டாக்டர். ஷாலினி பிரியா

ஆம்! யூகித்து விட்டீர்கள்! மாரடைப்பு!

நம்நாட்டில்தான் மாரடைப்பை பற்றி விழிப்புணர்வு சற்று குறைவாக உள்ளது. சில அந்நிய நாடுகளின் மாரடைப்பு வந்தால் என்ன செய்வது என 16 வயது முதல் பாடம் வாயிலாக கற்பிக்கப்படுகிறது. இது ஏதோ மருத்துவர்கள் மற்றும் செய்ய கூடியவை அல்ல! எவரும் செய்ய கூடியவை.

முதலில் நமக்கு என்ன வியாதி இருக்கிறது என மற்றவருக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கும் அண்டை நாடுகளில் ஒரு முறையை கையாளுகிறார்கள். ஒரு அட்டையில் என்ன வியாதி மற்றும் முக்கிய மருந்துகளை எழுதி லாமினேட் செய்து வைத்துக் கொள்கின்றனர். இது என்ன நம்மால் முடியாததா? நாமும் செய்வோம், மாரடைப்பு நோய் எனில் கீழ்கண்டவற்றை செய்ய வேண்டும்.

அடுத்து எல்லோரும் அறிந்தது ஆனால் பள்ளிபருவத்தோடு அக்கதைகளை மறந்து விட்டோம்! “தன் கையே தனக்கு உதவி” மாரடைப்பு நோயை அவ்வளவு எளிதாக எண்ணி விட முடியாது. அது பல வகைகள் ஒவ்வொரு வகைக்கும் அவரவர் உடல்நிலையை பொறுத்து ஒவ்வொரு தற்காப்பு மருந்து உள்ளது. அதை மருத்துவரை அணுகும் ஒவ்வொரு வரும் கேட்டு தெளிவுபடுத்தி கொள்ளலாம். மாரடைப்பு நோயின் அறிகுறிகள் நெஞ்சு வலி மட்டும் அல்ல. மயக்கம், தலை சுற்றல், இடது கைவலி, வயிற்று எரிச்சல் என எதுவாகவும் இருக்கலாம். அதை எல்லாம் சொல்வது பயமேற்றுவதற்கு அல்ல! அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு நம்மை தற்காத்து கொள்வதற்கு! இந்த அறிகுறிகள் வந்தால் தக்க மருந்தை சட்டைபையில் இருந்து எடுத்து உட்கொள்ள வேண்டும்!

சாலையில் யாரேனும் மயங்கிய நிலையில் இருந்தால் வெளிக்காயங்கள் ஏதேனும் உள்ளதா என பார்க்க வேண்டும். இல்லையெனில் எவர் வேண்டுமானாலும் யாரோ ஒருவருக்கு கடவுளாகும் வாய்ப்பு உள்ளது. சரியாகத்தான் கணித்தீர்கள்! அதை இடத (சி.பி.ஆர்) என ஆங்கிலத்தில் சொல்வர். அதன்படி முதலில் நாடித்துடிப்பை பார்க்க வேண்டும். இதற்காக 20 நொடி களுக்கு மேல் செலவழிக்கக் கூடாது. அல்லது அவரை அழைக்கலாம். தெரியவில்லை எனில் நெஞ்சின் நடுப்பகுதியில் இருகைகளையும் வைத்து அழுத்தம் தர வேண்டும். 30 தடவைகள் வரை சிலருக்கு சந்தேகம் கூட எழலாம் நெஞ்சுகூட்டின் எலும்புகள் உடைந்து விடுமோ என்று! உடைந்தாலும் சரி செய்து கொள்ளலாம் ஆனால் அதைவிட முக்கியம் இதயத்திற்கு வெளியிலிருந்து அழுத்தம் தர வேண்டியது. முப்பது முறைக்கு பிறகு 2 சுவாசங்கள் தர வேண்டும். இதனை மாறிமாறி 5 நிமிடம் வரை செய்யலாம். இதற்கு இடையில் உதவிக்கு எவரையேனும் அழைத்து கொள்ளலாம்! இன்னொருவர் ஆம்புலன்ஸை அழைக்கலாம்!

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

30 நிமிடங்கள் இதயத்திற்கு எர்ப்க்ங்ய் ட்ர்ன்ழ் (மிக முக்கியமான நேரம்) என்பர். ஆதலால் அந்த முப்பது நிமிடங்களை அழுது, ஆற்பாட்டம் செய்து வீணடிக்காமல் பதட்டப்படாமல் கடவுள் தந்த அரிய வாய்ப்பை நாம் உபயோகப் படுத்த வேண்டும் என நினைவில் கொள்வோம்! கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடியாதென்று மருத்துவர்களை படைத்தார். மருத்துவர்களும் எல்லா இடத்திலும் இருக்க முடியாதென்று விழிப்புணர்வை மானுடத்திற்கு அளித்துள்ளார்…. அதை நாம்தான் சரியாக பயன்படுத்த வேண்டும்!

இந்த புத்தகத்தை இ வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்