பல சமயங்களில் நோய் கண்டறிதலே சிரமமாக இருக்கும். உதாரணம்: குடல்வால் அழற்சி. இளம் வயதில் வரும்போது கடுமையான வயிற்றுவலி, வாந்தி போன்றவை ஏற்படும். முதியோருக்கு வரும்போது வயிற்றில் லேசான வலி அல்லது அசாதாரணத் தன்மை மட்டுமே உணரப்படும், பரிசோதனையிலும் பிரச்சனை தெளிவாகத் தெரியாது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதியவர் களுக்கு நோய்த்தொற்று, திரவ சத்தின் சமச் சீரின்மை, அதிக நேரம் படுக்கையில் கழிப்பதால் ஏற்படும் உடல்புண்கள். மலச்சிக்கல், மன அழுத்தம், கால்களில் ரத்தம் கட்டிக்கொள்ளும் வாய்ப்பு போன்றவை அதிகம்.
முதியோர்களுக்கு அவசரமாக செய்கின்ற அறுவை சிகிச்சையைவிட தேர்ந்தெடுத்து செய்யப் படும் அறுவை சிகிச்சையே பாதுகாப்பானது. நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதை கட்டுப்படுத்திய பின்னரே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
முதுமையில் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நோய்கள்: வயிற்றினுள் ஏற்படும் சிக்கல்கள், சர்க்கரைநோயில் கால் அழுகுதல் போன்றவற்றிற்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படும்.