இரத்தம் செலுத்துதல், இதய பைபாஸ் அறுவை சிகிச்சை, புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை, விபத்துக்களில் சிக்கி அதிக இரத்தப்போக்கு காரணமாக உடலில் ரத்தம் ஏற்றுதல் போன்ற வற்றின்போது எல்லா பரி சோதனைகளுக்குப்பிறகு, இரத்தம் செலுத்தி னாலும், எய்ட்ஸை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள Window period இரத்தத்தால் இப்பாதிப்பு ஏற்படலாம்.
சுத்தம் செய்யப்படாத கத்தி, ஊசி, பிளேடு மற்றும் தோலில் பயன்படுத்தக்கூடிய வேறு சில பொருட்களாலும் எய்ட்ஸ் கிருமிகள் உடலில் செல்வதற்கு வாய்ப்பு உண்டு. முக்கியமாக பாது காப்பற்ற உடலுறவின் மூலம் எய்ட்ஸ் பரவுகிறது.
கிருமி உடலுக்குள் புகுந்து தன் அறி குறிகளை வெளிப்படுத்த பத்து ஆண்டுகளுக்கு மேலும் ஆகலாம். அதனால் இன்றைய நடுத்தர வயது நோயாளிகள் நாளைய முதியோர் எய்ட்ஸ் நோயாளியாக வாய்ப்பு உண்டு.
நோயின் அறிகுறிகள் ஆரம்ப நிலையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். அதேநோய் முற்றிய காலத்தில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.
முதல் ஆறு வாரங்களுக்கு உடல் சோர்வாகவும், காய்ச்சலுடனும் காணப்படுவார். பிறகு இந்த இரண்டும் எந்தவித சிகிச்சையும் இல்லாமலேயே சரியாகிவிடும். 5 முதல் 10 ஆண்டுகள்வரை இந்த நோய் எந்தவித அறிகுறியும் இல்லாமல் உடலில் மறைந்தே இருக்கும். அதற்குப் பிறகு இந்த நோய் தீவிரமடைந்து பலவிதங்களில் வெளிப்படும்.
படிப்படியாக உடல் இளைத்தல், இடை விடாத வயிற்றுப்போக்கு, தொடர் காய்ச்சல், இடை விடாத இருமல் போன்றவை ஏற்பட்டு இறுதியில் மரணம் ஏற்படும்.
எய்ட்ஸின்போது இரத்தப்போக்கு, காளான் தொற்று போன்ற பாதிப்புகளும் ஏற்படும். இளம் வயது எய்ட்ஸ் நோயாளிக்கும், வயதான எய்ட்ஸ் நோயாளிக்கும் வித்தியாசம் உண்டு.
இளம் வயது நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது எளிது. முதியோர் எய்ட்ஸ் சிகிச்சையில் பலன்கள் குறைவு. முதுமையில் வரும் பல்வேறு நோய்களின் குறுக்கீடு, நோயின் தீவிரம், முறையான சிகிச்சை இல்லாமை போன்றவற்றால் பாதிப்பு அதிகம்.