் வெறுப்பு

– சிறிது சத்தத்தையோ / வெளிச்சத்தையோ தாங்க இயலாமை

– உடலில் ஊர்வது போன்ற உணர்வு போன்றவைகள் உண்டாகும்.

இதுபோன்றஅறிகுறிகளில் ஏதாவது ஐந்தும் அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இருக்குமானால், அவர் மனச்சோர்வு கொண்டவர் எனலாம்.

– இந்நோய் சுமார் 3 முதல் 5 சதம் மக்களை பாதிக்கிறது

– பணக்காரர்களைவிட ஏழைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

– எல்லா வயதினருக்கும் உண்டாகக் கூடியது என்றாலும் 30 வயது முதல் 40 வயது வரையுள்ளவர் களுக்கே அதிகம் உள்ளது.

இதற்கு முறையான மனநல ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும். அதைத் தொடர்ந்து திரும்ப வராமல் தேவையான சிகிச்சைகளையும் செய்ய வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே உஇப என்கிற ஷாக் ட்ரீட்மெண்ட் தேவைப்படும். சிகிச்சையில் குணமான பின் முறையான யோகப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் செய்தால் பூரண நலம் கிட்டும்.

இதில் முக்கியமாக மனச்சிந்தனைகளையும் சூழ்நிலை களையும் இயன்ற வரையில் மாற்றியமைத்து நம்பிக்கை யான மன நிறைவு உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த புத்தகத்தை இ வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்