குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு அடிக்கடியா?

சுத்தமில்லாத நீர் உணவுகள், தரையில் உள்ள பொருட்களை வாயில் போடுதல், கையைக் கழுவாமல் உணவைக் கையாளுதல் போன்ற வற்றில் கிருமிகளின் பாதிப்பு ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும்.

பொதுவாக குழந்தையின் கைகளை, குழந்தைக்கு உணவு தயாரிப்பவர், ஊட்டுபவர் கைகளை நன்றாக சோப்பினால் கழுவிய பிறகே உணவைக் கையாள வேண்டும்.

சொந்தத்தில் திருமணம் செய்வது நல்லதா? இல்லையா?

சொந்தமில்லாத திருமணங்களில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு உடல் ஊனம், இதய பாதிப்பு, பாரம்பரிய நோய் போன்றவற்றின் எண்ணிக்கை சொந்தத்தில் திருமணமானவர்களை விட குறைவு என்பதால் நேரடி சொந்தத்தில் திருமணங்களைத் தவிர்க்கலாம்.
சில குழந்தைகள் எக்காரணமும் இன்றி இரவிலும் அழுவது ஏன்?

குழந்தை, தன் எண்ணங்களை வெளிப் படுத்தும் ஒரே வழி அழுகைதான். மகிழ்ச்சியோ, தொல்லையோ, பேசுவதோ எல்லாமே அழுகை மூலமே. எதனால் அழுகை என்பதை அறிதல் வேண்டும் காரணமே இல்லாமல் இரவில் அழுதால், அது இரவில் தூங்குவதற்கு இன்னும் பழகவில்லை என்று சொல்லலாம்.
சிறு குழந்தைகளுக்கு காதில் சீழ் வருவது ஏன்?
காதில் கிருமி பாதிப்பு ஏற்பட்டால் சீழ் வரும். குழந்தை படுத்த நிலையில் பாலூட்டும் போது வாயில் இருந்து வழிந்து செல்கின்றபால் காதிற்குள் சென்று அதனால் பாதிப்பு ஏற்படும். தொண்டையில் கிருமி மற்றும் சளித்தொல்லை உள்ளவர்களுக்கும் காது பாதிப்பு ஏற்படும்.

குழந்தைகளுக்கு ஏற்ற ஆடை எது?

பருத்தி ஆடைகளே நல்லது. பிளாஸ்டிக் மற்றும் நைலான் துணிகள் பார்வைக்கு அழகாக இருந்தாலும் உடுத்துவதற்கு உகந்தது அல்ல. ஜிப் இல்லாமல் பட்டன் போடுவதைப் போன்ற உடைகளே நல்லது.
ஆண் குழந்தைகளின் விதைக் கொட்டை கீழே இறங்காமல் இருந்தால் என்ன செய்வது?

பிறப்பதற்கு ஒரு நில நாட்களுக்கு முன்னர் தான் ஆண் விதை வயிற்றுக்குள்ளிருந்து விதைப் பைக்குள் இறங்கும். அப்படி இறங்காதவர்களுக்கு ஒரு வயதிற்குள் சரிசெய்ய வேண்டும் விதை இறங்காதவர்களுக்கு நான்கு வயதிற்கு மேல் அப்படி இருந்தால் ஆண்மை பாதிப்பு ஏற்படும்.

விதை முறுக்குதல் (Torsion) ஏன்?
விதையானது (Testis)விதைப்பைக்குள் எளிதில் அசையக் கூடியது. அதனால் சிலருக்கு முறுக்கிக் கொள்ளும். அதனால் திடீரென கடுமையான வலியும் விதைப்பை வீக்கமும் ஏற்படும். அதை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யாவிடில் இரத்த ஓட்டம் குறைந்து அழுகிவிடும்.
குழந்தைக்கு பற்கள் முளைப்பது எப்போது?
பிறந்தது ஆறாவது மாதத்தில் தாடையின் கீழ்வரிசையில் இரண்டு பற்கள் இருக்கும். வருடத்திற்கு நான்கு பற்கள் வீதம் முளைக்கும். பல் முளைப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படாது.
ஆறாவது வயதிலிருந்து தற்காலிக பற்கள் விழத் தொடங்கி நிரந்தர பற்கள் முளைக்கும். நன்றாக பராமரித்தால் மனிதனின் ஆயுளைவிட பற்களின் ஆயுள் அதிகம்.

குழந்தைகளுக்கு குளிக்க வைத்தால் மற்றும் சுகாதார முறைகளைப் பற்றிய விளக்கம் தேவை?

சிறு குழந்தைகளுக்கு மிதமான வெந்நீரே குளிப்பதற்கு உகந்தது. தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமென்பதில்லை. தலைக்கு குளிக்கும் போது கண், காது, மூக்கு வாய் போன்றவற்றில் அசுத்த நீரோ, சோப்போ போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கழுத்திற்கு கீழே குளித்தாலும் போதும். குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தலைக்கு குளிக்கும் எண்ணிக்கையை கூட்டலாம். சோப்பை விட பச்சை பயறு மாவில் குளித்தால் நல்லது.

நாக்கில் வெண்மை மாவு படிந்திருந்தால் அதை லேசாக அகற்றலாம்.காதில் குச்சிவிட்டு குடையாமல் வெளிப் புறத்தை செய்தால் போதும்.

குழந்தையின் எடை – வளர்ச்சியை அறிவது எப்படி?

பொதுவாக பிறக்கும் போது சுமார் மூன்று கிலோ எடை ஒரு வயதில் ஒன்பது கிலோவும், ஒண்ணரை வயதில் பத்தரை கிலோவும் இருக்கும்.பிறக்கும் போது எடை குறைவாக இருக்கின்ற குழந்தை ஒரு வயதில் சற்று குறைவான எடை இருக்கலாம்.

சிறு குழந்தைகளின் வளர்ச்சியை அறிய மாதந்தோறும் எடையை அளவிட வேண்டும். படிப்படியாக எடை கூடவேண்டும். அப்படி இல்லாதபோது அதற்கான சோதனைகளைச் செய்ய வேண்டும்.
சில குழந்தைகளின் உடல் எப்போதும் சூடாகவே இருப்பது ஏன்?

பொதுவாக குழந்தைகளுக்கு காலையை விட மாலையில் உடல் வெப்பமாக இருக்கும். கை கால்களை விட தலை, மார்பு மற்றும் வயிறு அதிக சூடாக தெரியும்.

குழந்தைகளுக்கு காய்ச்சலின் போது வலிப்பு ஏற்படுவதை சரி செய்வது எப்படி?

காய்ச்சலினால் வலிப்பு ஏற்படுகின்ற தன்மை சில குழந்தைகளுக்கு ஏற்படலாம்.
அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்கள், குழந்தைக்கு லேசான காய்ச்சல் இருக்கும்போதே பாரசிடமால் மருந்தையும் வலிப்பைத் தடுக்கும். மருந்தையும் கொடுத்துவிட்டால் வலிப்பு வராது. அடுத்ததாக காய்ச்சலுக்கான சிகிச்சைகளைச் செய்ய வேண்டும். காய்ச்சலின் சூட்டைத் தணிக்க ஈரத்துணியை நெற்றியிலும் உடலிலும் போடலாம்.

வலிப்பு ஏற்படும்போது தலையை ஒரு புறமாக பக்கவாட்டில் திருப்பி வைக்க வேண்டும். வாந்தி ஏற்பட்டால் திருப்பி வைக்க வேண்டும். வாந்தி ஏற்பட்டால் மூச்சுக் குழாயை அடைத்து விடாமல் இருக்குமாறு சுத்தம் செய்ய வேண்டும். வலிப்பின் போது ஒரு ஸ்பூனில் சுத்தமான துணியை சுற்றி பற்களுக்கு இடையில் வைத்து விட்டால் நாக்கை கடிக்க முடியாது.

குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களால் பாதிப்பு உண்டா?

மிகச்சிறிய பொருட்களை வாயில் போட்டு விழுங்கிவிடும். அதிலுள்ள ரசாயன பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு சுவாசபாதையை விளையாட்டு பொருட்கள் அடைத்துவிட்டால் சுவாசம் நிற்கின்றஅபாயம் உண்டு.
கூர்மையான பொருட்களை வைத்து விளையாடும் போது உடலுறுப்புகளை குத்திக் கொள்கின்றபாதிப்பு ஏற்படும். ஆகவே அத்தகைய பொருட்களைத் தவிர்க்கலாம்.

குழந்தையின் வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பின் போது செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு போன்ற சாதாரண தொல்லைகளே சில சமயங் களில் உயிருக்கு ஆபத்தாகி விடுவதுண்டு.

1. பெரும்பாலான வயிற்றுப்போக்கிற்கு மருந்துகள் தேவைப்படுவதில்லை.
2. ஓ.ஆர்.எஸ் மற்றும் உணவு ஆகியவை தான் சிகிச்சையின் முக்கிய ஆதாரம். நீரின் இழப்பை சரியீடு செய்ய குழந்தைக்கு போதிய அளவு தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும்.
3. கொதித்து குளிர்விக்கப்பட்ட 200 மில்லி நீரில் 2 ஸ்பூன் சர்க்கரை ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்தால் கரைசல் தயார் ஆகிவிடும். இந்தக் கரைசலை குழந்தைக்கு தொடர்ந்து கொடுக்கலாம். (மருந்து கடைகளில் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் கிடைக் கின்றன).
4. கரைசல் ஊட்டிய பிறகு மலம் கழிப்பது அதிகம் ஆகலாம். இது சாதாரணமான ஒன்றுதான். பயப்பட ஏதுமில்லை. கரைசலைத் தொடர்நது கொடுக்கவும்.
5. குழந்தைக்கு வாந்தி ஏற்பட்டால் சில நிமிடங்கள் காத்திருக்கவும். அதன்பிறகு ஒரு சிறிய ஸ்பூன் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக கரைசலை கொடுக்கவும். இதன் மூலம் வாந்தி ஏற்படுதல் நின்றுவிடலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தை களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவும்.
6. வாந்தி (அ) வயிற்றுப்போக்கு எடுக்கும் பொழுது இளநீர், பழச்சாறு போன்றதிரவ உணவுகளை சிறிது சிறிதாக ஸ்பூன் மூலம் கொடுக்கலாம். சுமார் 12-24 மணி நேரம் கழித்து வாந்தி ஏற்படுவது இல்லையெனில் இட்லி, பாலில் ஊற வைத்த ரொட்டி அரிசி, கஞ்சி போன்ற மிருதுவான திட உணவுகளைக் கொடுக்கவும்.

வயிற்றுப்போக்கின் போது மருந்துகள் ஆலோசனைக்கு அவசியம் எப்போது?

* குழந்தை சோர்ந்த நிலையில் இருந்தால்
* குழந்தையின் வயிறு உப்பியிருக்கும் போது
* வாந்தி எடுப்பதும் வயிற்றுப்போக்கும் மிக அதிகமாக இருக்கும்போது
* மலத்தில் சீதம் மற்றும் இரத்தம் இருக்கும் போது
* குழந்தை நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருக்கும் போது
* அதிக காய்ச்சல், மூச்சுத்திணறல் இருக்கும் போது.

குழந்தையின் பார்வையும் கேட்டலும் சரியாக உள்ளதா என்பதை அறிவது எப்படி?

கேட்கும் திறன் :
3 மாதத்தில்

* திடீர் சப்தம் கேட்கும் பொழுது குதித்து எழுகிறதா?
* சப்தம் கேட்டால் அழுவதையோ, பால் குடிப்பதையோ நிறுத்தி விடுகிறதா?
* பெரிய சப்தம் கேட்டால் தூக்கத்தில் அசைகிறதா?

9 மாதத்தில்

* மறைவான இடத்தில் இருந்து சப்தம் வரும் திசையை நோக்கி தலையைத் திருப்புகிறதா?
* பேசுகிற வரை நோக்கி திரும்புகிறதா?
* குழந்தையின் பெயர் சொல்லும்பொழுது அல்லது தாயின் குரல் கேட்டு அழுகையை நிறுத்துகிறதா?
* மழலைச் சொற்கள் பேசுகிறதா?
* கிலுகிலுப்பை காட்டினால் மகிழ்கிறதா?

12 – 15 மாதம்

* சின்ன கட்டளைகளைச் செய்ய முடிகிறதா?
* நாம் சொல்லும் வார்த்தைகளைத் திருப்பி சொல்ல முடிகிறதா?

18 மாதம்

* நாம் கேட்கின்ற உடல் உறுப்புகளை காட்ட முடிகிறதா?
* அம்மா, அப்பா சொன்ன வார்த்தைகளை சொல்கிறதா?
பார்க்கும் திறன்

1-3 மாதம்

* முகத்தைப் பார்த்து சிரிக்கிறதா?
* முகத்தைக் கூர்ந்து கவனிக்கிறதா?

6-9 மாதம்

* 2 கண்களையும் சேர்த்து பார்க்கிறதா?
* சாமான்களைக் கைநீட்டி பிடிக்கிறதா?
* அறையில் அசையும் பொருள் அல்லது மனிதரைப் பார்க்கிறதா?
குழந்தைகளின் நல்ல மன வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்?

* பாராட்டு என்பது இருக்கிற நல்ல குணங்களை ……..வளர்க்கும். புதிய நல்ல குணங்களைக் கொடுக்கும்.
* பணத்தை விட உங்கள் நேரத்தை உங்கள் ……..குழந்தையுடன் செலவிடுங்கள்.
* குழந்தை தன்னம்பிக்கையுடன் வளர்வதற்கு சிறுசிறு பொறுப்புகளை அவர்களுக்கு கொடுங்கள்.
* குழந்தையை எல்லோருடனும் பழக விடுங்கள்.
* குழந்தை கேட்கும் கேள்விக்கு பொறுமையாக பதில் கூறுங்கள்.
* குழந்தையுடன் குழந்தையாக விளை யாடுங்கள்.
* குழந்தையின் நண்பர்கள் யார் என தெரிந்து கொள்ளுங்கள். (நல்லவர்களைத் தேர்வு செய்யுங்கள்)
* நீங்கள் கூறும் புகழுரைதான் உங்கள் குழந்தைக்கு டானிக். தினமும் ஒரு முறை யாவது நீங்கள் உங்கள் குழந்தையை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை நினைவு படுத்துங்கள்.
* உங்கள் குழந்தைக்கு இயற்கையைக் காட்டுங்கள்.
* நாம் வளர்த்த விதமும், நம் குழந்தைகள் வளர்கிற விதமும் வேறாக இருக்கிறது. ஆகவே, நம்முடைய மன இயல்பை வைத்து அவர்களை தீர்மானிக்ôதீர்கள். அதை செய்யாதே, இதை செய்யாதே என்று கூறுவதைத் தவிர்த்து, விரும்பும் செயலை செய்யச் சொல்லிக் கொடுங்கள்.