*காலரா, *மஞ்சள் காமாலை, *போலியோ (இளம் பிள்ளை வாதம்), *டைஃபாய்ட், *வாந்தி, பேதி, *லெப்டோஸ்பைரோசிஸ் * குடல்புழு நோய்கள்
பொது இடங்களில் மலம் கழிப்பதால் மொய்க்கும் ஈக்கள் உண்ணும் உணவிலும் உட்காருவதால், மேற்கூறிய நோய்கள் மற்றவர்களுக்கு சுலபமாகப் பரவும். வயல்வெளிகளிலும் மண் பாதையிலும் காலணி இல்லாமல் நடக்கும்போது, கொக்கிப்புழுக்கள் பாதத்தின் வழியாக உடலுக்குள் சென்று ரத்தத்தை உறிஞ்சி ரத்த சோகையை ஏற்படுத்துகின்றன.
கொசுவால் பரவும் நோய்கள்
* மலேரியா, யானைக்கால் நோய், டெங்கு காய்ச்சல் போன்றவை.
* தேங்கி நிற்கும் நீரில் பொதுவாக கொசுக்கள் அதிகமாகப் பெருகுகின்றன.
* தேங்கி நிற்கும் சாக்கடை நீர்.
* காலி பாட்டில், தேங்காய் ஓடு, உடைந்த மண்பாண்டம் மற்றும் தூக்கியெறியப்படும் வீட்டு உபயோகப் பொருட்களில் தேங்கி நிற்கும் நீர்.
* பயன்பாடில்லாத டயர்கள், பூ ஜாடிகள் ஆகிய வற்றில் தேங்கிற நிற்கும் நிர்
* உடைந்த கசிவுள்ள தண்ணீர்த் தொட்டிகள் மற்றும் கிணறுகள்
* தண்ணீர் தேங்கி நிற்கும் காலி வீட்டு மனைகள் போன்ற நீர் தேங்கி நிற்கும் இடங்களில்தான் கொசு உற்பத்தி ஆதிகமாகிறது.
காற்றில் பரவும் நோய்கள்
* எலும்பு உருக்கி நோய் அல்லது காசநோய்
* இன்ஃபுளுயன்சா மற்றும் நிமோனியா ஜுரம்
* டிப்தீரியா, *ஆன்த்ராக்ஸ், *அம்மை நோய்கள்
* தொழு நோய்கள்