மனித குலத்தின் ஒரே குறிக்கோள் – மகிழ்ச்சிதான் – ஒரு குறிப்பிட்ட நாளில் உங்கள் எல்லா நடவடிக்கைகளையும் பாருங்கள். இதை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று சந்தோஷத்திற்காக. மற்றொன்று வலியைத் தவிர்க்க. தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மகிழ்ச்சியாக இருக்க காரணம் எதுவும் வேண்டாம்.
நீங்கள் தேடும் மகிழ்ச்சி வெளியிலிருந்து கிடைப்பதல்ல – அது உங்களுக்குள்ளேயே உள்ளது. ஆனால் நீங்கள் எப்போது “உங்களை சந்தோஷமாக இருக்க விடுகிறீர்கள்” என்பதற்கு சில விதிகளை விதித்திருக்கிறீர்கள். இந்த விதிகளை மாற்றிக் கொண்டால் சந்தோஷத்தை எட்டுவது எளிதாகிவிடும். இதை உடைத்துவிட்டால், எப்போதுமே சந்தோஷமாக இருக்கலாம்.
மகிழ்ச்சி என்பது ஒரு முடிவுதான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் முடிவெடுக்கலாம். ஒருமுறைஅதை செய்துவிட்டால், உங்கள் முடிவு உறுதியாக இருந்துவிட்டால், யாராலும் அதை மாற்றமுடியாது. அந்த வலுவான நிச்சயம் இருக்க வேண்டும். இன்றுமுதல் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்கப் போவதாக மனதளவில் முடிவு செய்துக் கொள்ளுங்கள். இந்த முடிவிலிருந்து மாறாமல் இருக்க நீங்கள் வலுவாக இருக்க வேண்டும். நீங்கள் எடுத்துள்ள இந்த அற்புதமான தீர்மானத்தை நாசமாக்க எந்த சூழலையும் சம்பவத்தையும் அனுமதிக்காதீர்கள்.