எப்படி கொடுப்பது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுவே ஒரு கலையாகும்!
கொடுப்பதில், மிகவும் முக்கியமானது அதற்கு பின் உள்ள நோக்கம். ஏன் கொடுக்கிறீர்கள்? கொடுப்பதால் உங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக நீங்கள் நினைத்தால், அதில் பயன் ஏதும் இல்லை. மனதாரக் கொடுப்பது மகிழ்ச்சிக்கா? மற்றவர்களின் தேவையை புரிந்து கொண்டு, அதை நிறைவு செய்ய வேண்டும். நீங்கள் கொடுப்பவராக இருந்தால்தான் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். அதை உடனடியாக தொடங்கலாம். நீண்ட காலம் இருக்கக்கூடிய ஏதாவது பொருளை கொடுப்பதற்கு உங்களைச் சுற்றி பலர் உள்ளனர். அவர்கள் வாழ்க்கைக்கு நீங்கள் மதிப்பு சேர்க்கும்போது, அவர்கள் உங்கள் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்கிறார்கள். நீங்கள் கொடுக்கும்போது உங்களுக்கும் கிடைக்கிறது.
தேங்கி நிற்கும் எதுவும் வீணாகிவிடும் என்பது உலக நியதி. அதேபோல் நீங்களும் சுழன்று கொண்டிருக்க வேண்டும். நீங்கள் கொடுப்பது விலை உயர்ந்ததாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இன்று முதல் கொடுக்கத் தொடங்குங்கள். உங்களை இயக்கும் அந்த துடிப்பான வரவை நீங்கள் பார்க்கலாம். கொடுக்கும்போது ஒன்றைமட்டும் உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நன்றியுள்ளத்துடன் கொடுக்க வேண்டும். அதனால் மற்றவர் பயன் அடையும் நோக்கம் இருக்க வேண்டும்.
கொடுப்பதற்கான மற்றொரு பாகம்தான் பெறுவது. நீங்கள் பொழிவதைப் பார்க்கலாம். ஆனால் ஒரு எச்சரிக்கை. இதை எதிர்பார்த்து செய்யாதீர்கள். இந்த காரணத்திற்காக கொடுக்கா தீர்கள்! ஆனால் உங்களைத் தேடி பரிசுகள் வரும் போது அதைப் பெரிய மனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். பெறுவதையும் வரவேற்று பெற்றுக் கொள்ளுங்கள்.