இன்று முதல் இது என்னுடைய அதிர்ஷ்ட நாள் என நான் நம்புவேன்
இன்று உங்கள் அதிர்ஷ்ட நாள் என்ற நம்பிக்கையில் இன்றைய பொழுது ஒரு நல்ல எதிர்பார்ப்புடன் கழிகிறது. நல்லது நடக்கும் என நம்ப வேண்டும். ஆனால் மோசமானதிற்கும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் பொதுவாக, நாம் எதிர்பார்ப்பது போல்தான் மற்றவர்கள் நடந்து கொள்கிறார்கள்.
நமக்கு நடந்த நல்ல விஷயங்களுக்காக, நாம் நன்றியோடு இருக்க வேண்டும். நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் உணவு, இருப்பிடம் போன்ற அடிப்படை விஷயங்கள் மட்டுமில்லாமல் கல்வி போன்றவைகூட கிடைக்காத உங்களைவிட அதிர்ஷ்டம் குறைவான லட்சக் கணக்கானவர்கள் உங்களை சுற்றி இருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் சுதந்திரத்திற்காக போராடி வருகின்றனர். வறுமைக்கோட்டிற்கு கீழே கோடிக்கணக்கானோர் உள்ளனர். செல்வந்தர் களிடையே கூட பல்வேறு நோய்களும், பிரச்சனைகளும் உள்ளன. அவர்களுடன் ஒப்பிடும் போது நீங்கள் எவ்வளவோ மேல் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று உங்களுக்கு தோன்றவில்லையா?
இன்று முதல் நான் என் உள்ளுணர்வை நம்புவேன்
உள்ளுணர்வு என்பது ஒரு நபர் அல்லது சம்பவம் பற்றி நமக்குள்ளே தோன்றுவது. ஒரு விஷயம் இப்படி நடக்கும் என நீங்கள் நினைப்பது, அப்படியே நடக்கும். உங்கள் மனதில் ஏதாவது ஒரு விஷயம் பற்றி ஏதேனும் தோன்றியிருக்கும். அது சரியாகவும் இருந்திருக்கும். குறிப்பாக உங்களுக்கு நெருங்கியவர்களிடம் இப்படி அடிக்கடி கேட்க தோன்றுகிறது. நீங்கள் ஒரு விஷயத்தை கேட்கும்போது, இதுதானே நாமும் சொல்ல நினைத்தோம் என நினைக்கிறீர்கள்.

ஒரு விஷயம் உங்களுக்கு உதவும் அல்லது பயனுள்ளதுதான் என்று தோன்றினால், அதைச் செய்யுங்கள். எண்ணம் மற்றும் உள்ளுணர்வு இடையே ஒரு மெலிதான கோடு உள்ளது. எண்ணம் என்பது மன ரீதியானது. அது மனதில் மட்டும் உள்ளது. ஆனால் உள்ளுணர்வு என்பதற்கு உடல் ரீதியான ஒரு தொடர்பும் உள்ளது. உள்ளுணர்வு ஏற்படும்போது உங்கள் இதயமும் அதை உணருகிறது. அப்படி ஒரு எண்ணம் ஏற்படும்போது நம்மில் பலருக்கும் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது.உள்ளுணர்வை மேம்படுத்திக் கொண்டே இருந்தால், நல்ல உள்ளுணர்வு இருக்கும். அதனால் யாருக்கும் எதிராக கசப்பான அனுபவங்களை வைக்காதீர்கள்.

ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம் கப்பு (குடுவைகள்) சாப்பிட ஒரு சிறுவன் காஃபி கடைக்குச் சென்று டேபிளில் அமர்ந்தான். பெண் வெயிட்டர் அவன் முன் ஒரு கிளாஸ் தண்ணீரை வைத்தாள். “ஒரு ஐஸ்கிரீம் கப்பு (குடுவை) என்ன விலை?” சிறுவன் கேட்டான்.

“ஐம்பது ரூபாய்” என்று வெயிட்டர் பெண்மணி கூறினாள். சிறுவன் பாக்கெட்டி லிருந்து கையில் எடுத்து அதிலுள்ள காசுகளைப் பார்த்தான். “சாதாரண ஐஸ்கிரீம் எவ்வளவு?” என்று கேட்டான்.

அச்சமயம் சிலர் டேபிளுக்காக காத்திருந்தார்கள். வெயிட்டர் பெண்ணுக்கு பொறுமை இல்லை. கோபமாக,

“35 ரூபாய்” என்று கூறினாள்.

சிறுவன் மீண்டும் காசுகளை எண்ணி விட்டு, “சாதாரண ஐஸ்கிரீம் எடுத்துக் கொள்கிறேன்” என்றான். வெயிட்டர் பெண் ஐஸ்கிரீமை வைத்துவிட்டு சென்றுவிட்டாள். சிறுவன் சாப்பிட்ட பின் பணத்தை கேஷியரிடம் கட்டிவிட்டு சென்றுவிட்டான். வெயிட்டர் பெண் திரும்பி வந்தபோது தாம் பார்த்ததை நினைத்து குறுகிப் போனாள். அங்கே அவளுக்கு டிப்ஸ் – ஆக சில நாணயங்கள் இருந்தன.

ஏழ்மையானவர்கள் பணக்காரர்களை விட உயர்வாக செயல்படுவதை ஆங்காங்கே காணலாம்.
இன்று முதல் நான் நன்றியுணர்வுடன் இருப்பேன்
வேண்டும் – வளர்ந்து நமது கனவு நனவாகி, குறிக்கோள்களை எட்ட வேண்டும் என்ற ஆசை உண்டு. பெரியவர்களாக எளிதாக வழி எது?
நன்றி உணர்வு.
நன்றியுடன் இருப்பது என்பது என்ன?
எளிதாக சொல்ல வேண்டுமானால், வாழ்க்கையில் நமக்கு கிடைத்தற்கு நன்றி கூற வேண்டும். யோசித்து பார்த்தீர்களானால் நீங்கள் நன்றிக்கடன்பட வேண்டிய விஷயங்கள் கணக்கிலடங்காது.
“இந்த உலகில் நிறைய துக்கங்கள் உள்ளன, இதில் என் துக்கம் குறைவுதான். என்னை சுற்றி உள்ளவர்களின் வேதனைகளைப் பார்க்கும்போது, நான் என்னுடையதை மறந்துவிட்டேன். படிக்கக் கற்றுக்கொடுத்த எல்லா ஆசிரியர்களுக்கும் நன்றி கூறவேண்டும். படிக்காதவர் ஒருவரிடம் கல்வியின் மதிப்பைப் பற்றி கேளுங்கள், உங்கள் திறன் எவ்வளவு முக்கியமானது என்பதை தெரிந்து கொள்வீர்கள்.
நாம் நல்ல விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். நன்றியுணர்வுதான் நம்மை இதை உணரச் செய்கிறது. நாம் சின்ன சின்ன விஷயங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்கிறோம்.
வாழ்க்கையில் உங்களுக்கு உதவும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நன்றியுடன் இருக்க வேண்டும்.
இது எல்லாம் முன்பே தெரிந்த விஷயங்கள் தானே என நாம் சில நேரங்களில் நினைக்கிறோம். ஆனால் இரு தரப்புமே இப்படி இருக்கலாம். மேலும் இது போன்ற விஷயங்களை சொல்வதால், நமக்கு ஒரு நல்ல உணர்வு தோன்றுகிறது. மனிதர்களைப் பேணிக் காக்க கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்காக செய்தவைக்கு நன்றியுடன் இருங்கள். உங்கள் பெற்றோர், உங்களுக்கு வாழ்வு அளித்திருக்கிறார்கள். உங்கள் எதிரிகள்கூட நீங்கள் ஏதாவது ஒரு வகையில் மேம்பட வாய்ப்பளித் திருக்கிறார்கள். அதனால் உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொருவரிடமும் நன்றியுடன் இருங்கள்.

இன்று முதல் நான் தனிமையில் சிறிதுநேரம் கழிப்பேன்
இங்கு மனிதர்கள். அங்கு மனிதர்கள். எங்கு பார்த்தாலும் மனிதர்கள்தான்! இது மிகவும் சுறுசுறுப்பான மனிதர்கள் உலகம். தன்னை ஏதாவது ஒன்றில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று மனித பிறவி தீவிரமாக இருக்கிறது. நம் வாழ்க்கை நகரும் வேகம் நமக்கு அதிர்ச்சியை தருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வந்துள்ள மாற்றம், அதற்கு முந்தைய காலத்திலிருந்து, மனிதர் உலகில் தோன்றியதற்கு இடையே ஏற்பட்டுள்ள மாற்றங்களைவிட அதிகமானது!. தகவல்களின் புதையல் திறந்துள்ளது. ஒவ்வொரு விஷயமும் உங்கள் கவனத்தை ஈர்த்து அமைதியைக் குலைக்க கடினமாக முயன்று வருகிறது.
அதிக வேகத்தில் செல்லும் ஒரு காருடன் உங்கள் வாழ்க்கையை ஒப்பிடுங்கள். கார் மீது உங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு, வேகத்திற்கு ஏற்ப குறைகிறது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். வாழ்க்கை விரைவாக செல்ல செல்ல உங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு குறைகிறது. மேலும் கார் மிகவும் வேகமாக போகும்போது ஜன்னலுக்கு வெளியே இருக்கும் எதுவும் தெரிவதில்லை. வாழ்க்கை வேகமாக ஆக, வாழ்க்கையின் சின்ன சின்ன விஷயங்களை அனுபவிக்க குறைவான நேரமே கிடைக்கிறது என்பதைத்தான் இது குறிக்கிறது. அதனால்தான் நாம் தனிமையில் சிறிது நேரம் செலவிடுவது தேவையாகிறது மனதை அமைதியாக்க முதல் படி, தனிமையில் சிறிது நேரம் செலவிடுவது. அப்படி செய்யும் போதுதான் அது எவ்வளவு சவாலானது என்று தெரியவரும், எந்தவித சத்தமும் இல்லாமல் குறைந்தது 30 நிமிடங்களை தனிமையில் செலவிட ஒரு இடத்தை தேர்ந்தெடுங்கள். மனம் அலைபாயக் கூடாது. இந்த 30 நிமிடங்களுக்கு நீங்கள் எதுவும் செய்யக் கூடாது. எந்த மந்திரமும் கிடையாது. நீங்கள் நீங்களாக இருக்க இந்த நேரத்தை செலவிடுங்கள். தனிமையில் அதிக நேரம் செலவிட தொடங்கியபின்னர் மிகவும் உற்சாகமாக இருப்பதை உணருவீர்கள். உங்கள் எண்ணங்கள் நிலையாகும்போது அது உங்களை உள்ளே செல்ல விடுகிறது.
அமைதியாக இருக்கும் ஏரியில் அடிப்பரப்பை நம்மால் பார்க்க முடிவதுபோல், உங்கள் ஆழமான மனதை நீங்கள் எட்ட முடியும். இது உடனே நடக்காது. அதற்கு நேரம் பிடிக்கும். அதற்கு பொறுமை வேண்டும். ஆனால் அதற்கான பரிசு விலைமதிப்பற்றதாக இருக்கும்.