60 வயதைத் தாண்டியவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும். மிகவும் பழக்கமானவர்களின பெயர்கூட மறந்துவிடும். பல நோய்களாலும் ஞாபகமறதி ஏற்படலாம். முதுமையில் எந்த காரணமும் இல்லாமல் ஞாபகமறதி ஏற்படுவதை அறிவுத்திறன் வீழ்ச்சி என்பர். முதுமையில் ஏற்படும் ஞாபகமறதிக்கும் அறிவுத்திறன் வீழ்ச்சி நோயால் ஏற்படும் ஞாபக மறதிக்கும் வித்தியாசம் உண்டு.
முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி:
* தனக்கு ஞாபக மறதி உள்ளதாகக் கவலைப் பட்டு அதைப்பற்றி அவரே டாக்டரிடம் சொல்வார்.
* ஒரு பொருளை தவறாகச் சொன்னாலும், அதை எடுத்துச் சொன்னால், அவர் அதைப் புரிந்துகொண்டு திருத்திக்கொள்வார்.
* மூளை ஸ்கேன் பரிசோதனைகளில் மாற்றம் ஏதும் இருக்காது.
அறிவுத் திறன் வீழ்ச்சி என்பது மூளையில் உள்ள நியூரான் திசுக்கள் அழிவதால் ஏற்படுவது.
அறிவுத்திறன் வீழ்ச்சி நோயின் முக்கிய அறிகுறிகள்:
எழுபது வயதைத் தாண்டியவர்களுக்கு நினைவாற்றல், ஒருமுகக் கவனம், இடங்களை அறியும் தன்மை போன்றவை பாதிக்கப்படும். அண்மைக்கால நிகழ்வுகள் மறந்துபோகும். ஆனால் பழைய நினைவுகள் நிலைத்திருக்கும் அவற்றைப் பற்றியே பேசிக்கொண்டும் நினைத்துக் கொண்டும் இருப்பார்கள். கடைசியில் தன்னையே மறந்துவிடுவார்கள்.
மறதிநோய்க்கு சிகிச்சைகள் :
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்தால் மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால்,ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளலாம்.
தனிமையில் சும்மா இருக்காமல், பொழுது போக்கு அம்சம் ஒன்றில் ஈடுபட்டால் மனத்தின் ஆற்றல் அதிகமாகும்.
தியானம் ஒரு சிறந்த மருந்து. தினமும் தியானத்தைக் கடைபிடித்தால், மறதியை குறைக்க முடியும்.
சத்தான உணவு முக்கியம். புரதச் சத்து அதிகமாக உணவு மன நலத்துக்கு நல்லது. கொழுப்பு உணவுகளை மிகக்குறைவாக சாப்பிட வேண்டும்.
தனிமையைத் தவிர்த்து, மற்றவர்களுடன் கலகலப்புடன் இருந்தால், முதுமையில் மனநலம் நன்றாக இருக்கும்.