மனிதனால் மாற்றமுடியாத நிகழ்வுகளைப் பகுத்தறிந்து அனுசரித்து நடக்கும் மனப்பக்குவம் வந்துவிட்டால், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்ற வேதனையால் மன அழுத்தம் ஏற்படாது.
* ஓடி, ஓடி விளையாடுவதாலும் உடற்பயிற்சி செய்வதாலும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
* தனிமையில் இருக்கும்போது நல்ல புத்தகங்களைப் படித்தல் மற்றும் மனதுக்கு இதமான பாடல்களைக் கேட்டு மகிழ்தல் போன்றவற்றால் மன அழுத்தம் குறையும்.
* தங்கள் மனதிலுள்ள கவலைகளையும், குறைகளையும், நெருக்கமனவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
* துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர வேண்டும். இன்பம் என்பது இரண்டு துன்பங்களின் இடைவெளிதான் என்பதைப் புரிந்து கொண்டு, இன்பத்தையும், துன்பத்தையும் நாம் மனதளவில் சமநிலையில் பாவித்தால் மன அழுத்தம் இருக்காது.
* நடந்தவற்றை நினைத்து கவலைப்படுவதில் எந்தப் பயனும் இல்லை. நடந்தவை நமக்குப் பாடங்களாக இருக்கட்டும். அவைப் பாரமாக இருக்க அனுமதிக்காதீர்கள்.
* எதிர்காலத்தில் என்ன நடக்குமோ? என்று அச்சப்டுவதையும் தவிருங்கள். நடந்தது, நடப்பவை, நடக்க போவது யாவும் நன்மைக்கே.
* தேடியது கிடைக்கவில்லையென்றால் கிடைக்கும் வரை தேடுங்கள். அதுதான் நம்பிக்கையின் அடையாளம்.
* தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்ட வெற்றி.
* நூறு ஆண்டுகள் வாழ்வதாக நினைத்து வாழ்க்கையைத் திட்டமிடுங்கள். ஆனால் அடுத்த நிமிடமே மரணத்தை எதிர்நோக்கும் தைரியத்துடன் வாழுங்கள்.
* உங்கள் அன்பை மற்றவர்கள் உணருமாறு செய்வதில்தான் வாழ்வின் வெற்றி உள்ளது. அவ்வாறு செய்தால் மற்றவர்களின் அன்பு உங்களுக்கு நிச்சயம் திரும்பக் கிடைக்கும்.
* ஆணவத்தை விட்டுவிட்டால், மற்றவர்களின் மாற்றுக் கருத்துகளால் நீங்கள் அவமானப்படுத்தப் படுபவராக உணர மாட்டீர்கள்.
* மற்றவர்கள் உங்களைப் புரிந்து நடக்க வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதில் மற்றவர்களை நீங்கள் புரிந்து கொண்டு நடக்க முற்பட்டால் மன அழுத்தம் குறையும்.
* பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்தின் தாக்கத்தில் இருந்து தினசரி வேலைகளில் திருப்தியாக செயல்பட முடியாமல் துன்பப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் கூச்சப்படாமல் மருத்துவரின் உதவியை நாடி ஆலோசனை பெற்றால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.