இரண்டு நண்பர்கள் ஒரு பாலைவனத்தில் பயணித்துக் கொண்டு இருந்தபோது தண்ணீர் குடிப்பதில் சண்டை வந்தது. அதில் ஒருவன் இன்னொருவனை அடித்துவிட்டான்.
அடி வாங்கியவன் அழுதுகொண்டே என் நண்பன் என்னை அடித்துவிட்டான் என்று பாலைவன மணலில் எழுதிவைத்தான். சிறிது நேரம் கழித்து ஓரிடத்தில் ஆழமான பள்ளத்துக்குள் தவறி விழப்போனான் அவன்.
சடாரென ஓடிவந்த நண்பன் உயிரைப் பணயம் வைத்து அவனைக் காப்பாற்றினான். இப்போது நண்பன் அருகில் இருந்த பாறையில் செதுக்கி வைத்தான். ‘என் நண்பண் என்னைக் காப்பாற்றினான்’ என்று.
காப்பாற்றிய நண்பனோ, ‘ நான் உன்னை அடித்ததை மண்ணிலும், காப்பாற்றியதை பாறையிலும் ஏன் எழுதி வைத்தாய்?’ என்று கேட்டான்.
“நீ எனக்கு இழைத்த தீங்கு காற்றால் மறைந்து போகட்டும் என்று மண்ணிலும், நீ செய்த உதவி மறக்கக்கூடாது என்பதற்காக பாறையிலும் எழுதி வைத்தேன்!” என்றான் நண்பன்.
உங்கள் உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய பரிசும், உங்களுக்கு வழங்கப்பட்ட ஆசியும், வரமும் உங்கள் முன்னால்தான் இருக்கிறது. ஆனால் அது நீங்கள் எதிர்பார்க்கும் வடிவில் இல்லை. அவ்வளவுதான்.