June, 2012

நோயைத் தவிர்க்கும் வித்தைகள்

* தரை விரிப்பு
* காற்றோட்டமான இடம்
* காலியான வயிறு (சாப்பிட்டிருந்தால் 4 மணி நேரத்திற்குப் பின்)
* சத்தமில்லாத சூழல்
* இறுக்கமில்லாத ஆடை
* யோகா செய்யும்போது எதற்கும் யாரிடமும் பேசக்கூடாது.
* அவசரம், பரபரப்பு மனநிலையில் யோகா செய்யக் கூடாது.
* யோகாவை செய்யும்போது மன இறுக்கமோ, உடல் இறுக்கமோ கூடாது.
* களைப்பாகும் அளவிற்கு யோகா செய்யத் தேவையில்லை.
* யோகா செய்யும்போது அதிலேயே முழுக் …….கவனமும் வேண்டும். சுவாசத்தில் கவனம் செலுத்தலாம்.
* எந்த வகை பயிற்சியிலும் உடலுக்கு சிரமம் கொடுக்கக்கூடாது. வலியோடு செய்யக்கூடாது.
* குறிப்பிட்ட இடத்தில் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், யோகா பலன்கள் பன் மடங்கு அதிகமாகும். (அதிகாலை 6 மணிக்கு செய்தால் நல்லது).

Read More »

மனித இனத்தின் அடுத்த உயரிய நிலை

மனிதனுக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம் அறிவு. அறிவைக் கொண்டு தன்னையறியவும் சூழ்நிலைகளை சரியாக கையாளவும் மனிதனுக்கு கிடைத்திருக் கின்ற அற்புத ஆயுதம் யோகா.
இதை மதத்தின் அடிப்படையிலோ, இந்திய மண்ணில் தோன்றியது என்பதன் அடிப்படை யிலோ பார்க்காமல் ஒரு உடல் அறிவியலாக ஆய்ந்து மேற்கத்தியர்கள் ஏற்றுக் கொண்டு இன்று மருத்துவ அறிவியலில் முக்கிய பாடமாக உருவாகிவிட்டது.
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் இக்கலை உருவாகியிருக்கிறது. கி.மு.300 ஆண்டுகளுக்கு முன்னர் பதஞ்சலி யோகா நடைமுறையில் இருந்துள்ளது. விவேகானந்தர் இதை மேற்கு நாடுகளில் பிரபலமாக்கினார்.
இதன் அற்புதங்களை இன்னும் இந்தியர்களில் பெரும்பான்மையோர் உணராமல் உலக வாழ்க்கையில் சிக்கி, தடுமாறுகின்றனர். ஒவ்வொரு மனிதனும் யோகாவை கற்று நாள்தோறும் செய்கின்ற பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால் மனித இனம் அடுத்த உயரிய நிலையை அடைந்து விடும்.
உடல் மனம் இரண்டையும் உயர்ந்த நிலைக்கு செயல்படுத்தவும், நோய்களை தடுப்பதற்கும் நோய் வந்தாலும் விரைவில் குணமாவதற்கும் யோகா பயன்படும். நவீன அலோபதி மருத்துவம் நோய்களை (குறிப்பாக ஆபத்தான நோய்களை) குணப்படுத்துவதற்கும், நோய்களால் கெட்டுவிட்ட உறுப்புகளை சரிப்படுத்துவதற்கும், தடுப்பூசிமூலம் நோய்களை தடுப்பதற்கும் மிக மிக அவசியம்.

இம்மாத கட்டுரைகள்

Advertisements