உங்கள் இளம் பருவத்திற்குப் பின் அது நின்று போய்விட்டது தெரியும். அதற்குப் பின் நீங்களே அறிந்து எதையும் கற்றுக் கொண்டிருக்க மாட்டீர்கள். உங்களுக்குள்ளே இருக்கும் மாணவன் ஆழ்ந்த உறக்கத்தில் சென்றுவிட்டான். உங்களுக்குள் உள்ள மாணவனை எழுப்ப இந்த குறிப்பு உதவும்.

முதலில் எழும் கேள்வி, ஒருவர் ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்? முதலாவது, கற்றுக் கொள்வது என்பது வேறொன்றுமில்லை, மன வளர்ச்சிதான். கற்றுக் கொள்வதன் மூலமாகத்தான் மனம் வளர்கிறது. புதிய விஷயங்கள் தோன்றுகின்றன. இதனால், புரிந்து கொள்வதற்கான உங்கள் திறமையும் அதிகரிக்கிறது.

அதைத் தவிர கற்றுக் கொள்ளாமல் இருப்பது என்பது என்னைப் பொறுத்தவரை அகம்பாவத்திற்கான அறிகுறி. நமக்கு முதலில் கிடைக்கும் வெற்றியினால் பலரும் திருப்திபட்டுக் கொள்கிறார்கள். இதுதான் வாழ்க்கை என நம்புகிறார்கள். நாம் மிகவும் தேர்ந்தவர் என்ற தவறான எண்ணம் ஏற்படுகிறது. நாம் கற்றுக் கொள்வதற்கும் இது தடையாக இருக்கிறது. கற்றுக் கொள்ளாமல் இருப்பது அறியாமையை உண்டாக்குகிறது. அறியாமை யினால் தவறுகள் செய்கிறோம். இதிலிருந்து அச்சம் ஏற்படுகிறது.

வாழ்க்கை ஒரு கற்றுக் கொள்ளும் பயிற்சிதான். நாம் வளரத்தான் இது வழி வகுக்கிறது. நாம் ஒவ்வொருவரும் தவறுகள் செய்கிறோம். அதிலிருந்து எழுந்து முன்னேறுகிறோம். ஒரு புதிய திறமையை வளர்த்துக் கொள்வதை ஆராயுங்கள். ஆம் எல்லா திறன்களையும் ஒரே நாளில் கற்றுக் கொள்ள முடியாது. ஆனால் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தலாம்.