இந்தியாவிலேயே அதிகமுறை இரத்ததானம் செய்த சாதனையாளர் அருண் கோகுல் தாஸ்.
கோவை ரோட்டரி டெக்சிட்டி சங்க முன்னாள் தலைவர் அருண் கோகுல்தாஸ். இவர் 151 முறைஇரத்தம் கொடுத்து சாதனை படைத்தவர்.
கடந்த 46 ஆண்டுகளாக இவர் மட்டுமே 151 முறை இரத்த தானம் செய்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். இவரிடம் ஆயிரக்கணக்கான இரத்த தானம் செய்வோர் பட்டியல் உள்ளது. இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த அவசரத் தேவை களுக்கு இவரை அணுகினால் உடனே இரத்ததானம் கிடைக்கும். இப்படிச் செய்ததில் பல்லாயிரக்கணக்கானோருக்கு வாழ்வளித்த பெருமை கொண்டவர்.
வள்ளல் குடும்பம்: அருண் அவர்களின் குடும்பமே இரத்த தானத்தில் வல்லவர்கள். அவர் மனைவி திருமதி. வந்தனா, மகள்கள் திருமதி. கவிதா, திருமதி. சரிதா, அவரது சகோதரர்கள் திரு. பிரதாப் கோகுல்தாஸ் மற்றும் சுரேஷ் கோகுல்தாஸ் ஆகிய அனைவரும் இரத்த தானம் வழங்குபவர்கள்.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஸ்தாபன தலைவர் மற்றும் இந்திய மருத்துவச் சங்க இரத்த வங்கியின் ஆலோசகர் திரு. அருண்.
இரத்த தானம் பற்றிய 12 மாநாடுகளில் பங்கேற் பெருமை கொண்டவர் அருண். குறிப்பாக சைனா, எகிப்து போன்ற நாடுகளின் இரத்த தானம் செய்பவர் களுடன் இவர் ஆற்றிய சேவைகள் அளவிடற்கரியது.
இவர் பெற்ற விருதுகள்:
* அன்னை தெரசாவின் பாராட்டுகள்
* 1985இல் குஜராத் சமாஜ் இயக்கத்தின் பாராட்டு
* 1990 நூறு முறை இரத்ததானம் செய்ததற் காக கோவை மாவட்ட ஆட்சி யாளரின் பரிசு’- குடியரசு தின விழாவில் வழங்கப் பட்டது.
* 1992ல் தங்கப் பதக்கமும், பணமுடிப்பும் வழங்கப்பட்டது. (Indian society of Blood Transfusion & Immuno Hemtolology)
* 1995 ல் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் மேதகு. ஆர். வெங்கட்ராமன் அவர்களின் பாராட்டு
* 1996 ல் கல்கத்தாவில் சமூக நல அமைச்சர் வழங்கிய விருது
* 2008ல் கோவை மாநகர மேயர் திரு. வெங்கடாசலம் அவர்கள் வழங்கிய விருது Blood Icon Award
* 2008ல் கோவை அரிமா ஆளுநர் அவர்கள் வழங்கிய விருது.
* 2009ல் கோவை குஜராத் சமாஜ் வழங்கிய மனிதகுலத்தின் உயர்விற்கு அர்ப்பணிப் பாளர் விருது போன்ற எண்ணற்றவிருதுகளால் கௌரவிக்கப்பட்ட திரு. அருண்கோகுல்தாஸ் தன்னுடைய 66 வயதிலும் துடிப்புடன் இரத்ததான சேவைகளைத் தொடர்கிறார்.
அவசர உதவிக்கு:
Rtn.PP. PHF.அருண்கோகுல்தாஸ்
159, ப.ய.சாமி ரோடு (மேற்கு)
ஆர்.எஸ்.புரம், கோவை- 641002
(0422) 4365166, 4369491, செல்: 9363102416.