வாழ்க்கைமுறை மாற்றங்கள் : குறைந்த கொழுப்புள்ள உணவு வகைள், உடற்பயிற்சி, யோகப் பயிற்சி போன்றவற்றால் வயது அதிகரிப்பால் உடம்பிலுள்ள செல்களில் ஏற்படும் மாற்றங்களை சரிப்படுத்த முடியும். மது, புகைப்பழக்கம், போதைப் பழக்கம் போன்றவற்றைத் தவிர்த்தால் இளமை தொடரும்.
வயதான பலர் தங்கள் உணவில் கவனம் செலுத்துவதேயில்லை. தவறான உணவுகள், பதப் படுத்தப்பட்ட உணவுவகைகள் மற்றும் அதிகக் கொழுப்பு, சர்க்கரை உள்ள உணவுகளைத் தவிர்த்து காய்கறி, பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது ஜீரண நலத்திற்கு மிகவும் நல்லது.
போதுமான நேரம் தூங்கவேண்டும். கடும் வேலை அல்லது மனக்கவலை போன்ற காரணங் களால் தொடர்ந்து குறைந்த நேரமே தூங்கி வருபவர் களுக்கு எளிதில் வயதாகுதல் ஏற்படும்.
உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது மிக முக்கியம். இது உடலுக்கு வலுவைத் தந்து, பல நோய்கள் வராமல் தடுக்கிறது. குறைந்த பட்சம் தினசரி குறிப்பிட்ட தூரம் நடப்பது ஒரு நல்ல உடற்பயிற்சி.
முழு உடல் பரிசோதனை: மருத்துவரிடம் வருடந்தோறும் பரிசோதனை செய்து கொண்டால் பல நோய்களை ஆரம்பத்திலேயே அறிந்து குணமாக்க முடியும்