Dr. கார்த்திகேயன்
DNB Surgery M.R.C.S.
(Edinberg), D.MAS.
பெண்களைப் பாதிக்கின்ற முக்கிய நோய்களில் ஒன்று மார்பக புற்று நோய். நம் நாட்டில் பெண்கள் தயக்கம் மற்றும் கூச்சத்தினால் ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய வேண்டிய இந்நோயை முற்றிய நிலைக்கு வளர விட்டு எண்ணற்ற சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.
இதற்கு காரணம் என்ன?
இதற்கான சரியான காரணங்களைச் சொல்ல முடியா விட்டாலும் இந்நோய் எத்தகைய பிரிவினருக்கு உண்டாகும் என்பதை கணிக்கலாம்.
பெரும்பாலும் 50 வயதிற்கு மேற் பட்டோரையே இது பாதிக்கிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் இரத்த சம்பந்தமுள்ள உறவினர்களிடமும் ஒருவருக்கு இப்புற்று நோய் வந்தால் மற்றவருக்கும் வருகிற சாத்தியங்கள் அதிகம்.
ஒரு மார்பகத்தை தாக்கிய நோய் அடுத்த மார்பகத்தையும் தாக்கலாம்.
உடல் எடை அதிகமாக உள்ளவர் களையும், குழந்தை பெறாத பெண் களையும், குழந்தைக்கு பாலூட்டாத தாய்மார்களையும் அதிகமாக தாக்குகிறது.
பெண்களுக்கு உள் அதிகமான ஈஸ்ட்ரேஜன் என்ற ஹார்மோனே இதற்கு காரணமாகும்.
ஆண்களுக்கு கூட மார்பகப் புற்று நோய் உண்டாகலாம்.
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்
பலருக்கு ஆரம்ப காலத்தில் எந்த அறிகுறியும் இராது. மார்பகத்தில் சிறு கட்டி உண்டாகும். எந்த வலியும் இராது.
சிலருக்கு மார்பகத்தில் ஆரஞ்சு பழத் தோலைப் போல குழிகள் இருக்கலாம்.
சிலருக்கு மார்காம்பு உள்நோக்கி இழுக்கப் பட்டிருக்கும்.
புற்றுநோய் முற்றிய நிலையில் நிணநீர் கட்டிகள் அக்குளில் ஏற்படும்.
கண்டறிவது எப்படி?
சுய பரிசோதனை முறை: பெண்கள் தம் மார்பகத்தை தங்கள் கைகளினால் தடவி பரிசோதிக்கலாம்.
இதற்கு நிலைக் கண்ணாடி முன் நின்று எந்த துணியும் அணியாமல் மார்பகத்தை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு பார்த்து வித்தியாச முள்ளதா என பார்க்க வேண்டும்.
அடுத்ததாக வலது கை கொண்டு இடது மார்பகத்தை கை கொண்டு வலது மார்பகத்தை சுற்றி வர, தடவி அதற்குள் கட்டி ஏதாவது தெரிகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
மார்பகக் காம்புகளை அழுத்தி அதில் நீர் அல்லது இரத்தம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
இது போன்ற அறிகுறிகளிருந்தால் அதை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
பரிசோதனைகள்
மருத்துவ பரிசோதனையிலேயே மார்பக புற்று நோயை கண்டறிய முடியும்.
சந்தேகமுள்ளவர்களுக்கு மேம்மோகிராபி பரிசோதனையைச் செய்தால் மிகச் சிறிய அளவில் உள்ள புற்றுநோயைக் கூட கண்டு பிடிக்கலாம்.
சிலருக்கு ஊசி மூலம் நீரை உறிஞ்சும் பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியலாம்.
மேலும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், மார்பு எக்ஸ்ரே நியூக்லைடு ஸ்கேன் மற்று சி.டி. ஸ்கேன் போன்றவைகளையும் தேவைக்கேற்ப செய்யலாம்.
சிகிச்சை முறைகள்
1. அறுவை சிகிச்சை : கட்டி சிறியதாக இருந்தால் அதை மட்டும் ஆபரேசனில் எடுத்து விடலாம்.
அக்குளில் நிணநீர் கட்டி பரவி யிருந்தால் அப்பகுதியையும் சேர்த்து அம்மார்பகத்தை அறுவை சிகிச்சையில் அகற்றி விடலாம்.
மார்பகத்தை, அகற்றியவர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் இழந்த மார்பகத்தை மறுபடியும் உருவாக்கலாம்.
2. கதிரியக்க சிகிச்சை : மார்பை யடுத்துப் பரவிய புற்று நோய்கும், மற்ற இடங்களில் பரவியிருக்க லாமென சந்தேதிக்கும் புற்று நோய்க்கும் இச்சிகிச்சையை செய்ய வேண்டும்.
3. கீமோதெரபி : அறுவை சிகிச்சை செய்ய இயலாதவர்களுக்கு புற்று நோய் செல்களை அழிக்க இம்மருந்துகள் பயன்படும்.
4. ஹார்மோன் எதிர்ப்பு மருந்துகள் : டாமோக்ஸிபென் எனப்படும் இம்மருந்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் செயல்களை கட்டுப்படுத்த பயன்படும்.
இதை சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு கொடுக்க வேண்டும்.
மார்பக புற்று நோயை ஆரம்பத்தி லேயே கண்டறிந்தால் நூறு சதம் பூரண குணமாக்க முடியும்.
முற்றிவிட்டாலும் சரியாக சிகிச்சை யளித்தால் மற்றவர்களுக்குச் சமமான ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும்.
இந்த புத்தகத்தை இ வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
Dr. கார்த்திகேயன்DNB Surgery M.R.C.S.(Edinberg), D.MAS.பெண்களைப் பாதிக்கின்ற முக்கிய நோய்களில் ஒன்று மார்பக புற்று நோய். நம் நாட்டில் பெண்கள் தயக்கம் மற்றும் கூச்சத்தினால் ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய வேண்டிய இந்நோயை முற்றிய நிலைக்கு வளர விட்டு எண்ணற்ற சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.இதற்கு காரணம் என்ன?இதற்கான சரியான காரணங்களைச் சொல்ல முடியா விட்டாலும் இந்நோய் எத்தகைய பிரிவினருக்கு உண்டாகும் என்பதை கணிக்கலாம்.பெரும்பாலும் 50 வயதிற்கு மேற் பட்டோரையே இது பாதிக்கிறது.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் இரத்த சம்பந்தமுள்ள உறவினர்களிடமும் ஒருவருக்கு இப்புற்று நோய் வந்தால் மற்றவருக்கும் வருகிற சாத்தியங்கள் அதிகம்.ஒரு மார்பகத்தை தாக்கிய நோய் அடுத்த மார்பகத்தையும் தாக்கலாம்.உடல் எடை அதிகமாக உள்ளவர் களையும், குழந்தை பெறாத பெண் களையும், குழந்தைக்கு பாலூட்டாத தாய்மார்களையும் அதிகமாக தாக்குகிறது.பெண்களுக்கு உள் அதிகமான ஈஸ்ட்ரேஜன் என்ற ஹார்மோனே இதற்கு காரணமாகும்.ஆண்களுக்கு கூட மார்பகப் புற்று நோய் உண்டாகலாம்.மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்பலருக்கு ஆரம்ப காலத்தில் எந்த அறிகுறியும் இராது. மார்பகத்தில் சிறு கட்டி உண்டாகும். எந்த வலியும் இராது.சிலருக்கு மார்பகத்தில் ஆரஞ்சு பழத் தோலைப் போல குழிகள் இருக்கலாம்.சிலருக்கு மார்காம்பு உள்நோக்கி இழுக்கப் பட்டிருக்கும்.புற்றுநோய் முற்றிய நிலையில் நிணநீர் கட்டிகள் அக்குளில் ஏற்படும்.கண்டறிவது எப்படி?சுய பரிசோதனை முறை: பெண்கள் தம் மார்பகத்தை தங்கள் கைகளினால் தடவி பரிசோதிக்கலாம்.இதற்கு நிலைக் கண்ணாடி முன் நின்று எந்த துணியும் அணியாமல் மார்பகத்தை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு பார்த்து வித்தியாச முள்ளதா என பார்க்க வேண்டும்.அடுத்ததாக வலது கை கொண்டு இடது மார்பகத்தை கை கொண்டு வலது மார்பகத்தை சுற்றி வர, தடவி அதற்குள் கட்டி ஏதாவது தெரிகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.மார்பகக் காம்புகளை அழுத்தி அதில் நீர் அல்லது இரத்தம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.இது போன்ற அறிகுறிகளிருந்தால் அதை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.பரிசோதனைகள்மருத்துவ பரிசோதனையிலேயே மார்பக புற்று நோயை கண்டறிய முடியும்.சந்தேகமுள்ளவர்களுக்கு மேம்மோகிராபி பரிசோதனையைச் செய்தால் மிகச் சிறிய அளவில் உள்ள புற்றுநோயைக் கூட கண்டு பிடிக்கலாம்.சிலருக்கு ஊசி மூலம் நீரை உறிஞ்சும் பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியலாம்.மேலும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், மார்பு எக்ஸ்ரே நியூக்லைடு ஸ்கேன் மற்று சி.டி. ஸ்கேன் போன்றவைகளையும் தேவைக்கேற்ப செய்யலாம்.சிகிச்சை முறைகள்1. அறுவை சிகிச்சை : கட்டி சிறியதாக இருந்தால் அதை மட்டும் ஆபரேசனில் எடுத்து விடலாம். அக்குளில் நிணநீர் கட்டி பரவி யிருந்தால் அப்பகுதியையும் சேர்த்து அம்மார்பகத்தை அறுவை சிகிச்சையில் அகற்றி விடலாம். மார்பகத்தை, அகற்றியவர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் இழந்த மார்பகத்தை மறுபடியும் உருவாக்கலாம்.2. கதிரியக்க சிகிச்சை : மார்பை யடுத்துப் பரவிய புற்று நோய்கும், மற்ற இடங்களில் பரவியிருக்க லாமென சந்தேதிக்கும் புற்று நோய்க்கும் இச்சிகிச்சையை செய்ய வேண்டும்.3. கீமோதெரபி : அறுவை சிகிச்சை செய்ய இயலாதவர்களுக்கு புற்று நோய் செல்களை அழிக்க இம்மருந்துகள் பயன்படும்.4. ஹார்மோன் எதிர்ப்பு மருந்துகள் : டாமோக்ஸிபென் எனப்படும் இம்மருந்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் செயல்களை கட்டுப்படுத்த பயன்படும்.இதை சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு கொடுக்க வேண்டும்.மார்பக புற்று நோயை ஆரம்பத்தி லேயே கண்டறிந்தால் நூறு சதம் பூரண குணமாக்க முடியும்.முற்றிவிட்டாலும் சரியாக சிகிச்சை யளித்தால் மற்றவர்களுக்குச் சமமான ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும்.

இந்த புத்தகத்தை இ வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்