ஓர் ஆண் தன் குழந்தைகளுக்குச் செய்யக் கூடிய மிக அன்பான விஷயம் அவர்களது தாயாரை நேசிப்பதுதான். ஒரு தாய் தன் குழந்தைகளுக்குச் செய்யக்கூடிய மிக அன்பான விசயம் அவர்களது தந்தையை நேசிப்பதுதான்.
* தாங்கள் பெற்றோர்களுக்கு இடையேயான அன்பை உன்னிப்பாகக் கவனிப்பதன் மூலம் தாங்கள் எவ்வாறு அன்பு மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.
* மனிதர்கள் பழக்கத்திற்கு அடிமையான வர்கள். ஒரு பெற்றோர் என்ற முறையில் சிறு வயதில் உங்களுக்குச் செய்யப்பட்ட விஷயங்களை உங்கள் குழந்தைகளுக்குச் செய்ய நீங்கள் இயல்பாகத் தூண்டப் படுவீர்கள். நீங்கள் அதே தவறுகளைச் செய்வீர்கள். உங்களைக் காயப்படுத்திய அதே விஷயங்களை நீங்கள் அவர்களுக்குச் செய்விர்கள். பிறகு அது குறித்து வருத்தப் படுவீர்கள் ஆனால் இப்போதுகூடக் கால தாமதம் ஆகிடவில்லை.
* தங்களுடைய தவறுகளுக்காகவோ, காயப் படுத்தும் விதத்தில் தாங்கள் செய்துள்ள அல்லது கூறியுள்ள விஷயங்களுக்காகவோ தங்கள் பெற்றோர்கள் ‘என்னை மன்னித்து விடு’ அல்லது ‘என் தவறுக்கு நான் வருந்து கிறேன்’ என்று ஒருபோதும் கூறுவதில்லை என்பதுதான் அனைத்து வயதுக் குழந்தை களும் கூறும் ஒரு குறை.
* காரணம் எதுவாக இருந்தாலும் சரி, தாங்கள் நியாயமின்றி நடத்தப்பட்டதாகவோ அல்லது அநியாயமாகத் தங்கள்மீது பழி சுமத்தப் படுவதாகவோ அவர்கள் உணரும்போது, அவர்களுக்குக் கோபமும் வருத்தமும் ஏற்படுகிறது. அவர்களது மனம் காயப் படுகிறது. இது உடனடியாகத் தீர்க்கப்படா விட்டால், இந்தக் கோபம் பல வருடங்கள் தொடர்ந்து நீடிக்கிறது.
* நீங்கள் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் போது, நீங்கள் பலவீனங்கள் கொண்ட ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை உங்கள் குழந்தைக்கு வெளிப்படுத்துகிறீர்கள். நீங்கள் கச்சிதமானவர் அல்ல. நீங்கள் செய்தது தவறு என்பதை ஒத்தக்கொள்ளக்கூடிய துணிச்சலும் பண்பும் உங்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள்.
* உங்கள் குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்கும்போது உங்கள் மீது அவர்கள் கொண் டிருக்கும் அன்பும் மதிப்பும் உயர்கின்றன. எதிர்காலத்தில் அவர்கள் உங்களுடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியக் கூறும் அதிகரிக்கின்றது. நீங்கள் தவறிழைக்கும் போது மன்னிப்புக் கேட்காமல் இருந்தால் அது உங்கள் குழந்தைக்குக் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. அவர்கள் கண்முன் நீங்கள் உங்கள் சொந்த மதிப்பை இழந்துவிடுகிறீர்கள்.
* “உன் மனத்தைக் காயப்படுத்தும்படி நான் செய்துள்ள காரியங்களுக்காகவும் கூறியுள்ள விசயங்களுக்காகவும் நான் வருத்துகிறேன்” என்று எளிமையாக மன்னிப்புக் கேட்பது உடனடியாக அற்புத மான விளைவை ஏற்படுத்தும்.
* மாதக்கணக்கிலும் வருடக் கணக்கிலும் தங்கள் பெற்றோரிடமிருந்து விலகி இருந்த குழந்தைகள் கூட அவர்களது பெற்றோர்கள் துணிவோடு தங்கள் செயலுக்குப் பொறுப் பேற்று மன்னிப்புக் கேட்டவுடன் கிட்டத்தட்ட உடனடியாக ஒன்று சேர்ந்துள்ளனர்.
* நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்கும்போது, தாங்களும் தவறு செய்வதை அவர்கள் ஒப்புக் கொள்வதற்கு நீங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர்கள்.
* உங்களுடைய குழந்தை களுடன் மட்டும்தான் நீங்கள் நிரந்தமான உறவை அனுபவிக்கி றீர்கள், நீங்கள் உயிருடன் இருக்கும்வரை இந்த உறவு தொடரும். உங்கள் குழந்தைகளை நீங்கள் அன்போடும் பொறுமை யோடும், புரிதலோடும் நடத்தினால், உங்கள் வாழ்நாள் முழுவதும் வெகுமதி களைப் பெற்றுக் கொண்டே இருப்பீர்கள்.
* குழந்தைகளை உயர்ந்த சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் நிறைந்தவர்களாக உருவாக்குவதுதான் பெற்றோரின் தலையாயக் கடமை. அக்குழந்தைகள் வளர்ந்த பிறகு மகிழ்ச்சியும் சாதனையையும் அனுபவகிக்க இது அவர்களைத் தயார்படுத்துகின்றது.