மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய 30 வயதைத் தாண்டிய பலரும் கடைப்பிடிக்கும் தவறான வாழ்க்கை முறையால் பலவித உடல் நோய்களுக்கு ஆளாகி உடல் நலமும் மனநலமும் கெட்டு வாழ்வின் மகிழ்ச்சியைத் தொலைத்து உள்ளார்கள்.
* உணவு உண்பதற்கென்று சரியான, அமைதியான, நேரத்தை ஒதுக்க வேண்டும். அதனால் அஜீரண கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். உண்ட உணவு நன்றாக செரித்த பின் அடுத்த வேளை பசி எடுத்து உண்டால், நோயும் மருந்தும் இல்லாத நலமான வாழ்வு வாழலாம்.
* நாம் உண்ணும் உணவில் சர்க்கரைச் சத்து , கொழுப்புச் சத்து, புரதச் சத்து வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் என ஆறு பகுதிகள் உள்ளன. சரிசம விகிதத்தில் உண்ணும் உணவு முறையைக் கையாள வேண்டும்.
* மாவுச் சத்து நிறைந்த உணவை அளவாகவும், கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவைக் குறைவாகவும், நார்ச்சத்துள்ள உணவை அதிகமாகவும் உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள் ஆகிய வற்றை மதிய, இரவு உணவுகளில் அதிகமாக சேர்த்து உண்ண வேண்டும்.
* பாட்டிலில் அடைக்கப் பட்ட செயற்கை பானங்கள், உடலுக்கு ஒவ்வாத தீமை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருட்களும் கொண்டவை. அவற்றைத் தவிர்த்து வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் நிறைந்த நீர்மோர், பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர் ஆகியவற்றைஅருந்தலாம்.
* ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை மற்றும் உடல் உழைப்புக்கு ஏற்ப, அவர் களுக்குத் தேவையான உணவின் அளவு மாறுபடும். இருபது வயதுவரை வளர்வதற் காகவும் அதற்குப் பிறகு வாழ்வதற்காகவும் உணவு உட்கொள்ள வேண்டும்.
* குழந்தைகள் உட்பட எல்லா வயதினரும் தொலைக் காட்சி மற்றும் சினிமா பார்க்கும்போது வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் போதும், சுற்றத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொழுது போக்கும்போதும், படிக்கும்போதும், வீட்டில் ஓய்வாக இருக்கும்போதும் நொறுக்குத் தீனி தின்பதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். நொறுக்குத்தீனி உண்பது உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியது.
* உணவு உண்பதற்கு முன் சிறிதளவு தண்ணீர் அருந்த வேண்டும். உணவு உண்டபின் ஒரு மணி கழித்து தேவையான அளவு தண்ணீர் அருந்தலாம். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது உடல் நலத்துக்கு நல்லது.
* உணவு உண்ட சுமார் இரு மணி நேரத்திற்குள், உடற்பயிற்சி செய்யக்கூடாது. இரவு உணவிற்குப் பின் சுமார் அரை மணி நேரம் கழித்துதான் படுக்கச் செல்ல வேண்டும். அவ்வாறு படுக்கச் செல்வதற்கு முன் பல்லை நன்றாக துலக்க வேண்டும்.
* அசைவ உணவு உண்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மீனை சேர்த்துக் கொள்வதால் உடல் நலம் பயக்கும். சைவ உணவு உண்பவர்கள் தினமும் 400 முதல் 600 மில்லி வரை பாலை தவறாமல் உபயோகிக்கலாம். காய்கறி, கீரை, பழவகைகளை உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* புகையிலையால் ஏற்படும் சில கடுமையான நோய்கள்:
1. வாய், தொண்டை, சுவாசக்குழாய் நுரையீரலில் ஏற்படும் புற்று நோய்.
2. நிரந்தர சுவாசக் குழாய் அடைப்பு நோய். (COPD). புகைப்பிடிப்போருக்கு வயதான காலத்தில் தவறாமல் ஏற்படும்.
3. ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் ரத்த அழுத்த நோய், மாரடைப்பு நோய், காலிழப்பு, கண்பார்வை இழப்பு மற்றும் பக்கவாத நோய்.
புகை பிடித்தல், புகையிலை மெல்லுதல், பொடி போடுதல் ஆகிய பழக்கங்களை அறவே விட்டொழிக்க வேண்டும்.
* மதுவை உண்டால் அது நம்மையே அடிமைப்படுத்தும் அபாயம் உள்ளது. மனக் கட்டுப்பாட்டை இழந்து பலரும் மதுவின் பிடியில் சிக்குவதால், அதன் பக்கமே போகாமல் இருந்தால், மதுவிற்கு அடிமையாகி விடுவோமோ என்றபயமின்றி வாழலாம்.
* மது தீராத ஈரல் நோயை ஏற்படுத்தும் மேலும், அதிகமாக மது அருந்துவதால் இதயம், நுரையீரல், கணையம், கண், நரம்பு மண்டலம் போன்றமுக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும்.
* கூடாத சேர்க்கையால் இளைஞர்கள் போதை மருந்துப் பழக்கத்திற்கு அடிமையாகி, தங்கள் வளமான எதிர்காலத்தை அழித்துக் கொள்கிறார்கள்.
* நவீன வாழ்க்கை முறையால் உடலுழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. மேலும் தொலைக் காட்சி, வானொலி, தொலைபேசி, கைப்பேசி ஆகியவற்றாலும் தானியங்கி வாகனங்களாலும் பெரும்பாலும் நடந்து செல்வதைத் தவிர்த்து நாம் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம்.
* வீட்டில் இருக்கும்போது தேவைக்கு அதிகமாக நொறுக்குத் தீனி உண்பதால், உடல் பருமன், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்வலி மற்றும் மூட்டு நோய் போன்றஅவதிகளுக்கு ஆளாகிறோம். நடத்தல், ஓடுதல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகள் உடலுக்கு நல்லது.
* தினமும் முப்பது நிமிடங்கள் வேகமாக நடப்பதால், உலகிலுள்ள எந்த மருந்தையும் விட அதிக நன்மை பெறலாம். உடற்பயிற்சியின் பயன்களை இன்று மக்கள் அதிகம் உணரத் தொடங்கியுள்ளனர்.
சுவாசம் சம்பந்தப்பட்ட உடற்பயிற்சி
வேகமான நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல், நீச்சல் போன்றவற்றால் உடல் ஆரோக்கியம் ஏற்படுகிறது.
இதயம், நுரையீரல் ஆகியவற்றின் செயல் திறன் முன்னேற்றம் அடைகிறது. உடல் வலிமை பெறுகிறது.
யோகா எவ்வாறு உதவுகிறது?
* யோகப் பயிற்சி செய்யும் பலர் புத்துணர்வுடன் இளமையாக இருக்கின்றனர்.
* முதுமையிலும் நன்றாக குனிந்து நிமிர முடிகிறது. உடல் தோற்றம் பொலிவாகும்.
* மூட்டுகள் இறுகிப் போவதை தவிர்க் கின்றது. இறுகிய மூட்டுகளையும் இலகுவாக செய்கின்றன.
* உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எளிதில் சளி, காய்ச்சல், ஏற்படுவது குறைகிறது. சருமத்தின் ஜவ்வுத் தன்மையை பாதுகாக்கிறது.
* வயதானவர்கள் தியானம் செய்து வரும் போது ஞாபக சக்தி குறைவது தடுக்கப்படுகிறது.
* இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
* மன அழுத்தத்தைக் குறைக்கிறது
* மனநோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
* நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.