உறக்கம், உற்சாகம், நிறைவான உணவு இம்மூன்றும் நலமான மனத்திற்கு அடிப்படை. நாகரீக காலத்தின் வேகத்தில் பலருடைய உறக்கமும் அழிந்து போய் விட்டது. அதனால்தான் இன்று அதிக அளவு தூக்க மாத்திரைகளும் மது மற்றும் போதைப் பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது.
அமைதியான உறக்கமே மனதிற்கு சக்தியைக் கொடுக்கும். ஆசை, அச்சம், கோபம், எதிர்பார்ப்பு, ஏக்கம் – போன்றவை அதிகமாகும்போதும் தூக்கம் குறைந்து விடும். உடல்வலி, மூளை பாதிப்பு, நரம்பு பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளின் குறைபாடு மற்றும் உணவு மாற்றங்களும் உறக்கத்தைப் பாதிக்கும்.
அமைதியில்லா தூக்கத்தில் அவதிப்படு வோரையும், மனநோயில் தவிப்போரையும் திருஷ்டி, சூன்யம், கிரகதோஷம், ஏவல், பேய், பிசாசு, மந்திரம் என சொல்லி திசை திருப்புவது பலர் செய்யும் வியாபார தந்திரங்கள், சமுதாய அறியாமையின் அடையாளங்கள்.
மனபாதிப்பும் மற்ற உடல்நோயைப் போன்றது தான், மனபாதிப்படைந்தால் ‘சமூக நாணம்’ தேவையில்லை. ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றால் விரைவில் பூரண குணமாகும்; எளிமையாக கட்டுப் படுத்த முடியும்.

இந்த புத்தகத்தை இ வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்