மேன்மேலும் உழைத்துச் சாதிக்கும் முடிவில்லா வலையில் மனிதன் மாட்டிக் கொண்டிருக்கிறான். எல்லா துன்பத்திற்கும் ஆசைதான் மூலக்காரணம் என புத்தர் சொன்னார். இந்த ஆசைகளைத் தூண்டும் விளம்பரங்கள் வெளிவரும் இந்த உலகில் நாம் எந்த இலக்கும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறோம்.
செயற்கையான உலகிற்குப் பழக்கப்பட்டு விட்டதால், நின்று நிதானித்து பார்ப்பதில்லை. யாருக்கு நேரமிருக்கிறது? புதிதாக பூத்த மலரை சுவாசிப்பதும் அல்லது பட்டாம்பூச்சியுடன் விளையாடுவதும் நாம் இயற்கை அழகில் ரசித்ததும் கழித்ததும் மிகவும் ரசனையான நிமிடங்கள். இயற்கையாக எதுவாக இருந்தாலும் நீங்கள் நேரம் செலவிடலாம். அது நீங்கள் காணும் சூரிய உதயம் அல்லது அஸ்தமாக இருக்கலாம். நிலவைப் பார்த்துக் கொண்டே நேரம் செலவிடலாம். கடற்கரையில் அலைகள் வந்து போவதைப் பார்த்துக் கொண்டே நீண்ட தூரம் நடக்கலாம். அல்லது மரங்கள் நிறைந்த இடத்திற்குப் போகலாம்.. அது முடியா தென்றால், உங்களைச் சுற்றியுள்ள பறவைகளையும், செடிகளையும் பார்க்கலாம். மிகவும் நெரிசலான நகரங்களில் கூட இயற்கை அழகின் சில அறிகுறிகள் தென்படும்,
இதன் உண்மையான அர்த்தம் என்ன? வேறு எதையும் பற்றி எண்ணாமல் தனிமையில் நேரம் செலவிடுவதுதான் இதன் அர்த்தம்.
இயற்கையுடன் நேரம் செலவிடும்போது என்ன ஆகும்? முதலாவதும், முக்கியமானதும், உங்கள் மனதின் வேகம் குறையும்.. வாழ்க்கையின் ஓட்டம் இத்தனை வேகமாக இருக்கும்போது கொஞ்சம் தாமதித்து, என்ன நடக்கிறது என்பதை நினைத்து பார்ப்பது நல்லது. இதுபோல் யோசிக்க இயற்கைதான் சிறந்த இடம்.
கடல் அருகில், நெடுந்தூரம் நடப்பது அமைதியைத் தரும் சிறந்த வழியாகும். உண்மையில் உப்புத் தண்ணீர் பாதகமான சக்திகளை அழித்து, உங்களுக்கு நல்ல உணர்வை கொடுக்கிறது.
இயற்கையை ரசிக்க சிறந்த நேரம் காலை நேரம்தான். சூரியன் உதயமாகும் நேரத்தில், உலகமே ஒரு புதிய வண்ணத்தில் இருக்கும் பறவைகளின் சத்தம், காற்றில் இலைகள். ஆடும் ஓசை என இந்த நிமிடத்தை அனுபவியுங்கள்.
பச்சைப் புல் அல்லது இயற்கை அழகு இல்லாவிட்டாலும் கூட, பறவைகள், மரங்களை கண்டு களியுங்கள்.