சிறுமிகள் சுமார் 10 வயதில் இருந்து 15 வயதுக்குள் பருவ மாற்றங்களை அடைந்து பூப்பெய்தி விடுவார்கள். சாதாரணமாக, பூப்பெய்தும் சராசரி வயது 13 ஆகும்.
பதினாறு வயதுக்குள் பூப்பெய்திவிட்டால் கருப்பை சாதாரணமாக 8 செ.மீ நீளமும் 5 செ.மீ அகலமும் 1.25 செ.மீ பருமனும் இருக்கும்.
மாதப் போக்கு காலம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் இருக்கலாம். மாதப்போக்கு 21 நாளில் இருந்து 35 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். இது சராசரியாக பெரும்பாலோருக்கு 28-30 நாட்களுக்குள் ஏற்படுகிறது.
பருவமடைந்த முதல் 2 அல்லது 3 வருடங்களுக்கு மாதப்போக்கு சராசரி சுழற்சிக்கு முன்னரோ அல்லது பின்னரோ வரலாம். இதனால் கவலை அடைய வேண்டியதில்லை.
ஒவ்வொரு மாதப்போக்குக் காலத்திலும் 20-லிருந்து 80 மில்லி வரை ரத்தப்போக்கு இருக்கலாம். சராசரியாக 50 மில்லி வரை ரத்தப்போக்கு இருக்கும். அவர்கள் உண்ணும் உணவில் உள்ள இரும்புச் சத்தினால் ரத்த இழப்பு இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஈடு செய்யப்பட்டுவிடும்.
மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கு அதிகமாக இருத்தல், மாதப்போக்குக் காலத்திலோ அதற்கு முன்னாலோ அடிவயிற்று வலி, இடுப்பு வலி, கால் வலி, சில சமயம் மயக்கம் போன்றவை இருந்தால் மருத்துவ ஆலோசனை தேவை.
மாதப்போக்கு இடைப்பட்ட காலத்தில் எரிச்சல், சீழ் மற்றும் துர்நாற்றம் இல்லாத வெள்ளைப்படுதல் இருக்கலாம். வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வெள்ளைப்படுதல் மாதப்போக்கு காலம் மாறுபடுதல் ஆகியவை இருந்தால் மருத்துவ ஆலோசனை தேவை.
பெண்களுக் 45 வயதிலிருந்து 55 வயதிற்குள் மாதப்போக்கு நிரந்தரமாக நின்றுவிடும். மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 50,40 வயதிற்குள் மாதப்போக்கு நின்றாலோ 55 வயதிற்கு மேல் தொடர்ந்தாலோ மகப்பேறு மருத்துவரை அணுகவும்.
மாதப்போக்கு சமயத்தில் தாம்பத்திய உறவு சுகாதாரமற்றது என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும்.
மாதப்போக்கு நிரந்தரமாக நிற்கும் வயதில். ஈஸ்ட்ரோஜன் என்றஹார்மோன் குறைவால் உடம்பின் சில பாகங்கள் திடீரென்று வெது வெதுப்பாகுதல், இரவில் வியர்த்தல், தலைவலி தூக்கமின்மை எளிதில் எரிச்சலடைதல் மற்றும் மனச்சோர்வு போன்றவை ஏற்படலாம். எலும்புகளும் நாளடைவில் வலுவிலக்கலாம். அதற்கான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியிருக்கும்
திடீரென்று வெள்ளைப்படுதல், ரத்தம் கலந்த நீர் வெளியாதல், துர்நாற்றம் உள்ள நீர் வெளியாதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாம்பத்திய உறவின்போது வலி மற்றும் ரத்தப்போக்கு ஆகியவை கருப்பைப் புற்றுநோய் அல்லது வேறு நோய்களின் அறிகுறிகளாகும்.
கருப்பை புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து பூரணமாக குணப்படுத்த நவீன மருத்துவத்தில் பாப் ஸ்மியர் என்னும் பரிசோதனை உள்ளது. 30 வயதிற்கு மேல் மூன்று வருடத்திற்கு ஒருமுறைஇந்த எளிய பரிசோதனையை செய்வதன் மூலம் கருப்பைப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துப் போக்கலாம்.
அதிக குழந்தைகள் பெறுவதாலும் வேறு சில காரணங்களாலும் கருப்பை இடம் பெயர்ந்து கருத்துவாரம் வழியாக வெளியே தெரியலாம். அதை அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது வேறு முறையிலோ சரி செய்து கொள்ளலாம்.
கருப்பை அகற்றப்படுவதால் தாம்பத்திய உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
மார்பக புற்றுநோயை, மாமோகிராம் என்ற பரிசோதனையின் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். சாதாரணமாக இந்த பரிசோதனையை 40 வயதில் ஒரு தடவையும் 50 வயதுக்கு மேல் வருடம் ஒரு முறையும் செய்து கொள்ள வேண்டும்.
18 வயதிலிருந்து 40 வயது வரை பெண்கள் கருத்தரிக்கும் காலம்.
பெண்ணுக்கு 21 வயது முதல் 25 வயது வரை திருமணத்துக்கு ஏற்றபருவமாகும்.
மாதவிலக்கின் ஒவ்வொரு சுழற்சியிலும் ஒரு சினை முட்டைதான் கருப்பையைச் சென்றடையும் அடுத்த மாதவிலக்கிற்கு பதினான்கு நாட்களுக்கு முன் சினை முட்டையானது கருப்பையை நோக்கித் தன் பயணத்தை ஆரம்பிக்கும், எனவே சினை முட்டைப் பயணத்துக்கு ஐந்து நாட்கள் முன்னும் பின்னும் தாம்பத்திய உறவு கொள்ளும்போது தாய்மை பெறும் வாய்ப்பு அதிகம்.
போதுமான தாம்பத்திய உறவு (வாரத்தில் மூன்றிலிருந்து ஐந்து நாள் வரை) இருந்தும் திருமணமான பெண்களுக்கு ஒரு வருடத்தில் கருத்தரிக்கவில்லை என்றால் அந்தத் தம்பதி மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.
ஆணின் விந்தில் தேவையான அளவு உயிரணுக்கள் உள்ளனவா என்று பரிசோதிக்க வேண்டும். அதற்குப் பின்தான் பெண்ணுக்குத் தேவையான அனைத்து பரிசோதனைகளையும் செய்ய வேண்டும்.
கருத்தரித்திருந்தால் குழந்தை பிறக்கும் பிரசவ தேதியைக் கீழ்க்காணும் வகையில் கணக்கிடலாம்.
உதாரணத்திற்கு ஒருவருக்கு மாதப்போக்கு நின்றநாள் 15-10-2009 என்றால் அதில் ஏழு நாட்களை முதலில் கூட்ட வேண்டும்.
அதாவது 15-10-2009’7 நாள் 22.10-2009 ஆகும்.
அந்த தேதியிலிருந்து மூன்று மாதம் பின்னுக்கு கணக்கிட்டு அத்துடன் ஒரு வருடத்தைக் கூட்டினால் வருவதுதான் பிரசவ நாள். அதாவது 22.07.2009 என்பதுதான் எதிர்பார்க்கும் பிரசவ நாள் என்று கணக்கிடலாம்.
கருவுற்ற முதல் 12 வாரங்களில் வாந்தி, குமட்டல் ஏற்படலாம். ஆனால் அதிக வாந்தி, அடிவயிற்றில் வலி, திடீர் மயக்கம், உதிப்போக்கு ஆகியவை ஏற்பட்டால் உடனே மகப்பேறு மருத்துவரின் உதவி தேவை.
கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிப் பருவமான முதல் 12 வாரங்கள் முக்கியமான காலம் என்பதால் அந்த சமயத்தில் தாயை வியாதிகள் அண்டாதவாறு பாதுகாக்க வேண்டும். பொதுவாகவே சுற்றுப்புறச் சூழல் சுகாதார முள்ளதாக இருக்க வேண்டும். கூடியமட்டும் பயணங்களையும் தாம்பத்திய உறவையும் தவிர்ப்பது நல்லது.
கருவுற்ற16 வாரத்திற்கு மேல் வயிற்றில் குழந்தையின் அசைவைத் தாய் உணர முடியும். அவ்வாறு உணர முடியாவிட்டால் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும்.
கார்ப்ப பெண்கள் முதல் 28 வாரங்களில் மாதம் ஒரு முறையும் 34 வாரங்கள் வரை மாதம் இரு முறையும் 40 வாரங்கள் வரை வாரம் ஒரு முறையும் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நலம்.
கர்ப்பிணியின் உயரம், எடை, ரத்த சோகை பற்றிய கணிப்பு, ரத்தத்தின் வகை மற்றும் தட் வகை, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், சிறுநீர் பரிசோதனை, எயிட்ஸ் நோய் மற்றும் பால்வினை நோய் பரிசோதனை போன்றவற்றை மகப்பேறு மருத்துவர் தேவையான சமயத்தில் செய்வார்.
டெட்டானஸ் என்னும் வலிப்பு ஜன்னி, தாய்க்கும் குழந்தை பிறந்த பிறகு குழந்தைக்கும் ஏற்படாமல் தடுக்க, கர்ப்ப காலத்தில் அதற்கான தடுப்பு ஊசியை முதல் தடவையாக கருத்தரித்த 16வது வாரத்தில் ஒன்றும் 22வது வாரத்தில் ஒன்றும் போடுவார்கள்.
கருவுற்றகாலத்தில் ரத்தக் கசிவு, நீர் மாதிரி திரவம் வெளியாதல், வயிற்றுவலி, கை கால் வீக்கம், நடந்தால் அசாதாரணமாக மூச்சு வாங்குதல், வயிறு மிகப்பெரியதாகத் தெரிதல், உடல் எடை திடீரென்று அதிகமாதல் ஆகியவை இருந்தால் மகப்பேறு மருத்தவரை உடனே அணுகவும்.
கருவுற்ற பத்தாவது மாதத்திலும் பிரசவமான பிறகு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கும் தாம்பத்திய உறவைத் தவிர்ப்பது நல்லது.
கர்ப்பிணிகள் முதல் 12 வாரங்களுக்கு மேல் சாதாரண வீட்டு வேலைகளை (பளு தூக்குவதைத் தவிர) எந்தவிதத் தடையும் இன்றி செய்யலாம்.
கருவுறுவதைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட, கருத்தடுப்பு மாத்திரைகள், காப்பர் – டி, ஆண் காப்புறை மற்றும் பெண் காப்புறை போன்ற சாதனங்கள் சாதாரணமாக பயன்படும். அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் கருவுறுவதை நிரந்தரமாகத் தடுக்கலாம்.
ஒரு குழந்தை பிறந்து அடுத்த குழந்தை கருத்தரிப்பதற்குக் குறைந்தபட்சம் மூன்று வருட இடைவெளியாவது இருக்க வேண்டும்.
ஒரு பெண் பலவந்தப் படுத்தப்பட்டு ஆணுடன் உறவு கொள்ள நேரும்போதோ திட்டமிடப்படாமல் திடீரென்று உறவு கொள்ள நேரிடும்போதோ கருத்தரிக்கும் அபாயத்தைத் தடுப்பதற்கு தற்சமயம் மாத்திரைகள் உள்ளன. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த மாத்திரைகள் உறவு கொண்ட 72 மணி நேரத்துக்குள் சாப்பிட வேண்டும். இதை ஆங்கிலத்தில் உம்ங்ழ்ஞ்ங்ய்ஸ்ரீஹ் ல்ர்ள்ற் ஸ்ரீர்ண்ற்ஹப் ஸ்ரீர்ய்ற்ழ்ஹஸ்ரீங்ல்ற்ண்ர்ய் என்பார்கள்.
தம்பதியில் இருவரும் வெவ்வேறு ரத்த வகையாக இருந்தால் குழந்தைப் பேறு பாதிக்கப் படுவதில்லை. பெண் தட் நெகட்டிவாக இருந்தால் மட்டுமே பிரசவத்தின் போது மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும்.
நெருங்கிய உறவினர்களுக்குள் திருமண பந்தத்தைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் ஒரு சில பரம்பரை வியாதிகள் பிறக்கும் குழந்தைகளை பாதிக்கும் அபாயம் உள்ளது.
குழந்தைக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்க கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தினமும் சுமார் 500 கலோரி அளவு அதிகம் கிடைக்குமாறு உணவு உண்ண வேண்டும். சுமார் ஒரு லிட்டர் பால், நிலக்கடலை, இறைச்சி, மீன், முட்டை ஆகிய உணவு பொருட்களையும் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தூக்கம் குழந்தைகளுக்கு இன்றியமையாதது, முதல் சில மாதங்களில் தினமும் 20 மணி நேரம் தூங்கும் குழந்தை, ஒரு வருட முடிவில் படிப்படியாகத் தூக்கம் குறைத்து 16 மணி நேரம் உறங்கும். நான்கு வயதாவதற்குள் தூக்கம் மீண்டும் படிப்படியாகக் குறைந்து 12 மணி நேரம் ஆகும்.
சிறு குழந்தைகள் 2 1/2 வயது வரை படுக்கையிலேயே சிறுநீர் கழித்தால் தவறில்லை. அதற்கு மேலும் படுக்கையில் சிறுநீர் கழித்தால் குழந்தையைத் திட்டுவதோ அடிப்பதோ கூடாது. ஏனெனில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதென்பது குழந்தையின் கட்டுப்பாட்டுக்கு அடங்காத விஷயம். இரவில் 10 மணி அல்லது 11 மணி அளவில் குழந்தையை நன்கு விழிப்புறச் செய்து சிறுநீர் கழிக்கச் செய்யலாம். மனம் தளராமல் குழந்தையை அன்போடு நடத்தப் பழக வேண்டும். தானாகவே சிறிது காலத்தில் சரியாகி விடும். தேவையானால் மருத்துவ ஆலோசனைப் பெறலாம்