1.     அளவுக்கு அதிகமான உடல் பருமன் உள்ளதா?
2.     அழுத்தங்கள் நிறைந்த வாழ்க்கை முறையா?
3.     புகைபிடித்தல், மது அருந்துதல் உண்டா?
4.     குடும்பத்தில், நீரிழிவு நோய், ரத்த அழுத்த நோய்,     இதய நோய், புற்று நோய், திடீர் மரணம்         போன்ற நிகழ்வுகள் உண்டா?
5.     போதுமான உடற்பயிற்சியின்மையா?
6. எதிர் பாராத விதத்தில் உடல் எடை குறைதல்         அல்லது அதிகரித்தல் உண்டா?
7.    எந்த மருத்துவப் பரிசோதனையும் செய்யாத         நாற்பது வயதைத் தாண்டியவரா?
உடல் நலப் பரிசோதனை  செய்து கொள்வதால் உடல் மாற்றங்களைக் கண்டறிந்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம். நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டு பிடித்து அதைத் தீர்க்கவோ அதன் வளர்ச்சியைத் தடுக்கவோ செய்யலாம்.
அனுபவமிக்க மருத்துவர்கள், உங்களைப் பரிசோதிப்பார்கள். உயரம், உயரத்துக்கேற்ற எடை, ரத்த அழுத்தம் ஆகியவை பரிசோதிக்கப்படும். ஆரம்பப் பரிசோதனைகளுக்குப் பிறகு பரிசோதிக்கப் பட்டவரை சந்தித்து தேவைப்படும் சிறப்புப் பரிசோதனைகளை மருத்துவர் வழங்குவார். நாற்பது வயதைத் தாண்டிய பெண்களுக்கு மார்பக எக்ஸ்ரே (மாமோகிராம்) கர்ப்பப்பை பரிசோதனை ஆகியவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது செய்யப்பட வேண்டும். ஐம்பது வயதைத் தாண்டிய ஆண்களுக்கு உயிரணு சுரப்பி சம்பந்தப்பட்ட பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
எந்த மருத்துவப் பரிசோதனைக்குப் பின் சரியான ஆலோசனைகள் கொடுக்கப்பட்டால்தான் பயன் கிடைக்கும்.
செயல்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள். புகைத்தல், மது அருந்துதல், ஆகியவற்றை நிறுத்துதல், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், போதுமான உடற்பயிற்சி, மருந்துகளைத் தவறாகப் பயன் படுத்துவதைத் தடுத்தல் ஆகியவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். பெண்கள் தாங்களாகவே மார்பகங்களைப் பரிசோதிக்கும் முறை கற்றுத் தரப்படும். பருவத்தினருக்குப் பாலியல் சுகாதாரம் மற்றும் கருத்தடை பற்றி விளக்கப்படும். தேவைப்படுவோருக்கு மனரீதியான ஆலோசனை களும் கொடுக்கப்படும்.
உடலுக்கும், உள்ளத்துக்கும் வேண்டியதைக் கொண்டு வேண்டாததை தவிர்த்தால், ஆரோக்கிய மான வாழ்க்கை. ஜி.ஆர் மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனையின் இயல்பான அளவுகள் (இரத்தம், சிறுநீர்).