‘லிம்பிக் சிஸ்டம்’ என்பது ஒரு மினி மூளை. ஒன்றுக்குள் ஒன்று வளைந்த பகுதிகள் கொண்ட இங்குதான் உணர்ச்சிகள், ஞாபக சக்தி, கோபம் போன்றஎல்லாம் கவனித்துக் கொள்ளப்படுகிறது. மூளையின் நடுத் தண்டுக்கு அருகே பார்த்தால், உள்ளுக்குள் ‘தலாமஸ்’ ‘ஹைப்போ தலாமஸ்’ பிட்யூட்டரி சுரப்பி, பினியஸ் சுரப்பி ஆகியவை இருக்கின்றன.
– தலாமஸுக்கும், மூளைத் தண்டுக்கும் இடையே ‘ஹைப்போதலாமஸ்’. சுமார் பதினான்கு கிராம் எடையுள்ள இந்த பகுதி, மூளையிலேயே ரொம்பத் துடியான பகுதி. இவை நம் உடல் உஷ்ணம், தாகம், பசி, ரத்த அழுத்தம், செக்ஸ், தாக்குதல், பயம், தூக்கம் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன.
– பிட்யூட்டரி சுரப்பி, பட்டாணியளவில் இருக்கும். நம் வளர்ச்சி, ஆண்-பெண் இன உறுப்புகள் சாப்பாட்டைச் சக்தியாக மாற்றுவது போன்றவை இதன் வேலைகள். மேலும் சிறுநீர் அளவு, தாய்ப்பால் சுரப்பி போன்றவற்றையும் பிட்யூட்டரி கட்டுப் படுத்துகிறது.
– மூளைத்தண்டின் பின்பக்கத்தில் புடைத்தது போல இருப்பது பினியல் சுரப்பியை ‘மூன்றாவது கண்’ என்பர்.
– தண்டுவடத்திற்கு மேல் மெடுலா, பான்ஸ், நடுமூளை என்று மூன்று பகுதிகளாக உள்ளது. சுவாசப்பை, மூச்சு, இதயம் அடித்துக் கொள்வது இவற்றுக்கெல்லாம் தசைகளைக் கட்டுப்படுத்தும் செயல் இங்கிருந்து தான் போகும்.
– உடலின் இடப்பக்கத்திலிருந்து வரும் சுமார் ஒன்பது லட்சம் உணர்ச்சி நரம்புகள் அனைத்தும் மூளையின் வலப்பக்கத்துக்கும், வலப்பக்க உணர்ச்சிகள் எல்லாம் மூளையின் இடப்பக்கத்துக்கும் மெடுல்லாவில்தான் மாறுகின்றன.
– மூளைத் தண்டினுள் மெடுலா விலிருந்து நடுமூளை வரை ‘ரெட்டிக்குலர் ஃபார்மேஷன்’ என்று சின்னதாக ஓர் இணைப்பு உள்ளது. இதுதான் நாம் தூங்கும்போது விழித்திருக்கும் மூளையின் முக்கிய பகுதி.
– சிறுமூளையானது பற்பல தசைநார்களில் இருந்தும், டென்டன்’ என்று சொல்லப்படுகின்ற வார்களில் இருந்தும், இணைப்புகளில் இருந்தும், காதுகளின் உட்பகுதியில் இருந்தும் வரும் செய்திகளைப் பிரித்தெடுத்து மேலே அனுப்பி, அங்கிருந்து நம் உடலின் அசைவுகளைக் கட்டுப் படுத்தும் முக்கியமான பணியைச் செய்கிறது.
– நாம் சமநிலையில் நடப்பதற்கும் நமது கை, கால்கள் மற்றும் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று ஒத்துழைத்து செயல்படுவதற்கும் சிறுமூளை அவசியம்.
– மூளைக்கு, ஒரு நிமிடத்துக்கு எண்ணூறு மில்லி ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தம், ஆக்ஸிஜன் ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை மூளையே அபகரித்துக் கொள்கிறது.
மூளைக்கு அத்தனை சக்தி தேவை. தனக்கான சக்தியைச் சேமித்து வைக்க அதற்கு இடமில்லை. அதனால் அதற்கு ரத்த ஓட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
– ‘ஸெரிப்ரோ ஸ்பைனல் ஃபுளுயிட் என்னும் இந்த மூளைத் திரவ படுக்கையை தனக்கு வரும் ரத்தத்திலிருந்து மூளையே உற்பத்தி பண்ணிக் கொள்கிறது.
இதை சேகரித்து வைக்க நான்கு பைகளையும் ஆழமான பகுதியில் வைத்திருக்கிறது. அங்கிருந்து குழாய்கள் மூலம் மூளையின் மேற்பரப்பு முழுவதும் சுற்றி வளைத்து, மறுபடியும் ரத்தத்தில் கலந்து கொள்ளும்.