‘அந்த மனிதன் கத்தியை எழுந்திருந்தால் துப்பாக்கியால் மிரட்டியிருப்பேன். துப்பாக்கியை எடுத்திருந்தால் பீரங்கியால் நசுங்கியிருப்பேன். பீரங்கியை எடுத்திருந்தால் குண்டுமழை பொழிந்திருப் பேன். ஆனால் சத்தியத்தை அல்லவா எடுத்து விட்டார். சத்தியத்தை வென்றதாக உலகில் எந்த சரித்திரமும் இல்லையே’ – சர்ச்சில்.
இந்திய விடுதலையைப் பற்றி பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில் விவாதம் நடந்தபோது பாராளுமன்ற உறுப்பினர்கள், “மிஸ்டர் சர்ச்சில் அவர்களே! நீங்கள் துணிச்சலான பிரதமர் என இரு முறை உங்களை ஆங்கில மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால் நீரோ, ஒரு அரை ஆடை மனிதன் (காந்தி) முப்பது கோடி மக்களை ஒன்றுதிரட்டி ‘வெள்ளையனே வெளி யேறு’ என்று விரட்டுகிறான். அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறீர். துப்பாக்கி, பீரங்கி, அணுகுண்டுகள், பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் போன்ற அத்தனை நம்மிடம் இருந்தும் கைக்கட்டி பார்த்துக் கொண்டிருக்கலாமா?” என்ற போது சர்ச்சில் அளித்த பதில் இது.
காந்தி, அகிம்சை கோட்பாட்டின் அடிப் படையில் செயல்பட்டதால் விடுதலை கிடைத்தது. எந்த இயக்கத்திலும் உயர்ந்த கோட்பாடுகள் இருந்தால் அதன் வெற்றி உறுதி. ஒரு நிறுவனம் மேலாண்மையில் உயர வேண்டுமானால் அதற்கு நல்ல அடிப்படைக் கோட்பாடுகள் அவசியம்.
1. இணைந்து செயல்பட ஊக்குவித்தல்: நிர்வாகத்தில் மேலாளர்களும், தொழில்நுட்ப பணியாளர்களும் ஒன்றிணைந்து அவரவர் பணிகளைப் பிரித்து செயல்பட ஊக்குவித்தல்.
2. நேர்மை : நிர்வாகத்தில் அதிகாரத்திலிருப் பவர்கள் நேர்மைûயின் அடிப்படையில் செயல்படுதல்.
3. நிர்வாகத்தைப் புரிதல் : நிர்வாகத்தில் பணி புரியும் அனைவரும் நிறுவனத்தின் கோட்பாடுகளை புரிந்து நடத்தல்.
4. மேல் அதிகாரிகளை மதித்தல் : நிறுவனத்தில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவர்களை மதித்து செயல் படுதல். குறிப்பாக மேலே உள்ளவர்களிடம் பணிவாக நடத்தல்.
5. கண்காணிப்பு : ஒரு குறிப்பிட்ட துறையின் அனைத்து செல்பாடுகளையும் ஒருவரின் கீழ் கண்காணித்தல்.
6. லட்சிய நோக்கு : நிறுவனத்தின் உயர்ந்த லட்சியங்களைப் புரிந்து வளர்வதற்கு உதவுதல்.
7. திறமைக்கேற்ற சன்மானம் : பணிபுரிபவர் களின் திறமைக்கேற்ப ஊதியமும் சலுகைகளும் வழங்குதல்.
8. அதிகார மையம் : நிறுவனத்தில் தனியொருவர் மட்டுமே தலைமை அதிகாரத்தில் இருக்க வேண்டும். இரண்டு மூன்று அதிகார மையங்கள் இருந்தால் அங்கு கோஷ்டிகள் உருவாகும்.
9. கட்டளைகள் வழங்கும் விதம் : தலைமை யிடமிருந்து அவருக்கு கீழே உள்ள மேலாளரிடம் உத்தரவுகள் வரவேண்டும். மேலாளரின் கீழ் மற்றவர்கள் செயல்படுதல்.
10. பணியாளர்கள் / இயந்திரங்கள் : தேவையான அளவில் பணியாளர்களின் எண்ணிக்கையையும் இயந்திரங்களையும் அமைத்துக் கொடுத்தல்.
11. அன்பு உறவு : நிர்வாகத்தில் மேல் நிலையிலுள்ளவர்கள் தன்கீழ் பணிபுரிபவர்களிடம் அன்பாக பழகி இணக்கமான உறவுகளை வளர்த்தல்.
12. நிலையான வேலை : வேலை நீக்கம் பற்றிய பய உணர்வு இல்லாமல் நம்பிக்கையுடன் செயல்படுவதற்கு உறுதியளித்தல்.
13. முயற்சி : பணிபுரிவோர் அனைவரும் நிர்வாகத்தின் உயர்விற்கு முயற்சியுடன் செயல்பட ஊக்குவித்தல்.
14. குழு செயல்பாடு : தனிமரம் தோப்பாகாது. அதைப் போல நிறுவனத்தில் அனைவரும் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி.
இதையே வள்ளுவர், நல்ல வழிகளில் சேர்க்கும் செல்வம் அந்த நிறுவனத்திற்கு நன்மைகளையும் இன்பங்களையும் குவிக்கும் என்கிறார்.

அறம் ஈனும் இன்பமும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்
– திருக்குறள்.