நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடியது வாழ்க்கை முழுவதும் பயன்தரக் கூடியது என்றால் அது ஆக்கபூர்வமான கருத்துக்களை ஏற்றுக் கொள்வது.

மனிதர்கள் மிகச் சிறப்பாக இருக்க முடியாது. அப்படி இருப்பதற்காகவும் படைக்கப்படவில்லை. ஆனால் அதை என்றாவது எட்டும் ஒரு குறிக்கோள் இருக்கலாம். ஏனென்றால் வாழ்க்கை என்பது தொடர்ச்சியான மேம்பாடுதான். உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பின்தங்கவே மாட்டீர்கள்.

உங்கள் வாழ்க்கையை ஒரு அனுபவமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் எல்லாவற்றையும் எட்ட நினைத்திடுங்கள். ஆனா ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்படவில்லை என்பது நினைவிலிருக்கட்டும். மாற்றங்களும் மெதுவாக வரும். மி-க-வு-ம் நி-தா-ன-மா-க. நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அது வரும்போது உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றம் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.