வருமுன் காப்பதே மேல். நோய் வந்த பிறகு அதைப் போக்க முயற்சி செய்வதைவிட நோய் வராமல் காத்துக் கொள்ள நம்மாலான முயற்சிகளைச் செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால இடவெளியில் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோய்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிதல், கடுமையான நோய்களுக்கான அறிகுறிகள் உள்ளனவா எனக் கண்டறிதல், வாழ்க்கை முறை மாற்றத்திற்கான ஆலோசனைகள் ஆகியவை உடல்நலப் பரிசோதனையின் பயன்கள்.
*    உலகில் ஏற்படும் மரணங்களில் 1.67 கோடி (29.2%)     மரணங்கள் இதய நோய்களால் ஏற்படுகின்றன.
*    ஆசியா கண்டத்தினரையே இதய நோய் அதிகம்     தாக்குகிறது.
*    2012ம் ஆண்டை எட்டும்போது, உலகத்தில உள்ள     மொத்த இதய நோய்களில் பாதிப்பேர் இந்தியராக     இருப்பர்.
*    இளம் இந்தியர்களிடையே இதய நோயின்    அபாயம் 12.15 மடங்கு அதிகம்.
*     நிமிடத்துக்கு நான்கு பேர் இதய நோயால்   இறக்கின்றனர்.
*     மாரடைப்பு நோய்களில் ஆறில் ஒருவர் நாற்பது     வயதுக்குக் குறைந்தவர்.
*     இந்தியாவில்தான் நீரிழிவு நோயினர் மிக அதிகம்.
*     ரத்த அழுத்த நோய், கொலஸ்ட்ரால் என்னும்     கொழுப்பு, அளவுக்கு அதிகமான உடல் பருமன்,     புகைப்பிடிக்கும் பழக்கம் போன்றஅபாயங்களைக்     கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய் மற்றும்     பக்கவாதம் போன்றவற்றால் வரும் மரணம்         அல்லது உறுப்புகள் செயலிழத்தல் போன்ற         அபாயங்களைக் குறைக்க முடியும்.