அன்புதான் உலகைச் சுழலச் செய்கிறது!
மனிதன் அனுபவிக்கும் உணர்வுகளில் மிகவும் உயர்ந்தது அன்புதான். அன்பு செலுத்தும்போது, நீங்கள் உண்மையிலேயே ஒரு உயர்ந்த நிலையை எட்டிவிடுகிறீர்கள். அன்பு மற்றவர்களில் உள்ள சிறந்த குணத்தையும் கொண்டு வருகிறது.
நீங்கள் அன்பை அனுபவித்திருந்தால், அது உங்களை எவ்வளவு தூய்மையாக்குகிறது என்று தெரியும். வெல்ல முடியாத முற்று பெற்றநிலைதான் அது. அது ஒரு முழுமையான பேரானந்தமான இன்பம் தான். அதுதான் அன்பின் சக்தி.
அதுதான் அன்பின் மாயம் என்றால் அது கொஞ்சம் விநோதமானது, ஏனென்றால் அது உங்களைக் கிட்டத்தட்ட கடவுளை போல் ஆக்குகிறது. ஆனால் நீங்கள் இதுவரை அனுபவிப்பது தேர்ந்தெடுத்த அன்புதான், உங்கள் அன்பிற்கு பாத்திரமானவர்கள். இதிலிருந்து வித்தியாசமானது. அது அனைவரையும் விரும்புவது. அது எல்லோரையும் எந்தவித பாகுபாடோ முன் அபிப்பிராயமே இல்லாமல் அன்பு செலுத்துவது. அன்பை அன்பிற்காகவே உங்களுக்குள் இருக்கும் அன்பை போன்று மற்றவர்களிடம் செலுத்துவது.
உலகளாவிய அன்பு என்பது, நான் சொன்னதுபோல அனைவருக்கும் அன்பு. இன்று முதல் உங்களை அன்பால் நிரப்புங்கள். அந்த அன்பை அனைவருக்கும் கொடுங்கள். எல்லோரிடமும் அன்புடன் பேசுங்கள். அவர்கள் தவறுகளை மன்னியுங்கள். ஒரு தாயைப் போல தனது குழந்தையை ஒரு நிமிடத்திற்கு திட்டினாலும், குழந்தைக்கு ஆபத்து ஏற்படுவதை விரும்ப மாட்டாள். அந்த மாதிரி அன்புதான் தேவை.
உங்கள் கண்களில் எப்போதும் ஒரு ஒளியும் முகத்தில் புன்சிரிப்பும் இருப்பது மற்றவர்களுக்கு தெரியுமானால் அது உங்களுக்கு இருப்பது, உங்களுக்கே தெரிந்துவிடும். உங்களுடன் இருக்கும்போது மற்றவர்களுக்கு அது மிகவும் சுகமான இருக்கும். இதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆம் இதை அனுபவிக்க முடியும்.
அன்பை வெளிப்படுத்துவது சேவை
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது புன்சிரிப்பு
அமைதியை வெளிப்படுத்துவது தியானம்.