நம்மில் யாராவது நம் கொள்ளுப்பாட்டிகள் தாத்தாக்களும் மாரடைப்பினால் இறந்தார்கள் என கேள்விப்பட்டிருக்கிறோமா? மிகக் குறைவு! அல்லது சர்க்கரை நோய்? அல்லது நம் தாயார்கள் யாராவது சினைப்பை முட்டை பிரச்சனை யினால் (டஇஞந) குழந்தைபேறு தள்ளிபோனதை தான் அறிந்திருக்கிறோமா?

அந்த காலத்தில் விவசாயம்தான் தொழில். அதுவே உடலுக்கு உடற்பயிற்சியாக இருந்தது. இன்றைய காலத்தில் நமக்கு உடற்பயிற்சி செய்யும் நேரம் இல்லை, நமது தொழிலும் நம்மை நிறைய நேரம் சோம்பலாக உட்கார செய்வதாகவே உள்ளது! நாமும் அத்தகைய வேலை வாய்ப்புகளைதான் தேடிக்கொள்கிறோம்!

நம் தமிழர்களின் கலாச்சார உணவு வகைகள் சிறந்தவை! உணவே மருந்தாக இருந்தது. அதனை ஆராய்ச்சி செய்து அறிந்த அந்நியர்கள் இப்போது தான் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நம்மை பாராட்டுகின்றனர். அவர்கள் உணவோடு நம் உணவுகளை சேர்த்து வருகின்றனர். நாமோ அண்டையர்களின் உணவு முறைகளை பின்பற்ற துவங்கி விட்டோம்! இதனால்தான் (டஇஞந) போன்ற நோய்கள் தோன்றுகின்றன.

பாலிஸிடிக் ஓவரி சின்ட்ரோம் (டஇஞந) அதிகரித்து வருகிறது. தாய்மையடைய முடியாமல் தவிக்கும் 60 சதவீதம் பெண்களுக்கு (டஇஞந) உள்ளது என ஓர் ஆய்வு சொல்கிறது. (டஇஞந) என்றால் சினைப்பையில் கட்டி இருக்க வேண்டுமென்றோ மாதவிலக்கு கோளாறு ஏற்பட வேண்டுமென்றோ இல்லை. ஆனால் பாதிப்பு இருக்கும். (டஇஞந) எனப்படுவது இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் தன்மையை அதிகரிப்பதாக உள்ளது. ஆதலால் இதனை விரைவில் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

சிறு வயதிலேயே பூப்படைவது, அதிக எடை, விளையாட்டின்மை, அசதி அதிகம் உள்ள தன்மை, கழுத்து மற்றும் கைமடிப்பில் கறுப்பு படலம் போன்றவை அறிகுறிகள் இவை இன்ஸீலின் அமிலத்தின் கோளாறினால் வருபவை. பருவ காலத்தில் மாதவிலக்கு வராமல் இருந்தால், வந்தாலும் மிகக் குறைவாக வருதல் அல்லது வந்தால் மிக அதிகமாக வருதல், குழந்தையின்மை, மீசை வளர்தல், தலைமுடி உதிர்தல் போன்றவை வரலாம்.

2000 கலோரி உள்ள உணவுகள் மட்டுமே ஒரு நாளுக்கு உட்கொள்ள வேண்டும். அதில் 40 சதவீதம் மாவுச் சத்து இருக்க வேண்டும். பழங்கள், காய்கறிகளும் தானியங்களும் அதிகம் (அல்லது சாதமும், காய்கறி தானியங்கள் பழங்கள் 2:1 முறையில்) இருக்க வேண்டும். எண்ணை, கொழுப்புசத்துகள் இனிப்பு பண்டங்களை எவ்வளவு குறைவாக எடுத்து கொள்கிறோமோ அவ்வளவு நல்லது.

நாம் நம் பாரம்பரிய உணவுவகைகளை மதித்து உணர்ந்து பின்பற்றினாலே நிறைய புதுப்புது நோய்களை விரட்டிவிடலாம்.

மகளிர் & மகப்பேறு சிறப்பு சிகிச்சை.

நவீன லேப்ராஸ்கோபி சிகிச்சை
24 மணி நேர பிரசவ சிகிச்சை
குறை பிரசவ குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை
மார்பக, கருப்பை புற்றுநோய்களுக்கு ஆய்வு
புற்றுநோய்களுக்கான நவீன அறுவை சிகிச்சை
புற்றுநோய்களுக்கு கீமோதிரபி
மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு மற்றும் அடிவயிறு வலி
மாதவிலக்கு நாட்கள் மாறி வருதல்
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்
சோனோ ஸ்கேன்
குழந்தையின்மைக்கு சிகிச்சை
தீவிர சிகிச்சை பிரிவு
வீட்டிலிருந்தபடியே மருத்துவ சிகிச்சை செய்யும் வழிகள் (Home service)
கருப்பை இறக்கம்
இந்த புத்தகத்தை இ வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்